Pages

Thursday, May 2, 2013

நெனைப்புல எனக்கு - கருங்குயில் குன்றம்

பாடல்: நெனைப்புல எனக்கு
திரைப்படம்: கருங்குயில் குன்றம்
பாடியவர்: வாணி ஜெயராம்
இசை: சந்திரபோஸ்

நெனைப்புல எனக்கு உன் புகைப்படம் இருக்கு
நெனைப்புல எனக்கு உன் புகைப்படம் இருக்கு
பருவத்தின் கணக்கு ஏன் புரியல உனக்கு
சிலுசிலு காத்து வீசும் போது
செவந்த என் மேனி கூசும் போது
மயங்கும் விழிதான் நான் விடும் தூது

நெனைப்புல எனக்கு உன் புகைப்படம் இருக்கு
பருவத்தின் கணக்கு ஏன் புரியல உனக்கு

படகோட்டும் ராசாவே காதல் நெஞ்சை கரையேத்து
பனி தூங்கும் ரோசாவை கையில் ஏந்தி காப்பாத்து
வாடும் வேரில் நீர் ஊத்து வெளக்கு திரியில் நெய் ஊத்து
போகும் பாதை நீ மாத்து புதிய வெளிச்சம் வரப்பாத்து
நாள்தோறும் போராட உன் பாட்டை நான் பாட

நெனைப்புல எனக்கு உன் புகைப்படம் இருக்கு
பருவத்தின் கணக்கு ஏன் புரியல உனக்கு

பல பேர்க்கு நோய் தீர்க்கும் பாவை நெஞ்சு நோயாச்சு
மன நோயை தீர்த்து வைக்கும் டாக்டர் இங்கு நீயாச்சு
பார்க்கும் பார்வை மருந்தாகும் பசியைத்தீர்க்கும் விருந்தாகும்
தாக்கும் ஏக்கம் தணியாதா தேனும் பாலும் இணையாதா
நான் வாழ நீ வேணும் நீ வாழ நான் வேணும்

நெனைப்புல எனக்கு உன் புகைப்படம் இருக்கு
பருவத்தின் கணக்கு ஏன் புரியல உனக்கு
சிலுசிலு காத்து வீசும் போது
செவந்த என் மேனி கூசும் போது
மயங்கும் விழிதான் நான் விடும் தூது

நெனைப்புல எனக்கு உன் புகைப்படம் இருக்கு
பருவத்தின் கணக்கு ஏன் புரியல உனக்கு

No comments:

Post a Comment