Saturday, September 8, 2012

மேகம் வந்து போகும் - மந்திரப் புன்னகை (2010)

பாடல்: மேகம் வந்து போகும்
திரைப்படம்: மந்திரப் புன்னகை (2010)
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: மது பாலகிருஷ்ணன் & அன்வேஷா

மேகம் வந்து போகும்
தாகம் வந்து போகும்
மோகம் வந்து போகும்
காதல் வந்தால் போகாது
மேகம் வந்து போகும்
தாகம் வந்து போகும்

தூரம் குறைந்திட நெருங்கிடும்
உயர்வெளி நம் காதல்
வானம் நனைந்திட பொழிந்திடும்
அடைமழை நம் காதல்
தூரம் குறைந்திட நெருங்கிடும்
உயர்வெளி நம் காதல்
வானம் நனைந்திட பொழிந்திடும்
அடைமழை நம் காதல்
அனலுக்கருகில் நின்றிருந்தாய்
அருவிக்கருகில் கொண்டு வந்தேன்
கனவுக்கருகில் நின்றிருந்தாய்
கவிதைக்கருகில் கொண்டு வந்தேன்
அலை ஓயும் கடல் ஓயும்
காதல் மட்டும் ஓயாது

மேகம் வந்து போகும்
தாகம் வந்து போகும்


நீரலை மேலே குமிழ் போலே
மிதந்தேனே ஆருயிரே
தேவதை போலே கிடைத்தாயே
பிழைத்தேனே நான் உயிரே


தீயின் சுடர் தொட இனித்திடும்
அனுபவம் நம் காதல்
காயும் நிலவினில் கொதித்திடும்
கடல் அலை நம் காதல்
தீயின் சுடர் தொட இனித்திடும்
அனுபவம் நம் காதல்
காயும் நிலவினில் கொதித்திடும்
கடல் அலை நம் காதல்
உடலுக்கருகில் நின்றிருந்தாய்
உயிருக்கருகில் கொண்டு வந்தேன்
தனிமைக்கருகில் நின்றிருந்தாய்
தாய்மைக்கருகில் கொண்டு வந்தேன்
உயிர் தீரும் உடல் தீரும்
காதல் மட்டும் தீராது

மேகம் வந்து போகும்
தாகம் வந்து போகும்
மோகம் வந்து போகும்
காதல் வந்தால் போகாது

No comments: