Saturday, September 8, 2012

ஜூலை மலர்களே - பகவதி

பாடல்: ஜூலை மலர்களே
திரைப்படம்: பகவதி
இசை: தேவா
பாடியவர்கள்: கார்த்திக் & சாதனா சர்கம்

ஜூலை மலர்களே ஜூலை மலர்களே
உன் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள்
அவள்தான் அன்புள்ள எதிரி
கொஞ்சம் குறும்புள்ள எதிரி
எனக்கும் பிடிக்கின்ற எதிரி
எனக்குள் இருக்கின்ற எதிரி


ஜூலை மலர்களே ஜூலை மலர்களே
உன் எதிரியாய் ஒரு அழகன் இருக்கிறான்
அவன்தான் அன்புள்ள எதிரி
கொஞ்சம் குறும்புள்ள எதிரி


தூக்கம் எனக்கு பிடித்த நண்பனே
அந்த நண்பன் இன்று இல்லையே
காதல் வெப்பத்தை கண்ணில் ஊற்றினாய்


வெட்கம் எனக்கு பிடித்த தோழியே
அந்த தோழி இன்று இல்லையே
அர்த்த ராத்திரி அர்த்தம் மாற்றினாய்

யார் நீ...கூரான பூவா
யார் நீ...மெய்யான பொய்யா

உந்தன் கண்கள் பார்த்த நாள் முதல்
என்னை மட்டும் காற்று மண்டலம்
பறக்கும் மனுஷியாய் மாற்றிவிட்டதே


உன்னில் நானும் சேர்ந்த நாள் முதல்
இதயம் என்னும் மையப் பகுதியில்
மைனஸ் டிகிரியில் ரத்தம் ஓடுதே

இதமாய்...இம்சைகள் செய்தாய்
அழகாய்...அவஸ்தைகள் தந்தாய்

ஜூலை மலர்களே ஜூலை மலர்களே
உன் எதிரியாய் ஒரு அழகன் இருக்கிறான்

ஜூலை மலர்களே ஜூலை மலர்களே
உன் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள்

அவன்தான் அன்புள்ள எதிரி
கொஞ்சம் குறும்புள்ள எதிரி
எனக்கும் பிடிக்கின்ற எதிரி
எனக்குள் இருக்கின்ற எதிரி

No comments: