Saturday, September 8, 2012

இளம் மஞ்சள் வண்ணம் - அக்கரைக்கு வாரீங்களா

பாடல்: இளம் மஞ்சள் வண்ணம்
திரைப்படம்: அக்கரைக்கு வாரீகளா
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

இளம் மஞ்சள் வண்ணம் கொஞ்சுகின்ற செந்தூரம்
இது மாலை நேர வானம் பாடும் சங்கீதம்
பூங்காற்றிலே...பொன்னூஞ்சலோ
தேனோடையில்...நீராடலோ
பூவின் வாசம் இவ்வேளையில் தீண்டும் மேனி
ஆனந்தம் காணும் அல்லவோ
இளம் மஞ்சள் வண்ணம் கொஞ்சுகின்ற செந்தூரம்
இது மாலை நேர வானம் பாடும் சங்கீதம்

அலைகள் நதியின் மடியில் தவழ்ந்து தினம் துள்ளாதோ
அசையும் நகரும் படகின் இடையை அது கிள்ளாதோ
அலைகள் நதியின் மடியில் தவழ்ந்து தினம் துள்ளாதோ
அசையும் நகரும் படகின் இடையை அது கிள்ளாதோ
நடனம் புரியும் அழகோ...நளினம் கலையின் ரசமோ
விழிகளின் ஓரம் வரைகின்ற கோலம்
கவிதைகள் பாடும் தென்றலோ
சுவை மிகும் தாகம் அல்லவோ

இளம் மஞ்சள் வண்ணம் கொஞ்சுகின்ற செந்தூரம்
இது மாலை நேர வானம் பாடும் சங்கீதம்

உதிரும் மலரின் இனிய மணமும் மனம் அள்ளாதோ
உணர்வும் நினைவும் உலகைக் கடந்த நிலை கொள்ளாதோ
உதிரும் மலரின் இனிய மணமும் மனம் அள்ளாதோ
உணர்வும் நினைவும் உலகைக் கடந்த நிலை கொள்ளாதோ
இசையில் பெருகும் நிறைவோ...இளமை பருகும் உறவே
மழை தரும் மேகம் தொடுவதைப்போலே
அனுபவம் தேடும் நெஞ்சமே
சுகம் பெறும் வேகம் அல்லவோ

No comments: