Pages

Friday, October 31, 2008

kaNNE azhagiya kaNNE - manadhil oru paattu

பாடல்: கண்ணே அழகிய கண்ணே
திரைப்படம்: மனதில் ஒரு பாட்டு
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா

கண்ணே அழகிய கண்ணே கம்பன் கற்பனை பெண்ணே

கண்ணே அழகிய கண்ணே கம்பன் கற்பனை பெண்ணே
கண்ணே அழகிய கண்ணே கம்பன் கற்பனை பெண்ணே
பாராமல் விழிகளும் தூங்காது பேசாமல் என் மனம் தாங்காது
கனவிலும் நினைவிலும் உன் முகம் தெரியுது

கண்ணா மன்மத கண்ணா காதல் தேசத்து மன்னா

ஆனந்த வெள்ளம் இங்கே ஆறாக ஓடும்
ஆசைக்கு பெண்மை அங்கே அணை போட்டு மூடும்
ஆனந்த வெள்ளம் இங்கே ஆறாக ஓடும்
ஆசைக்கு பெண்மை அங்கே அணை போட்டு மூடும்
இதழ்களில் ஊறும் இன்ப தேன் விருந்தாகும்
பருகிடும் போது பெண்மை நாணத்தில் ஒடும்
பூமேனி...தாங்காது...என்னாசை...தீராது
பிடிவாத...மாறாது...மணமானால்...தப்பேது
கனவிலும் நினைவிலும் உன் முகம் தெரியுது

கண்ணா மன்மத கண்ணா காதல் தேசத்து மன்னா

காலங்கள் தோறும் எந்தன் காதல்தான் வாழும்
ராகங்கள் பாடும் நெஞ்சம் காலத்தை மாற்றும்
காலங்கள் தோறும் எந்தன் காதல்தான் வாழும்
ராகங்கள் பாடும் நெஞ்சம் காலத்தை மாற்றும்
மோகத்தை தேடும் அன்பே பாதையை மாற்று
பாதையை மாற்றும் பெண்ணே மாலையை சூட்டு
நேரங்கள்...கூடட்டும்...சொந்தங்கள்...வாழ்த்தட்டும்
உள்ளங்கள்...சேரட்டும்...மேளங்கள்...கொட்டட்டும்
கனவிலும் நினைவிலும் உன் முகம் தெரியுது

கண்ணே அழகிய கண்ணே கம்பன் கற்பனை பெண்ணே
கண்ணா மன்மத கண்ணா காதல் தேசத்து மன்னா
பாராமல் விழிகளும் தூங்காது பேசாமல் என் மனம் தாங்காது
கனவிலும் நினைவிலும் உன் முகம் தெரியுது
கண்ணா மன்மத கண்ணா...கண்ணே அழகிய கண்ணே

No comments:

Post a Comment