Pages

Sunday, December 18, 2011

un paarvai sugamaanadhu - idhaaNdA needhi

பாடல்: உன் பார்வை சுகமானது
திரைப்படம்: இதாண்டா நீதி
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & வாணி ஜெயராம்

உன் பார்வை சுகமானது
நெஞ்சில் அழியாத கதையானது
நெஞ்சில் அழியாத கதையானது

உன் பார்வை சுகமானது
நெஞ்சில் அழியாத கதையானது
நெஞ்சில் அழியாத கதையானது

உன் காதல் ராகம் உள்ளம் தொடும் நேரம்
உலகினை நான் மறந்தேன்
கண்ணாடி தேகம் கையில் விழும் காலம்
கனவினில் நான் மிதந்தேன்
மன்னன் உந்தன் தோளை கொஞ்சுகின்ற மாலை
மன்னன் உந்தன் தோளை கொஞ்சுகின்ற மாலை
நானன்றி வேறிங்கே யாருண்டு கண்ணா

உன் பார்வை சுகமானது
நெஞ்சில் அழியாத கதையானது
நெஞ்சில் அழியாத கதையானது

நீ போகும் வேளை என்றும் உந்தன் பாதை
நிழலென நான் வருவேன்
உன் கோயில் தன்னில் என்றும் உனக்காக
ஒளியினை நான் தருவேன்
மண்ணில் உள்ள காலம் இன்று முதல் நானும்
மண்ணில் உள்ள காலம் இன்று முதல் நானும்
உனக்காக கரைகின்ற நிலவாக இருப்பேன்

உன் பார்வை சுகமானது
நெஞ்சில் அழியாத கதையானது
நெஞ்சில் அழியாத கதையானது

உன் பார்வை சுகமானது
நெஞ்சில் அழியாத கதையானது
நெஞ்சில் அழியாத கதையானது
 

No comments:

Post a Comment