பாடல்: வான் வந்து தேன் சிந்தும் நேரம்
திரைப்படம்: எங்கள் தாய்க்குலமே வருக
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா
வான் வந்து தேன் சிந்தும் நேரம்
ஏன் இந்த பூமிக்கு நாணம்
வான் வந்து தேன் சிந்தும் நேரம்
ஏன் இந்த பூமிக்கு நாணம்
காதல் வேகத்தில் இளமனம் பாடும் ராகத்தில்
சுப தினமே...ஆ ஆ...மலர்கிறதே...ஆ ஆ
வான் வந்து தேன் சிந்தும் நேரம்
ஏன் இந்த பூமிக்கு நாணம்
தாமரைப்பாதம் தரையில் நடந்தால்
சந்தன பூக்களும் வாடும்
புன்னகை சோலை இதழில் மலர்ந்தால்
போதையில் என் மனம் ஆடும்
மல்லிகைப்பூவில் மஞ்சம் விரித்தேன்
மல்லிகைப்பூவில் மஞ்சம் விரித்தேன்
என்னை கொண்டாடு அதுவரை ஏக்கம் தீராது
என்னை கொண்டாடு அதுவரை ஏக்கம் தீராது
வான் வந்து தேன் சிந்தும் நேரம்
ஏன் இந்த பூமிக்கு நாணம்
வாழ்க்கையில் காணா வசந்தம் இன்று
வந்தது உன் துணையாலே
கொடியினில் இல்லா கோவைப்பழங்கள்
கனிந்தது உன் இதழ்மேலே
பறவையைப்போலே கனியை நீயும்
பறவையைப்போலே கனியை நீயும்
காயம் செய்யாதே ஆசையை நெஞ்சில் தூவாதே
காயம் செய்யாதே ஆசையை நெஞ்சில் தூவாதே
வான் வந்து தேன் சிந்தும் நேரம்
ஏன் இந்த பூமிக்கு நாணம்
காதல் வேகத்தில் இளமனம் பாடும் ராகத்தில்
சுப தினமே...ஆ ஆ...மலர்கிறதே...ஆ ஆ
வான் வந்து தேன் சிந்தும் நேரம்...ஆ ஆ
ஏன் இந்த பூமிக்கு நாணம்...ஆ ஆ
http://www.esnips.com/doc/65171837-fac1-45e8-b4c9-8218d39f60a1/Vaan-Vandhu
padal varigalukku nanri priya...
ReplyDeletewas looking for it for a while :) thanks
Lakshman