Pages

Saturday, September 22, 2012

தழுவும் பொழுதே நழுவும் நிலவே - ஊஞ்சலாடும் உறவுகள்

பாடல்: தழுவும் பொழுதே நழுவும் நிலவே
திரைப்படம்: ஊஞ்சலாடும் உறவுகள்
இசை: கே.சக்ரவர்த்தி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.பி.ஷைலஜா

தழுவும் பொழுதே நழுவும் நிலவே
அழகே அருகினில் வா அன்பே வா வா
தழுவும் பொழுதே நழுவும் நிலவே
அழகே அருகில் வா அன்பே வா வா
செம்மாங்கனி...இரண்டு ஒன்று திரண்டு
என் கண் முன்பு பெண்ணானது
அட என் நெஞ்சு என்னாவது

நழுவும் நிலவை தழுவும் அழகே
உயிரே அருகினில் வா இன்னும் வா வா


உந்தன் கரம் ஏதோ செய்கின்றது
ரோஜா மழை இன்று பெய்கின்றது

காதலை சொல்லுது கண்களை கிள்ளுது
கன்னி உந்தன் அழகு

மன்மத வேளையில் அஞ்சுது பெண் மயில்
தள்ளி நின்று பழகு

மடிமீது பெண்ணே உன்னை அடை காக்கவா
தினசரி முத்தங்கள்...கரைந்தது வெட்கங்கள்
இளமையை கட்டுங்கள்...இனியென்ன சட்டங்கள்
அடிக்கடி இளமனம் துடிக்கையில் வேதாந்தங்கள்

தழுவும் பொழுதே நழுவும் நிலவே
அழகே அருகினில் வா அன்பே வா வா

நழுவும் நிலவை தழுவும் அழகே
உயிரே அருகினில் வா இன்னும் வா வா

செம்மாங்கனி...இரண்டு ஒன்று திரண்டு
உன் கண் முன்பு பெண்ணானதோ
அட உன் நெஞ்சு புண்ணானதோ


நீ கொண்டது வெறும் பெண்ணின் மனம்
நான் கண்டது அது ராமன் குணம்

உன் மனம் பொன் மனம் என் குணம் பெண் குணம்
கொள்ளை போக விடுமோ

இலைவிழும் கிளைவிழும் மலர்விழும் மரம்விழும்
வானம் மண்ணில் விழுமோ

இருந்தாலும் கண்ணா பெண்ணின் மனம் கேட்குதா
அழகிய பெண்ணே நீ அவசரம் கொள்ளாதே
பெண்களின் கண்படுமே தெருவினில் நில்லாதே
சரி சரி அதைவிடு இதழ்கொடு பெண்ணே நாளானதே

நழுவும் நிலவை தழுவும் அழகே
உயிரே அருகினில் வா இன்னும் வா வா

செம்மாங்கனி...இரண்டு ஒன்று திரண்டு
என் கண் முன்பு பெண்ணானது
அட என் நெஞ்சு என்னாவது
 

No comments:

Post a Comment