Friday, September 14, 2012

சின்ன சின்ன முத்து நீரிலே - நினைக்கத் தெரிந்த மனமே

பாடல்: சின்ன சின்ன முத்து நீரிலே
திரைப்படம்: நினைக்கத் தெரிந்த மனமே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகி

சின்ன சின்ன முத்து நீரிலே
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே
சின்ன சின்ன முத்து நீரிலே
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே

பூமி எங்கும் ஈரம் நேரம் காதல் நேரம்
பூமி எங்கும் ஈரம் நேரம் காதல் நேரம்

பூவிருக்கு தேனிருக்கு தா அன்பு நெஞ்சமே
சின்ன சின்ன முத்து நீரிலே
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே

சின்ன சின்ன முத்து நீரிலே
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே


முத்துக்களா முல்லை மொட்டுக்களா
கொட்டட்டும் கொட்டும் மழை

முத்தங்களா மோக யுத்தங்களா
முத்தட்டும் அன்புக் கலை

நீரில் ஆடும்போது இன்பம் இன்பம்
நேரில் காணும்போதும் இன்பம் இன்பம்

தேரில் ஏறுகின்ற தெய்வம் தெய்வம்
தேடி இங்கு வந்த செல்வம் செல்வம்

உன்னைத்தொடும் என்னைத்தொடும்
தண்ணீருக்கும் காதல் வரும்

பாடலாம் ஆடலாம் நீந்தலாம்
அன்பு நீந்துகின்ற நெஞ்சத்தோடு


சின்ன சின்ன முத்து நீரிலே
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே

பூமி எங்கும் ஈரம் நேரம் காதல் நேரம்
பூமி எங்கும் ஈரம் நேரம் காதல் நேரம்
பூவிருக்கு தேனிருக்கு வா அன்பு நெஞ்சமே
சின்ன சின்ன முத்து நீரிலே
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே


உடலுக்குள்ளே உள்ள கடலுக்குள்ளே
ஒரு கோடி அலை வீசுது

உள்ளுக்குள்ளே ஊறும் கள்ளுக்குள்ளே
என்னென்ன சுவை சேருது

வானதேவன் பூவைத்தூவ தூவ
பூமிதேவி மாலை சூட சூட

ஆசை வெள்ளம் எங்கும் ஓட ஓட
ஆடை ஜன்னலாகிப்போக போக

சின்ன சின்ன சின்னங்களில்
சிக்கிக்கொண்டாய் வண்ணங்களில்

மேனியின் மேகலை தோழியாய்
நம்மை சேர்த்துவைக்க காத்திருக்க


சின்ன சின்ன முத்து நீரிலே
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே

சின்ன சின்ன முத்து நீரிலே
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே

பூமி எங்கும் ஈரம் நேரம் காதல் நேரம்
பூமி எங்கும் ஈரம் நேரம் காதல் நேரம்
பூவிருக்கு தேனிருக்கு வா அன்பு நெஞ்சமே
சின்ன சின்ன முத்து நீரிலே
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே

சின்ன சின்ன முத்து நீரிலே
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே

No comments: