Pages

Friday, January 27, 2012

ஆண்டவன் போட்ட புள்ளியை - தென்னங்கீற்று

பாடல்: ஆண்டவன் போட்ட புள்ளியைதிரைப்படம்: தென்னங்கீற்று
இசை: ஜி.கே.வெங்கடேஷ்
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற
அருகதை எனக்கு கிடையாது
ஆசைகள் நெஞ்சில் ஆயிரம் ஊஞ்சல்
ஆடிட செய்தால் துயர் ஏது
ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற

மேடை ஏறினேன் பாடினேன்
இனிமை இல்லாமல்
மாலை சூடினேன் கணவன் ஆகினேன்
மங்கலம் காணாமல்

மேடை ஏறினேன் பாடினேன்
இனிமை இல்லாமல்
மாலை சூடினேன் கணவன் ஆகினேன்
மங்கலம் காணாமல்

பூவோடுதான் பிறப்பது தேனே தேனே
அரும்பாக நீ இருப்பது வீணே வீணே
தனிமர வாழ்க்கை வாழுகின்றோமே

ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற
அருகதை எனக்கு கிடையாது
ஆசைகள் நெஞ்சில் ஆயிரம் ஊஞ்சல்
ஆடிட செய்தால் துயர் ஏது
ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற

கேட்டுப் பார்க்கிறேன் தவிக்கிறேன்
தெய்வம் தரும் என்று
கூட்டிக் கழித்தவன் கணக்கை சொல்கிறான்
விதியே பெரிதென்று

உயிர் வாழ நீ கொடுத்தாய் பிறவி பிறவி
இல் வாழ்வில் நான் தனிமை துறவி துறவு
தென்றலின் பாதை தேடுகின்றேனே

ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற
அருகதை எனக்கு கிடையாது
ஆசைகள் நெஞ்சில் ஆயிரம் ஊஞ்சல்
ஆடிட செய்தால் துயர் ஏது
ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற

No comments:

Post a Comment