ஆகாய கங்கை - இளையராஜா (1982)

பாடல்: தேனருவியில் நனைந்திடும் மலரோ
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

தீம்...ம்ம்...திரனன...ம்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம்
தீம் திரனன திரன தீரனனா
தேனருவில் நனைந்திடும் மலரோ
திரனா திரனா...தொடரும் கதையோ
திரனா திரனா...எதுதான் விடையோ
மன வீணை நான் இசைத்திட
தேனருவில் நனைந்திடும் மலரோ

முக வாசல்மீது தீபம் இரு கண்கள் ஆனதோ
ம்ஹ்ம் ஹ்ம் ம்ம்ம்...ம்ஹ்ம் ஹ்ம் ம்ம்ம்...ஆ ஆ ஆ
முக வாசல்மீது தீபம் இரு கண்கள் ஆனதோ
மன வாசல் கோலமே தினம் போடுதோ...ஆ ஆ ஆ
துணை ஆகும் தேவியை கொடி தேடுதோ...ஆ ஆ ஆ
புன்னகையோ...பூமழையோ
உன் நடையோ...தேர் படையோ
வரமோ...வருமோ...நான் நலம் பெற

தீம் திரனன திரன தீரனனா
தேனருவில் நனைந்திடும் மலரோ
திரனா திரனா...திரனா திரனா
திரனா திரனா...திரனா திரனா
திரனா...னா...னா...திரனனா
தீம் திரனன திரன தீம் திர...னா

நாளும் ஒவ்வொரு நாடகமோ இது மேடையோ
ஆ ஆஆஆ...ஆ ஆஆஆ...ஆஆ ஆஆ...ஆஆஆ
இனி மைவிழி நாட்டியமோ எனை வாட்டுமோ
ஏன் தொலைவோ...நீ நிலவோ
ஆ ஆ...ஆஆஆ...ஆ ஆ...ஆஆஆ
தனிமை...கொடுமை...எனதுயிர் அழைத்திட

தீம் திரனன திரனன
தேனருவில் நனைந்திடும் மலரோ
தொடரும் கதையோ...எதுதான் விடையோ
மன வீணை நான் இசைத்திட
தேனருவில் நனைந்திடும் மலரோ

************************************
பாடல்: பொங்கும் ஆகாய கங்கை
பாடியவர்கள்: கங்கை அமரன் & எஸ்.ஜானகி

பொங்கும் ஆகாய கங்கை
கங்கை இள மங்கை
கங்கை இள மங்கை

பொங்கும் ஆகாய கங்கை
கங்கை இள மங்கை
கங்கை இள மங்கை

என் கால்களே சிறகானதே
சிரிக்கின்ற ஓசை கேட்டு

பொங்கும் ஆகாய கங்கை
கங்கை இள மங்கை
கங்கை இள மங்கை

புது ராக ஜாதிகளின் ஊர்வலம்
இன்று காலை நானே பார்த்தேனே
அவள் பூக்கள் சுமந்திருக்கும் வானவில்
இனி நானும் வானம் போவேனே

உன் ஞாபகம் சுக வேதனை
நீ பேசினால் இசை வாசனை
இனி நாளும் காதல் சிந்தனை
நீ வந்தால் போதும் நிம்மதி
உன் கண்ணால் கொஞ்சம் சம்மதி

பொங்கும் ஆகாய கங்கை
கங்கை இள மங்கை
கங்கை இள மங்கை

************************************
பாடல்: மாமா மாமா
பாடியவர்: எஸ்.பி.ஷைலஜா

மாமா மாமா மஞ்ச மண மணக்க
மல்லியப்பூ மணக்க வஞ்சிக்கொடி ஒண்ணு
வாடி நிக்குது தேடி நிக்குது மாமா மாமா மாமா

மாமா மாமா மஞ்ச மண மணக்க
மல்லியப்பூ மணக்க வஞ்சிக்கொடி ஒண்ணு
வாடி நிக்குது தேடி நிக்குது மாமா மாமா மாமா

பக்கத்துல நீயிருந்தா சொர்க்கத்துல நானிருப்பேன்
மாமா உங்க பார்வைக்கு காத்திருக்கேன் காத்திருக்கேன்

ஒண்ணா ரெண்டா நெஞ்சுக்குள்ள
ஓடிப் பெருகுது உள்ளுக்குள்ள
ஒண்ணா ரெண்டா நெஞ்சுக்குள்ள
ஓடிப் பெருகுது உள்ளுக்குள்ள
சொன்னா என்ன தப்பே இல்ல
நீ இல்லன்னா நானில்ல

மாமா மாமா மஞ்ச மண மணக்க
மல்லியப்பூ மணக்க வஞ்சிக்கொடி ஒண்ணு
வாடி நிக்குது தேடி நிக்குது மாமா மாமா மாமா

பட்டுத்துணி கட்டிக்கிட்டு பக்கத்துல தொட்டுக்கிட்டு
நானும் நீயும் போவுற காலத்துல காலத்துல

ஆஹா உங்க ஓரத்துல
ஆச மனசு பக்கத்துல
ஆஹா உங்க ஓரத்துல
ஆச மனசு பக்கத்துல
மேலோகமும் பூலோகமும்
ஒண்ணானது நம்மோட

மாமா மாமா மஞ்ச மண மணக்க
மல்லியப்பூ மணக்க வஞ்சிக்கொடி ஒண்ணு
வாடி நிக்குது தேடி நிக்குது மாமா மாமா மாமா

************************************
பாடல்:மேக தீபம் சூடும் மாலை
பாடியவர்: மலேசியா வாசுதேவன்

மேக தீபம் சூடும் மாலை
அவள் நெஞ்சின் அனுராக கவிதை

மேக தீபம் சூடும் மாலை
அவள் நெஞ்சின் அனுராக கவிதை
ஆயிரம் பொன்னூஞ்சல் ஆடிடும் என் நெஞ்சில்

மேக தீபம் சூடும் மாலை
அவள் நெஞ்சின் அனுராக கவிதை

முத்துக்கடல் அலை சத்தம்
அவளும் முத்தக்குவியலின் மொத்தம்
முத்துக்கடல் அலை சத்தம்
அவளும் முத்தக்குவியலின் மொத்தம்
அஞ்சும் இள நெஞ்சம் தஞ்சம் மலர்மஞ்சம்
அஞ்சும் இள நெஞ்சம் தஞ்சம் மலர்மஞ்சம்
கனவு முகம் தினம் மலரும் கரங்களில் வரம் தரும்
கனவு முகம் தினம் மலரும் கரங்களில் வரம் தரும்
புதிய உதய நதியை இதயம் அழைத்தது
எதிலும் புனித இனிமை பெருகுதே

மேக தீபம் சூடும் மாலை
அவள் நெஞ்சின் அனுராக கவிதை

கங்கை சுகம் தரும் மங்கை
இதழின் நுங்கைத்தொடும் மலர்ச்செங்கை
கங்கை சுகம் தரும் மங்கை
இதழின் நுங்கைத்தொடும் மலர்ச்செங்கை
சிந்தும் சுக சந்தம் சொந்தம் உயிர் பந்தம்
சிந்தும் சுக சந்தம் சொந்தம் உயிர் பந்தம்
துணையுடனே இரவு வரும் தினம் தினம் சுகம் தரும்
துணையுடனே இரவு வரும் தினம் தினம் சுகம் தரும்
மயங்க மயங்க மலர்ந்த நினைவு வளர்ந்தது
மனதில் அழகு வடிவம் சிரித்ததே

மேக தீபம் சூடும் மாலை
அவள் நெஞ்சின் அனுராக கவிதை
ஆயிரம் பொன்னூஞ்சல் ஆடிடும் என் நெஞ்சில்

மேக தீபம் சூடும் மாலை
அவள் நெஞ்சின் அனுராக கவிதை

************************************

No comments: