Pages

Tuesday, January 22, 2013

தாகம் எடுக்குற நேரம் - எனக்காக காத்திரு

பாடல்: தாகம் எடுக்குற நேரம்
திரைப்படம்: எனக்காக காத்திரு
பாடியவர்: உமா ரமணன்
இசை: இளையராஜா

தாகம் எடுக்குற நேரம் வாசல் வருகுது மேகம்
தாகம் எடுக்குற நேரம் வாசல் வருகுது மேகம்
மது மழை பொழியுமா மலர்வனம் நனையுமா
இனி சந்தனப்பூக்களில் சிந்தும் மகரந்தம்
தாகம் எடுக்குற நேரம் வாசல் வருகுது மேகம்

இமயம் பனிமலர் சூடும் விழியில் கனவுகள் ஆடும்
இதயம் முழுவதும் நாதம் இதுதான் சங்கம மாதம்
பேசும் கிளிகளே புல்வெளிகளே ஓ நனைந்த பூவே
தேவன் வந்தான் கொண்டாடுங்கள் சத்தமின்றி பண்பாடுங்கள்
இனி நான் ஆடும் நீரோடை தேனோடை ஆகும் தானே

தாகம் எடுக்குற நேரம் வாசல் வருகுது மேகம்

பனிகள் உருகிடும் ஓசை பேசிடும் மன்மத பாஷை
இமைகள் துடித்திடும் ஓசை இதயத்தின் ரகசிய பாஷை
காதல் அமுதமா இல்லை விஷமமா இல்லை அமுத விஷமா
கண்ணுக்குள்ளே தூக்கம் இல்லை காதல் சொல்ல நாக்கும் இல்லை
இனி நான் பாடும் பூபாளம் பாதாளம் வரையில் போகும்

தாகம் எடுக்குற நேரம் வாசல் வருகுது மேகம்
மது மழை பொழியுமா மலர்வனம் நனையுமா
இனி சந்தனப்பூக்களில் சிந்தும் மகரந்தம்
தாகம் எடுக்குற நேரம் வாசல் வருகுது மேகம்

No comments:

Post a Comment