Pages

Thursday, April 11, 2013

ஒன்றே ஒன்று தேனூறும் வண்ணம் - தெய்வம் பேசுமா

பாடல்: ஒன்றே ஒன்று தேனூறும் வண்ணம்
திரைப்படம்: தெய்வம் பேசுமா
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

ஒன்றே ஒன்று தேனூறும் வண்ணம்
உறவோடு தர வேண்டும் கன்னம்
இன்றே இங்கே நான் காண வேண்டும்
இதழோடு எழுதுங்கள் கொஞ்சம்

நிலவென மேலாடை காற்றோடு ஆட
உலவிடும் கார்கூந்தல் பூமாலை சூட
நிலவென மேலாடை காற்றோடு ஆட
உலவிடும் கார்கூந்தல் பூமாலை சூட

பழகிய கையோடு கையொன்று கூட
தழுவென என் நெஞ்சம் உன் நெஞ்சைத்தேட
காலை வரும் வரையில் நாடகமோ
காதலனின் மடியில் ஆடிடவோ

ஒன்றே ஒன்று தேனூறும் வண்ணம்
உறவோடு தர வேண்டும் கன்னம்
இன்றே இங்கே நான் காண வேண்டும்
இதழோடு எழுதுங்கள் கொஞ்சம்

கருவிழி செவ்வல்லிப்பூவாக மாறும்
கனியிதழ் வெண்முல்லை வண்ணத்தை கூறும்
கருவிழி செவ்வல்லிப்பூவாக மாறும்
கனியிதழ் வெண்முல்லை வண்ணத்தை கூறும்

அமுதோடு தேன் வந்து நெஞ்சத்தில் ஊறும்
அளவோடு தந்தாலும் என் ஆசை மீறும்
ஆடிவரும் இரவில் பொன் உலகம்
நாயகனின் உறவில் என் உலகம்

ஒன்றே ஒன்று தேனூறும் வண்ணம்
உறவோடு தர வேண்டும் கன்னம்

No comments:

Post a Comment