Pages

Saturday, September 22, 2012

பனிமலர் ஆடும் மேடையில் - அனுக்கிரஹம்

பாடல்: பனிமலர் ஆடும் மேடையில்
திரைப்படம்: அனுக்கிரஹம்
பாடியவர்கள்: தீபன் சக்ரவர்த்தி & வாணி ஜெயராம்
இசை: ஆர்.ராமானுஜம்

பனிமலர் ஆடும் மேடையில்
தேன்துளி சிந்தும் வேளையில்
பழகும் காதல் ஜோடிகள் பாஷை மௌனமோ


பனிமலர் ஆடும் மேடையில்
தேன்துளி சிந்தும் வேளையில்
பழகும் காதல் ஜோடிகள் பாஷை மௌனமோ


சந்தன மலரினில் சங்கமம் கண்டிடும் பூந்தளிர் மேனியே
குங்கும விழியினில் கோலங்கள் வரைந்திடும் சுந்தர தேவியே
சந்தன மலரினில் சங்கமம் கண்டிடும் பூந்தளிர் மேனியே
குங்கும விழியினில் கோலங்கள் வரைந்திடும் சுந்தர தேவியே

நெஞ்சிலே ராகங்கள் மஞ்சங்கள் காணுமோ
மோகமோ தாகமோ பார்வையால் தீருமோ

பனிமலர் ஆடும் மேடையில்
தேன்துளி சிந்தும் வேளையில்
பழகும் காதல் ஜோடிகள் பாஷை மௌனமோ


வஞ்சிமகள் பஞ்சணையில் வந்து இங்கு
கொஞ்சும் மொழி காதல் கீதமே
நாணமும் மஞ்சம் கொள்ள நன்றி கொண்டு
வார்த்தை சொல்ல சொந்தம் தேடுமே
வஞ்சிமகள் பஞ்சணையில் வந்து இங்கு
கொஞ்சும் மொழி காதல் கீதமே
நாணமும் மஞ்சம்கொள்ள நன்றி கொண்டு
வார்த்தை சொல்ல சொந்தம் தேடுமே
நெஞ்சிலே ராகங்கள் மஞ்சங்கள் காணுமோ
மோகமோ தாகமோ பார்வையால் தீருமோ

பனிமலர் ஆடும் மேடையில்
தேன்துளி சிந்தும் வேளையில்

பழகும் காதல் ஜோடிகள் பாஷை மௌனமோ
 

No comments:

Post a Comment