Tuesday, April 30, 2013

வா பொன்மயிலே - பூந்தளிர்

பாடல்: வா பொன்மயிலே
திரைப்படம்: பூந்தளிர்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா

வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

காதலின் ஜாடையெல்லாம் கண்ணழகிலே
கோவிலின் தேரழகோ முன்னழகிலே
கனியே மனம் மயங்க மயங்க வருவாய் சுவை பெருக பெருக
இளமையின் நளினமே இனிமையின் உருவம் மலர

வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

மேனியின் மஞ்சள் நிறம் வான் அளந்ததோ
பூமியின் நீல நிறம் கண் அளந்ததோ
அழகே சுகம் வளர வளர நினைவே தினம் பழக பழக
உரிமையில் அழைக்கிறேன் உயிரிலே கலந்து மகிழ

வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

ஓராயிரம் வைரங்கள் - மறுபிறவி

பாடல்: ஓராயிரம் வைரங்கள்
திரைப்படம்: மறுபிறவி
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் (ஹம்மிங்: எல்.ஆர்.ஈஸ்வரி)
இசை: டி.ஆர்.பாப்பா

ஓராயிரம் வைரங்கள் சேர்ந்த அழகு
நூறாயிரம் காலங்கள் வாழும் நிலவு
முன்னூறு கண் வேண்டும்
நானூறு கை வேண்டும்
தேவதையே நான் சுவைக்க

ஓராயிரம் வைரங்கள் சேர்ந்த அழகு
நூறாயிரம் காலங்கள் வாழும் நிலவு

ஏதென்ஸ் உள்ளங்கள் கவிஞர்கள் எண்ணங்கள்
உன்னாலே தானே உயிர்பெற நினைக்கும்

ஏதென்ஸ் உள்ளங்கள் கவிஞர்கள் எண்ணங்கள்
உன்னாலே தானே உயிர்பெற நினைக்கும்
மதுக்கிண்ணம் ஒன்று உடல் வண்ணம் கொண்டு
மயக்கத்திலே கண் அசைக்கும்

ஓராயிரம் வைரங்கள் சேர்ந்த அழகு
நூறாயிரம் காலங்கள் வாழும் நிலவு

ஓர் முத்தம் தந்தால் உயிர் போகும் என்றால்
போகட்டும் நான் முத்தம் தருவேன்
உனக்காக அன்று போர் செய்த மன்னர்
மோகத்தை நானும் அறிவேன்

ஓராயிரம் வைரங்கள் சேர்ந்த அழகு
நூறாயிரம் காலங்கள் வாழும் நிலவு
முன்னூறு கண் வேண்டும்
நானூறு கை வேண்டும்
தேவதையே நான் சுவைக்க

வானம் தரையில் வந்து நின்றதே - உன்னுடன்

பாடல்: வானம் தரையில் வந்து நின்றதே
திரைப்படம்: உன்னுடன்
பாடியவர்: ஹரிஹரன்
இசை: தேவா

வானம் தரையில் வந்து நின்றதே
பூமி நிலவில் புகுந்துக் கொண்டதே
திசைகள் எல்லாம் திரும்பிக் கொண்டதே
தென்றல் பூக்களில் ஒளிந்துக் கொண்டதே

விழிகளை வீசிய இளைய கொடி
இந்த விபத்துக்கள் உன்னால் நேர்ந்ததடி
விழிகளை வீசிய இளைய கொடி
இந்த விபத்துக்கள் உன்னால் நேர்ந்ததடி
ஒரே முறை அடி ஒரே முறை
ஒரு பார்வை பார் உலகம் சுழலும் மறுபடி

வானம் தரையில் வந்து நின்றதே
பூமி நிலவில் புகுந்துக் கொண்டதே

இமைகளைக் கொண்டு இருதயம் தோண்டும்
கலைகளை உந்தன் இரு கண்களில் வைத்தாய்
உதடுகள் அசைவில் உயிரை உறிஞ்சும்
செப்படி வித்தை அடி எப்படி கற்றாய்
புருவங்களில் மலையே வளையுமடி
புன்னகையில் ஜீவன் தவிடுபொடி
பூக்களின் கனவே வா பூமியின் நிலவே வா
இனிக்கின்ற தீயே வா இன்னிசை நதியே வா

வானம் தரையில் வந்து நின்றதே
பூமி நிலவில் புகுந்துக் கொண்டதே

சித்திர இதழில் தீக்குச்சி கிழித்தாய்
என் ரத்தத்தில் எறிந்தாய் நான் மொத்தத்தில் எரிந்தேன்
பௌர்ணமி விழியால் வான்மழை பெய்தாய்
என் சாம்பலில் இருந்து நான் சட்டென்று முளைத்தேன்
பார்த்ததிலே பாதி இளைத்து விட்டேன்
கண்களிலே ஒன்று தொலைத்து விட்டேன்
சிறகுள்ள மலரே வா இமைக்கின்ற சிலையே வா
ஆனந்த கலையே வா என் ஆண்மையின் விலையே வா

வானம் தரையில் வந்து நின்றதே
ச...நி...த...நி...த...ம
பூமி நிலவில் புகுந்துக் கொண்டதே
க...ம...க...ம...க...க
திசைகள் எல்லாம் திரும்பிக் கொண்டதே
தென்றல் பூக்களில் ஒளிந்துக் கொண்டதே

விழிகளை வீசிய இளைய கொடி
இந்த விபத்துக்கள் உன்னால் நேர்ந்ததடி
விழிகளை வீசிய இளைய கொடி
இந்த விபத்துக்கள் உன்னால் நேர்ந்ததடி
ஒரே முறை அடி ஒரே முறை
ஒரு பார்வை பார் உலகம் சுழலும் மறுபடி

Monday, April 29, 2013

அன்பே அன்பே - உள்ளம் கொள்ளை போகுதே

பாடல்: அன்பே அன்பே
திரைப்படம்: உள்ளம் கொள்ளை போகுதே
பாடியவர்: உன்னிகிருஷ்ணன்
இசை: கார்த்திக் ராஜா

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சுக்காற்றாய் நான் வந்தே
வெளியே சென்றேன் சரிதானே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சுக்காற்றாய் நான் வந்தே
வெளியே சென்றேன் சரிதானே

காதல் ஒரு பரிட்சைதானே
எழுதிடவே நானும் வந்தேன்
இன்னொருவர் பேரில்தானே
தேர்வெழுதிச் சென்றேனே
ரயில் பயணம்தானே காதல்
நானும் அதில் பயணம் செய்தேன்
இறங்கச்சொல்லி காதல் கேட்க
நான் இறங்கிச் சென்றேனே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சுக்காற்றாய் நான் வந்தே
வெளியே சென்றேன் சரிதானே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சுக்காற்றாய் நான் வந்தே
வெளியே சென்றேன் சரிதானே

சிலுவை சுமந்தானே அவன்
இந்த காதலில் விழுந்திருந்தால்
சிலுவை வலியென்ற வார்த்தையை
வாய்வழி சொல்வானா
இதயம் ஒரு நாள் இரண்டாக உடையும்
அன்று வந்து பார் உன் பிம்பம் தெரியும்
கண்ணீரிலே கடல் செய்து வைத்தேன்
நீ வந்துதான் நீராடிப்போ

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சுக்காற்றாய் நான் வந்தே
வெளியே சென்றேன் சரிதானே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சுக்காற்றாய் நான் வந்தே
வெளியே சென்றேன் சரிதானே

முள்ளாய் நீ வந்தால்
கண்களைத் திறந்து காத்திருப்பேன்
தீயாய் நீ வந்தால்
என்னையும் திரியாய் நான் தருவேன்
கொஞ்சம் கொஞ்சமாய் ஏன் என்னை கொன்றாய்
கருணைக்கொலைதான் செய்யாமல் சென்றாய்
மலர் மாலையாய் மாறிடவே நினைத்தேன்
மலர் வளையமாய் நான் மாறினேன்

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சுக்காற்றாய் நான் வந்தே
வெளியே சென்றேன் சரிதானே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சுக்காற்றாய் நான் வந்தே
வெளியே சென்றேன் சரிதானே

காதல் ஒரு பரிட்சைதானே
எழுதிடவே நானும் வந்தேன்
இன்னொருவர் பேரில்தானே
தேர்வெழுதிச் சென்றேனே
ரயில் பயணம்தானே காதல்
நானும் அதில் பயணம் செய்தேன்
இறங்கச்சொல்லி காதல் கேட்க
நான் இறங்கிச் சென்றேனே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சுக்காற்றாய் நான் வந்தே
வெளியே சென்றேன் சரிதானே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சுக்காற்றாய் நான் வந்தே
வெளியே சென்றேன் சரிதானே

Sunday, April 28, 2013

பாடுது பாடுது பாட்டு - ஆயுள் கைதி

பாடல்: பாடுது பாடுது பாட்டு
திரைப்படம்: ஆயுள் கைதி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா
இசை: ஷங்கர் கணேஷ்

பாடுது பாடுது பாட்டு பொன் மலைச்சாரல் காற்று
பாடுது பாடுது பாட்டு பொன் மலைச்சாரல் காற்று
பூவொன்று பாடலைக்கேட்டு சில்லென பூத்தது நேற்று
மாலையில் மாமரச்சோலையில் இந்நேரம்

பாடுது பாடுது பாட்டு பொன் மலைச்சாரல் காற்று
பாடுது பாடுது பாட்டு பொன் மலைச்சாரல் காற்று
பூவொன்று பாடலைக்கேட்டு சில்லென பூத்தது நேற்று
மாலையில் மாமரச்சோலையில் இந்நேரம்
பாடுது பாடுது பாட்டு பொன் மலைச்சாரல் காற்று

மாதம் என்றும் வாரம் என்றும் நாட்கள் சென்றாலும்
காதல் என்னும் வேதம் சொல்லும் நெஞ்சம் எந்நாளும்
வண்ணச்சோலை நான் வெயில் காலம் வாட
ஆசை மேகம் நீ அன்புத்தூறல் போட
வெப்பம்தான் விடைகூறும் நேரம்தான்
அப்பப்பா அடங்காத தாகம்தான்
விரல் பட்டாலே போதும் வற்றாமல் பாயும்
குற்றால நீர்வீழ்ச்சி

பாடுது பாடுது பாட்டு பொன் மலைச்சாரல் காற்று
பூவொன்று பாடலைக்கேட்டு சில்லென பூத்தது நேற்று
மாலையில் மாமரச்சோலையில் இந்நேரம்
பாடுது பாடுது பாட்டு பொன் மலைச்சாரல் காற்று

கோயில் கொண்ட சிற்பம் உண்டு தேவன் கொண்டாட
சோலை கொண்ட புஷ்பம் உண்டு தென்றல் நின்றாட
முன்னும் பின்னும் நான் முத்தக்கோலம் போட
தத்தித் தத்தித்தான் தங்கத்தேரும் ஆட
நெஞ்சுக்குள் மறக்காது நேசங்கள்
கண்ணுக்குள் உயிர்க்காதல் பாசங்கள்
இனி பொன்னூஞ்சல் ஆட பூமாலை சூட
கல்யாண வைபோகம்

பாடுது பாடுது பாட்டு பொன் மலைச்சாரல் காற்று
பூவொன்று பாடலைக்கேட்டு சில்லென பூத்தது நேற்று
மாலையில் மாமரச்சோலையில் இந்நேரம்
பாடுது பாடுது பாட்டு பொன் மலைச்சாரல் காற்று

Saturday, April 27, 2013

தாமிரபரணி ஆறு - சோலையம்மா

பாடல்: தாமிரபரணி ஆறு
திரைப்படம்: சோலையம்மா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: தேவா

தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு
தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு
வாசம் வீசும் வாடைக்காத்து நோவு
வாசம் வீசும் வாடைக்காத்து நோவு
ஆஹா மல்லுக்கட்டு கட்டி என்னை
அள்ளிக்கிட்டு போக வந்த

தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு
தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு

கண்ணும் கண்ணும் பேசுறப்போ
காதல் திசை காத்தடிக்கும்
நெஞ்சும் நெஞ்சும் சேருறப்போ
காம ரசம் ஊத்தெடுக்கும்

கண்ணும் கண்ணும் பேசுறப்போ
காதல் திசை காத்தடிக்கும்
நெஞ்சும் நெஞ்சும் சேருறப்போ
காம ரசம் ஊத்தெடுக்கும்

கட்டுக்குலையாத பொன்மேனி புண்ணாகி
சொட்டச்சொட்ட நீராடும்
விட்டுப்பிரியாது ஒன்றோடு ஒன்றாக
கட்டுப்பட்டு போராடும்
திறவாத இன்றுதானே ஒரு வாசல்தான்
சுகங்கள் வர

தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு
தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு

கொந்தளிச்சு பொங்குதம்மா
புத்தம் புது நந்தவனம்
சொந்தம் ஒண்ணு தேடுதம்மா
காதலிலே வெந்த மனம்

கொந்தளிச்சு பொங்குதம்மா
புத்தம் புது நந்தவனம்
சொந்தம் ஒண்ணு தேடுதம்மா
காதலிலே வெந்த மனம்

கள்ளவிழிக்குள்ளே ஓர் மின்னல் உண்டாகி
மெல்ல மெல்லச் சூடேறும்
துள்ளி ஓடும் கால்கள் நின்றாலும் தள்ளாடும்
பின்னி பின்னித்தான் ஆடும்
சுகபோகம் விளையாடி இசைபாடும் நாள்
இணைந்து வரும்

தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு
தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு
வாசம் வீசும் வாடைக்காத்து நோவு
வாசம் வீசும் வாடைக்காத்து நோவு
ஆஹா மல்லுக்கட்டு கட்டி என்னை
அள்ளிக்கிட்டு போக வந்த

தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு
தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு

பூமியே பூமியே - செங்கோட்டை

பாடல்: பூமியே பூமியே
திரைப்படம்: செங்கோட்டை
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: வித்யாசாகர்

பூமியே பூமியே பூமழை நான் தூவவா
வானமே வானமே என்னிடம் அதை கேட்பதா
உன் பதில் கீதமே மார்கழி மாதமே ஆகுமே
பூமியே பூமியே பூமழை நான் தூவவா

நான் தேடும் ராகம் நீ என இங்கே
தெரியாமல் நானும் வாழ்ந்தேனே
நாள்தோறும் உன்னை நான் இங்கு பார்த்தும்
புரியாமல் நானும் போனேனே
என் வழிப்பாதை முள் பாதை
என நாளும் வாடினேன்
உன் வழிச்சாலை மலர்ச்சோலை
என நானே மாற்றுவேன்
உதிக்கும் கிழக்கே எனக்கே நீதானே
உனக்கினி வாழ்வில் நிழல் நானே

பூமியே பூமியே பூமழை நான் தூவவா
வானமே வானமே என்னிடம் அதை கேட்பதா

யாரோடு சொந்தம் யாருடன் பந்தம்
பிறக்கின்ற போதே தீர்ப்பாகும்
என்னோடு நீயும் உன்னுடன் நானும்
இருக்கின்ற காலம் தேனாகும்
பூமரம் தாங்கும் அதன் வேர்போல்
நான் உன்னைத் தாங்குவேன்
சாமரம் வீசும் மலைக்காற்றாய்
உன் மார்பில் நீந்துவேன்
இளமை வசந்தம் இனிமேல் மலர்த்தூவும்
இதயத்தின் உள்ளே குயில் கூவும்

பூமியே பூமியே பூமழை நான் தூவவா
வானமே வானமே என்னிடம் அதை கேட்பதா
உன் பதில் கீதமே மார்கழி மாதமே ஆகுமே

பூமியே பூமியே பூமழை நான் தூவவா
வானமே வானமே என்னிடம் அதை கேட்பதா

Friday, April 26, 2013

டிங் டாங் கோயில் மணி - ஜி

பாடல்: டிங் டாங் கோயில் மணி
திரைப்படம்: ஜி
பாடியவர்கள்: மதுபாலகிருஷ்ணன் & மதுஶ்ரீ
இசை: வித்யாசாகர்

டிங் டாங் கோயில் மணி
கோயில் மணி நான் கேட்டேன்
உன் பேர் என் பெயரில்
சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்

நீ கேட்டது ஆசையின் எதிரொலி
நீ தந்தது காதலின் உயிர்வலி

டிங் டாங் கோயில் மணி
கோயில் மணி நான் கேட்டேன்
உன் பேர் என் பெயரில்
சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்

சொல்லாத காதல் சொல்ல
சொல்லாகி வந்தேன்
நீ பேசு இனி நீ பேசு
சொல் ஏது இனி நான் பேச

கனவுகளே கனவுகளே
பகல் இரவோ நீள்கிறதே
இதயத்திலே உன் நினைவு
இரவு பகல் ஆள்கிறதே
சற்று முன்பு நிலவரம்
எந்தன் நெஞ்சில் கலவரம்...கலவரம்

டிங் டாங் கோயில் மணி
கோயில் மணி நான் கேட்டேன்
உன் பேர் என் பெயரில்
சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்

புல் தூங்கும் பூவும் தூங்கும்
புதுக்காற்றும் தூங்கும்
தூங்காதே நம் கண்கள்தான்
ஏங்காதே இது காதல்தான்

பிடித்த நிலா பிடிக்கவில்லை
பிடிக்கிறது உன் முகம்தான்
இனிக்கும் இசை இனிக்கவில்லை
இனிக்கிறது உன் பெயர்தான்
எழுதி வைத்த சித்திரம்
எந்தன் நெஞ்சில் பத்திரம்...பத்திரம்

டிங் டாங் கோயில் மணி
கோயில் மணி நான் கேட்டேன்
உன் பேர் என் பெயரில்
சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்

நீ கேட்டது ஆசையின் எதிரொலி
நீ தந்தது காதலின் உயிர்வலி



மேகமே வெண் மேகமே - வெங்காயம்

பாடல்: மேகமே வெண் மேகமே
திரைப்படம்: வெங்காயம்
பாடியவர்கள்: பெல்லி ராஜ் & தீபா மிரியம்
இசை: பரணி

மேகமே வெண் மேகமே நீ யாரைத் தேடுறாய்
என்னையே நீ தீண்டவே மழைச்சாரல் ஆகிறாய்

உன் மூச்சின் நீளம் வாழவே
என் ஆயுள் தூரம் போதுமே
உன் இருவிழி இசைமொழி பேசுதே
மேகமே வெண் மேகமே நீ யாரைத் தேடுறாய்

அழகழகாய் நீ நடக்கின்ற பொழுது
இசையிசையாய் எனை அழைத்திடும் கொலுசு
உயிரிலே என் உயிரிலே உனைக்கண்டேன்

இதழிதழாய் நீ சிரிக்கின்ற பொழுது
ஐந்தருவி பொங்கித் தெறிக்கின்ற அழகு
விழியிலே இரு விழியிலே உனை உண்டேன்

துளி விழுமோ இல்லை கடல் எழுமோ
என் மனசுக்குள்ளே கடல் எழுமோ

துளிர் விடுமோ இல்லை குளிர் விடுமோ
என் நிழல் உரச குளிர் விடுமோ

செம்புலப்பெயல் நீர் போல
நம் அன்பில் கலந்திட வேண்டும்
உன்னை என்னையும் சேர்த்து
ஒரு திருக்குறள் கூறிட வேண்டும்
ஆடும் ஆடும் ஊஞ்சல் ஆடும்
மேகமே வெண் மேகமே நீ யாரைத் தேடுறாய்

மழைமழையாய் நீ நனைக்கின்ற பொழுது
வரிவரியாய் வரும் கவிதையின் விழுது
பசியிலே உயர் பசியிலே நான் நின்றேன்

அலையலையாய் நீ அடிக்கின்ற பொழுது
அழகழகாய் அதை ரசித்திடும் நிலவு
இதழையே இரு இதழையே நான் தின்றேன்

முதல் மொழியோ இது முதல் மொழியோ
இந்த உயிருக்கெல்லாம் முதல் மொழியோ

சுழல் நதியோ இது சுழல் நதியோ
அடி நமை இழுக்கும் சுழல் நதியோ

சிறு இதழ் பெருமழையாக
நம் கனவில் மிதந்திட வேண்டும்
ஈருடல் ஓர் உயிராக
நம் இருவரும் இணைந்திட வேண்டும்
காலம் வாழ்த்திப் பூக்கள் தூவும்

மேகமே வெண் மேகமே நீ யாரைத் தேடுறாய்
என்னையே நீ தீண்டவே மழைச்சாரல் ஆகிறாய்

உன் மூச்சின் நீளம் வாழவே
என் ஆயுள் தூரம் போதுமே
உன் இருவிழி இசைமொழி பேசுதே
மேகமே வெண் மேகமே நீ யாரைத் தேடுறாய்

Saturday, April 20, 2013

சொல்ல வார்த்தைகள் இல்லை - மெர்க்குரி பூக்கள்

பாடல்: சொல்ல வார்த்தைகள் இல்லை
திரைப்படம்: மெர்க்குரி பூக்கள்
இசை: கார்த்திக் ராஜா
பாடியவ்ர்கள்: கார்த்திக் ராஜா & ஷ்ரேயா கோஷல்

சொல்ல வார்த்தைகள் இல்லை
சொல்லாமல் காதலும் இல்லை
ஆசை வந்து கயிறு கட்டி அழைக்கிறதே உயிரே

பேச ஞாபகம் இல்லை
பேசாமல் போகவும் இல்லை
என்ன செய்ய ஏது செய்ய உள்ளம் கிடந்து அலைகிறதே

கணவா கணவா என் ஆசை கணவா
சேர்ந்துக்கொண்டேன் இதயம் துடிக்கிறதே

கனவா கனவாணைது காதல் கனவா
கிள்ளிக்கொண்டேன் எனக்கும் வலிக்கிறதே

சொல்ல வார்த்தைகள் இல்லை
சொல்லாமல் காதலும் இல்லை
ஆசை வந்து கயிறு கட்டி அழைக்கிறதே உயிரே

உன்னை விலகும் ஒவ்வொரு நொடியும் உன்னை நெருங்குகிறேன்
உன்னை விரும்பும் அத்தனை கணமும் என்னில் ததும்புகிறேன்

உன்னை விலகும் ஒவ்வொரு நொடியும் உன்னை நெருங்குகிறேன்
உன்னை விரும்பும் அத்தனை கணமும் என்னில் ததும்புகிறேன்
நேசிக்கிறேன் உன்னை என்னை அறியாமலே
யோசிக்கிறேன் இதைத்தான் நானும் புரியாமலே
நெஞ்சோடு கலகம் தீராததா
அன்பான உலகம் கை சேருமா
கண்ணோரங்கள் கொல்ல புது மின்சாரங்கள் செல்ல
இன்னும் என்ன சொல்ல நான் என்னைத் தந்தேன் மெல்ல

சொல்ல வார்த்தைகள் இல்லை
சொல்லாமல் காதலும் இல்லை
ஆசை வந்து கயிறு கட்டி அழைக்கிறதே அடியே

கண்கள் திறந்து கண்ணிமை திறந்து கண்டு கலந்ததென்ன
என்னை மறந்து உன்னையும் மறந்து உயிர் கரைந்ததென்ன

உள்ளம் கடந்து உள்ளத்தைக் கடந்து வந்த உணர்வு என்ன
நெஞ்சை அளந்து நேசத்தை அளந்து நின்று நினைத்ததென்ன
கோடுகளை இணைத்தால் கோலம் உருவாகுமே
இணைத்திடவே நல்ல காலம் உருவாகுமே
விண்ணொடும் துருவம் சேர்ந்திடுமே
உன்னோடு இதயம் கலந்திடுமே
அன்பே அன்பே என்று உனைத்தாலாட்டும் நாள் என்று
ஆகாயமும் நின்று மலர் பூத்தூவுமே அன்று

யாரோ நெஞ்சுக்குள் வந்து ஒரு லட்சம் வயலின்களை
மெல்ல மெல்ல இசைப்பது போல் இருக்கிறதே அன்பே

கணவா கணவா என் ஆசை கணவா
சேர்ந்துக்கொண்டேன் இதயம் துடிக்கிறதே

யாரோ நெஞ்சுக்குள் வந்து ஒரு லட்சம் வயலின்களை
மெல்ல மெல்ல ராகத்தோடு இசைப்பது போல் இருக்கிறதே

Monday, April 15, 2013

தேவதையை மண்ணில் இன்று - ஜங்ஷன்

பாடல்: தேவதையை மண்ணில் இன்று
திரைப்படம்: ஜங்ஷன்
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: ஶ்ரீனிவாஸ் & ரேஷ்மி

தேவதையை மண்ணில் இன்று பார்த்தேன்
இமைக்காமல் பார்க்கிறேன்

மெய் சிலிர்த்து மெய் மறந்து போனேன்
மனம் ஏங்கித் தவிக்கிறேன்

அடி உந்தன் உடல் ஒரு புல்லாங்குழல்
அதில் சங்கீதம் நான் இசைப்பேன்

தேவதையை மண்ணில் இன்று பார்த்தேன்
இமைக்காமல் பார்க்கிறேன்

மெய் சிலிர்த்து மெய் மறந்து போனேன்
மனம் ஏங்கித் தவிக்கிறேன்

இன்னும் இங்கே வித்தை கோடி உண்டு
ஒத்துழைத்தால் இன்னும் இன்பம் உண்டு

சில்மிஷங்கள் செய்யும் நேரம் எல்லாம்
சின்னச்சின்ன சொர்க்கம் தோன்றுதிங்கே

என்னை வேரோடு உன் கையில் சாய்த்து
உந்தன் நெஞ்சோடு தாலாட்டுப்பாடு

கங்கை ஆறாக வேர்க்கின்ற தேகம்
இதில் மீன் போல நீ நீச்சல் போடு

ஓர் ஆயுள் இது தீர்ந்திடும் வரையில்
ரகசியம் அறிந்திடுவோம்

தேவதையை மண்ணில் இன்று பார்த்தேன்
இமைக்காமல் பார்க்கிறேன்

மெய் சிலிர்த்து மெய் மறந்து போனேன்
மனம் ஏங்கித் தவிக்கிறேன்

நீ கொடுக்கும் இன்பம் போதவில்லை
மேல் கொதிக்கும் வெப்பம் ஆறவில்லை

அதிசயங்கள் இதில் ஏதுமில்லை
ஆசையெல்லாம் என்றும் தீர்வதில்லை

என்னை கொல்லாமல் கொல்கின்ற பார்வை
நெஞ்சில் உண்டாச்சு ஆனந்த போதை

இது இப்போதும் எப்போதும் தேவை
இந்த துன்பங்கள் சந்தோஷப் பாதை

வா காமன் அவன் போர்க்களம் அதிலே
சுகமுடன் போரிடலாம்

தேவதையை மண்ணில் இன்று பார்த்தேன்
இமைக்காமல் பார்க்கிறேன்

மெய் சிலிர்த்து மெய் மறந்து போனேன்
மனம் ஏங்கித் தவிக்கிறேன்

அடி உந்தன் உடல் ஒரு புல்லாங்குழல்
அதில் சங்கீதம் நான் இசைப்பேன்

தேவதையை மண்ணில் இன்று பார்த்தேன்
இமைக்காமல் பார்க்கிறேன்

மெய் சிலிர்த்து மெய் மறந்து போனேன்
மனம் ஏங்கித் தவிக்கிறேன்









Saturday, April 13, 2013

ஆவரம்பூ அந்நாளில் இருந்தே - பூ

பாடல்: ஆவரம்பூ அந்நாளில் இருந்தே
திரைப்படம்: பூ
இசை: எஸ்.எஸ்.குமரன்
பாடியவர்: சின்மயி

ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே
உனக்காக பூத்திருக்கு

சொந்த வேரோடுதான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா
ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே
உனக்காக பூத்திருக்கு

காற்றில் ஆடி தினந்தோறும்
உனது திசையைத் தொடருதடா
குழந்தைக்கால ஞாபகத்தில்
இதழ்கள் விரித்தே கிடக்குதடா
நெடுநாள் அந்த நெருக்கம்
நினைப்பில் அது கிடக்கும்
சருகுகள் சத்தம் போடும்
தினம் சூழ்நிலை யுத்தம் போடும்
அதன் வார்த்தை எல்லாம் மௌனமாகும்

சொந்த வேரோடுதான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா
ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே
உனக்காக பூத்திருக்கு

ஆயுள் முழுதும் தவம் கிடந்தே
ஒற்றைக்காலில் நிற்குதடா
மாலையாகி தவழ்ந்திடவே
உனது மார்பை அது கேட்குதடா
பனியில் அது கிடக்கும்
நீயும் பார்த்தால் உயிர்ப்பிழைக்கும்
வண்ணங்கள் எல்லாம் நீதான்
அதன் வாசங்கள் எல்லாம் நீதான்
நீ விட்டுச்சென்றால் பட்டுப்போகும்

சொந்த வேரோடுதான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா
ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே

உடையாத வெண்ணிலா - ப்ரியம்

பாடல்: உடையாத வெண்ணிலா
திரைப்படம்: ப்ரியம்
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: ஹரிஹரன் & சித்ரா

உடையாத வெண்ணிலா...உறங்காத பூங்குயில்
நனைகின்ற புல்வெளி...நனையாத பூவனம்
உதிர்கின்ற ஒரு முடி...களைகின்ற சிறு நகம்
சிருங்கார சீண்டல்கள்...சில்லென்ற ஊடல்கள்
ப்ரியம் ப்ரியம்...ஆ...ப்ரியம் ப்ரியம்
ஆ ஆ...ப்ரியம் ப்ரியம்...ஆ...ப்ரியம் ப்ரியம்

உடையாத வெண்ணிலா...உறங்காத பூங்குயில்
நனைகின்ற புல்வெளி...நனையாத பூவனம்

அந்தி மஞ்சள் மாலை ஆளில்லாத சாலை
தலைக்கு மேலே போகும் சாயங்கால மேகம்
முத்தம் வைத்த பின்னும் காய்ந்திடாத ஈரம்
எச்சில் வைத்த பின்னும் மிச்சம் உள்ள பானம்
கன்னம் என்னும் பூவில் காய்கள் செய்த காயம்

ப்ரியம் ப்ரியம்...ப்ரியம் ப்ரியம்
ப்ரியம் ப்ரியம்...ப்ரியம் ப்ரியம்
உடையாத வெண்ணிலா...உறங்காத பூங்குயில்
நனைகின்ற புல்வெளி...நனையாத பூவனம்

கண்கள் செய்யும் ஜாடை கழுத்தில் பூத்த வேர்வை
அள்ளிச் செல்லும் கூந்தல் ஆடை தூக்கும் காற்று
மொட்டுவிட்ட பாகம் தொட்டுப்பார்த்த சினேகம்
முகத்தின் மீது ஆடை மோதிச்சென்ற மோகம்
இரண்டு பேரை ஒன்றாய் எழுதிப்பார்க்கும் இன்பம்

ப்ரியம் ப்ரியம்...ப்ரியம் ப்ரியம்
ப்ரியம் ப்ரியம்...ப்ரியம் ப்ரியம்
உடையாத வெண்ணிலா...உறங்காத பூங்குயில்
நனைகின்ற புல்வெளி...நனையாத பூவனம்
சிருங்கார சீண்டல்கள்...சில்லென்ற ஊடல்கள்
ப்ரியம் ப்ரியம்...ப்ரியம் ப்ரியம்
ப்ரியம் ப்ரியம்...ப்ரியம் ப்ரியம்

Friday, April 12, 2013

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே - காதல் சடுகுடு

பாடல்: மேகத்தில் ஒன்றாய் நின்றோமே
திரைப்படம்: காதல் சடுகுடு
இசை: தேவா
பாடியவர்கள்: ஹரிஹரன் & சுஜாதா

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறிப்போகின்றோம் அன்பே

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறிப்போகின்றோம் அன்பே
பிரிவென்பதால் நெஞ்சிலே பாரம் இல்லை
மழை என்பது நீருக்கு மரணம் இல்லை
மீண்டும் ஒருநாள் மேகம் ஆகி வானில் சேர்ந்திடுவோம்
இருவர் கூடி ஒரு துளியாகி முத்தாய் மாறிடுவோம்

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறிப்போகின்றோம் அன்பே

கண்ணை கவ்வும் உன் கண்களை காதலித்தேன்
கற்பை தொடும் உன் பார்வையை காதலித்தேன்
ஆசை கொண்ட உன் ஆண்மையை காதலித்தேன்
மீசை கொண்ட உன் மென்மையை காதலித்தேன்

நிலா விழும் உன் விழிகளை காதலித்தேன்
நிலம் விழும் உன் நிழலையும் காதலித்தேன்
நெற்றி தொடும் உன் முடிகளை காதலித்தேன்
நெஞ்சை மூடும் உன் உடைகளை காதலித்தேன்

கண்ணா சில நாள் பிரிவோம் அதனால் உறவா செத்துவிடும்
கடல் நீர் கொஞ்சம் மேகம் ஆனால் கடலா வற்றிவிடும்
வெளியூர் போகும் காற்றும் ஒருநாள் வீட்டுக்கு திரும்பிவரும்
பிரிதல் என்பது இலையுதிர் காலம் நிச்சயம் வசந்தம் வரும்

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறிப்போகின்றோம் அன்பே

அன்பே அன்பே உனை எங்ஙனம் பிரிந்திருப்பேன்
நிலா வந்தால் என் இரவுகள் எரிந்திருப்பேன்
உன்னை எண்ணி என் உயிர்த்தளம் உடைந்திருப்பேன்
கண்ணால் கண்டால் நான் இருமுறை உயிர்த்தரிப்பேன்

அன்பே அன்பே உனை எங்ஙனம் மறந்திருப்பேன்
நித்தம் நித்தம் உன் கனவுக்குள் இடம் பிடிப்பேன்
பெண்ணே பெண்ணே நம் பிரிவிலும் துணையிருப்பேன்
கண்ணே கண்ணே என் கண்களை அனுப்பிவைப்பேன்

இத்தனை பிரிவு தகுமா என்று இயற்கையை கண்டிக்கிறேன்
ஏன்தான் அவரை கண்டாய் என்று கண்களை தண்டிக்கிறேன்
பிரியும் போதும் பிரியம் வளரும் பிரிந்தே சிந்திப்போம்
வாழ்க்கை என்பது வட்டச்சாலை மீண்டும் சந்திப்போம்

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறிப்போகின்றோம் அன்பே
பிரிவென்பதால் நெஞ்சிலே பாரம் இல்லை
மழை என்பது நீருக்கு மரணம் இல்லை
மீண்டும் ஒருநாள் மேகம் ஆகி வானில் சேர்ந்திடுவோம்
இருவர் கூடி ஒரு துளியாகி முத்தாய் மாறிடுவோம்

தலைவனை அழைக்குது - என் ஆசை மச்சான்

பாடல்: தலைவனை அழைக்குது
திரைப்படம்: என் ஆசை மச்சான்
இசை: தேவா
பாடியவர்: எஸ்.ஜானகி

தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்

தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்
எனை வாட்டும் பூமனம் இங்கு வாழ்த்துதே தினம்
தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்
எனை வாட்டும் பூமனம் இங்கு வாழ்த்துதே தினம்
தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்

மாலையிட்டு பூமுடித்து மஞ்சளிட்டு நான் குளித்து
மன்னவனை தேடித்தேடி நான் மயங்குகிறேன்
தேரில் வரும் போதும் சுகம் தென்றல் தரும் நாதம் சுகம்
தெய்வத்திற்கு நன்றி சொல்லி நான் வணங்குகிறேன்
மஞ்சளோடு குங்குமமும்
மன்னவனின் பூஜைக்கென்று நான் படைத்தேன்
உயிரிலே உறவிலே கலந்து வாழ்கிறேன்
நான் நினைத்துப்பார்க்கிறேன் உந்தன் நிழலில் சாய்கிறேன்

தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்
எனை வாட்டும் பூமனம் இங்கு வாழ்த்துதே தினம்
தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்

துள்ளிவிழும் அருவியைப்போல் உன்னுடைய பார்வை என்மேல்
பட்டவுடன் பறந்து வானில் சிறகடிப்பதென்ன
என்னருகில் நீ இருந்து உன் இரண்டு கண் மலர்ந்தால்
நெல்லின் மணிபோல எந்தன் நிழல் தெரிவதென்ன
பெண்ணிலவு உன்னை எண்ணி
வெண்ணிலைப்போல இங்கு தேய்வதென்ன
தலைவனே தழுவ வா தனிமை வாட்டுது
வா பருவன் ஏங்குது முள்ளில் படுத்து தூங்குது

தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்
எனை வாட்டும் பூமனம் இங்கு வாழ்த்துதே தினம்
தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்


பூவாசம் புறப்படும் பெண்ணே - அன்பே சிவம்

பாடல்: பூவாசம் புறப்படும் பெண்ணே
திரைப்படம்: அன்பே சிவம்
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்; விஜய் பிரகாஷ் & சாதனா சர்கம்

பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்
உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்
உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி

பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்

புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்
உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்
கோடு கூட ஓவியத்தின் பாகமே
ஊடல் கூட காதலென்று ஆகுமே
ஒரு வானம் வரைய நீல வண்ணம்
நம் காதல் வரைய என்ன வண்ணம்
என் வெட்கத்தின் திறன் தொட்டு
விரல் என்னும் கோல் கொண்டு
நம் காதல் வரைவோமே வா...ஆ ஆ ஆ ஆ

பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்

ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது
உற்றுப்பார்க்கும் ஆணின் கண்ணில் உள்ளது
பெண் உடம்பில் காதல் எங்கு உள்ளது
ஆண் தொடாத பாகம் தன்னில் உள்ளது
நீ வரையத்தெரிந்த ஒரு கவிஞன் கவிஞன்
பெண் வசியம் தெரிந்த ஒரு கலைஞன் கலைஞன்
மேகத்தை ஏமாற்றி மண் சேரும் மழை போல
மடியோடு விழுந்தாயே வா...ஆ ஆ ஆ ஆ

பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்
உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்
உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி

Thursday, April 11, 2013

ஒன்றே ஒன்று தேனூறும் வண்ணம் - தெய்வம் பேசுமா

பாடல்: ஒன்றே ஒன்று தேனூறும் வண்ணம்
திரைப்படம்: தெய்வம் பேசுமா
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

ஒன்றே ஒன்று தேனூறும் வண்ணம்
உறவோடு தர வேண்டும் கன்னம்
இன்றே இங்கே நான் காண வேண்டும்
இதழோடு எழுதுங்கள் கொஞ்சம்

நிலவென மேலாடை காற்றோடு ஆட
உலவிடும் கார்கூந்தல் பூமாலை சூட
நிலவென மேலாடை காற்றோடு ஆட
உலவிடும் கார்கூந்தல் பூமாலை சூட

பழகிய கையோடு கையொன்று கூட
தழுவென என் நெஞ்சம் உன் நெஞ்சைத்தேட
காலை வரும் வரையில் நாடகமோ
காதலனின் மடியில் ஆடிடவோ

ஒன்றே ஒன்று தேனூறும் வண்ணம்
உறவோடு தர வேண்டும் கன்னம்
இன்றே இங்கே நான் காண வேண்டும்
இதழோடு எழுதுங்கள் கொஞ்சம்

கருவிழி செவ்வல்லிப்பூவாக மாறும்
கனியிதழ் வெண்முல்லை வண்ணத்தை கூறும்
கருவிழி செவ்வல்லிப்பூவாக மாறும்
கனியிதழ் வெண்முல்லை வண்ணத்தை கூறும்

அமுதோடு தேன் வந்து நெஞ்சத்தில் ஊறும்
அளவோடு தந்தாலும் என் ஆசை மீறும்
ஆடிவரும் இரவில் பொன் உலகம்
நாயகனின் உறவில் என் உலகம்

ஒன்றே ஒன்று தேனூறும் வண்ணம்
உறவோடு தர வேண்டும் கன்னம்

எத்தனை வருஷம் - ஜாம்பவான்

பாடல்: எத்தனை வருஷம்
திரைப்படம்: ஜாம்பவான்
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ் & ஜனனி பரத்வாஜ்

எத்தனை வருஷம் எத்தனை மாசம்
எத்தனை நாளா சொல்லித் தவிச்சேன்

அத்தனை ஆசையும் பத்தரை நொடியில்
மொத்தமாய் தீர துள்ளிக் குதிச்சேன்

உச்சந்தலையில் வானம் முட்டுதே
ஓ உன்னாலே...உன்னாலே

இமைகளை மூடாமல் நீ கனவுகள் காணாதே
இருளுக்குள் நீயும் நின்று நிழலினைத் தேடாதே

கற்பனை ஆற்றில் நீந்தாதே
உன் கண்களில் என்னை ஏந்தாதே

கானல் நீரை அள்ள முடியுமா
ஓ சொல்லம்மா...செல்லம்மா

காதல் வந்தாலே கண்கள் தூங்காது
கனவின் பிடியில் அலைபாயும்

தூக்கம் போனாலே காதல் ஆகாது
மனதை துடைத்தால் சுகம் ஆகும்

உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி
சொல்லிட உதடுகள் துடிக்கிறதா

உனக்குள் உண்மையில் நான் இருந்தால்
அதற்கொரு சாட்சியம் இருக்கிறதா

இதயத்தைக் கேட்டு உன் முகம் காட்ட
அனுமான் போல நான் இல்லையே
ஓ அன்பே வா...அன்பே வா

எத்தனை வருஷம் எத்தனை மாசம்
எத்தனை நாளா சொல்லித் தவிச்சேன்

என்னை பார்க்காதே கண்ணை சாய்க்காதே
எனது மனது உனக்கெதற்கு

உன்னை நேசிக்க உயிரில் பூசிக்க
உனது சம்மதம் எனக்கெதற்கு

உன் விரல் என் உடல் தொடும் நேரம்
உணர்வினில் ஒருவித தடுமாற்றம்

இதுதான் காதலின் அடையாளம்
இன்னும் இன்னும் இருக்குது பல மாற்றம்

கரு விழிக்காதல் முகவரி ஆக
நெஞ்சம் உந்தன் தஞ்சம் ஆனதே
ஓ அன்பே வா...அன்பே வா

எத்தனை வருஷம் எத்தனை மாசம்
எத்தனை நாளா சொல்லித் தவிச்சேன்

அத்தனை ஆசையும் பத்தரை நொடியில்
மொத்தமாய் தீர துள்ளிக் குதிச்சேன்

உச்சந்தலையில் வானம் முட்டுதே
ஓ உன்னாலே...உன்னாலே

இமைகளை மூடாமல் நீ கனவுகள் காணாதே
இருளுக்குள் நீயும் நின்று நிழலினைத் தேடாதே

கற்பனை ஆற்றில் நீந்தாதே
உன் கண்களில் என்னை ஏந்தாதே

கானல் நீரை அள்ள முடியுமா
ஓ சொல்லம்மா...செல்லம்மா



Tuesday, April 9, 2013

பன்னீர்ப்பூவின் பார்வையில் - ரெண்டும் ரெண்டும் அஞ்சு

பாடல்: பன்னீர்ப்பூவின் பார்வையில்
திரைப்படம்: ரெண்டும் ரெண்டும் அஞ்சு
இசை: கங்கை அமரன்
பாடியவர்: சித்ரா

பன்னீர்ப்பூவின் பார்வையில்
கண்ணீர் கோலம் தான்
தண்ணீர் வேண்டும் வேரினில்
வெந்நீர் வெள்ளம் தான்

நெஞ்சில் ஏதோ வேதனை
சொன்னால் தீராதோ
கண்ணீர் சிந்தும் காரணம்
சொல்லக்கூடாதோ

பன்னீர்ப்பூவின் பார்வையில்
கண்ணீர் கோலம் தான்
தண்ணீர் வேண்டும் வேரினில்
வெந்நீர் வெள்ளம் தான்

பூ முடித்தவன் கை பிடித்தவன்
வாழ்வோ கொஞ்ச காலம்
பெண் மயங்கினால் கண் கலங்கினால்
யார்தான் இவள் காவல்

இவள் கழுத்திலே ஒரு தாலி
இது நிலைக்குமோ எனும் கேள்வி
விடை தேடிப்பார்க்கவோ

பன்னீர்ப்பூவின் பார்வையில்
கண்ணீர் கோலம் தான்
தண்ணீர் வேண்டும் வேரினில்
வெந்நீர் வெள்ளம் தான்

ஏன் துடிக்கிறாள் ஏன் தவிக்கிறாள்
கேட்க ஓர் தெய்வம் இல்லை
நாள் முழுவதும் பெண் தொழுவது
கோயில் கொண்ட கல்லை

பலன் கொடுக்குமோ இவள் பூஜை
உயிர் பிழைக்குமோ இந்த வேளை
விடை தேடிப்பார்க்கவோ

பன்னீர்ப்பூவின் பார்வையில்
கண்ணீர் கோலம் தான்
தண்ணீர் வேண்டும் வேரினில்
வெந்நீர் வெள்ளம் தான்
 
நெஞ்சில் ஏதோ வேதனை
சொன்னால் தீராதோ
கண்ணீர் சிந்தும் காரணம்
சொல்லக்கூடாதோ

பன்னீர்ப்பூவின் பார்வையில்
கண்ணீர் கோலம் தான்
தண்ணீர் வேண்டும் வேரினில்
வெந்நீர் வெள்ளம் தான்