Pages

Thursday, September 20, 2012

இதோ உன் காதலி - சௌந்தர்யமே வருக வருக

பாடல்: இதோ உன் காதலி
திரைப்படம்: சௌந்தர்யமே வருக வருக
இசை: விஜய பாஸ்கர்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & வாணி ஜெயராம்
 
இதோ உன் காதலி கண்மணி
இவள் மனம் இனி உனது
இளம் தளிர் இது புதிது
ஆசை என்பது அமுதம்
அதில் ஆடி வந்தது குமுதம்


இதோ உன் காதலி கண்மணி
இவள் மனம் இனி எனது
இளம் தளிர் இது புதிது
ஆசை என்பது அமுதம்
அதில் ஆடி வந்தது குமுதம்


மஞ்சள் ரோஜா தள தள தள என மன்னன் முன்னாடி
மாலைப்பொழுதில் பள பள பள என மின்னும் கண்ணாடி
மஞ்சள் ரோஜா தள தள தள என மன்னன் முன்னாடி
மாலைப்பொழுதில் பள பள பள என மின்னும் கண்ணாடி
காளிதாசன் ஏட்டிலே கம்பன் சொன்ன பாட்டிலே
காணும் காதல் மந்திரம் கண்டுகொண்டேன் உன்னிடம்

கொள்ளை இன்பங்களோ

இதோ உன் காதலி கண்மணி
இவள் மனம் இனி எனது
இளம் தளிர் இது புதிது


காமதேவன் முதல் முதல் எழுதிய பாடல் நீதானோ
காலம்தோறும் உனக்கென உருகிடும் பக்தன் நான்தானோ
காமதேவன் முதல் முதல் எழுதிய பாடல் நீதானோ
காலம்தோறும் உனக்கென உருகிடும் பக்தன் நான்தானோ

ஆறுகால பூஜையோ அதற்கு மேலும் தேவையோ
பேசும் வார்த்தை வர்ணனை யாவும்தானோ அர்ச்சனை

சொந்தம் தெய்வீகமே

இதோ உன் காதலி கண்மணி
இவள் மனம் இனி உனது
இளம் தளிர் இது புதிது

ஆசை என்பது அமுதம்
அதில் ஆடி வந்தது குமுதம்
 

No comments:

Post a Comment