Sunday, September 30, 2012

வசந்த காலங்கள் - ரயில் பயணங்களில்

பாடல்: வசந்த காலங்கள்
திரைப்படம்: ரயில் பயணங்களில்
இசை: டி.ராஜேந்தர்
பாடியவர்: பி.ஜெயசந்திரன்

வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்

வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
புது முகமான மலர்களே நீங்கள்
நதிதனில் ஆடி கவி பல பாடி
அசைந்து அசைந்து ஆடுங்கள்
அசைந்து அசைந்து ஆடுங்கள்
ஆ ஆஆ ஆ ஆஆ ஆ ஆ ஆ ஆ...ஆஹா ஹா
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்

கருவண்டு நடனம் தருகின்ற நளினம்
இதயத்தில் சலனம் அம்மம்மா

கருவண்டு நடனம் தருகின்ற நளினம்
இதயத்தில் சலனம் அம்மம்மா...அம்மம்மா
உன் மைவிழி குளத்தினில் தவழ்வது மீனினமோ
கவி கண்டிட மணத்தினில் கமழ்வது தமிழ்மணமோ
உன் மைவிழி குளத்தினில் தவழ்வது மீனினமோ
கவி கண்டிட மணத்தினில் கமழ்வது தமிழ்மணமோ
செம்மாந்த மலர்கள் அன்னாந்து பார்க்கும் உன் காந்த விழிகள்
ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட ஏதேதோ உயிகள்
மலையில் நெளியும் மேகக்குழல்கள் தாகம் தீர்த்திடுமோ
பூவில் மோத பாதம் நோக நெஞ்சம் தாங்கிடுமோ
நெஞ்சம் தாங்கிடுமோ...

வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்

மாதுளம் இதழாள் மாதவி எழிலாள்
மாங்கனி நிறத்தாள் அம்மம்மா

மாதுளம் இதழாள் மாதவி எழிலாள்
மாங்கனி நிறத்தாள் அம்மம்மா...அம்மம்மா
சுருள் வாழையின் மென்மையை மேனியில் கொண்டவளே
இருள் காடெனும் கூந்தலை இடைவரை கண்டவளே
சுருள் வாழையின் மென்மையை மேனியில் கொண்டவளே
இருள் காடெனும் கூந்தலை இடைவரை கண்டவளே
நூல் தாங்கும் இடையாள் கால்பார்த்து நடக்க நெளிகின்ற வடிவம்
மத்தாளத்தைப் போலே தேகத்தையாக்கி குழல்கத்தை ஜாலம்
பாவை சூடும் வாடைகூட பெருமை கொள்ளுமடி
தேவை உந்தன் சேவை என்று இதழ்கள் ஊறுமடி
இதழ்கள் ஊறுமடி...இதழ் கள் ஊறுமடி

வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
புது முகமான மலர்களே நீங்கள்
நதிதனில் ஆடி கவி பல பாடி
அசைந்து அசைந்து ஆடுங்கள்
அசைந்து அசைந்து ஆடுங்கள்

Saturday, September 29, 2012

நாணி கோணி ராணி - மாற்றான்

பாடல்: நாணி கோணி ராணி
திரைப்படம்: மாற்றான்
இசை: ஹேரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: விஜய் ப்ரகாஷ், ஷ்ரேயா கோஷல்,
Shekhinah Shawn Jazeel & கார்த்திக்

நாணி கோணி ராணி
உந்தன் மேனி  நானும் மொய்க்கிறேன்

நாணி கோணி ராணி
உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத்த காணி
உன்னைத்தா நீ என்று கேட்கிறேன்

நீ தூரம் நின்றால் வேர்க்கிறேன்
என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்
எனை எங்கே என்று தேடினேன்

நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய்
தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்
பாவாய் பாவாய் நான் உன்னால் ஆனேன் தீவாய்
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா

நாணி கோணி ராணி
எந்தன் மேனி  ஏனோ மொய்க்கிறாய்
மருதாணி பூத்த காணி
என்னைத்தா நீ என்று கேட்கிறாய்

நீ தூரம் நின்றால் வேர்க்கிறேன்
என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்
எனை எங்கே என்று தேடினேன்

நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய்
தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்
பாராய் பாராய் நான் உன்னால் ஆனேன் வேறாய்
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா

ஒரு காலை நேரம் நீ வந்தாலே
பனி வீசும் காற்றுக்கு
பணியாமல் தேகம் சூடேறும்

கண் பேசும் மௌனமே ஒன்றாக
நாம் போகும் சாலைகள்
முடியாமல் எங்கெங்கோ நீளும்

நதியிலே இலை போல பயணம்
இனிப்பான தருணம்
மனதோடு மாய மின்சாரம்

உன் எதிரில் நனையாமல் கரைந்தேன்
நகராமல் உறைந்தேன்
மெதுவாக மெதுவாக உனதாகிறேன்
உயிரே...உயிரே...உயிர் போக போக துணை

நாணி கோணி ராணி
உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத்த காணி
உன்னைத்தா நீ என்று கேட்கிறேன்

நீ தூரம் நின்றால் வேர்க்கிறேன்
என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்
எனை எங்கே என்று தேடினேன்

தொலை தூரம் போனதே என் மேகம்
புரியாத மென் சோகம்
உயிர் மேலே ஊசி இறக்கும்

பிரிவாலே இன்று நான் போராட
விழியோரம் நீரோட
அவன் கண்ணில் காதல் மயக்கம்

உன் அழகை வெளிக்காட்டும் சாரலில்
எனைப் போல சாயலில்
ஒரு ஜீவன் தீண்டக்கண்டேனே

நெஞ்சினிலே புரியாத ஆதங்கம்
மெலிதான பூகம்பம்
இருந்தாலும் விழியோரம் சிறு ஆனந்தம்
இதயம்...இதயம்...சுகமாக ஏற்கும் இனி

நாணி கோணி ராணி
உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத்த காணி
உன்னைத்தா நீ என்று யேலேகா

நீ தூரம் நின்றால் வேர்க்கிறேன்
என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்
எனை எங்கே என்று தேடினேன் யேலேகா

நீராய் நீராய்...நீ மேகம் தாண்டி வாராய்
தாராய் தாராய்...என் தாகம் தூண்டி நூறாய்
பாவாய் பாவாய்...நான் உன்னால் ஆனேன் தீவாய்
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா





வைகை கரை காற்றே - உயிருள்ளவரை உஷா

பாடல்: வைகை கரை காற்றே நில்லு
திரைப்படம்: உயிருள்ளவரை உஷா
இசை: டி.ராஜேந்தர்
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

வைகைக்கரை காத்தே நில்லு
வஞ்சி தனைப் பாத்தா சொல்லு
வைகைக்கரை காத்தே நில்லு
வஞ்சி தனைப் பாத்தா சொல்லு

மன்னன் மனம் வாடுதென்று
மங்கை தனைத் தேடுதென்று
காத்தே...பூங்காத்தே
என் கண்மணி அவளைக் கண்டால்
நீயும் காதோரம் போய் சொல்லு

வைகைக்கரை காத்தே நில்லு
வஞ்சி தனைப் பாத்தா சொல்லு
வைகைக்கரை காத்தே நில்லு
வஞ்சி தனைப் பாத்தா சொல்லு

மன்னன் மனம் வாடுதென்று
மங்கைதனைத் தேடுதென்று
காத்தே...பூங்காத்தே
என் கண்மணி அவளைக் கண்டால்
நீயும் காதோரம் போய் சொல்லு

திருக்கோவில் வாசலது திறக்கவில்லை
தெருக்கோடி பூஜையது நடக்கவில்லை
தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை
தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை
காதலில் வாழ்ந்த கன்னி மனம்
காவலில் வாடையில் கண்ணி விடும்
கூண்டுக்குள்ளே அலை மோதும்
காதல் கிளி அவள் பாவம்
கூண்டுக்குள்ளே அலை மோதும்
காதல் கிளி அவள் பாவம்
காதல் கிளி அவள் பாவம்

காத்தே...பூங்காத்தே
என் கண்மணி அவளைக் கண்டால்
நீயும் காதோரம் போய் சொல்லு

மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே
அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே
ஜாடையொளி சிந்த அவள் இன்று இல்லையே
நிலவினை மேகம் வானில் மறைக்க
அவளினை யாரோ வீட்டில் தடுக்க
மேகம் அது விலகாதோ
சோகம் அது நீங்காதோ
மேகம் அது விலகாதோ
சோகம் அது நீங்காதோ
சோகம் அது நீங்காதோ

காத்தே...பூங்காத்தே
என் கண்மணி அவளைக் கண்டால்
நீயும் காதோரம் போய் சொல்லு

வைகைக்கரை காத்தே நில்லு
வஞ்சி தனைப் பாத்தா சொல்லு
வைகை கரை காத்தே நில்லு
வஞ்சி தனைப் பாத்தா சொல்லு

மன்னன் மனம் வாடுதென்று
மங்கை தனைத் தேடுதென்று
காத்தே...பூங்காத்தே
என் கண்மணி அவளைக் கண்டால்
நீயும் காதோரம் போய் சொல்லு
நீ காதோரம் போய் சொல்லு
நீ காதோரம் போய் சொல்லு

தென்றலது உன்னிடத்தில் - அந்த ஏழு நாட்கள்

பாடல்: தென்றலது உன்னிடத்தில்
திரைப்படம்: அந்த ஏழு நாட்கள்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & எஸ்.ஜானகி

ஸ க ம ப...க ம க ஸ...நி ஸ நி ப...க ம நி ப...ஸா...ஸா
ஸ க ம ப...க ம க ஸ...நி ஸ நி ப...க ம நி ப...ஸா
கா க ரி...மா ம கா...பா ப ம ப தா...ரி நி ஸா

தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ
தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ
பெண்மையின் சொர்க்கமே பார்வையில் வந்ததோ காவியம் தந்ததோ
தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ

உள்ளம் எங்கும் பொங்கும் ஆசை இன்று தங்கரதம் ஏறியது
உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை இன்று கங்கையென மாறியது
இதுவரை கனவுகள் இளமையின் நினைவுகள் ஈடேறும் நாள் இன்றுதான்
எதுவரை தலைமுறை அதுவரை தொடர்ந்திடும் என் ஆசை உன்னோடுதான்
பெண்மையின் சொர்க்கமே பார்வையில் வந்ததோ காவியம் தந்ததோ
தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ

சந்தம் தேடி சிந்து பாடி உந்தன் சன்னதிக்கு நான் வருவேன்
தஞ்சை கோவில் சிற்பம் போலே ஒரு முத்திரையை நான் பதிப்பேன்
தஞ்சை கோவில் சிற்பம் போலே ஒரு முத்திரையை நான் பதிப்பேன்
அனுதினம் இரவெனும் அதிசய உலகினில் ஆனந்த நீராடுவோம்
தினம் ஒரு புதுவகை கலைகளை அறிந்திடும் ஏகாந்தம் நாம் காணுவோம்

பெண்மையின் சொர்க்கமே பார்வையில் வந்ததோ காவியம் தந்ததோ
தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ
பெண்மையின் சொர்க்கமே பார்வையில் வந்ததோ காவியம் தந்ததோ

மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் - சிகப்பு ரோஜாக்கள்

பாடல்: மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல்
திரைப்படம்: சிகப்பு ரோஜாக்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி

மின்மினிக்கு கண்ணில்
ஒரு மின்னல் வந்தது
அடி கண்ணே...அழகு பெண்ணே
காதல் ராஜாங்க பறவை
தேடும் ஆனந்த உறவை
சொர்க்கம் என் கையிலே

இந்த மின்மினிக்கு கண்ணில்
ஒரு மின்னல் வந்தது
என் மன்னா...அழகு கண்ணா
காதல் ராஜாங்க பறவை
தேடும் ஆனந்த உறவை
சொர்க்கம் என் கையிலே
இந்த மின்மினிக்கு கண்ணில்

இந்த மங்கை இவள் இன்ப கங்கை
எந்தன் மன்னன் எனை சேர்க்கும் கடல்
இந்த கடல் பல கங்கை நதி
வந்து சொந்தம் கொண்டாடும் இடம்
என் உடல் உனக்கென்றும் சமர்ப்பணம்
ன ன ன ன ன ன ன ன
அடி என்ன என்னடி உனக்கின்று அவசரம்
ன ன ன ன ன ன ன ன ன ன ன னா

இந்த மின்மினிக்கு கண்ணில்
ஒரு மின்னல் வந்தது
அடி கண்ணே...அழகு பெண்ணே
காதல் ராஜாங்க பறவை
தேடும் ஆனந்த உறவை
சொர்க்கம் என் கையிலே
இந்த மின்மினிக்கு கண்ணில்

தோட்டத்திலே பல பூக்கள் உண்டு
நீதானே என் சிகப்பு ரோஜா
இன்றும் என்றும் என்னை உன்னுடனே
நான் தந்தேன் என் ஆசை ராஜா
மலர் உன்னை பறித்திட துடிக்கிறேன்
ன ன ன ன ன ன ன ன
இனி தடை என்ன அருகினில் இருக்கிறேன்
ன ன ன ன ன ன ன ன ன ன ன னா

இந்த மின்மினிக்கு கண்ணில்
ஒரு மின்னல் வந்தது
என் மன்னா...அழகு கண்ணா
காதல் ராஜாங்க பறவை
தேடும் ஆனந்த உறவை
சொர்க்கம் என் கையிலே
இந்த மின்மினிக்கு கண்ணில்
ன ன னனா ன ன னனா ன ன னா




Saturday, September 22, 2012

நீதானே தூறல் - மன்மத ராஜாக்கள்

பாடல்: நீதானே தூறல்
திரைப்படம்: மன்மத ராஜாக்கள்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & எஸ்.பி.ஷைலஜா

நீதானே தூறல் நான்தானே சாரல்
நீதானே தூறல் நான்தானே சாரல்
ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம்
ஹே...ஹே...ஹே
மலர்களிலே பனி உறங்கும்
மார்கழி மாதம் கார்காலம்


நீதானே தூறல் நான்தானே சாரல்
நீதானே தூறல் நான்தானே சாரல்
ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம்
ஹே...ஹே...ஹே
மலர்களிலே பனி உறங்கும்
மார்கழி மாதம் கார்காலம்

நீதானே தூறல் நான்தானே சாரல்

உச்சத்தில் மலைமேனி ஓரத்தில்
உலவும் முகில்தான் உரசும் நேரத்தில்
உச்சத்தில் மலைமேனி ஓரத்தில்
உலவும் முகில்தான் உரசும் நேரத்தில்

நினைத்தாயோ நீயும் என்னை
அணைத்தாயோ ஆசைப் பெண்ணை
நினைத்தாயோ நீயும் என்னை
அணைத்தாயோ ஆசைப் பெண்ணை

பருவம் உருவம் பழம்போல் தித்திக்க

நீதானே தூறல் நான்தானே சாரல்
நீதானே தூறல் நான்தானே சாரல்
ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம்

ஹே...ஹே...ஹே
மலர்களிலே பனி உறங்கும்
மார்கழி மாதம் கார்காலம்

நீதானே தூறல் நான்தானே சாரல்

பச்சைப்புல் அழகான மெத்தைதான்
படுக்கும் கிளிகள் படிக்கும் வித்தைதான்
பச்சைப்புல் அழகான மெத்தைதான்
படுக்கும் கிளிகள் படிக்கும் வித்தைதான்

உதட்டோரம் முத்தம் இட்டு
உறவாடும் சத்தம் இட்டு
உதட்டோரம் முத்தம் இட்டு
உறவாடும் சத்தம் இட்டு

அது ஏன் இது ஏன் அறிந்தேன் அம்மம்மா

நீதானே தூறல் நான்தானே சாரல்
ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம்

ஹே...ஹே...ஹே
மலர்களிலே பனி உறங்கும்
மார்கழி மாதம் கார்காலம்

நீதானே தூறல் நான்தானே சாரல்
நீதானே தூறல் நான்தானே சாரல்
லல லால லாலா லல லால லாலா
லல லால லா லா லல லால லா லா
 

மாந்தோப்புக்கிளியே மச்சானப்பாரு - மாந்தோப்புக்கிளியே

பாடல்: மாந்தோப்புக்கிளியே மச்சானப்பாரு
திரைப்படம்: மாந்தோப்புக்கிளியே
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & வாணி ஜெயராம்

மாந்தோப்புக்கிளியே மச்சானப்பாரு
மன சாந்தி காண மனசார
பழகு...பழகு

ஆத்தோட்டம் போலே அழகாகப்பேசி
காத்தோட்டம் போலே கலந்திட்டேன்
மச்சான்...மச்சான்

அம்புட்டு போதும் அச்சாரம் தாரேன்
அம்மம்மா நானு ஆளான பொண்ணு
அட அம்புட்டு போதும் அச்சாரம் தாரேன்
அம்மம்மா நானு ஆளான பொண்ணு
மாந்தோப்புக்கிளியே மச்சானப்பாரு
மன சாந்தி காண மனசார
பழகு...பழகு

ஆத்தோட்டம் போலே அழகாகப்பேசி
காத்தோட்டம் போலே கலந்திட்டேன்
மச்சான்...மச்சான்


ஆளான உன்னை ஆளத்தான் என்னை
ஆண்டவன் படைச்சான் ஆசைய விதைச்சான்
ஆளான உன்னை ஆளத்தான் என்னை
ஆண்டவன் படைச்சான் ஆசைய விதைச்சான்

ஆவணி மாசம் தாவணி போட்டேன்
ஆவணி மாசம் தாவணி போட்டேன்
அதுக்குள்ள புள்ள தாளாது மச்சான்...மச்சான்


மாந்தோப்புக்கிளியே மச்சானப்பாரு
மன சாந்தி காண மனசார
பழகு...பழகு

ஆத்தோட்டம் போலே அழகாகப்பேசி
காத்தோட்டம் போலே கலந்திட்டேன்
மச்சான்...மச்சான்


என் மாமன் பொண்ணே உன் மேனி நோக
ஒரு மூணு வருஷம் ஒரு புள்ள வேண்டாம்
என் மாமன் பொண்ணே உன் மேனி நோக
ஒரு மூணு வருஷம் ஒரு புள்ள வேண்டாம்

நெருப்போடு பஞ்சு நெருங்கிட்டா போச்சு
நெருப்போடு பஞ்சு நெருங்கிட்டா போச்சு

நாடெங்கும் ஒண்ணு அதுக்காக இருக்க...புள்ள

மாந்தோப்புக்கிளியே மச்சானப்பாரு
மன சாந்தி காண மனசார
பழகு...பழகு

ஆத்தோட்டம் போலே அழகாகப்பேசி
காத்தோட்டம் போலே கலந்திட்டேன்
மச்சான்...மச்சான்
 

அழகு சித்திரம் இளமை புத்தகம் - மருமகளே வாழ்க

பாடல்: அழகு சித்திரம் இளமை புத்தகம்
திரைப்படம்: மருமகளே வாழ்க
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்: ஆண் குரல்? & எஸ்.பி.ஷைலஜா

அழகு சித்திரம் இளமை புத்தகம்
அழைக்குதய்யா மயக்குதய்யா
கண்ணாலே ரெண்டு கண்ணாலே
இளம் பூங்காற்றும் நான் எழில் நீரூற்றும் நான்
என் அங்கம் உன் கையில் மிருதங்கமே

அழகு சித்திரம் இளமை புத்தகம்
அழைக்குதய்யா மயக்குதய்யா
கண்ணாலே ரெண்டு கண்ணாலே
இளம் பூங்காற்றும் நான் எழில் நீரூற்றும் நான்
என் அங்கம் உன் கையில் மிருதங்கமே


ஸஸ ஸ கக ரிரி ஸ நிநி நி ஸ ஸ ஸா
கக க பப மம க ரிரி ரி கக க
பநி...ஸா மப...நி பநி...ஸா மப...நி
பா பா பா பா பம கரி சநி தப
ஸநி ஸஸ ஸநி ஸஸ ஸநி ஸஸ ஸநி ஸஸ
பம கரி கரி கரி கரி ஸநி ஸநி ஸரி ஸக
ரிக ரிக ரிக ரிக ரிம கம கம
பம கரி ஸநி தப ஸப
பம கரி ஸநி தப...ஸா

வைகை...தோளில் வை கை
காதல் பொய்கை என்னோடு நின்றாடு
வைகை தோளில் வை கை
காதல் பொய்கை என்னோடு நின்றாடு

கலைஞன் கண்டாலே சிலையும் பெண்ணாகும்
அணைத்துக் கொண்டாலே அமைதி உண்டாகும்

மதுக்கடலென புது சுவைதரும் உனது பொன்னேடு
புதுக்கவிதைகள் தினம் இதழ்களில் எழுதிக் கொண்டாடு


அழகு சித்திரம் இளமை புத்தகம்
அழைக்குதய்யா மயக்குதய்யா
கண்ணாலே ரெண்டு கண்ணாலே
இளம் பூங்காற்றும் நான் எழில் நீரூற்றும் நான்
என் அங்கம் உன் கையில் மிருதங்கமே


மோகம்...காதல் ராகம்
இந்த நேரம் எந்நாளும் உண்டாகும்
ஆஹா ஹா மோகம் காதல் ராகம்
இந்த நேரம் எந்நாளும் உண்டாகும்

இனிக்கும் பாலாடை குளிக்கும் நீரோடை
மணக்கும் பூவாடை அழைக்கும் அத்தானை

கடல் தழுவிடும் நதியென மெல்ல தழுவக்கூடாதோ
மழைமுகிலென தினம் சுகமழை பொழியக்கூடாதோ


அழகு சித்திரம் இளமை புத்தகம்
அழைக்குதய்யா மயக்குதய்யா
கண்ணாலே ரெண்டு கண்ணாலே
இளம் பூங்காற்றும் நான் எழில் நீரூற்றும் நான்
என் அங்கம் உன் கையில் மிருதங்கமே
 

ராவு நேரம் வாடக்காத்து - சந்தனக்காற்று

பாடல்: ராவு நேரம் வாடக்காத்து
திரைப்படம்: சந்தனக்காற்று
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: மனோ & சித்ரா

ராவு நேரம் வாடக்காத்து
பூவு ரெண்டும் சேர்ந்துக்கிச்சு
ஏதேதோ ஆச வந்தது புள்ள
ஏலேலங்கிளியே வாடி உள்ள
பாயப்போடு என் நோயத்தீரு
பாயப்போடு என் நோயத்தீரு

ராவு நேரம் வாடக்காத்து
பூவு ரெண்டும் சேர்ந்துக்கிச்சு


ஏ மச்சான் கை பட்டாலே
மகராசி முகம் செவக்கும்
மகராசி தொட்டாலே
சொர்க்கம்தான் உருவாகும்

சாமக்கோழி கூவையில
சத்தம் இல்லாத முத்தம் தா
சாமக்கோழி கூவையில
சத்தம் இல்லாத முத்தம் தா

ஒரு மாதிரி கேக்குது மூச்சு
இந்த ராவுல வேறெது பேச்சு
ஒரு மாதிரி கேக்குது மூச்சு
இந்த ராவுல வேறெது பேச்சு

மோகம் அது ஒரு மோகம்
யோகம் இருட்டுக்கு யோகம்


ராவு நேரம் வாடக்காத்து
பூவு ரெண்டும் சேர்ந்துக்கிச்சு

தலைவாழ இலைபோட்டு
பலகாரம் பழம் எல்லாம்
பரிமாறி வச்சிருக்கு
பசி நேரம் வந்தாச்சு

சப்பாட்டுக்கு விருந்தாளி
சரியாகத்தான் வந்திருக்கான்
சப்பாட்டுக்கு விருந்தாளி
சரியாகத்தான் வந்திருக்கான்

ஒரு பொம்பள சிரிச்சா போதும்
இந்த பொடியனுக்கதுவே போதும்
ஒரு பொம்பள சிரிச்சா போதும்
இந்த பொடியனுக்கதுவே போதும்

வயசு சிரிக்குது எளசு
சிரிச்சா மயங்குது மனது


ராவு நேரம் வாடக்காத்து
பூவு ரெண்டும் சேர்ந்துக்கிச்சு

ஏதேதோ ஆச வந்தது புள்ள
ஏலேலங்கிளியே வாடி உள்ள
பாயப்போடு என் நோயத்தீரு
பாயப்போடு என் நோயத்தீரு

ஆசையுள்ள ரோஜாசெண்டு - சித்திரமே சித்திரமே

பாடல்: ஆசையுள்ள ரோஜாசெண்டு
திரைப்படம்: சித்திரமே சித்திரமே
இசை: சிவாஜி ராஜா
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & வாணி ஜெயராம்

ஆசையுள்ள ரோஜாசெண்டு அதில் தேனெடுக்கும் காதல்வண்டு
ஆசையுள்ள ரோஜாசெண்டு அதில் தேனெடுக்கும் காதல்வண்டு
தங்கத்து ரத்தினமே நெஞ்சுக்குள் தங்கிய சித்திரமே
தங்கத்து ரத்தினமே நெஞ்சுக்குள் தங்கிய சித்திரமே

ஆ...ஆஆ நாள்தோறும் பாலூறும் தோள்சேறும் நேரமே
காதலன் நெஞ்சப்படி மலர்ந்தாள் காவிய வஞ்சிக்கொடி
காதலன் நெஞ்சப்படி மலர்ந்தாள் காவிய வஞ்சிக்கொடி

ஆசையுள்ள ரோஜாசெண்டு அதில் தேனெடுக்கும் காதல்வண்டு

காதல் கனிந்தால் வாழ்க்கை முல்லை மஞ்சமடி
உந்தன் பாதம் எனக்கு என்றும் தஞ்சமடி
காதல் கனிந்தால் வாழ்க்கை முல்லை மஞ்சமடி
உந்தன் பாதம் எனக்கு என்றும் தஞ்சமடி

இரு தோளுக்கு நாளைக்கு மாலைக்கு சொல்லிவிடு
மல்லிகைப்பூ விரித்து கிடப்போம் மன்மத தேன்குடித்து
மல்லிகைப்பூ விரித்து கிடப்போம் மன்மத தேன்குடித்து

ஆசையுள்ள ரோஜாசெண்டு அதில் தேனெடுக்கும் காதல்வண்டு

நிஜமான காதல் உணர்வோடு சேரும்
உணர்வோடு சேர்ந்து உயிராக மாறும்


அட சந்தன பந்துகள் மன்மத சிந்துகள் கொஞ்சிட துள்ளாதோ
அட சந்தன பந்துகள் மன்மத சிந்துகள் கொஞ்சிட துள்ளாதோ

ஆஹா பாலைவனத்தில் மஜ்னு பட்டது கொஞ்சமல்ல
ஈரம் இருந்தும் மறைத்து வாழ்வது நெஞ்சமல்ல
ஆஹா பாலைவனத்தில் மஜ்னு பட்டது கொஞ்சமல்ல
ஈரம் இருந்தும் மறைத்து வாழ்வது நெஞ்சமல்ல

அட நெஞ்சுக்குள் போரிட்டு வாழ்வது வாழ்க்கையல்ல

காற்றில் அணைந்துவிட காதல் கற்பூர தீபமல்ல
காற்றில் அணைந்துவிட காதல் கற்பூர தீபமல்ல
ஆசையுள்ள ரோஜாசெண்டு அதில் தேனெடுக்கும் காதல்வண்டு
தங்கத்து ரத்தினமே நெஞ்சுக்குள் தங்கிய சித்திரமே
தங்கத்து ரத்தினமே நெஞ்சுக்குள் தங்கிய சித்திரமே

ரோசா மொட்டு காத்து லேசாத் தொட்டு - வீரன்

பாடல்: ரோசா மொட்டு காத்து லேசாத் தொட்டு
திரைப்படம்: வீரன்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & எஸ்.பி.ஷைலஜா

ரோசா மொட்டு காத்து லேசாத் தொட்டு
பூவாச்சுதோ காதல் நோவாச்சுதோ

ராசாவத்தான் பாத்து இந்த ரோசாவுக்கு ஏக்கம்
சூடாமத்தான் போனா ரொம்ப சூடாகத்தான் வேர்க்கும்


ரோசா மொட்டு காத்து லேசாத் தொட்டு
பூவாச்சுதோ காதல் நோவாச்சுதோ

ராசாவத்தான் பாத்து இந்த ரோசாவுக்கு ஏக்கம்
சூடாமத்தான் போனா ரொம்ப சூடாகத்தான் வேர்க்கும்


சின்னமவ புன்சிரிப்பு சிவகாசி மத்தாப்பு
மின்னுறப்போ நானே என்னை மறந்தேனே
சின்னமவ புன்சிரிப்பு சிவகாசி மத்தாப்பு
மின்னுறப்போ நானே என்னை மறந்தேனே

நான் எந்நாளும் உன் சிங்காரி
நான் நீராட நீ காவேரி
மெதுவா மெதுவா நெருங்கு
புது வெள்ளம் இதுதான்


ரோசா மொட்டு காத்து லேசாத் தொட்டு
பூவாச்சுதோ காதல் நோவாச்சுதோ

ராசாவத்தான் பாத்து இந்த ரோசாவுக்கு ஏக்கம்
சூடாமத்தான் போனா ரொம்ப சூடாகத்தான் வேர்க்கும்


உன் பேரை சொல்லி சொல்லி உச்சியிலே பூ வச்சேன்
உன்னை எண்ணித்தானே மஞ்ச குளிச்சேனே
உன் பேரை சொல்லி சொல்லி உச்சியிலே பூ வச்சேன்
உன்னை எண்ணித்தானே மஞ்ச குளிச்சேனே

நீ தேரோட்டம் வா வெள்ளோட்டம்
ஊர் ஏசாதோ பெண் கூசாதோ
அதைத்தான் இதைத்தான் நினைச்சா
அலை பாயும் மனம்தான்


ரோசா மொட்டு காத்து லேசாத் தொட்டு
பூவாச்சுதோ காதல் நோவாச்சுதோ
ராசாவத்தான் பாத்து இந்த ரோசாவுக்கு ஏக்கம்
ஹா சூடாமத்தான் போனா ரொம்ப சூடாகத்தான் வேர்க்கும்
 

கண்ணி வச்சேன் - நெஞ்சிலே துணிவிருந்தால்

பாடல்: கண்ணி வச்சேன் கண்ணி வச்சேன்
திரைப்படம்: நெஞ்சிலே துணிவிருந்தால்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: எஸ்.என்.சுரேந்தர் & வாணி ஜெயராம்

கன்னி...பொண்ணே
கண்ணி வச்சேன் கண்ணி வச்சேன் தண்ணியிலே
கொளம் இங்கே வலையாச்சு
கிளி வந்து விழுந்தாச்சு தன்னாலே
ராசாத்தி கொளம் இங்கே வலையாச்சு
கிளி வந்து விழுந்தாச்சு தன்னாலே

ஆச...வச்சேன்
ஆச வச்சேன் ஆச வச்சேன் ஒன்னாலே
தண்ணிப் பான தல மேல
தாகம் எல்லாம் ஒம் மேல ஒம் மேல
ராசாவே தண்ணிப் பான தல மேல
தாகம் எல்லாம் ஒம் மேல ஒம் மேல


துள்ளித் துள்ளி வந்து கிள்ளிக் கிள்ளி
என்னை அள்ளி அணைச்சிட வந்தாளே
தொட்டுத் தொட்டு என்னை கட்டிக் கட்டிக்கொண்டு
கட்டுக் கரும்பென நின்னாளே
துள்ளித் துள்ளி வந்து கிள்ளிக் கிள்ளி
என்னை அள்ளி அணைச்சிட வந்தாளே
தொட்டுத் தொட்டு என்னை கட்டிக் கட்டிக்கொண்டு
கட்டுக் கரும்பென நின்னாளே

நான் துவைச்ச சேல நான் புழிஞ்சா நீர் வடியும்
அத்தமகன் புழிஞ்சா அத்தனையும் தேன் வடியும்

தேன் குடிச்சி திணறுதடி நீந்த மறந்த செம்மீனு
தேன் குடிச்சி திணறுதடி நீந்த மறந்த செம்மீனு


ஆச...வச்சேன்
ஆச வச்சேன் ஆச வச்சேன் ஒன்னாலே
தண்ணிப் பான தல மேல
தாகம் எல்லாம் ஒம் மேல ஒம் மேல
ராசாவே தண்ணி பான தல மேல
தாகம் எல்லாம் ஒம் மேல ஒம் மேல


முத்து முத்தம் என்று நித்தம் நித்தம்
இங்கு தொட்டுக் கலந்திட வந்தானே
அக்கம் பக்கம் கண்டு வெட்கம் வெட்கம் என்று
மிச்சம் மிச்சம் கொஞ்சம் என்றேனே
முத்து முத்தம் என்று நித்தம் நித்தம்
இங்கு தொட்டுக் கலந்திட வந்தானே
அக்கம் பக்கம் கண்டு வெட்கம் வெட்கம் என்று
மிச்சம் மிச்சம் கொஞ்சம் என்றேனே

பாவி மக பார்த்தா பார்த்த இடம் பாலாறு
என்னைக்கு தீரும் எள வயசு கோளாறு

பஞ்சு மெத்த வாங்கி வந்து பரிசம் போடப்போறாரு
பஞ்சு மெத்த வாங்கி வந்து பரிசம் போடப்போறாரு


கன்னி...பொண்ணே
கண்ணி வச்சேன் கண்ணி வச்சேன் தண்ணியிலே
கொளம் இங்கே வலையாச்சு
கிளி வந்து விழுந்தாச்சு தன்னாலே

ஆச...வச்சேன்
ஆச வச்சேன் ஆச வச்சேன் ஒன்னாலே
தண்ணிப் பான தல மேல
தாகம் எல்லாம் ஒம் மேல ஒம் மேல

தழுவும் பொழுதே நழுவும் நிலவே - ஊஞ்சலாடும் உறவுகள்

பாடல்: தழுவும் பொழுதே நழுவும் நிலவே
திரைப்படம்: ஊஞ்சலாடும் உறவுகள்
இசை: கே.சக்ரவர்த்தி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.பி.ஷைலஜா

தழுவும் பொழுதே நழுவும் நிலவே
அழகே அருகினில் வா அன்பே வா வா
தழுவும் பொழுதே நழுவும் நிலவே
அழகே அருகில் வா அன்பே வா வா
செம்மாங்கனி...இரண்டு ஒன்று திரண்டு
என் கண் முன்பு பெண்ணானது
அட என் நெஞ்சு என்னாவது

நழுவும் நிலவை தழுவும் அழகே
உயிரே அருகினில் வா இன்னும் வா வா


உந்தன் கரம் ஏதோ செய்கின்றது
ரோஜா மழை இன்று பெய்கின்றது

காதலை சொல்லுது கண்களை கிள்ளுது
கன்னி உந்தன் அழகு

மன்மத வேளையில் அஞ்சுது பெண் மயில்
தள்ளி நின்று பழகு

மடிமீது பெண்ணே உன்னை அடை காக்கவா
தினசரி முத்தங்கள்...கரைந்தது வெட்கங்கள்
இளமையை கட்டுங்கள்...இனியென்ன சட்டங்கள்
அடிக்கடி இளமனம் துடிக்கையில் வேதாந்தங்கள்

தழுவும் பொழுதே நழுவும் நிலவே
அழகே அருகினில் வா அன்பே வா வா

நழுவும் நிலவை தழுவும் அழகே
உயிரே அருகினில் வா இன்னும் வா வா

செம்மாங்கனி...இரண்டு ஒன்று திரண்டு
உன் கண் முன்பு பெண்ணானதோ
அட உன் நெஞ்சு புண்ணானதோ


நீ கொண்டது வெறும் பெண்ணின் மனம்
நான் கண்டது அது ராமன் குணம்

உன் மனம் பொன் மனம் என் குணம் பெண் குணம்
கொள்ளை போக விடுமோ

இலைவிழும் கிளைவிழும் மலர்விழும் மரம்விழும்
வானம் மண்ணில் விழுமோ

இருந்தாலும் கண்ணா பெண்ணின் மனம் கேட்குதா
அழகிய பெண்ணே நீ அவசரம் கொள்ளாதே
பெண்களின் கண்படுமே தெருவினில் நில்லாதே
சரி சரி அதைவிடு இதழ்கொடு பெண்ணே நாளானதே

நழுவும் நிலவை தழுவும் அழகே
உயிரே அருகினில் வா இன்னும் வா வா

செம்மாங்கனி...இரண்டு ஒன்று திரண்டு
என் கண் முன்பு பெண்ணானது
அட என் நெஞ்சு என்னாவது
 

யாரோ யாரோ யாரோடு யாரோ - பணம் பத்தும் செய்யும்

பாடல்: யாரோ யாரோ யாரோடு யாரோ
திரைப்படம்: பணம் பத்தும் செய்யும்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: ஜெயசந்திரன் & வாணி ஜெயராம்

யாரோ யாரோ யாரோடு யாரோ
உன்னோடு நானோ என்னோடு நீயோ
தேவன் தேவி என்று ஜீவன் கூடும் இன்று


யாரோ யாரோ யாரோடு யாரோ
உன்னோடு நானோ என்னோடு நீயோ
தேவன் தேவி என்று ஜீவன் கூடும் இன்று


அருகினிலே பருவ நிலா
இரு விழியில் வசந்த விழா
நானும் காண நீயும் நாண

இள மனதும் இள வயதும்
முதன் முறையாய் மயங்குகையில்
மோகம் கூட தேகம் வாட

மெதுவாய் மடிமேல் ஏந்திக் கொண்டு
மெதுவாய் மடிமேல் ஏந்திக் கொண்டு

மீட்டும் வீணை நானோ
மீட்டும் வீணை நானோ


யாரோ யாரோ யாரோடு யாரோ
உன்னோடு நானோ என்னோடு நீயோ
தேவன் தேவி என்று ஜீவன் கூடும் இன்று

தினம் தினமும் பகல் இரவும்
வித விதமாய் பல கனவு
தோன்றும் போது தூக்கம் ஏது

பனிமலரே உனை நினைத்து
தனிமையிலே தவி தவித்து
ஏங்கும் ஏக்கம் என்று தீரும்

ஒரு நாள் திருநாள் மாலை கொள்ள
ஒரு நாள் திருநாள் மாலை கொள்ள

பூவை நானும் கிள்ள
பூவை நானும் கிள்ள


யாரோ யாரோ யாரோடு யாரோ
உன்னோடு நானோ என்னோடு நீயோ
தேவன் தேவி என்று ஜீவன் கூடும் இன்று
லா லா லா லா லாலா லா லா லா லா லாலா
லா லா லா லா லாலா லா லா லா லா லாலா

அஞ்சாறு நாட்களாச்சு தூங்கி - பணம் பத்தும் செய்யும்

பாடல்: அஞ்சாறு நாட்களாச்சு தூங்கி
திரைப்படம்: பணம் பத்தும் செய்யும்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்: எஸ்.பி.ஷைலஜா

அஞ்சாறு நாட்களாச்சு தூங்கி
அத்தானை எண்ணி எண்ணி ஏங்கி
அஞ்சாறு நாட்களாச்சு தூங்கி
அத்தானை எண்ணி எண்ணி ஏங்கி
சாயங்கால நேரம் பார்த்து
ஜாதி மல்லிப்பூவும் பூத்து ஆட வாட
சாமக்கோழி சத்தம் கேட்டு
சேவல் வந்து முத்தம் கேட்டு கெஞ்ச கொஞ்ச
ஓ ஹோ ஹோ ஹோ...ஓ ஹோ ஹோ ஹோ
அஞ்சாறு நாட்களாச்சு தூங்கி
அத்தானை எண்ணி எண்ணி ஏங்கி

ஊரில் உள்ள ஆண்களில் உன்னாட்டமா
யாரும் இல்லை வீரனே யம்மா யம்மா
எல்லோருமே பாராட்டிடும் கில்லாடி நீ எந்நாளிலும்
கழுவும் பொழுதில் நழுவும் மீன்தான் நீயல்லவா

ஓ ஹோ ஹோ ஹோ...ஓ ஹோ ஹோ ஹோ
அஞ்சாறு நாட்களாச்சு தூங்கி
அத்தானை எண்ணி எண்ணி ஏங்கி

ஜாடைகொண்டு பேசுவேன் அங்கங்கு நான்
கண்டுக்கொள்ள வேண்டும் நீ என்னென்று தான்
எந்நாளும் நான் உன் பக்கமே அன்பானது பெண் வர்க்கமே
உனையே தினமும் வலமாய் வருவேன் வண்டாட்டமே

ஓ ஹோ ஹோ ஹோ...ஓ ஹோ ஹோ ஹோ
அஞ்சாறு நாட்களாச்சு தூங்கி
அத்தானை எண்ணி எண்ணி ஏங்கி
சாயங்கால நேரம் பார்த்து
ஜாதி மல்லிப்பூவும் பூத்து ஆட வாட
சாமக்கோழி சத்தம் கேட்டு
சேவல் வந்து முத்தம் கேட்டு கெஞ்ச கொஞ்ச
ஓ ஹோ ஹோ ஹோ...ஓ ஹோ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஹோ...ஓ ஹோ ஹோ ஹோ
 

மயிலா மானா - ஒரு நல்லவன் ஒரு வல்லவன்

பாடல்: மயிலா மானா
திரைப்படம்: ஒரு நல்லவன் ஒரு வல்லவன்
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: ஜெயசந்திரன் & பி.சுசீலா

மயிலா மானா ஓஹ்ஹோய் விழியா மீனா
முத்துக்கள் கொட்டிவைத்த பவளப்பெட்டி
முத்தங்கள் தந்தால் என்ன தழுவிக்கட்டி

மயிலா மானா ஓஹ்ஹோய் விழியா மீனா
முத்துக்கள் கொட்டிவைத்த பவளப்பெட்டி
முத்தங்கள் தந்தால் என்ன தழுவிக்கட்டி

மயிலா மானா ஓஹ்ஹோய் விழியா மீனா

மலையின் மேலே ஓஹ்ஹோய் முகிலைப்போலே
அசையும் கூந்தல் ஓஹ்ஹோய் மலரின் ஊஞ்சல்
மலையின் மேலே முகிலைப்போலே
அசையும் கூந்தல் மலரின் ஊஞ்சல்
விழிகளில்கூட கவிதை சொல்லும் மனதை அள்ளும்

மயிலா மானா ஓஹ்ஹோய் விழியா மீனா
முத்துக்கள் கொட்டிவைத்த பவளப்பெட்டி
முத்தங்கள் தந்தால் என்ன தழுவிக்கட்டி
மயிலா மானா ஓஹ்ஹோய் விழியா மீனா

இனிமேல் இங்கே ஓஹ்ஹோய் பிரிவும் இல்லை
விழியில் இங்கே ஓஹ்ஹோய் துயிலும் இல்லை
இனிமேல் இங்கே பிரிவும் இல்லை
விழியில் இங்கே துயிலும் இல்லை
இரவும் இல்லை பகலும் இல்லை சுகங்கள் தேட

மயிலா மானா ஓஹ்ஹோய் விழியா மீனா
முத்துக்கள் கொட்டிவைத்த பவளப்பெட்டி
முத்தங்கள் தந்தால் என்ன தழுவிக்கட்டி

மயிலா மானா ஓஹ்ஹோய் விழியா மீனா
முத்துக்கள் கொட்டிவைத்த பவளப்பெட்டி
முத்தங்கள் தந்தால் என்ன தழுவிக்கட்டி

மயிலா மானா ஓஹ்ஹோய் விழியா மீனா
 

அழகா வடிவழகா - ஒரு நல்லவன் ஒரு வல்லவன்

பாடல்: அழகா வடிவழகா
திரைப்படம்: ஒரு நல்லவன் ஒரு வல்லவன்
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: வாணி ஜெயராம் & குழுவினர்

அழகா வடிவழகா எந்தன் மாமா...மாமா
ஆசை நடை அழகா எந்தன் மாமா...மாமா
உனை நான் விடுவதில்லை எந்தன் மாமா...மாமா
அருகே வர வேணும் எந்தன் மாமா...எந்தன் மாமா
அழகா வடிவழகா எந்தன் மாமா...மாமா
ஆசை நடை அழகா எந்தன் மாமா

உலகம் உருப்படுமா உன்னைப் பாத்தா
தர்மம் அழிஞ்சதெல்லாம் இன்று நேத்தா
உலகம் உருப்படுமா உன்னைப் பாத்தா
தர்மம் அழிஞ்சதெல்லாம் இன்று நேத்தா
ஊருடனே ஒண்ணா இரு மாலை வருமே
ஊருடனே ஒண்ணா இரு மாலை வருமே
ஒனக்கும் எனக்கும் நேர்மை எதுக்கு


அழகா வடிவழகா எந்தன் மாமா...மாமா
ஆசை நடை அழகா எந்தன் மாமா

விடிஞ்சும் இருட்டிருக்கும் எங்க பூமி
முடிஞ்சும் தொடரும் பொய்கள் கோடி
விடிஞ்சும் இருட்டிருக்கும் எங்க பூமி
முடிஞ்சும் தொடரும் பொய்கள் கோடி
நாடகமே நாடானது நியாயம் எதுக்கு
நாடகமே நாடானது நியாயம் எதுக்கு
கசக்கும் நிஜங்கள் போதும் நமக்கு


அழகா வடிவழகா எந்தன் மாமா...மாமா
ஆசை நடை அழகா எந்தன் மாமா...மாமா
உனை நான் விடுவதில்லை எந்தன் மாமா...மாமா
அருகே வர வேணும் எந்தன் மாமா...எந்தன் மாமா
 

சுகந்தம் மணக்கின்ற வசந்தம் - மீண்டும் பல்லவி

பாடல்: சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
திரைப்படம்: மீண்டும் பல்லவி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: ஜெயசந்திரன் & பி.சுசீலா

ஆ...ஆஆ ஆஆ ஆஆஆ
சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
கிறங்கும் இவன் நெஞ்சம் மயங்கும்
ஆ...ஆஆ ஆஆ ஆஆஆ
சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
கிறங்கும் இவன் நெஞ்சம் மயங்கும்
உறங்கும் மயிலே எழுந்தாடி வா
இனிக்கும் கனவே இதழின் தேன் தரவா

ஆ...ஆஆ ஆஆ ஆஆஆ
சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
கிறங்கும் இவள் நெஞ்சம் மயங்கும்


ஆருயிர் நாயகன் காதலின் சேவகன்
நாள்தோறும் தேன் சிந்துவான்

பூவிழி நாயகி புன்னகை மோகினி
ஆனந்த நீராடுவாள்

தினமும் இரவில் தீபாவளி
விடிந்தும் ஒலிக்கும் இனிக்கும் கீதாஞ்சலி

ஆ...ஆஆ ஆஆ ஆஆஆ
சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
கிறங்கும் இவள் நெஞ்சம் மயங்கும்


காவிய மேகமே பூமழை தூவுமே
என் செல்வம் நீதானடி

கல்வியில் மேன்மைகள் கண்களில் ஞானங்கள்
சேராதோ என் செல்வமே

இதயம் முழுதும் தேனோடுமே
மகனின் வழியில் மரங்கள் பூத்தூவுமே

ஆ...ஆஆ ஆஆ ஆஆஆ
சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
கிறங்கும் இவன் நெஞ்சம் மயங்கும்


பொங்கிடும் தேன் தரும் சந்தனப்பூமரம்
மணம் ஆகும் நாளும் வரும்

மன்மத வேளையில் மக்கல மேடையில்
பூச்சூடவும் சோலை வரும்

எனது விழியில் மழைக்காலமே
வழியும் துளிகள் மகளே நீ வாழ்கவே

ஆ...ஆஆ ஆஆ ஆஆஆ
சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
கிறங்கும் இவன் நெஞ்சம் மயங்கும்
 

யோகமிது புது யோகமிது - மாப்பிள்ளை சிங்கம்

பாடல்: யோகமிது புது யோகமிது
திரைப்படம்: மாப்பிள்ளை சிங்கம்
இசை:
பாடியவர்கள்: ஜெயசந்திரன் & வாணி ஜெயராம்

யோகமிது புது யோகமிது
யோகமிது புது யோகமிது
விழியோடு கவிபாடி
ரதியோடு சுகம் தேடும்
யோகமிது புது யோகமிது


நேரமிது சுப நேரமிது
நேரமிது சுப நேரமிது
மலரோடை நீராடி
மதனோடு நானாட
நேரமிது சுப நேரமிது


அந்தி வரும் தென்றலிலே
ஆடி ஒரு தேதி வரும்
அந்தி வரும் தென்றலிலே
ஆடி ஒரு தேதி வரும்
உள்ளத்தில் ஆசை வந்து
உன்னையே நாடி வரும்

மன்னவனின் கரங்களிலே
மாலை இடும் வேளைதனில்
மன்னவனின் கரங்களிலே
மாலை இடும் வேளைதனில்
கள்ள விழிப் பார்வையிலே
புல்லரிக்கும் பொன்மேனி


யோகமிது புது யோகமிது
விழியோடு கவிபாடி
ரதியோடு சுகம் தேடும்
யோகமிது புது யோகமிது

நேரமிது சுப நேரமிது
மலரோடை நீராடி
மதனோடு நானாட
நேரமிது சுப நேரமிது


சின்னவளின் விழி சிவக்கும்
சீதனங்கள் ஏராளம்
சின்னவளின் விழி சிவக்கும்
சீதனங்கள் ஏராளம்
சங்கமத்தில் கோடி சுகம்
சரிபாதி உனதாகும்

புன்னகையில் மின்னலிடும்
பூவிதழில் தேனூறும்
புன்னகையில் மின்னலிடும்
பூவிதழில் தேனூறும்
கன்னத்தில் கோலமிடும்
கன்னி எந்தன் சொந்தமடி


நேரமிது சுப நேரமிது
நேரமிது சுப நேரமிது
மலரோடை நீராடி
மதனோடு நானாட
நேரமிது சுப நேரமிது

யோகமிது புது யோகமிது
விழியோடு கவிபாடி
ரதியோடு சுகம் தேடும்
யோகமிது புது யோகமிது

நேரமிது சுப நேரமிது
யோகமிது புது யோகமிது

பூவே உன்னை கட்டிக்கொண்டு - அவன்

பாடல்: பூவே உன்னை கட்டிக்கொண்டு
திரைப்படம்: அவன்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & உமா ரமணன்

பூவே உன்னை கட்டிக்கொண்டு பூஜை செய்யட்டா
நேரம் நல்ல நேரம் என்று மேளம் கொட்டட்டா
ஓடும் நதி ரெண்டும் ஒன்றானது இன்று
நாம் போகின்ற பாதைகள் சோலை ஆனது

ஓடும் நதி ரெண்டும் ஒன்றானது இன்று
நாம் போகின்ற பாதைகள் சோலை ஆனது
பூவே உன்னை கட்டிக்கொண்டு பூஜை செய்யட்டா
நேரம் நல்ல நேரம் என்று மேளம் கொட்டட்டா


உன்னைக்கண்ட பின்னே என்னைக்காணோம் கண்ணா
எனை கண்டுகொள்ள வந்தேன் உன் கண்ணில் இன்று கண்டேன்

நாளை தோன்றும் புல்லும் அன்பே நம் பேர் சொல்லும்
அட வானும் மண்ணும் மாறும் நம் காதல் நின்று வாழும்

மதனா நீயும் இல்லை என்றால் மண்ணில் நானும் இல்லை
மானே உந்தன் மூச்சில் தானே மண்ணில் நானும் வாழ்கிறேன்

பூவே உன்னை கட்டிக்கொண்டு பூஜை செய்யட்டா
நேரம் நல்ல நேரம் என்று மேளம் கொட்டட்டா

ஓடும் நதி ரெண்டும் ஒன்றானது இன்று
நாம் போகின்ற பாதைகள் சோலை ஆனது


கண்கள் காதல் சின்னம் கன்னம் ரோஜாக்கிண்ணம்
பசி தீர்ந்து போகும் வண்ணம் பரிமாற வேண்டும் இன்னும்

அள்ளித் தந்தேன் முத்தம் என்னில் ஏதோ சத்தம்
விழி மூடவில்லை நித்தம் இரவோடு என்ன யுத்தம்

கண்ணே நீயே தஞ்சம் என்று வந்தேன் இங்கே வா வா
ஜென்மம் மாறும் என்னும் போதும் சொந்தம் மாறாதல்லவா

பூவே உன்னை கட்டிக்கொண்டு பூஜை செய்யட்டா
நேரம் நல்ல நேரம் என்று மேளம் கொட்டட்டா

ஓடும் நதி ரெண்டும் ஒன்றானது இன்று
நாம் போகின்ற பாதைகள் சோலை ஆனது
 

மல்லியப்பூவ தலையில் வச்சி - நடமாடும் சிலைகள்

பாடல்: மல்லியப்பூவ தலையில் வச்சி
திரைப்படம்: நடமாடும் சிலைகள்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: ஜெயசந்திரன் & வாணி ஜெயராம்

மல்லியப்பூவ தலையில் வச்சி
மச்சான் ஆசைய மனசில் வச்சி
வெள்ளக்கட்டி பேச்சுக்காரி எங்கே வந்தாளோ
என்ன வேலைக்காக யாரப்பாக்க
இங்கே வந்தாளோ இங்கே வந்தாளோ


மல்லுவேட்டி இடையில் கட்டி
மடிப்பு துண்டை தலையில் சுத்தி
கள்ளனைப்போல் எதுக்கு இங்கே விசிலடிச்சாரோ
எதை கொள்ளையடிக்க மறைஞ்சிருந்து
வழி மறிச்சாரோ வழி மறிச்சாரோ


பல்வரிசை பளபளக்க பருவமேனி தளதளக்க
வெள்ளரிக்கா வெடிச்சதுபோல் சிரிச்சி வைக்குறியே

என்னை விடியும்வரை தூங்காமத்தான் முழிக்க வைக்குறியே
பல்வரிசை பளபளக்க பருவமேனி தளதளக்க
வெள்ளரிக்கா வெடிச்சதுபோல் சிரிச்சி வைக்குறியே
என்னை விடியும்வரை தூங்காமத்தான் முழிக்க வைக்குறியே

ஆத்தங்கரை ஓரத்துல ஏத்தம் எறைக்கும் நேரத்துல
அஹா அஹா அஹா அஹா அஹா அஹா ஹா
ஆத்தங்கரை ஓரத்துல ஏத்தம் எறைக்கும் நேரத்துல
பாத்து வச்ச பார்வையிலே மாத்தி வச்சிட்டியே
ஒன்ன படுக்கையிலும் நெனைக்கும்படி ஆக்கி வச்சிட்டியே


மல்லியப்பூவ தலையில் வச்சி
மச்சான் ஆசைய மனசில் வச்சி
வெள்ளக்கட்டி பேச்சுக்காரி எங்கே வந்தாளோ
என்ன வேலைக்காக யாரப்பாக்க
இங்கே வந்தாளோ இங்கே வந்தாளோ


கூத்து வச்ச ராத்திரியில் கொழுந்து வெத்தல கேட்டு வச்ச
கூட்டத்திலே குடும்ப பொண்ணை பாத்தது உண்டா
என்னை பாக்கு மாத்தி பரிசம் போட யோக்கியத உண்டா
கூத்து வச்ச ராத்திரியில் கொழுந்து வெத்தல கேட்டு வச்ச
கூட்டத்திலே குடும்ப பொண்ணை பாத்தது உண்டா
என்னை பாக்கு மாத்தி பரிசம் போட யோக்கியத உண்டா

மார்கழிக்கு பின்னால மாசி பொறக்கும் முன்னால
தானன்ன தானன்ன தானன்ன தானன்ன தந்தன தன்னானே
மார்கழிக்கு பின்னால மாசி பொறக்கும் முன்னால
ஊர் அறிய கல்யாணத்த முடிச்சிக்கலாமா
இப்ப ஒண்ணே ஒண்ணு அச்சாரமா கொடுத்துக்கலாமா


ஹா...மல்லுவேட்டி இடையில் கட்டி
மடிப்பு துண்டை தலையில் சுத்தி
கள்ளனைப்போல் எதுக்கு இங்கே விசிலடிச்சாரோ
எதை கொள்ளையடிக்க மறைஞ்சிருந்து
வழி மறிச்சாரோ வழி மறிச்சாரோ


மல்லியப்பூவ தலையில் வச்சி
மச்சான் ஆசைய மனசில் வச்சி
வெள்ளக்கட்டி பேச்சுக்காரி எங்கே வந்தாளோ
என்ன வேலைக்காக யாரப்பாக்க
இங்கே வந்தாளோ இங்கே வந்தாளோ
 

உள்ளம் உன்னைத் தேடும் - என்றாவது ஒரு நாள்

பாடல்: உள்ளம் உன்னைத் தேடும்
திரைப்படம்: என்றாவது ஒரு நாள்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & உமா ரமணன்

உள்ளம் உன்னைத் தேடும்
புது வெள்ளம் நெஞ்சில் மோதும்
அந்த வானம் பூவைத் தூவும்
அது வாழ்த்துப்பாடல் பாடும்
வாழ்வில் இன்பம் சேரும்
பொன்மானே எந்தன் சொந்தம் நீதானே
பொன்மானே எந்தன் சொந்தம் நீதானே


உள்ளம் உன்னைத் தேடும்
புது வெள்ளம் நெஞ்சில் மோதும்
அந்த வானம் பூவைத் தூவும்
அது வாழ்த்துப்பாடல் பாடும்
வாழ்வில் இன்பம் சேரும்
பூமானே எந்தன் சொந்தம் நீதானே
பூமானே எந்தன் சொந்தம் நீதானே


நீராடும் மாலை நேரம்
நின்றாடும் தென்னையின் ஓரம்
விளையாட வந்தேன் உறவாட வா

ஏதேதோ நெஞ்சில் மோகம்
உன்னாலே வந்தது தாகம்
இடையோடு நீயும் விளையாடலாம்

தேரேறி ஊர்கோலம் போவோம் கண்ணே வா
தேரேறி ஊர்கோலம் போவோம் கண்ணே வா


பூமானே எந்தன் சொந்தம் நீதானே
பூமானே எந்தன் சொந்தம் நீதானே

உள்ளம் உன்னைத் தேடும்
புது வெள்ளம் நெஞ்சில் மோதும்

அந்த வானம் பூவைத் தூவும்
அது வாழ்த்துப்பாடல் பாடும்
வாழ்வில் இன்பம் சேரும்

பொன்மானே எந்தன் சொந்தம் நீதானே
பூமானே எந்தன் சொந்தம் நீதானே

உன் கைகள் தீண்டும் போது
சந்தோஷம் பொங்குது நூறு
மழைமேகம் தேடி மயில் வந்தது

தேனூறும் கன்னம் ரெண்டு
ஏன் இங்கு நாணுது இன்று
கனிமுத்தம் கேட்டு இதழ் ஏங்குது

ஏக்கங்கள் தீர்ந்தோட மாலையை நீ சூடு
ஏக்கங்கள் தீர்ந்தோட மாலையை நீ சூடு


பொன்மானே எந்தன் சொந்தம் நீதானே
பொன்மானே எந்தன் சொந்தம் நீதானே

உள்ளம் உன்னைத் தேடும்
புது வெள்ளம் நெஞ்சில் மோதும்

அந்த வானம் பூவைத் தூவும்
அது வாழ்த்துப்பாடல் பாடும்
வாழ்வில் இன்பம் சேரும்

பூமானே எந்தன் சொந்தம் நீதானே
பொன்மானே எந்தன் சொந்தம் நீதானே
 

வயசு சின்ன வயசு - நினைவுகள் மறைவதில்லை

பாடல்: வயசு சின்ன வயசு
திரைப்படம்: நினைவுகள் மறைவதில்லை
இசை:
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.பி.ஷைலஜா

வயசு சின்ன வயசு வேணும் அது வேணும்
வயசு சின்ன வயசு வேணும் அது வேணும்
ஆளாகித்தான் நாளாச்சுது தோணும் அது தோணும்
ஆளாகித்தான் நாளாச்சுது தோணும் அது தோணும்


உரசு வந்து உரசு வேணும் அது வேணும்
உரசு வந்து உரசு வேணும் அது வேணும்
உன்னாட்டமே இங்கேயுந்தான் தோணும் அது தோணும்
உன்னாட்டமே இங்கேயுந்தான் தோணும் அது தோணும்

வயசு சின்ன வயசு வேணும் அது வேணும்

நானோ சின்னப்புள்ள ஹேய் ஒரு தாகம் நெஞ்சுக்குள்ள
போடு மெத்தைகளை நீயும் காட்டு வித்தைகளை

துடிச்சா நீயும் தவிச்சா வேணும் அது வேணும்
அணைச்சா கைய இணைச்சா தோணும் அது தோணும்

நீதான் மெல்லத்தொடணும் எல்லாம் சொல்லித்தரணும்
உன்னை நெருங்க நெருங்க மயங்க மயங்க
ஒருவித சுகம் தொடத்தொட வரும்

உரசு வந்து உரசு வேணும் அது வேணும்

வாடி வண்ணக்கிளி மெல்ல வளையும் சின்னக்கொடி
மாமன் எண்ணப்படி வந்து மெதுவா பின்னிக்கடி ஹேய்

கொதிச்சா மேனி குளிர வேணும் அது வேணும்
கொடுத்தா நீயும் எடுத்தா தோணும் அது தோணும்

அடியே இந்த உடம்பு இனிக்கும் கட்டிக்கரும்பு
அள்ளி புடிக்க புடிக்க குடிக்க குடிக்க
உதட்டினில் பழரசம் வரும்


வயசு சின்ன வயசு
வயசு சின்ன வயசு வேணும் அது வேணும்
ஆளாகித்தான் நாளாச்சுது தோணும் அது தோணும்

ஹேய் உரசு வந்து உரசு வேணும் அது வேணும்
உன்னாட்டமே இங்கேயுந்தான் தோணும் அது தோணும்

ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் - எத்தனை ஜென்மம் எடுத்தாலும்

பாடல்: ஏழேழு ஜென்மம் எடுத்தாலும்
திரைப்படம்: எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: ஜெயசந்திரன் & வாணி ஜெயராம்

ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் நாளும்
உன்னோடு தானே நான் வாழ்வேனே

பெண்ணோடு வாழும் என் வாழ்க்கை நாளும்
உன்னோடு தானே என் கண்ணின் மணியே


ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் நாளும்
உன்னோடு தானே நான் வாழ்வேனே

பெண்ணோடு வாழும் என் வாழ்க்கை நாளும்
உன்னோடு தானே என் கண்ணின் மணியே


கம்பத்து ஏலக்காய் போல
என் நெஞ்சத்தில் மஞ்சத்தில் மணந்தாய்

ஆ ஆ...கம்பன் கவிபோலே என்னை
என் கண்ணா உன் கண்ணாலே அளந்தாய்

ஆ ஆ...கம்பத்து ஏலக்காய் போல
என் நெஞ்சத்தில் மஞ்சத்தில் மணந்தாய்

ஆ ஆ...கம்பன் கவிபோலே என்னை
என் கண்ணா உன் கண்ணாலே அளந்தாய்

என்னோடு நீயும் ஈடாக இன்பம்
பண்ணோடு பாவாய் கண்டாயே நன்று

கையோடு இணைந்து மடிமீது விழுந்தேன்
கைமீது பலனை மகளாக தந்தேன்
மகளாக தந்தேன்


பெண்ணோடு வாழும் என் வாழ்க்கை நாளும்
உன்னோடு தானே என் கண்ணின் மணியே

ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் நாளும்
உன்னோடு தானே நான் வாழ்வேனே


குறிஞ்சி நிலமாக இருந்தாய்
என் குடும்பத்தின் விளக்கானாய் கண்ணே

ஆ ஆ...குணத்தில் குன்றாக இருந்து
உன் அன்பை நீராக பொழிந்தாய்

ஆ ஆ...குறிஞ்சி நிலமாக இருந்தாய்
என் குடும்பத்தின் விளக்கானாய் கண்ணே

ஆ ஆ...குணத்தில் குன்றாக இருந்து
உன் அன்பை நீராக பொழிந்தாய்

நிலம்மீது விழுந்த நீராலே வந்த
நிலவே நீ அழகான மலரோ

நெஞ்சத்தைக்கிள்ளும் உன் தாயைப்போல
நெஞ்சோடு உன்னை உயிராக வைத்தேன்
உயிராக வைத்தேன்


ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் நாளும்
உன்னோடு தானே நான் வாழ்வேனே

பெண்ணோடு வாழும் என் வாழ்க்கை நாளும்
உன்னோடு தானே என் கண்ணின் மணியே
 

என் பாதங்கள் - இது கதை அல்ல

பாடல்: என் பாதங்கள்
திரைப்படம்: இது கதை அல்ல
இசை: ஷ்யாம்
பாடியவர்கள்: ஷ்யாம் & வாணி ஜெயராம்

என் பாதங்கள் சொர்க்கங்களின் முத்தம் பெற்றது
எந்தன் மோகங்கள் ரத்தத்துக்குள் சத்தம் இட்டது
இன்று பூ அரும்பு தீக்குளித்து போராடுது
ஐய்யஹோ மன்மதன் சபைக்கு இன்று ஆளனுப்பு
வந்து வந்து கொஞ்சலாம் வண்டு வந்து கிண்டலாம்
பூவெடுத்து கிள்ளலாம் தேனெடுத்துக் கொள்ளலாம்
ஹோய்யா...ஹா ஹூ ஹா ஹூ...ஹைய்யா

ஆகாய கங்கைக்கொரு தாகம் வந்ததே
அமுத சுரபிக்கின்று பசி வந்ததே

ஆகாய கங்கைக்கொரு தாகம் வந்ததே
அமுத சுரபிக்கின்று பசி வந்ததே
கன்னங்கள் மொட்டு அதில் தென்னங்கள் சொட்டு
என் வெட்கத்தைத் தொட்டு நீ வைத்துக்கொள் பொட்டு
இரவுகளை விடியவிடு மல்லிகை மழையில் என்னை ஆடவிட்டு

வந்து வந்து கொஞ்சலாம் வண்டு வந்து கிண்டலாம்
பூவெடுத்து கிள்ளலாம் தேனெடுத்துக் கொள்ளலாம்
ஹோய்யா...ஹா ஹூ ஹா ஹூ...ஹைய்யா
என் பாதங்கள் சொர்க்கங்களின் முத்தம் பெற்றது
எந்தன் மோகங்கள் ரத்தத்துக்குள் சத்தம் இட்டது

நாணங்கள் என்னும் வேலி மேயச்சொல்லுமா
உள்ளங்கை வெப்பத்தில் கொஞ்சம் குளிர் காயவா

நாணங்கள் என்னும் வேலி மேயச்சொல்லுமா
உள்ளங்கை வெப்பத்தில் கொஞ்சம் குளிர் காயவா
கண்ணெல்லாம் மின்னல் அது சொர்க்கத்தின் ஜன்னல்
உன் நெஞ்செல்லாம் துள்ளல் நீ பெண்ணுக்கு வள்ளல்
முகிலினமே மலரணையோ வானத்து நிலவு ஒரு தலையணையோ


வந்து வந்து கொஞ்சலாம் வண்டு வந்து கிண்டலாம்
பூவெடுத்து கிள்ளலாம் தேனெடுத்துக் கொள்ளலாம்
ஹோய்யா...ஹூ ஹா ஹூ ஹா...ஹோய்யா
என் பாதங்கள் சொர்க்கங்களின் முத்தம் பெற்றது
எந்தன் மோகங்கள் ரத்தத்துக்குள் சத்தம் இட்டது
இன்று பூ அரும்பு தீக்குளித்து போராடுது

ஐய்யஹோ மன்மதன் சபைக்கு இன்று ஆளனுப்பு
வந்து வந்து கொஞ்சலாம் வண்டு வந்து கிண்டலாம்
பூவெடுத்து கிள்ளலாம் தேனெடுத்துக் கொள்ளலாம்
ஹோய்யா...ஹூ ஹா ஹூ ஹா...ஹோய்யா

தாகம் எடுக்குது அடிக்கடி - சித்திரமே சித்திரமே

பாடல்: தாகம் எடுக்குது அடிக்கடி
திரைப்படம்: சித்திரமே சித்திரமே
இசை: சிவாஜி ராஜா
பாடியவர்: வாணி ஜெயராம்

தாகம் எடுக்குது அடிக்கடி
இது மழைக்கு ஏங்கும் மலர்க்கொடி
தாகம் எடுக்குது அடிக்கடி
இது மழைக்கு ஏங்கும் மலர்க்கொடி
இன்றைக்கு காவல் இல்லை
இன்னும் ஏன் ஆவல் இல்லை
இன்றைக்கு காவல் இல்லை
இன்னும் ஏன் ஆவல் இல்லை
தேன் ஊறும் காமன் முல்லை
தாகம் எடுக்குது அடிக்கடி
இது மழைக்கு ஏங்கும் மலர்க்கொடி

ஈரத்தாமரை பூவுக்கு இதழில் ஊறும் சாரங்கள்
ஈரத்தாமரை பூவுக்கு இதழில் ஊறும் சாரங்கள்
அமுதம் கலந்த பானங்கள் அருந்தி அருந்திப் பாருங்கள்
அமுதம் கலந்த பானங்கள் அருந்தி அருந்திப் பாருங்கள்
கன்னிப்பெண்ணை தொட்டுக் கொண்டு
அல்லிப்பூவை கட்டிக் கொண்டு
ஆடைபோல ஒட்டிக் கொண்டு ஆடுங்கள்

இன்றைக்கு காவல் இல்லை
இன்னும் ஏன் ஆவல் இல்லை
இன்றைக்கு காவல் இல்லை
இன்னும் ஏன் ஆவல் இல்லை
தேன் ஊறும் காமன் முல்லை
தாகம் எடுக்குது அடிக்கடி
இது மழைக்கு ஏங்கும் மலர்க்கொடி

கனவில் வரும் தேவனே காமன் எனக்கு மாமனே
கனவில் வரும் தேவனே காமன் எனக்கு மாமனே
காதல் நெருப்பு தாங்காது அணைக்கும்வரையில் தீராது
காதல் நெருப்பு தாங்காது அணைக்கும்வரையில் தீராது
பெண்ணில்லாமல் மஞ்சம் இல்லை
என்னைப்போல மச்சம் இல்லை
ஆடை இன்னும் மிச்சம் இல்லை ஆளில்லை

இன்றைக்கு காவல் இல்லை
இன்னும் ஏன் ஆவல் இல்லை
இன்றைக்கு காவல் இல்லை
இன்னும் ஏன் ஆவல் இல்லை
தேன் ஊறும் காமன் முல்லை
தாகம் எடுக்குது அடிக்கடி
இது மழைக்கு ஏங்கும் மலர்க்கொடி
தாகம் எடுக்குது அடிக்கடி
இது மழைக்கு ஏங்கும் மலர்க்கொடி
 

வா கடல் அலையே - வா கடல் அலையே

பாடல்: வா கடல் அலையே
திரைப்படம்: வா கடல் அலையே
இசை: T.ஜெய்குமார்
பாடியவர்: ஜெயசந்திரன்

வா கடல் அலையே வளரும் நிலவோடு வா
வா கடல் அலையே வளரும் நிலவோடு வா

எண்ணங்கள் மலர்வது இயற்கைகள் மலர்வது
இன்பங்கள் தெரிவது உணர்ச்சிகள் வருவது எதற்காக
உன்னோடு நான் வாழ என்னோடு நீ சேர
எல்லாமே அதுதான் இதுக்காக

வா கடல் அலையே வளரும் நிலவோடு வா

இனிமை ராகத்தில் உனை நான் பாட
புதுமை சுகத்தில் உனை நான் தேட
இனிமை ராகத்தில் உனை நான் பாட
புதுமை சுகத்தில் உனை நான் தேட
வரும் வண்டினின் கூட்டம்
மலர் பருவத்தைத் தேடி
என் விழிகளின் ஓட்டம்
உன் இதழ்களை நாடி

இது வான தேவதையின் விளையாட்டு
இது காதல் கவிதைகளின் சீராட்டு
இது இந்த மழைதனிலே தோராட்டு
இது வாழ்வின் ஆசையில் தாலாட்டு

வா கடல் அலையே வளரும் நிலவோடு வா
வா கடல் அலையே வளரும் நிலவோடு வா
வளரும் நிலவோடு வா

ஆத்துல வெள்ளம் வர - அவள் ஒரு மாதிரி

பாடல்: ஆத்துல வெள்ளம் வர
திரைப்படம்: அவள் ஒரு மாதிரி
இசை: தேவா
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & வாணி ஜெயராம்

ஆத்துல வெள்ளம் வர
குட்டி வெள்ளம் வர குட்டி
அதுல மச்சான் உள்ளம் வர
ஆத்துல வெள்ளம் வர
குட்டி வெள்ளம் வர குட்டி
அதுல மச்சான் உள்ளம் வர
உள்ளத்துக்கு ஆசப்பட்டு குட்டி
புள்ள வரம் வாங்கி வந்தா


ஆத்துல வெள்ளம் வர
குட்டி வெள்ளம் வர குட்டி
அதுல மச்சான் உள்ளம் வர
ஆத்துல வெள்ளம் வர
குட்டி வெள்ளம் வர குட்டி
அதுல மச்சான் உள்ளம் வர
உள்ளத்துக்கு ஆசப்பட்டு குட்டி
புள்ள வரம் வாங்கி வந்தா


முந்தாநாள் வந்தாளாம் முந்தானை போட்டாளாம்
மேல்மூச்சு வாங்க கை மச்சானைத் தாங்க
மேல்மூச்சு வாங்க கை மச்சானைத் தாங்க
முண்ணூறு முத்தாரம் கேட்டாளாம்

கொக்கரிக்கும் சேவல் வக்கரிக்க
முட்டை இடும் கோழி வட்டம் இட
என்னாச்சு ஏதாச்சு கும்மாளந்தான்


ஹேய் ஆத்துல வெள்ளம் வர
குட்டி வெள்ளம் வர குட்டி
அதுல மச்சான் உள்ளம் வர
உள்ளத்துக்கு ஆசப்பட்டு குட்டி
புள்ள வரம் வாங்கி வந்தா


ஆத்துல வெள்ளம் வர
குட்டி வெள்ளம் வர குட்டி
அதுல மச்சான் உள்ளம் வர


குத்தால நீர் பாய குலவாழைக்காய் ஆட
தென்காசிக்காத்து ஓர் தெம்மாங்கு பாட
தென்காசிக்காத்து ஓர் தெம்மாங்கு பாட
மாமாவும் பூமால போட்டானாம்

பத்து விரல் மேலே பட்டுவிட
பட்டு உடல் வெட்கம் விட்டுவிட
வண்டாட்டம் செண்டாட்டம் கொண்டாட்டந்தான்


ஆத்துல வெள்ளம் வர
குட்டி வெள்ளம் வர குட்டி
அதுல மச்சான் உள்ளம் வர

உள்ளத்துக்கு ஆசப்பட்டு குட்டி
புள்ள வரம் வாங்கி வந்தா
 

இளம் மானே உன்னைத்தானே - தாலாட்டத்தாய் வேண்டும்

பாடல்: இளம் மானே உன்னைத்தானே
திரைப்படம்: தாலாட்டத்தாய் வேண்டும்
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & வாணி ஜெயராம்

இளம் மானே உன்னைத்தானே
முல்லைத்தேனே மௌனம் ஏனோ
இளம் பூவே எப்போது ஆளானாய்
இதழ் ஓரம் வற்றாத ஆறானாய்
இனி மீனாய் நெஞ்சில் நீராடு


இளம் மானே உன்னைத்தானே
முல்லைத்தேனே மௌனம் ஏனோ
இதழ் ஈரம் காயாத தேனாறு
குழல் பாரம் தாங்காது நீ ஏந்து
இள நீராய் மாறும் பூமாது


இளம் மானே உன்னைத்தானே
முல்லைத்தேனே மௌனம் ஏனோ

மன்மதன் மாலை மந்திரக்கோலை
மலர்விழி எடுக்கின்றதோ

மல்லிகைச் சோலை தென்றலில் ஓலை
தரும் இடம் குறிக்கின்றதோ

புள்ளி மானே பள்ளி ஏனோ
இரு தோள் இன்று பசி கொண்டதோ


இளம் மானே உன்னைத்தானே
முல்லைத்தேனே மௌனம் ஏனோ


மல்லிகை மொட்டு பந்தலில் நின்று
இதழ்களை விரிக்கின்றதோ

பெண் குயில் ஒன்று என் கையில் நின்று
சுகம்பெற துடிக்கின்றதோ

தின்னும் தேனோ பங்கு தானோ
இமைதான் இங்கு திரை இட்டதோ


இளம் மானே உன்னைத்தானே
முல்லைத்தேனே மௌனம் ஏனோ

இதழ் ஈரம் காயாத தேனாறு
குழல் பாரம் தாங்காது நீ ஏந்து

இனி மீனாய் நெஞ்சில் நீராடு
 

எந்தன் மனம் ஒரு நந்தவனம் - தாலாட்டத்தாய் வேண்டும்

பாடல்: எந்தன் மனம் ஒரு நந்தவனம்
திரைப்படம்: தாலாட்டத்தாய் வேண்டும்
இசை: சந்திரபோஸ்
பாடியவர்: ஜெயசந்திரன்

எந்தன் மனம் ஒரு நந்தவனம்
இன்று முதல் அது உந்தன் வசம்
என் கண்ணில் மலரும் காலைப்பொழுதே
கண்ணில் மலரும் காலைப்பொழுதே
ஆனந்த மேடை கொடு
நீ அய்க்கியம் ஆகி விடு
எந்தன் மனம் ஒரு நந்தவனம்

அன்னையின் ஆசை மங்கலமாக
வருவாய் பூ முடித்து
ஆறுதல் தேடும் ஆண்மை நெஞ்சை
ஆதரி தோள் கொடுத்து
பொன்னாரமே இன்பத் தேனாரமே
இன்பத் தேனாகவே தரும் பூமன்றமே
எந்தன் மனம் ஒரு நந்தவனம்

கண்ணகி பெண்ணின் காவிய பண்பு
உன்னிடம் இருக்கின்றதா
நான் கோவலன் அல்லன் வேறிடம் செல்ல
உண்மை புரிகின்றதா
செந்தூரமே இன்ப சிம்மாசனம்
நீயும் தந்தாகணும் உயிர் ஒன்றாகணும்

எந்தன் மனம் ஒரு நந்தவனம்
இன்று முதல் அது உந்தன் வசம்
என் கண்ணில் மலரும் காலைப்பொழுதே
கண்ணில் மலரும் காலைப்பொழுதே
ஆனந்த மேடை கொடு
நீ அய்க்கியம் ஆகி விடு
எந்தன் மனம் ஒரு நந்தவனம்

வைகரைத்தென்றல் - தாலாட்டத் தாய் வேண்டும்

பாடல்: வைகரைத்தென்றல் தாலாட்ட
திரைப்படம்: தாலாட்டத் தாய் வேண்டும்
இசை: சந்திரபோஸ்
பாடியவர்: வாணி ஜெயராம்

வைகரைத்தென்றல் தாலாட்ட
மல்லிகை மலர்கள் பூச்சூட்ட
குங்குமச்சிமிழே வாராயோ
கோகுலக்குயிலே பாடாயோ
வைகரைத்தென்றல் தாலாட்ட
மல்லிகை மலர்கள் பூச்சூட்ட

சோலைக்குயிலின் ஆசைகளோ
கானல் நிலத்து நீரலையோ
ஜோடிக்குயில் பேடையொன்று பாடுகின்றதே
வாழ ஒரு கூடுதேடி வாடுகின்றதே
விதிதான் வலிதோ இதுவோ தலைவிதி

வைகரைத்தென்றல் தாலாட்ட
மல்லிகை மலர்கள் பூச்சூட்ட

பூவை நனைத்து மேகங்களோ
பாதை மறந்தே போனதடா
காலம் வரும் காலமென்று காத்திருந்தேனே
கண்ணருகில் நீரலைகள் மோத நின்றேனே
பொறுத்தே இருப்பேன் திருநாள் வரும்வரை

வைகரைத்தென்றல் தாலாட்ட
மல்லிகை மலர்கள் பூச்சூட்ட
குங்குமச்சிமிழே வாராயோ
கோகுலக்குயிலே பாடாயோ
ஆராரிரோ ஆரிரரோ
ஆராரிரோ ஆரிரரோ
ஓ ஆரிரரோ ஓ ஆரிரரோ

மோகம் சங்கீத மோகம் - இதயம் பேசுகிறது

பாடல்: மோகம் சங்கீத மோகம்
திரைப்படம்: இதயம் பேசுகிறது
இசை: ஷ்யாம்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், பெண் குரல்? & குழுவினர்

மோகம் சங்கீத மோகம்
தேகம் உல்லாசம் தேடும்
சந்தோஷ தாகம் உண்டாகலாம்

பல ஜாமங்கள் மலர் தூவுங்கள்
தினம் பூவோடு போராடுங்கள்
மோகம் சங்கீத மோகம்
தேகம் உல்லாசம் தேடும்
சந்தோஷ தாகம் உண்டாகலாம்


நீதான்...சொர்க்கத்தில் மழை வந்தபோது
பக்கத்தில் துணை நின்ற மாது

நீதான்...பூமிக்கு பகல் வந்த வேளை
பூவைக்கு உடை தந்த காளை

நீதான்...கட்டுக்குள் அடங்காது போடி
மொட்டுக்குள் வசிக்கின்ற ஜோடி


மோகம் சங்கீத மோகம்
தேகம் உல்லாசம் தேடும்
சந்தோஷ தாகம் உண்டாகலாம்


பூவைத்த பாவை கண்ணில் தீவைத்த பார்வை
சங்கீத மேடை அதில் சங்கேத ஜாடை
ஒரு பூங்கூட்டம் தினம் தேனூற்றும்
சுக வேள்விக்கு நெய்யாகலாம்

மோகம் சங்கீத மோகம்
தேகம் உல்லாசம் தேடும்
சந்தோஷ தாகம் உண்டாகலாம்

பல ஜாமங்கள் மலர் தூவுங்கள்
தினம் பூவோடு போராடுங்கள்

பனிமலர் ஆடும் மேடையில் - அனுக்கிரஹம்

பாடல்: பனிமலர் ஆடும் மேடையில்
திரைப்படம்: அனுக்கிரஹம்
பாடியவர்கள்: தீபன் சக்ரவர்த்தி & வாணி ஜெயராம்
இசை: ஆர்.ராமானுஜம்

பனிமலர் ஆடும் மேடையில்
தேன்துளி சிந்தும் வேளையில்
பழகும் காதல் ஜோடிகள் பாஷை மௌனமோ


பனிமலர் ஆடும் மேடையில்
தேன்துளி சிந்தும் வேளையில்
பழகும் காதல் ஜோடிகள் பாஷை மௌனமோ


சந்தன மலரினில் சங்கமம் கண்டிடும் பூந்தளிர் மேனியே
குங்கும விழியினில் கோலங்கள் வரைந்திடும் சுந்தர தேவியே
சந்தன மலரினில் சங்கமம் கண்டிடும் பூந்தளிர் மேனியே
குங்கும விழியினில் கோலங்கள் வரைந்திடும் சுந்தர தேவியே

நெஞ்சிலே ராகங்கள் மஞ்சங்கள் காணுமோ
மோகமோ தாகமோ பார்வையால் தீருமோ

பனிமலர் ஆடும் மேடையில்
தேன்துளி சிந்தும் வேளையில்
பழகும் காதல் ஜோடிகள் பாஷை மௌனமோ


வஞ்சிமகள் பஞ்சணையில் வந்து இங்கு
கொஞ்சும் மொழி காதல் கீதமே
நாணமும் மஞ்சம் கொள்ள நன்றி கொண்டு
வார்த்தை சொல்ல சொந்தம் தேடுமே
வஞ்சிமகள் பஞ்சணையில் வந்து இங்கு
கொஞ்சும் மொழி காதல் கீதமே
நாணமும் மஞ்சம்கொள்ள நன்றி கொண்டு
வார்த்தை சொல்ல சொந்தம் தேடுமே
நெஞ்சிலே ராகங்கள் மஞ்சங்கள் காணுமோ
மோகமோ தாகமோ பார்வையால் தீருமோ

பனிமலர் ஆடும் மேடையில்
தேன்துளி சிந்தும் வேளையில்

பழகும் காதல் ஜோடிகள் பாஷை மௌனமோ
 

நேரம் வரும் புது வாழ்வு வரும் - உயிரே உயிரே

பாடல்: நேரம் வரும் புது வாழ்வு வரும்
திரைப்படம்: உயிரே உயிரே
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & பி.எஸ்.சசிரேகா

நேரம் வரும் புது வாழ்வு வரும் இனி நினைப்பதெல்லாம் நிறைவேறும்
நேரம் வரும் புது வாழ்வு வரும் இனி நினைப்பதெல்லாம் நிறைவேறும்
பொன் உலகம் என் கண்ணில் வரும் புது வசந்தங்கள் பூமழைத் தூவும்
பொன் உலகம் என் கண்ணில் வரும் புது வசந்தங்கள் பூமழைத் தூவும்
கனவோ நினைவோ இனி நாளை நமதாக மாறும்
கனவோ நினைவோ இனி நாளை நமதாக மாறும்


சந்தோஷ ராகங்கள் சங்கீத மேளங்கள் நெஞ்சோடு உருவாகுதே
பண்பாடும் சந்தங்கள் கொண்டாடும் பந்தங்கள் நினைவோடு அலைமோதுதே
சந்தோஷ ராகங்கள் சங்கீத மேளங்கள் நெஞ்சோடு உருவாகுதே
பண்பாடும் சந்தங்கள் கொண்டாடும் பந்தங்கள் நினைவோடு அலைமோதுதே

உயிரே உறவே நம் வாழ்வொரு காவியம் ஆகும்
நேரம் வரும் புது வாழ்வு வரும் இனி நினைப்பதெல்லாம் நிறைவேறும்
பொன் உலகம் என் கண்ணில் வரும் புது வசந்தங்கள் பூமழைத் தூவும்

என் பாதை உன் பாதை இரு பாதை என்றாலும் நம் பாதை ஒன்றானதே
நீ இன்றி நானில்லை நான் இன்றி நீயில்லை நம் வாழ்வு இனிதாகுமே
என் பாதை உன் பாதை இரு பாதை என்றாலும் நம் பாதை ஒன்றானதே
நீ இன்றி நானில்லை நான் இன்றி நீயில்லை நம் வாழ்வு இனிதாகுமே
அழகே அமுதே உனைப்போல் ஒரு சொந்தமும் உண்டோ


நேரம் வரும் புது வாழ்வு வரும் இனி நினைப்பதெல்லாம் நிறைவேறும்
பொன் உலகம் என் கண்ணில் வரும் புது வசந்தங்கள் பூமழைத் தூவும்

பூந்தென்றல் தாலாட்ட பொன்மாலை மெருகூட்ட நம் சொந்தம் உருவானதே
ஆசைக்கும் உயிருண்டு அரும்புக்குள் மணமுண்டு காலத்தில் வெளியாகுமே
பூந்தென்றல் தாலாட்ட பொன்மாலை மெருகூட்ட நம் சொந்தம் உருவானதே
ஆசைக்கும் உயிருண்டு அரும்புக்குள் மணமுண்டு காலத்தில் வெளியாகுமே
இனிமேல் வரும் நாள் நம் வாழ்வினில் திருநாளாகும்

நேரம் வரும் புது வாழ்வு வரும் இனி நினைப்பதெல்லாம் நிறைவேறும்
பொன் உலகம் என் கண்ணில் வரும் புது வசந்தங்கள் பூமழைத் தூவும்

ராஜா எங்கே ராணியும் அங்கே - அம்மா இருக்கா

பாடல்: ராஜா எங்கே ராணியும் அங்கே
திரைப்படம்: அம்மா இருக்கா
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & வாணி ஜெயராம்

ராஜா எங்கே ராணியும் அங்கே ராத்திரி ராஜ்ஜியம்தான்
ராகம் தாளம் பாவங்களோடு ரகசிய கீர்த்தனம்தான்
ராஜா எங்கே ராணியும் அங்கே ராத்திரி ராஜ்ஜியம்தான்
ராகம் தாளம் பாவங்களோடு ரகசிய கீர்த்தனம்தான்
மன்மத பானம் மார்பினில் பாய
மன்னவன் தோளில் மங்கையும் சாய
சுகம்...இதோ இதோ
ராஜா எங்கே ராணியும் அங்கே ராத்திரி ராஜ்ஜியம்தான்
ராகம் தாளம் பாவங்களோடு ரகசிய கீர்த்தனம்தான்


நூறு எண்ணங்கள் கண்ணில் நூறு வண்ணங்கள்
தலைவன் ஒருவன் தழுவும் நேரத்தில்
நூறு எண்ணங்கள் கண்ணில் நூறு வண்ணங்கள்
தலைவன் ஒருவன் தழுவும் நேரத்தில்

கைகள் தொடாத கன்னித்தாமரை கண்ணில் மலர்ந்ததோ
முத்தம் இடாத முல்லைப்பூ முகம் சித்தம் கவர்ந்ததோ

புதுமை மடியில் இளமை வடிவம்
ஊஞ்சலாடாதோ...ஊஞ்சலாடாதோ


எங்காத்து வெண் பொங்கலே
எங்கம்மா பண்ண வத்தக்கொழம்பே
எங்காத்து வெண் பொங்கலே
எங்கம்மா பண்ண வத்தக்கொழம்பே
சிரிக்கிற முகம்தான் பூரிக்கிழங்கோ
இனிக்கிற கன்னம்தான் திருப்பதி லட்டோ
அழகர்கோவில் நெய் தோசையோ
அத்தனையும் சாப்பிட நேக்குத்தான் ஆசை

போங்கோன்னா வெட்கமா இருக்கு
அங்கே பாருங்கோன்னா திறந்திருக்கு
போங்கோன்னா வெட்கமா இருக்கு
அங்கே பாருங்கோன்னா திறந்திருக்கு
ஏன்னா இப்படி அசடா இருக்கேள்
இதுக்கா நீங்கோ சினிமா பார்த்தேள்
ஆவாளப்போல் ஆசையா பேசுங்கோ
ஆம்படையாள அப்படி கொஞ்சுங்கோ

ஏ ஜானகி சுட்டுப் போட்டாலும்
நேக்கு அதெல்லாம் வராதுடீ

தேகம் எங்கும் மோக வெள்ளம் - அவள் மெல்ல சிரித்தாள்

பாடல்: தேகம் எங்கும் மோக வெள்ளம்
திரைப்படம்: அவள் மெல்ல சிரித்தாள்
இசை: கங்கை அமரன்
பாடியவர்கள்: மனோ & சித்ரா

தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
தேடித்தேடி என்னைக்கூடி பாடுதே

தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
தேடித்தேடி என்னைக்கூடி பாடுதே

இளமையில் தனிமையில் இதழ்தரும் இனிமையில்
எனது மனம் புதுக்கவிதை படிக்குது

தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
தேடித்தேடி என்னைக்கூடி பாடுதே

ஆடி மாதம் ஆசையோடு பொங்கும் காவேரி
பாடும்போதும் கூடும்போதும் வாடும் பொன்மேனி

பகலிலும் வரும் இரவிலும் நீ படிக்கும் காதல் காவியம்
பருவமும் நல்ல உருவமும் ஒன்று கலந்து வந்த ஓவியம்

இடைவிடாத நாடகம் அதை நடித்துப் பார்த்திட ஆசை
திருவிழா வரும் வேளையில் இங்கு தினமும் காதலின் பூஜை

இரவில் கேட்குது உறவின் ஓசை இனிய மார்கழி வேளை

தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
தேடித்தேடி என்னைக்கூடி பாடுதே

வீணை என்னும் மேனியெங்கும் விரல்கள் விளையாட
மானைப்போன்ற பெண்ணின் நெஞ்சில் நாணம் அணைபோட

உடலிலே புதுக்கவிதைகள் நான் எழுதும் வேளை இரவுதான்
கடலிலே வரும் அலைகள் போல் நாம் கலந்துகூடும் உறவுதான்

மடியிலே தலை சாய்க்கவும் இமை மூடவும் மனம் கேட்கும்
இடையிலே உந்தன் விழியிலே பல கோடி ஆசைகள் தாக்கும்

மதனும் ரதியும் கூடும் நேரம் மேகம் நீர்த்துளி வார்க்கும்

தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
தேடித்தேடி என்னைக்கூடி பாடுதே

இளமையில் தனிமையில் இதழ்தரும் இனிமையில்
எனது மனம் புதுக்கவிதை படிக்குது

தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
தேடித்தேடி என்னைக்கூடி பாடுதே

அமுத நதிக்கரையில் - வாழ்வு மலர்ந்தது

பாடல்: அமுத நதிக்கரையில்
திரைப்படம்: வாழ்வு மலர்ந்தது
இசை: ஜி.தேவராஜன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.மாதுரி

அமுத நதிக்கரையில் வரும் ஐந்து மலர்க்கணைகள்
குமுத முகம்தனிலே விழுந்து கொஞ்சும் இளங்கனிகள்

அமுத நதிக்கரையில் வரும் ஐந்து மலர்க்கணைகள்
குமுத முகம்தனிலே விழுந்து கொஞ்சும் இளங்கனிகள்
அமுத நதிக்கரையில்


இளமை என்ற ரதத்தில் வரும் இன்பசுக சிலையே
இரவில் வரும் நிலவில் எனை ஏங்கவைக்கும் நிலையே
அழகின் ரகசியமே நான் அருவியில் குளிக்கட்டுமா
உலகின் அதிசயமே நான் உடன்பட்டு நிற்கட்டுமா
அமுத நதிக்கரையில்

இருண்ட குழலும் திரண்ட உடலும் என்னை மயக்கியதே
மருண்ட விழியில் மிதந்த நீலம் மஞ்சம் விரிக்கின்றதே
தேன் மலர்களில் ஆயிரம் எடுத்து திருப்பள்ளி அமைக்கட்டுமா
நான் உனக்கொரு பூங்கதை? சொல்லி ரசித்து மகிழட்டுமா
சுகத்திலே குளிக்கையில் சொர்க்கம் காட்டட்டுமா
சொர்க்கமே பக்கத்தில் கூர்ந்து பார்க்கட்டுமா

பூவுக்குள்ளே தேன் இருப்பதில் பொறுத்தம் என்னடியோ
நான் புரிந்துகொள்ளும் விதத்தில் நீயும் திறந்து சொல்லடியோ

தென்றல் வந்து சரம் சரமாய் சேதி சொல்லுதய்யா
நீ சேர்த்துக்கொண்டால் தென்றலுக்கு பாதை இல்லையா

முன்னழகிலும் பின்னழகிலும் மோகம் நிற்பதென்ன
உன் அழகிய உடலைக்கண்டு யோகம் வந்ததென்ன
அகம் புறம் இரண்டையும் அணைத்துக் கொள்ளட்டுமா
மது ரசம் உனக்கென எடுத்து வைக்கட்டுமா
வெண்ணிலா...பெண் நிலா
விடிய விடிய இன்றுதான் இளமைத் திருவிழா
விடிய விடிய இன்றுதான் இளமைத் திருவிழா
திருவிழா...திருவிழா...திருவிழா
திருவிழா...திருவிழா...திருவிழா
 

நடத்து நடத்து கதையை நடத்து - என் அருமை மனைவி

பாடல்: நடத்து நடத்து கதையை நடத்து
திரைப்படம்: என் அருமை மனைவி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & வாணி ஜெயராம்

நடத்து நடத்து கதையை நடத்து
நினைச்சதெல்லாம் நடந்த பின்னே
நடத்து நடத்து கதையை நடத்து
நினைச்சதெல்லாம் நடந்த பின்னே
என்ன தயக்கம் இன்னும் ஏன் மயக்கம்
எண்ணம் இனிக்க கன்னம் சிவக்க
எண்ணம் இனிக்க கன்னம் சிவக்க
என்னை அணைக்க இளமை துடிக்க
நடத்து நடத்து கதையை நடத்து
நினைச்சதெல்லாம் நடந்த பின்னே
என்ன தயக்கம் இன்னும் ஏன் மயக்கம்


மங்கை நீ தங்க மாங்கனி
மஞ்சம் அமைக்கட்டுமா கொஞ்சி களிக்கட்டுமா
மங்கை நீ தங்க மாங்கனி
மஞ்சம் அமைக்கட்டுமா கொஞ்சி களிக்கட்டுமா
உள்ளம் துள்ளும் உண்மையை சொல்லம்மா
ஆசை வெட்கம் அறியாததோ
அந்த ஆடல் பாடல் சுகமானதோ
ஆசை வெட்கம் அறியாததோ
அந்த ஆடல் பாடல் சுகமானதோ


நடத்து நடத்து கதையை நடத்து
நினைச்சதெல்லாம் நடந்த பின்னே
நடத்து நடத்து கதையை நடத்து
நினைச்சதெல்லாம் நடந்த பின்னே
என்ன தயக்கம் இன்னும் ஏன் மயக்கம்


கண்ணனோ காதல் மன்னனோ
வண்ண சிறகடிக்கும் என்னை சிறையெடுக்கும்
கண்ணனோ காதல் மன்னனோ
வண்ண சிறகடிக்கும் என்னை சிறையெடுக்கும்
அஞ்சா நெஞ்சம் கொண்டவனோ
என்னை ஆள வந்த மன்மதன்தானோ
என்னை ஆட்டி வைக்கும் காலலன்தானோ
ஆள வந்த மன்மதன்தானோ
என்னை ஆட்டி வைக்கும் காவலன்தானோ


நடத்து நடத்து கதையை நடத்து
நினைச்சதெல்லாம் நடந்த பின்னே
என்ன தயக்கம் இன்னும் ஏன் மயக்கம்

எண்ணம் இனிக்க கன்னம் சிவக்க
என்னை அணைக்க இளமை துடிக்க

நடத்து நடத்து கதையை நடத்து
நினைச்சதெல்லாம் நடந்த பின்னே
என்ன தயக்கம் இன்னும் ஏன் மயக்கம்

மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி - இவர்கள் இந்தியர்கள்

பாடல்: மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி
திரைப்படம்: இவர்கள் இந்தியர்கள்
இசை: மனோஜ் கியான்
பாடியவர்கள்: எஸ்.என்.சுரேந்தர் & வாணி ஜெயராம்

மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி நெஞ்சைக் கிள்ளாதே
முன்னும் பின்னும் கிள்ளக்கிள்ள மெல்லத் துள்ளாதே
ஹோ மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி நெஞ்சைக் கிள்ளாதே
ஆஹா முன்னும் பின்னும் கிள்ளக்கிள்ள மெல்லத் துள்ளாதே
நீரினில் ஆடும் தாமரைத் தண்டு
தாமரை மீது வாலிப வண்டு
தேன் தரும் பாத்திரம் நான் துடிக்க
மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி நெஞ்சைக் கிள்ளாதே
முன்னும் பின்னும் கிள்ளக்கிள்ள மெல்லத் துள்ளாதே

மோகங்கள் ஆயிரம் மாமாங்கம்
தீராமல் வாழ்வது வாழ்வாகும்

ஆரம்பம் ஆனது ராஜாங்கம்
ஆசைகள்தான் அதன் பூர்வாங்கம்

அம்மம்மா பூபானம் பாயாதோ
அங்கங்கள் காயங்கள் ஆகாதோ
ஆடையில் மேனியை நான் மறைக்க
ஆயினும் பூக்களை நான் பறிக்க

மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி நெஞ்சைக் கிள்ளாதே
முன்னும் பின்னும் கிள்ளக்கிள்ள மெல்லத் துள்ளாதே

கைவீணை நீயென நான் மீட்ட
கல்யாணி மோஹனம் நான் காட்ட

கச்சேரி வேளையில் பாராட்ட
கல்யாண மாலையை நான் சூட்ட

தெய்வீகம் வைபோகம் கூடாதா
ஓ தேனாறும் பாலாறும் ஓடாதா
ஆலிலைப் போல் அதில் நான் மிதக்க
ஆதியும் அந்தமும் நான் சிவக்க

மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி நெஞ்சைக் கிள்ளாதே
முன்னும் பின்னும் கிள்ளக்கிள்ள மெல்லத் துள்ளாதே
ஹோ மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி நெஞ்சைக் கிள்ளாதே
ஹோ முன்னும் பின்னும் கிள்ளக்கிள்ள மெல்லத் துள்ளாதே
நீரினில் ஆடும் தாமரைத் தண்டு
தாமரை மீது வாலிப வண்டு
தேன் தரும் பாத்திரம் நான் துடிக்க
மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி நெஞ்சைக் கிள்ளாதே

முன்னும் பின்னும் கிள்ளக்கிள்ள மெல்லத் துள்ளாதே
லாலா லாலா லாலா லாலா லாலா லலாலா

என்ன சொல்ல - தங்க கோப்பை

பாடல்: என்ன சொல்ல
திரைப்படம்: தங்க கோப்பை
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்

என்ன சொல்ல என்ன சொல்ல
என்னென்னவோ பண்ணுதைய்யா

என்ன செய்ய என்ன செய்ய
என்னிடத்தில் சொல்லிவிடு


என்ன சொல்ல என்ன சொல்ல
என்னென்னவோ பண்ணுதைய்யா

என்ன செய்ய ஹேய் என்ன செய்ய
என்னிடத்தில் சொல்லிவிடு


செவ்வாழைத்தோட்டம் ஒன்று
சித்தாடை கட்டிக்கொண்டு
பெண் என்று இங்கே வந்ததோ

காய் இல்லை பூ உண்டு
தேன் இல்லை பால் உண்டு
சாமத்தில் பக்கம் இருந்து
கண்ணா உன் தாகத்தை தீர்க்கும் விருந்து


என்ன செய்ய என்ன செய்ய
என்னிடத்தில் சொல்லிவிடு

என்ன சொல்ல என்ன சொல்ல
என்னென்னவோ பண்ணுதைய்யா


பாதத்தை நீவி விட்டு
கேசத்தை கோதி விட்டு
நீ செய்யும் வித்தை என்னைய்யா

நங்கை உன் பாவத்தில்
நான் தொட்ட நேரத்தில்
தேகத்தில் என்ன சிலிர்ப்பு
அம்மம்மா நாணத்தில் என்ன தவிப்பு


என்ன சொல்ல என்ன சொல்ல
என்னென்னவோ பண்ணுதைய்யா

என்ன செய்ய என்ன செய்ய
என்னிடத்தில் சொல்லிவிடு


மோகத்தை கண்ணில் விட்டு
தேகத்தை பின்ன விட்டு
பாடத்தை சொல்லிக்கொடம்மா அம்மா

ஒரு பாதி நீ சொல்ல
மறு பாதி நீ சொல்ல
மௌனத்தில் நாளும் படிப்போம்
முத்தத்தால் செவ்வாயில் வெள்ளை அடிப்போம்


என்ன செய்ய என்ன செய்ய
என்னிடத்தில் ஹா ஹா ஹா

என்ன சொல்ல என்ன சொல்ல
என்னென்னவோ ம்ம் ம்ம் ம்ம்

என்ன சொல்ல உதடு துடிக்கும் - அவள் போட்ட கோலம்

பாடல்: என்ன சொல்ல உதடு துடிக்கும்
திரைப்படம்: அவள் போட்ட கோலம்
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: ஆண் குரல்? & வாணி ஜெயராம்

என்ன சொல்ல உதடு துடிக்கும் உண்மை சொல்ல

என்ன சொல்ல உதடு துடிக்கும் உண்மை சொல்ல
மன்னவனே மாலையிட்டேன் சேலையினால் வேலியிட்டேன்
வந்துவிட்டேன் என்னை எழுதி தந்துவிட்டேன்
என்ன சொல்ல உதடு துடிக்கும் உண்மை சொல்ல

இதய வாசல் திறந்தது இரண்டு கண்ணும் திறந்தது
புதிரைப் போல இருந்தது புதிய உண்மை புரிந்தது
நாணம் என்னை விடவில்லை வார்த்தை இன்னும் வரவில்லை
இங்கு நானும் நானில்லை எனக்கு வேண்டும் ஆண்பிள்ளை


சொல்லிவிட்டாய் மனதை லேசாய் கிள்ளிவிட்டாய்
சித்திரமே மாலையிட்டாய் சேலையினால் வேலியிட்டாய்
வந்துவிட்டாய் உன்னை எழுதி தந்துவிட்டாய்
சொல்லிவிட்டாய் மனதை லேசாய் கிள்ளிவிட்டாய்


கட்டில் போடும் முன்னமே தொட்டில் கேட்டாய் அன்னமே
கண்ணம் வைக்கும் நேரமே கன்னம் வண்ணம் மாறுமே
நீயும் கேட்டாய் ஆண்பிள்ளை எனக்கு வேண்டும் பெண்பிள்ளை
எது வந்தாலும் நம் பிள்ளை இரண்டும் வந்தால் தேவலை


நல்லவரே சரசக்கலையில் வல்லவரே
கண்களுக்குள் சட்டமிட்டேன் கைகளுக்குள் கட்டுப்பட்டேன்
இன்பச்செந்தேன் இருக்கும் வரைக்கும் அள்ளித்தந்தேன்


சொல்லிவிட்டாய் மனதை லேசாய் கிள்ளிவிட்டாய்
என்ன சொல்ல உதடு துடிக்கும் உண்மை சொல்ல
 

முத்தம் தரவா - பொட்டு வச்ச நேரம்

பாடல்: முத்தம் தரவா
திரைப்படம்: பொட்டு வச்ச நேரம்
இசை:
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & சித்ரா

ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
முத்தம் தரவா

முத்தம் தரவா...வேண்டாம்
வெட்கம் வருதா...ஆமாம்
கட்டில் அறைதான்...தெரியும்
அப்புறம் என்ன...பயம்தான்
மன்மதப்பூவை மஞ்சத்தில் வச்சி
மலர வைப்பேன்டி...வேண்டாம்
கட்டித்தழுவாம...வேண்டாம்
கட்டில் உறங்காது...மாட்டேன்
மாட்டேன் மாட்டேன் மாட்டேன்


ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
முத்தம் தரவா...ம்ஹூம்
வெட்கம் வருதா...ஆமாம்
கட்டில் அறைதான்...தெரியும்
அப்புறம் என்ன...பயம்தான்
மன்மதப்பூவை மஞ்சத்தில் வச்சி
மலர வைப்பேன்டி...வேண்டாம்
கட்டித்தழுவாம...வேண்டாம்
கட்டில் உறங்காது...மாட்டேன்
மாட்டேன் மாட்டேன் மாட்டேன்


ஏம்புள்ள என்னாச்சு நீ குதிக்கிறே
கைதானே உடம்புல பட்டுருச்சு

யாராச்சும் எங்காச்சும் பார்ப்பாங்க
ஏதாச்சும் உளறுனா கேட்பாங்க

ஆடை சுமையாகும் ஆசை சுவையாகும்
ஆடை நழுவாமல் ஆசை முடியாதா
கைவச்சு காட்டாதே சூடாக்கி வாட்டாதே

முத்தம் தரவா...ம்ஹூம்
வெட்கம் வருதா...ஆமாம்
கட்டில் அறைதான்...தெரியும்
அப்புறம் என்ன...பயம்தான்
மன்மதப்பூவை மஞ்சத்தில் வச்சி
மலர வைப்பேன்டி...வேண்டாம்
கட்டித்தழுவாம...வேண்டாம்
கட்டில் உறங்காது...மாட்டேன்
மாட்டேன் மாட்டேன் மாட்டேன்


பூமேலே அமர்ந்திடும் வண்டாக
நோகாம சுகங்களை நான் தாரேன்

கண்ணோரம் சிவந்திட பார்க்காதே
கூசாம ஏதேதோ கேட்காதே

மாமன் மடிமீது பூவே இளைப்பாறு
ம்ஹூம் வரமாட்டேன் நானா தரமாட்டேன்
வேணான்டி பிடிவாதம் வீணாக மணியாகும்

முத்தம் தரவா...ம்ஹூம்
வெட்கம் வருதா...ஹா
கட்டில் அறைதான்...ம்ம்ம்
அப்புறம் என்ன...ம்ம்ம்
மன்மதப்பூவை மஞ்சத்தில் வச்சி
மலர வைப்பேன்டி...ம்ஹூம்
கட்டித்தழுவாம...ம்ஹூம்
கட்டில் உறங்காது...ம்ஹூம்
ம்ஹூம் ம்ஹூம் ம்ஹூம்


ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
முத்தம் தரவா...ம்ஹூம்
வெட்கம் வருதா...ஹா
கட்டில் அறைதான்

கண்கள் தூங்காத கண்கள் - பொட்டு வச்ச நேரம்

பாடல்: கண்கள் தூங்காத கண்கள்
திரைப்படம்: பொட்டு வச்ச நேரம்
இசை:
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & உமா ரமணன்

ஆராரோ...ஆரிரோ
கண்கள் தூங்காத கண்கள் காயம் என்னென்ன நெஞ்சில்
இன்று நீ தூங்கு கிளியே என்றும் நான் உந்தன் அருகே
உயிரின் உயிரே உனக்கேன் வருத்தம்
விழியே விழியே உனக்கேன் கலக்கம்
ஆராரோ...ஆரிரோ

தாழம்பூவே உன்னை மடியினில் தாங்கிக்கொள்ளவோ
தாயே உந்தன் துன்பம் முழுவதும் வாங்கிக்கொள்ளவோ
பொன்னாரமே...பூவாரமே
முத்தாரம் ஏனோ கண்ணில் இன்று சூடிக்கொண்டாய்
கண்கள் தூங்காத கண்கள் காயம் என்னென்ன நெஞ்சில்
இன்று நீ தூங்கு கிளியே என்றும் நான் உந்தன் அருகே

கண்ணே உந்தன் கண்ணில் உலகினை நானும் பார்க்கிறேன்
உன்னை நெஞ்சில் வைத்தே இதுவரை நானும் வாழ்கிறேன்
உன் வானிலே...ஒரு நாளிலே
பூபாளம் கேட்கும் நேரம் வந்து சேரும் அம்மா
கண்கள் தூங்காத கண்கள் காயம் என்னென்ன நெஞ்சில்
இன்று நீ தூங்கு கிளியே என்றும் நான் உந்தன் அருகே

உயிரின் உயிரே உனக்கேன் வருத்தம்
விழியே விழியே உனக்கேன் கலக்கம்

கண்கள் பொல்லாத கண்கள் - பொட்டு வச்ச நேரம்

பாடல்: கண்கள் பொல்லாத கண்கள்
திரைப்படம்: பொட்டு வச்ச நேரம்
இசை:
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & சித்ரா

ஏன் ஏன்...நான் மாறினேன்
ஏன் ஏன்...நான் மாறினேன்
கண்கள் பொல்லாத கண்கள் காயம் உண்டாக்கும் நெஞ்சில்
எங்கும் ஆனந்த மின்னல் இன்று தீயாகும் தென்றல்
எதையோ நினைத்தேன் எனை நான் மறந்தேன்
இதுதான் சுகமோ தினமும் வருமோ

ஏன் ஏன்...நான் மாறினேன்
கண்கள் பொல்லாத கண்கள் காயம் உண்டாக்கும் நெஞ்சில்
எங்கும் ஆனந்த மின்னல் இன்று தீயாகும் தென்றல்

மேலும் கீழும் ஆடும் இளமனம் ஊஞ்சலானது
மின்னல் கோலம் போடும் இருவிழி போதை ஏறுது
தொடு என்பதா...விடு என்பதா
பனிவாடை நேரம் நீயா காதல் தீயை வைத்தாய்

ஏன் ஏன்...நான் மாறினேன்
கண்கள் பொல்லாத கண்கள் காயம் உண்டாக்கும் நெஞ்சில்
எங்கும் ஆனந்த மின்னல் இன்று தீயாகும் தென்றல்
எதையோ நினைத்தேன் எனை நான் மறந்தேன்
இதுதான் சுகமோ தினமும் வருமோ

தூண்டில் போடும் கண்கள் மனதினில் காயம் செய்ததோ
தோளில் உந்தன் கைகள் தழுவிட காயம் ஆறுமோ
பரிமாறவோ...பசியாறவோ
கலையாத ஆடை காற்றில் பாதி கையில் பாதி

ஏன் ஏன்...நான் மாறினேன்
கண்கள் பொல்லாத கண்கள் காயம் உண்டாக்கும் நெஞ்சில்
எங்கும் ஆனந்த மின்னல் இன்று தீயாகும் தென்றல்
எதையோ நினைத்தேன் எனை நான் மறந்தேன்
இதுதான் சுகமோ தினமும் வருமோ
ஏன் ஏன்...நான் மாறினேன்
ஏன் ஏன்...நான் மாறினேன்
 

Thursday, September 20, 2012

திருவளர் செல்வி - பட்டம் பதவி

பாடல்: திருவளர் செல்வி
திரைப்படம்: பட்டம் பதவி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் & எஸ்.ஜானகி

திருவளர் செல்வி உமையவள் தமக்கு
திருக்கல்யாணம் கோவிலிலே
திருவளர் செல்வி உமையவள் தமக்கு
திருக்கல்யாணம் கோவிலிலே

திருவளர் செல்வன் மணமகன் ஆனால்
தேன் மண மல்லிகை மாலையிலே
திருவளர் செல்வன் மணமகன் ஆனால்
தேன் மண மல்லிகை மாலையிலே

திருவளர் செல்வி உமையவள் தமக்கு
திருக்கல்யாணம் கோவிலிலே


கண்கள் இரண்டும் திருவிளக்கு
இரு கைகள் ஆரத்தி ஒளிவிளக்கு
கண்கள் இரண்டும் திருவிளக்கு
இரு கைகள் ஆரத்தி ஒளிவிளக்கு

எண்ணங்கள் எல்லாம் புது மலர்கள்
அவள் இதயத்தில் ஆயிரம் மதுக்குடங்கள்
எண்ணங்கள் எல்லாம் புது மலர்கள்
அவள் இதயத்தில் ஆயிரம் மதுக்குடங்கள்

மங்கல செல்வி தேடி வந்தாள்
திரு மணவறை கீதம் பாடிவந்தாள்

மணவறை கீதம் பாடிவந்தாள்
தன் மணமகன் திருமுகம் நாடிவந்தாள்
மணமகன் திருமுகம் நாடிவந்தாள்


திருவளர் செல்வி உமையவள் தமக்கு
திருக்கல்யாணம் கோவிலிலே


மோகன கண்ணன் அருகினிலே
இனி முப்பது நாளும் பௌர்ணமியே
மோகன கண்ணன் அருகினிலே
இனி முப்பது நாளும் பௌர்ணமியே

மோகன ராகம் பாடிடவே
இந்த மோகினி வந்தாள் அருகினிலே
மோகன ராகம் பாடிடவே
இந்த மோகினி வந்தாள் அருகினிலே

கண்ணனை நினைக்கும் நேரமெல்லாம்
பெரும் கனவுகள் பிறந்தன நெஞ்சினிலே

கனவுகள் பிறக்கும் நெஞ்சினில்
நானே கலந்து நிற்கின்றேன் உறவினிலே
கலந்து நிற்கின்றேன் உறவினிலே


திருவளர் செல்வி உமையவள் தமக்கு
திருக்கல்யாணம் கோவிலிலே

திருவளர் செல்வன் மணமகன் ஆனால்
தேன் மண மல்லிகை மாலையிலே
தேன் மண மல்லிகை மாலையிலே
 

நீயோ மணிக்குயில் முழக்கம் - அவள் ஒரு தமிழச்சி

பாடல்: நீயோ மணிக்குயில் முழக்கம்
திரைப்படம்: அவள் ஒரு தமிழச்சி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா

நீயோ மணிக்குயில் முழக்கம்
நானோ அதற்கொரு விளக்கம்
நீயோ மணிக்குயில் முழக்கம்
நானோ அதற்கொரு விளக்கம்
தேடினேன் நாடினேன் மன்னனை பாடினேன்


நெஞ்சோ மாமயில் அரங்கம்
நினைவோ பாட்டிசை மிருதங்கம்
நெஞ்சோ மாமயில் அரங்கம்
நினைவோ பாட்டிசை மிருதங்கம்
தழுவிட நழுவிட தளிருடல் கொதித்ததா


அமுதெனும் விருந்தாக அணைத்ததும் விரைவாக
அன்பே தேன் ஊறுதே
அமுதெனும் விருந்தாக அணைத்ததும் விரைவாக
அன்பே தேன் ஊறுதே

கணமொரு ஆசை மனமோடு நீந்த
அன்பே அலை மோதுதே
கணமொரு ஆசை மனமோடு நீந்த
அன்பே அலை மோதுதே

விரல் தொட மலர்க்கொடி
வழங்கு தேன் துளித்துளி

நீயோ மணிக்குயில் முழக்கம்
நானோ அதற்கொரு விளக்கம்
தேடினேன் நாடினேன் மன்னனை பாடினேன்


நிநி நிஸ நிபப பநி பமம மப கமப
பப மப மகக கம கஸஸ நிஸ பமக


மங்கல சிலை இங்கு மின்னிட இவ்வேளை
மனம் ஒர் கலைக்கோயிலா
மங்கல சிலை இங்கு மின்னிட இவ்வேளை
மனம் ஒர் கலைக்கோயிலா

கோவில் இங்கேது தெய்வமும் ஏது
எதிரில் நீ தோன்றினால்
கோவில் இங்கேது தெய்வமும் ஏது
எதிரில் நீ தோன்றினால்

நான் தொழ தேவி நீ
பார்வையில் யாவும் நீ

நெஞ்சோ மாமயில் அரங்கம்
நினைவோ பாட்டிசை மிருதங்கம்
தழுவிட நழுவிட தளிருடல் கொதித்ததா


நீயோ மணிக்குயில் முழக்கம்
நானோ அதற்கொரு விளக்கம்
தேடினேன் நாடினேன் மன்னனை பாடினேன்