Pages

Saturday, February 11, 2012

நீலவிழி பாடுவது - நான் உன்னைத் தேடுகிறேன்

பாடல்: நீலவிழி பாடுவது
திரைப்படம்: நான் உன்னைத் தேடுகிறேன்
இசை:
பாடியவர்கள்: P.ஜெயசந்திரன் & P.சுசீலா

நீலவிழி பாடுவது காதல் மோஹனமோ
நெஞ்சுக்குள்ளே ஆடுவது ஆசை நாடகமோ

நீலவிழி பாடுவது காதல் மோஹனமோ
நெஞ்சுக்குள்ளே ஆடுவது ஆசை நாடகமோ

இளமையின் வேகம் இதயத்தின் மோகம்
எதுவரை உலகில் போகும்
இதழ்களினாலே இதழ்களை மூடும்
திருநாள் வரைக்கும் போகும்

இளமையின் வேகம் இதயத்தின் மோகம்
எதுவரை உலகில் போகும்
இதழ்களினாலே இதழ்களை மூடும்
திருநாள் வரைக்கும் போகும்
தென்றல் தீண்டும் சேலைப்பூவே தேகம் பின்னவா
காயமின்றி கன்னப்பூவில் தேனை உண்ண வா

நீலவிழி பாடுவது காதல் மோஹனமோ
நெஞ்சுக்குள்ளே ஆடுவது ஆசை நாடகமோ

நதிகளைப்போலே நான் பிறந்தாலே
அலையாய் உன்னைத்தொடுவேன்
கரைகளைப்போலே நான் இருந்தாலே
அணைத்தே நெஞ்சம் மகிழ்வேன்

நதிகளைப்போலே நான் பிறந்தாலே
அலையாய் உன்னைத்தொடுவேன்
கரைகளைப்போலே நான் இருந்தாலே
அணைத்தே நெஞ்சம் மகிழ்வேன்
மேகம் என்னும் தேரில் ஏறி வானில் நீந்துவோம்
வானில் இல்லா சொர்க்கம்தன்னை இங்கே காணுவோம்

நீலவிழி பாடுவது காதல் மோஹனமோ
நெஞ்சுக்குள்ளே ஆடுவது ஆசை நாடகமோ
லால லலா லால லலா லாலா லால லலா
லால லலா லால லலா லாலா லால லலா
 

No comments:

Post a Comment