Wednesday, September 19, 2012

செவ்வானமே சீர் கொண்டு வா - காதல் கிளிகள்

பாடல்: செவ்வானமே சீர் கொண்டு வா
திரைப்படம்: காதல் கிளிகள்
இசை: கே.வி.மகாதேவன்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.பி.ஷைலஜா

செவ்வானமே சீர் கொண்டு வா
வெண்மேகமே தேர் கொண்டு வா
செவ்வானமே சீர் கொண்டு வா
வெண்மேகமே தேர் கொண்டு வா
இந்திர லோகத்து தேவதை ஒருத்தி
பூமிக்கு வருகின்ற நேரம்
இது பொன்னந்தி இளமாலை காலம்


செவ்வானமே சீர் கொண்டு வா
வெண்மேகமே தேர் கொண்டு வா
இந்திர லோகத்து தேவன் ஒருவன்
பூமிக்கு வருகின்ற நேரம்
இது பொன்னந்தி இளமாலை காலம்


செவ்வானமே ஆ ஆஹ ஹா சீர் கொண்டு வா
வெண்மேகமே ஆ ஆஹ ஹா தேர் கொண்டு வா

சிவந்த இதழ்கள் அமுதம் வழங்கும்
சித்திர விழிகள் தினமும் மயங்கும்

இணைந்த கரங்கள் சுகத்தை அளிக்கும்
இதய நதிகள் உறவில் கலக்கும்

சுகமான திருநாள் இது
இன்று எனைத்தேடி வருகின்றது
சுகமான திருநாள் இது
இன்று எனைத்தேடி வருகின்றது

ஆஹா செவ்வானமே ஹா ஹா சீர் கொண்டு வா
வெண்மேகமே ஆ ஆஹ ஹா தேர் கொண்டு வா

நடந்து நடந்து நலிந்த இடையோ
கனிகள் சுமந்து மெலிந்த கொடியோ

வளைந்து வளைந்து பிடிக்கும் கரமோ
வாழ்க்கை முழுதும் துணைக்கு வருமோ

பாராட்ட மொழி இல்லையோ
இந்த பார்வைக்கு பொருள் இல்லையோ
பாராட்ட மொழி இல்லையோ
இந்த பார்வைக்கு பொருள் இல்லையோ

செவ்வானமே சீர் கொண்டு வா
வெண்மேகமே தேர் கொண்டு வா
இந்திர லோகத்து தேவதை ஒருத்தி
பூமிக்கு வருகின்ற நேரம்

இது பொன்னந்தி இளமாலை காலம்
லா லாலலா லா லாலலா
லா லாலலா லா லாலலா

No comments: