Tuesday, November 25, 2008

uthadugaLil unadhu peyar - thanga rangan

பாடல்: உதடுகளில் உனது பெயர்
திரைப்படம்: தங்க ரங்கன்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & பி.சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது
உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது

கனவுகளில் உன்னைக்கண்டு வெட்கம் வந்தது
அந்த நினைவுகளில் ஆசை என்னை கட்டிக்கொண்டது
கனவுகளில் உன்னைக்கண்டு வெட்கம் வந்தது
அந்த நினைவுகளில் ஆசை என்னை கட்டிக்கொண்டது

முந்தானை சிந்தாட வந்தாடும் நேரத்தில்
உன் தோளில் கண்மூட வேண்டும்
ஆஹா...உன் தோளில் கண்மூட வேண்டும்
கண்மூடும் நேரத்தில் பொன்பூவின் தேகத்தில்
தள்ளாடும் வண்டாக வேண்டும்
ஆஹா...தள்ளாடும் வண்டாக வேண்டும்
செவ்வானம் தேன் சிந்தும் உல்லாச பாடங்கள்
இதழோரம் கற்றாக வேண்டும்
ஆஹா...இதழோரம் கற்றாக வேண்டும்
தொட்டாலும் பட்டாலும் கொண்டாடும் காலத்தில்
வெட்கங்கள் பூமாலை போடும்
ஆஹா...வெட்கங்கள் பூமாலை போடும்

மாலைக்கு பின்னாலே காலங்கள் பூத்துவர
மானோடு நான் பாட வேண்டும்
ஆஹா...மானோடு நான் பாட வேண்டும்
வானத்தில் பூவாகி மேகத்தில் தேன்பாய
மௌனத்தில் நாம் வாழ வேண்டும்
ஆஹா...மௌனத்தில் நாம் வாழ வேண்டும்
ராகங்கள் பாவங்கள் தாளங்கள் எல்லாமே
மோகத்தில் ஊடாட வேண்டும்
ஆஹா...மோகத்தில் ஊடாட வேண்டும்
தாகங்கள் தீராமல் பருவங்கள் மாறாமல்
தேகங்கள் சுகம் காண வேண்டும்
ஆஹா...தேகங்கள் சுகம் காண வேண்டும்

உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது
கனவுகளில் உன்னைக்கண்டு வெட்கம் வந்தது
அந்த நினைவுகளில் ஆசை என்னை கட்டிக்கொண்டது

http://www.musicplug.in/multiple_song_flashplayer.php?songid=29795&br=high&id=5596&songname=Uthadugalil_thangarangan_pj---Ps-Poor&page=movies

Friday, November 7, 2008

chinna pUngkiLi - paarvadhi ennai pAradi

பாடல்: சின்னப்பூங்கிளி
திரைப்படம்: பார்வதி என்னை பாரடி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா

சின்னப்பூங்கிளி சிந்தும் தேன்மொழி இனிக்கும் நன்நாளிது
வண்ணப்பூங்கொடி வந்ததோ மடி இணையும் பொன்நாளிது
சோலையோ நடுச்சாலையோ தேடினேன் உனையே
காலையோ அந்தி மாலையோ ஏங்கினேன் இதயம்...இனி உன் சரணம்

சின்னப்பூங்கிளி சிந்தும் தேன்மொழி இனிக்கும் நன்நாளிது
வண்ணப்பூங்கொடி வந்ததோ மடி இணையும் பொன்நாளிது

ஆசைதீர பேசவேண்டும் பூங்காவிலே
ஆயுள் காலம் யாவும் உன்னை நீங்காமலே
உன்னைச்சேர ஏங்கும் மாது எல்லைக்கோட்டை தாண்டாதா
தென்றல் காற்றை தீண்டச்சொல்லி தென்னங்கீற்று வேண்டாதா
வேண்டினால் விரல் தீண்டுமே தீண்டினால் சுகம் தோன்றுமே
தூங்குமோ இரு நேத்திரம் தாங்குமோ இதயம்...இனி உன் சரணம்

சின்னப்பூங்கிளி சிந்தும் தேன்மொழி இனிக்கும் நன்நாளிது
வண்ணப்பூங்கொடி வந்ததோ மடி இணையும் பொன்நாளிது

காலை மாலை கேட்பதுந்தன் ஆலாபனம்
காலம் தோறும் காண்பதுந்தன் ஆராதனம்
உன்னைத்தீண்டும் கைகள் வேறு பெண்ணைத்தீண்டி வாழாது
சங்கப்பாடல் என்றும் இங்கே சந்தம் நீங்கிப்போகாது
காதலே ஒரு காவியம் நீண்டநாள் நிற்கும் ஓவியம்
கண்மணி என்னைக்கூடவா நாளெல்லாம்...இனி உன் சரணம்

சின்னப்பூங்கிளி சிந்தும் தேன்மொழி இனிக்கும் நன்நாளிது
வண்ணப்பூங்கொடி வந்ததோ மடி இணையும் பொன்நாளிது
சோலையோ நடுச்சாலையோ தேடினேன் உனையே
காலையோ அந்தி மாலையோ ஏங்கினேன் இதயம்...இனி உன் சரணம்

சின்னப்பூங்கிளி சிந்தும் தேன்மொழி இனிக்கும் நன்நாளிது
வண்ணப்பூங்கொடி வந்ததோ மடி இணையும் பொன்நாளிது

http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=

Tuesday, November 4, 2008

isaikkavO - malargaLE malarungaL

பாடல்: இசைக்கவோ
திரைப்படம்: மலர்களே மலருங்கள்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & எஸ்.ஜானகி
இசை: கங்கை அமரன்

இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண்மூடி மௌனமாய் நாண மேனியில்
கோலம் போடும் போது...இசைக்கவோ

ராசலீலை வாசல் திறப்பாய் பூஜை நேரத்தில்
ராகதாள மேடை அழைப்பாய் பாதி ஜாமத்தில்
வீதிவலம் போகும் நாளிலே
தேவன் தோளிலே மலர்வேனே
நாதஸ்வரம் பாட சூழ்ந்து
நலம் காண வாழ்த்தவே தருவேனே
சிரிப்பில் புது ராகமாளிகை...நீ

ரசிக்கவோ நம் கல்யாண ராகம்
கண்மூடி மௌனமாய் நாண மேனியில்
கோலம் போடும் போது...ரசிக்கவோ

நிசநிசக பகபகரிச நிசநிசக
கமகமதமரி ரிககமரிநி
ரிரிநி ரிகரி கமக மதம மதநிரிச


பாதிமூடி ஜாதி மலர்போல் பார்வை ஏங்குதே
ராஜவீதி மார்பில் மலர்வேன் பாரிஜாதமாய்
போதும் இது காதல் போதையே
காணும் பூவையே போராடு
மீதி வரும் நாளில் நாமும்
திருநாளைக் காணவே நீ ஆடு
ரசிப்பில் ஒரு ராஜபல்லவன்...நீ

இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண்மூடி மௌனமாய் நாண மேனியில்
கோலம் போடும் போது...ரசிக்கவோ

Monday, November 3, 2008

maunamalla mayakkam - azhagu

பாடல்: மௌனமல்ல மயக்கம்
திரைப்படம்: அழகு
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & எஸ்.ஜானகி
இசை: ஜி.கே.வெங்கடேஷ்

மௌனமல்ல...மயக்கம்
இளமை ரதங்கள் வெள்ளோட்டம்
சலனம் பாரிவையில் சரசம் வார்த்தையில்
மெய் சிலிர்க்கும் வேளையில்

ஏதோ பேச வேண்டும் என்னை ஏதோ பழகத் தூண்டும்
ஏதோ பேச வேண்டும் என்னை ஏதோ பழகத் தூண்டும்
ஆனால் வார்த்தையில்லை அது ஏன் சொல்லு கண்ணா
அதுதான் உன் மனம் அறியா பெண் மனம்
ஓர் அலைபோல் போய் வரும்

மௌனமல்ல...மயக்கம்
இளமை ரதங்கள் வெள்ளோட்டம்
சலனம் பார்வையில் சரசம் வார்த்தையில்
மெய் சிலிர்க்கும் வேளையில்

நதியில் இரண்டு தோணி இரண்டும் இரண்டு பாணி
நதியில் இரண்டு தோணி இரண்டும் இரண்டு பாணி
இணைந்தே பயணம் செல்ல நினைத்தால் என்ன சொல்ல
ஸ்தலங்கள் இரண்டுதான் கரையோ ஒன்றுதான்
நாம் காண்போம் இன்றுதான்

மௌனமல்ல...மயக்கம்
இளமை ரதங்கள் வெள்ளோட்டம்
சலனம் பார்வையில் சரசம் வார்த்தையில்
மெய் சிலிர்க்கும் வேளையில்

தென்றல் காற்று தீண்டும் இந்த தேகம் குளிர வேண்டும்
ஆனால் கொதிப்பதென்ன அது ஏன் சொல்லு கண்ணா
நெருப்பாய் கொதிப்பதும் நீராய் குளிர்வதும்
உன் நினைவின் நாடகம்

மௌனமல்ல...மயக்கம்
இளமை ரதங்கள் வெள்ளோட்டம்
சலனம் பார்வையில் சரசம் வார்த்தையில்
மெய் சிலிர்க்கும் வேளையில்