Pages

Saturday, September 22, 2012

என்ன சொல்ல உதடு துடிக்கும் - அவள் போட்ட கோலம்

பாடல்: என்ன சொல்ல உதடு துடிக்கும்
திரைப்படம்: அவள் போட்ட கோலம்
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: ஆண் குரல்? & வாணி ஜெயராம்

என்ன சொல்ல உதடு துடிக்கும் உண்மை சொல்ல

என்ன சொல்ல உதடு துடிக்கும் உண்மை சொல்ல
மன்னவனே மாலையிட்டேன் சேலையினால் வேலியிட்டேன்
வந்துவிட்டேன் என்னை எழுதி தந்துவிட்டேன்
என்ன சொல்ல உதடு துடிக்கும் உண்மை சொல்ல

இதய வாசல் திறந்தது இரண்டு கண்ணும் திறந்தது
புதிரைப் போல இருந்தது புதிய உண்மை புரிந்தது
நாணம் என்னை விடவில்லை வார்த்தை இன்னும் வரவில்லை
இங்கு நானும் நானில்லை எனக்கு வேண்டும் ஆண்பிள்ளை


சொல்லிவிட்டாய் மனதை லேசாய் கிள்ளிவிட்டாய்
சித்திரமே மாலையிட்டாய் சேலையினால் வேலியிட்டாய்
வந்துவிட்டாய் உன்னை எழுதி தந்துவிட்டாய்
சொல்லிவிட்டாய் மனதை லேசாய் கிள்ளிவிட்டாய்


கட்டில் போடும் முன்னமே தொட்டில் கேட்டாய் அன்னமே
கண்ணம் வைக்கும் நேரமே கன்னம் வண்ணம் மாறுமே
நீயும் கேட்டாய் ஆண்பிள்ளை எனக்கு வேண்டும் பெண்பிள்ளை
எது வந்தாலும் நம் பிள்ளை இரண்டும் வந்தால் தேவலை


நல்லவரே சரசக்கலையில் வல்லவரே
கண்களுக்குள் சட்டமிட்டேன் கைகளுக்குள் கட்டுப்பட்டேன்
இன்பச்செந்தேன் இருக்கும் வரைக்கும் அள்ளித்தந்தேன்


சொல்லிவிட்டாய் மனதை லேசாய் கிள்ளிவிட்டாய்
என்ன சொல்ல உதடு துடிக்கும் உண்மை சொல்ல
 

No comments:

Post a Comment