Pages

Thursday, September 20, 2012

மாலை முத்து மாலை - மாதவி வந்தாள்

பாடல்: மாலை முத்து மாலை
திரைப்படம்: மாதவி வந்தாள்
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: பி.சுசீலா & சந்திரபோஸ்

மாலை முத்து மாலை
கொண்டு மாதவி வந்தாள் மறுபடியும்

காலம் லாலா சங்க காலம் லாலா
அங்கு காவிய பூங்குயில் பாடுதம்மா
மாலை முத்து மாலை


நாடக மாது லா லா லா
காதலின் தூது லா லா லா
நாள்படும் போது கனிந்ததம்மா
ஆடக ஊஞ்சல் லாலாலா
கோவலன் தோளில் லா லா லா
ஆனந்த பார்வை கலந்ததம்மா
எழுந்தாள் மலர்ந்தாள் சிரித்தாள் அணைத்தாள்
எடுத்தாள் கொடுத்தாள் தன் மணமேடையை


மாலை முத்து மாலை
கொண்டு மாதவி வந்தாள் மறுபடியும்
மாலை முத்து மாலை


தேவியினாலே லா லா லா
காவியம் மாறி லா லா லா
சிலப்பதிகாரம் திரும்புதம்மா
கோவில் வாழும் லா லா லா
குலமகள் நெஞ்சம் லா லா லா
விலைமகள் என்றே மயங்குதம்மா
இவரே கனவு இவரே நினைவு
இன்றே உலகம் பொன் மயமானது


மாலை லாலா முத்து மாலை லாலா
கொண்டு மாதவி வந்தாள் மறுபடியும்
காலம் லாலா சங்க காலம் லாலா
அங்கு காவிய பூங்குயில் பாடுதம்மா
மாலை முத்து மாலை

No comments:

Post a Comment