Pages

Saturday, September 8, 2012

வீணை எனது குழந்தை - ஊஞ்சலாடும் உறவுகள்

பாடல்: வீணை எனது குழந்தை
திரைப்படம்: ஊஞ்சலாடும் உறவுகள்
இசை: கே.சக்ரவர்த்தி
பாடியவர்: பி.சுசீலா

வீணை எனது குழந்தை
வீணை எனது குழந்தை
அதில் மீட்டும் சுரங்கள் மழலை
வீணை எனது குழந்தை
மடிமீது நான் வைத்து தாலாட்டுவேன்
மடிமீது நான் வைத்து தாலாட்டுவேன்
அதில் மகரந்த ராகங்கள் நான் மீட்டுவேன்
வீணை...வீணை...வீணை எனது குழந்தை

அடடா எனக்கொரு சிறகின்று முளைக்கின்றதே
விரல்கள் அசைத்தாலே சுரங்களின் ஊர்கோலம்
விழித்தே இருந்தாலும் கனவுகள் ஏராளம்
மனதுக்குள் மழை விழும் அனுபவமோ
வான்மீது போகின்ற மேகங்களே
இசை கேட்க எனைத்தேடி வாருங்களேன்
என் வீணை...பொன் வீணை
உறங்காமல் கண்மூடி ஸ்ருதி சேர்க்கிறேன்
உயிரெனும் தீபத்தில் நெய் வார்க்கிறேன்
வீணை...வீணை...வீணை எனது குழந்தை

வாழ்வே கனவினில் வரைகின்ற நீர்க்கோலமே
இருக்கும் உறை எங்கே இசை ஒரு சந்தோஷம்
நிலமே மறைந்தாலும் நிலைப்பது சங்கீதம்
சுரங்களே வரங்களாய் தெரிகின்றதே
விழியோரம் துளி ஒன்று திரள்கின்றதே
என் வீணைதனில் வந்து விழுகின்றதே
இது போதும்...இசை பாடும்
செவி எங்கும் அமுதாக நான் பாய்கிறேன்
புவி எங்கும் இசையாக நான் கேட்கிறேன்

வீணை எனது குழந்தை
அதில் மீட்டும் சுரங்கள் மழலை
வீணை எனது குழந்தை
மடிமீது நான் வைத்து தாலாட்டுவேன்
மடிமீது நான் வைத்து தாலாட்டுவேன்
அதில் மகரந்த ராகங்கள் நான் மீட்டுவேன்
வீணை எனது குழந்தை

No comments:

Post a Comment