Friday, December 23, 2011

rathidevi sannidhiyil - oru veedu oru ulagam

பாடல்: ரதிதேவி சன்னிதியில்
திரைப்படம்: ஒரு வீடு ஒரு உலகம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: டி.எல்.மஹராஜன் & பி.எஸ்.சசிரேகா

ரதிதேவி சன்னிதியில் ரகசிய பூஜை
ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை
ரதிமாறன் மந்திரமோ விழிகளின் பாஷை
நாள்தோறும் ஓதுவதில் எத்தனை ஆசை
நாள்தோறும் ஓதுவதில் எத்தனை ஆசை

ரதிதேவி சன்னிதியில் ரகசிய பூஜை
ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை
இதழ்மணி ஓசை

ஆரூரின் தேரொன்று அசைந்து ஆடிவரும்
கோலம் கொண்டதென்ன
தேவாரப்பாட்டு நீ பாடக்கேட்டு
மயங்கி நின்றதென்ன சொல்லு
திருமண மேடையில் நாதஸ்வரம்
இருமன மேடையில் நாளும் சுகம்

ரதிதேவி சன்னிதியில் ரகசிய பூஜை
ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை
இதழ்மணி ஓசை

நீ தந்த செந்தூரம் நிலைக்க வேண்டுமென
பாடிடும் தென்றல் காற்று
என் காதல் தேவி பல்லாண்டு வாழி
இதுவும் தென்றல் சொன்ன பாட்டு
இதுவும் தென்றல் சொன்ன பாட்டு
இனித்திடும் மங்கல வாழ்துக்களே
இசைத்தன செந்தமிழ் பாட்டுக்களே

ரதிதேவி சன்னிதியில் ரகசிய பூஜை
ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை
இதழ்மணி ஓசை

உன் பேரை சொன்னாலே - டும் டும் டும்

பாடல்: உன் பேரை சொன்னாலே
திரைப்படம்: டும் டும் டும்
இசை: கார்த்திக் ராஜா
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன் & சாதனா சர்கம்

உன் பேரை சொன்னாலே
உள் நாக்கில் தித்திக்குமே
போகாதே போகாதே
உன்னோடு சென்றாலே
வழியெல்லாம் பூ பூக்குமே
வாராயோ வாராயோ

உன் பேரை சொன்னாலே
உள் நாக்கில் தித்திக்குமே
போகாதே போகாதே
உன்னோடு சென்றாலே
வழியெல்லாம் பூ பூக்குமே
வாராயோ வாராயோ

ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞாபகம்
உயிர் தின்ன பார்க்குதே கண்ணே
துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன்
எங்கே நீ என் கண்ணே

மெய்யெழுத்தும் மறந்தேன்
உயிரெழுத்தும் மறந்தேன்
ஊமையாய் நானும் மாறினேன்
கையை சுடும் என்றாலும்
தீயை தொடும் பிள்ளை போல்
உன்னையே மீண்டும் நினைக்கிறேன்

கையை சுடும் என்றாலும்
தீயை தொடும் பிள்ளை போல்
உன்னையே மீண்டும் நினைக்கிறேன்
அடிமேல் அடியாய் மேளம் போல் மனதா
உயிர் வேறோ உடல் வேறோ
விதியா விடையா செடிமேல் இடியா
செல்லாதே செல்லாதே

உன் பேரை சொன்னாலே
உள் நாக்கில் தித்திக்குமே
நீ எங்கே நீ எங்கே
உன்னோடு சென்றாலே
வழியெல்லாம் பூ பூக்குமே
நீ எங்கே நீ எங்கே

ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞாபகம்
உயிர் தின்ன பார்க்குதே நண்பா
துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன்
எங்கே நீ என் நண்பா

நினைவில்லை என்பாயா
நிஜமில்லை என்பாயா
நீ என்ன சொல்வாய் அன்பே
உயிர்த்தோழன் என்பாயா
வழிப்போக்கன் என்பாயா
விடை என்ன சொல்வாய் அன்பே

உயிர்த்தோழன் என்பாயா
வழிப்போக்கன் என்பாயா
விடை என்ன சொல்வாய் அன்பே
சாய்ஞ்சாடும் சூரியனே
சந்திரனை அழவைத்தாய்
சோகம் ஏன் சொல்வாயா
செந்தாழம் பூவுக்குள்
புயலொன்று வரவைத்தாய்
என்னாகும் சொல்வாயா

உன் பேரை சொன்னாலே
உள் நாக்கில் தித்திக்குமே
நீ எங்கே நீ எங்கே
உன்னோடு சென்றாலே
வழியெல்லாம் பூ பூக்குமே
நீ எங்கே நீ எங்கே

ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞாபகம்
உயிர் தின்ன பார்க்குதே நண்பா
துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன்
எங்கே நீ என் நண்பா

vanjikkodi poovaanadhu - inimai idhO idhO

பாடல்: வஞ்சிக்கொடி பூவானது
திரைப்படம்: இனிமை இதோ இதோ
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

வஞ்சிக்கொடி பூவானது
யாரைக்கேட்டு ஆளானது
வஞ்சிக்கொடி பூவானது
யாரைக்கேட்டு ஆளானது
சோகம் வந்து தழுவும் இவளை
பேதை நெஞ்சில் தினமும் கவலை
வஞ்சிக்கொடி ஹா பூவானது
யாரைக்கேட்டு ஆளானது

தேவையை தீர்க்கவா நான் உனை நாடினேன்
பெண்மையின் காவலாய் ஆண் துணை நாடினேன்
கை கொடுத்தால் கண்ணகி நான் கை விரித்தால் மாதவி தான்
பூங்கொடிக்கு துணை இருந்தால் வேறு பக்கம் சாயாது
காவிரிக்கு அணை இருந்தால் வேறு திசை பாயாது
மேலாடை பூக்கள் கண்டால் காமக்கண்கள் தாளாது

வஞ்சிக்கொடி ஹா பூவானது
யாரைக்கேட்டு ஆளானது
சோகம் வந்து தழுவும் இவளை
பேதை நெஞ்சில் தினமும் கவலை
வஞ்சிக்கொடி பூவானது
யாரைக்கேட்டு ஆளானது

பாதையின்றி யாத்திரைகள் விடிந்த பின்னும் ராத்திரிகள்
கல்யாணம் இல்லாமல் கை சேர்க்க ஆள் உண்டு
பொன் தேகம் தீண்டாமல் பூச்சூட யார் உண்டு
தேன் உண்ண வண்டு வந்தால் கேள்வி கேட்கும் பூவின்று

வஞ்சிக்கொடி பூவானது
யாரைக்கேட்டு ஆளானது
சோகம் வந்து தழுவும் இவளை
பேதை நெஞ்சில் தினமும் கவலை
வஞ்சிக்கொடி பூவானது
யாரைக்கேட்டு ஆளானது

நான் சொன்னதும் மழை வந்துச்சா

பாடல்: நான் சொன்னதும் மழை வந்துச்சா
திரைப்படம்: மயக்கம் என்ன
இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர் & சைந்தவி

நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்துப்பேச்சி

என் கண்ணுல பொய் இருக்கா
உன் கண்ணோட மை கிறுக்கா
அடி கள்ளியே அறிவு இருக்கா
மூச்சு நின்னு போச்சி

காத்தோடு காத்தாக உள்ள வந்தியா
காட்டோடு காடாக கட்டி போட்டியா
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது
என் பேச்செல்லாம் நின்னுபோயி மூளை சுத்துது

ம்ம் நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்துப்பேச்சி

கருவாட்டுக்கொழம்பா நீயும் ருசி ஏத்துற
ஒருவாட்டி தின்னு பாக்க உசுப்பேத்துற
அடி போடி போடி போடி
பொட்ட மயிலே ஓலை ஏதும் வந்துச்சா
உன்ன தூக்கி போகதான் வருவேனுன்னு
கிளி வந்து பதில் சொல்லுச்சா

கரு நாக்குக்கார புள்ள
கருப்பட்டி நிறத்து முல்ல
எடுபட்ட நெனப்பு தொல்ல
நீ களவாணி
கருவாட்டுக்கொழம்பா நீயும் ருசி ஏத்துற
ஒருவாட்டி தின்னு பாக்க உசுப்பேத்துற

ம்ம் நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்துப்பேச்சி

ஆடு...ஆடு...
ஆத்தாடி ஆடுமேய்க்க ராசா வந்தாரா
எங்காடு தின்ன எச்சி புல்ல மேய வந்தாரா

அடி போடி போடி போடி
முட்டக்கண்ணி கட்டங்கட்டி பாஞ்சேன்
அட கண்ணமூடி கொஞ்சம் சாஞ்சா போதும்
கனவுல தீ மிதிச்சேன்

கண்ணாடி வளையல் தாரேன்
காதுக்கு ஜிமிக்கி தாரேன்
கழுத்துக்கு தாலி தாரேன்
நீ வர்றியாடி
கருவாட்டுக்கொழம்பா நீயும் ருசி ஏத்துற
ஒருவாட்டி தின்னு பாக்க உசுப்பேத்துற

நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்துப்பேச்சி

என் கண்ணுல பொய் இருக்கா
உன் கண்ணோட மை கிறுக்கா
அடி கள்ளியே அறிவு இருக்கா
மூச்சு நின்னு போச்சி

காத்தோடு காத்தாக உள்ள வந்தியா
காட்டோடு காடாக கட்டி போட்டியா
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது
என் பேச்செல்லாம் நின்னுபோயி மூளை சுத்துது

Monday, December 19, 2011

enakkum unakkum vazhakku - thaai veettu seethanam

பாடல்: எனக்கும் உனக்கும் வழக்கு
திரைப்படம்: தாய் வீட்டு சீதனம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்

எனக்கும் உனக்கும் வழக்கு
எனக்கும் உனக்கும் வழக்கு
இரண்டும் சுகத்தின் கணக்கு
கையிணைத்து தொட்டணைத்து
நாம் கலந்தால் என்ன

எனக்கும் உனக்கும் வழக்கு
எனக்கும் உனக்கும் வழக்கு
இரண்டும் சுகத்தின் கணக்கு
கையிணைத்து தொட்டணைத்து
நாம் கலந்தால் என்ன

அல்லித்தண்டு கையிரண்டில் வளைகின்றது
அள்ளிக்கொள்ளும் சின்னமுல்லை குழைகின்றது
இல்லையென்று சொல்லாமல் அள்ளி அள்ளித்தந்தாலும்
இன்னும் இன்னும் பேராசை புரிகின்றது
சொன்னாலும் புரியாத சுகம் ஒன்றுண்டு
சுகமாக விளையாட இடம் ஒன்றுண்டு

எனக்கும் உனக்கும் வழக்கு
இரண்டும் சுகத்தின் கணக்கு
கையிணைத்து தொட்டணைத்து
நாம் கலந்தால் என்ன

உள்ளம் தன்னில் உள்ளம் ஒன்று ஒளிகின்றது
பள்ளம் கண்டு வெள்ளம் வந்து பாய்கின்றது
மண்ணில் இட்ட மீனாக கண்ணி பட்ட மானாக
ஒன்றுபட்டு போராட துடிக்கின்றது
சொன்னாலும் புரியாத சுகம் ஒன்றுண்டு
சுகமாக விளையாட இடம் ஒன்றுண்டு

எனக்கும் உனக்கும் வழக்கு
இரண்டும் சுகத்தின் கணக்கு
கையிணைத்து தொட்டணைத்து
நாம் கலந்தால் என்ன
ஹா ஹா ஹா
ஹோ ஹொ ஹோ ஹோ

kaadhal mandhirathil thandhirathil - nEram vandhaachu

பாடல்: காதல் மந்திரத்தில் தந்திரத்தில்
திரைப்படம்: நேரம் வந்தாச்சு
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & வாணி ஜெயராம்

காதல் மந்திரத்தில் தந்திரத்தில் கண் மயங்க
காணும் சுந்தரத்தில் அந்தரத்தில் பெண் மயங்க
செவ்வாயில் செந்தேனில் சர்க்கரை இனிக்க

காதல் மந்திரத்தில் தந்திரத்தில் கண் மயங்க
காணும் சுந்தரத்தில் அந்தரத்தில் பெண் மயங்க
வா வா வா ராதா பூந்தேன் தான் நீ தா

காதல் மந்திரத்தில் தந்திரத்தில் கண் மயங்க
காணும் சுந்தரத்தில் அந்தரத்தில் பெண் மயங்க
செவ்வாயில் செந்தேனில் சர்க்கரை இனிக்க

உள்ளங்கள் ஆனந்த பாடல்கள் பாட
எண்ணங்கள் ஆயிரம் தாளங்கள் போட
தேர் மீது நாளும் ஊர்கோலம் போகும்
ராஜாவும் ராஜாத்தி ஊடலை ரசிக்க

காதல் மந்திரத்தில் தந்திரத்தில் கண் மயங்க
காணும் சுந்தரத்தில் அந்தரத்தில் பெண் மயங்க
வா வா வா ராதா...வா வா வா ராஜா

பொன்னான வாலிப காலங்கள் வாழ்க
பொல்லாத லீலைகள் மாலையில் காண்க
மேலாடை சூடும் பாலாடை மேனி
மோகங்கள் கொண்டாடி மோஹனம் இசைக்க

உஷ்ணத்தை ஏற்றுது ஏற்றுது காற்று
உள்ளுக்குள் ஊறுது ஊறுது ஊற்று
தாளாமல் தேகம் தள்ளாடும் நேரம்
தாகங்கள் தீராமல் ஜோடிகள் தவிக்க

காதல் மந்திரத்தில் தந்திரத்தில் கண் மயங்க
காணும் சுந்தரத்தில் அந்தரத்தில் பெண் மயங்க
வா வா வா ராதா...வா வா வா ராஜா
வா வா வா ராதா...வா வா வா ராஜா

naan kaadhal kiLi - thaaikku oru piLLai

பாடல்: நான் காதல் கிளி
திரைப்படம்: தாய்க்கு ஒரு பிள்ளை
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா

ரா ரா ரா ரா ஹா
ரா ரா ரா ரா ஹா
ஹா ஹா ஹா
லா லா ல் லா
ஹா ஹா ஹா
லா லா ல் லா

நான் காதல் கிளி
செம்மாங்கனி செம்மாதுளை
கொத்தோடு வா முத்தாக வா

நான் காதல் கிளி
செம்மாங்கனி செம்மாதுளை
கொத்தோடு வா முத்தாக வா

தத்தி தத்திச் செல்லும்
நீ அன்னம் என்று சொல்வேன்
தத்தி தத்திச் செல்லும்
நீ அன்னம் என்று சொல்வேன்
தாளம் போட்டு பாடும்
உன்னை மன்னன் என்று சொல்வேன்
தாளம் போட்டு பாடும்
உன்னை மன்னன் என்று சொல்வேன்
பாட்டினில் சொன்னதெல்லாம்
பார்வையில் சொன்னால் என்ன
பாட்டினில் சொன்னதெல்லாம்
பார்வையில் சொன்னால் என்ன
தேனில் ஊறும் எண்ணங்கள்
தினம் தினம் ஆவலில் கூடிடலாம்

நான் காதல் கிளி
செம்மாங்கனி செம்மாதுளை
கொத்தோடு வா முத்தாக வா

அன்னை இன்பம் காண
நீ உன்னை தியாகம் செய்தாய்
அன்னை இன்பம் காண
நீ உன்னை தியாகம் செய்தாய்
இமயம் அந்த தெய்வம் வாழ
என்றும் தியாகம் செய்வேன்
இமயம் அந்த தெய்வம் வாழ
என்றும் தியாகம் செய்வேன்
குலமகள் தெய்வம் என்றால்
குறுநகை கோவில் அன்றோ
குலமகள் தெய்வம் என்றால்
குறுநகை கோவில் அன்றோ
மாறும் காலம் பொன்னாகும்
அனைவரும் கூடியே வாழ்ந்திடலாம்

நான் காதல் கிளி
செம்மாங்கனி செம்மாதுளை
கொத்தோடு வா முத்தாக வா

ரா ரா ரா ரா ஹா
ரா ரா ரா ரா ஹா
ஹா ஹா ஹா
லா லா ல் லா
ஹா ஹா ஹா
லா லா ல் லா

Sunday, December 18, 2011

sondham ennum sandham - thai maasam poo vaasam

பாடல்: சொந்தம் என்னும் சந்தம்
திரைப்படம்: தை மாசம் பூ வாசம்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.பி.ஷைலஜா

சொந்தம் என்னும் சந்தம்
சொன்னாள் செம்மாங்குயில்
சுகம்தான் ஓர் ஆயிரம்
மன்றம் வந்து தென்றல்
கொஞ்சும் பொன்மாலையில்
தொடுத்தேன் ஓர் பூச்சரம்
கண்ணே உன் மாலைதான்
நான் சூடும் வேளைதான்
ஆனந்த லீலைதான்
கண்டேன் உன்னை
தந்தேன் என்னை தொடர்ந்திடும்

சொந்தம் என்னும் சந்தம்
சொன்னாள் செம்மாங்குயில்
சுகம்தான் ஓர் ஆயிரம்

வேதங்கள் ஓதும் முனிவனின் மகளே
சகுந்தலை மானே வா
மாடங்கள் சூழும் அரண்மனை வாழும்
மணிமுடி மன்னா வா
மாணிக்க வீணையை மெதுவாய் மீட்டிட
இதுதான் ஆனந்த நேரம்
ஆணிப்பொன் மோதிரம்
அளித்தாய் சீதனம்
இனிமேல் நான் உந்தன் தாரம்
அம்மாடி நெஞ்சம்தான்
அல்லிப்பூ மஞ்சம்தான்
அங்கே நான் தஞ்சம்தான்
அச்சம் இன்னும்
மிச்சம் என்ன தொடர்ந்திடும்

சொந்தம் என்னும் சந்தம்
சொன்னாள் செம்மாங்குயில்
சுகம்தான் ஓர் ஆயிரம்

ஆடவர் நெஞ்சம் அடிக்கடி கொஞ்சம்
இலக்கணம் மீறாதோ
ஆயினும் என்ன அவசர காதல்
இலக்கியம் ஆகாதோ
நீ செல்லும் பாதையில்
நிழல் போல் நான் வர
நமக்குள் ஏதிங்கு பேதம்
ஈரேழு ஜென்மமும்
இது போல் சேர்ந்திட
வகுப்போம் காதலின் வேதம்
நீயென்றால் நீயல்ல
நானென்றால் நானல்ல
நாமென்றும் வேறல்ல
இன்பம் உண்டு
இங்கே அள்ள தொடர்ந்திடும்

சொந்தம் என்னும் சந்தம்
சொன்னாள் செம்மாங்குயில்
சுகம்தான் ஓர் ஆயிரம்
மன்றம் வந்து தென்றல்
கொஞ்சும் பொன்மாலையில்
தொடுத்தேன் ஓர் பூச்சரம்

imayam kaNdEn - imayam

பாடல்: இமயம் கண்டேன்
திரைப்படம்: இமயம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.எஸ்.சசிரேகா

இமயம் கண்டேன்
இமயம் கண்டேன்
பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின்
பட்டுப்பூவை தொட்டுப்பார்த்தேன் சுகங்கள்
அழகு மிகு ரகங்கள் பெருமை மிகு மதங்கள்

பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின்
பட்டுப்பூவை தொட்டுப்பார்த்தேன் சுகங்கள்
அழகு மிகு ரகங்கள் பெருமை மிகு மதங்கள்

இயற்கை எனக்கு தந்த அழைப்பு
இந்த நதியோட்டாமே
ஏங்கும் இளமை தாங்கும் அழகு
வான வில் வண்ணமே
காதல் தேன் கிண்ணமே
பருவ மழை மேகம்
பனி படரும் தேகம்
இலைகளிலும் ராகம்
அதிக சுக மோகம்

இமயம் கண்டேன்
பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின்
பட்டுப்பூவை தொட்டுப்பார்த்தேன் சுகங்கள்
அழகு மிகு ரகங்கள் பெருமை மிகு மதங்கள்

நிலத்தின் செழிப்பு தேவன் விரிப்பு
நீல விழி பூக்களே
நெஞ்சில் எடுத்து மஞ்சம் வளர்த்து
கொஞ்சும் பொன் மீன்களே
வைர விண்மீன்களே
இதழில் ஒரு பாடல்
இடையில் ஒரு கூடல்
பனி மலையின் சூழல்
நடு நடுவில் ஊடல்
இமயம் கண்டேன்

பழத்தின் நடுவில் வடித்த இனிப்பு
அன்பு சுவை அல்லவா
பாதி விழியில் சேதி படித்தால்
ஞான கலை அல்லவா
மௌன நிலை அல்லவா
பழக ஒரு மாலை
இணைய ஒரு மாலை
நடனமிட சோலை
நல்லதொரு வேளை

இமயம் கண்டேன்
பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின்
பட்டுப்பூவை தொட்டுப்பார்த்தேன் சுகங்கள்
அழகு மிகு ரகங்கள் பெருமை மிகு மதங்கள்
அழகு மிகு ரகங்கள் பெருமை மிகு மதங்கள்

kai thottu paakkaNum - sElam vishNu

பாடல்: கை தொட்டுப் பாக்கணும்
திரைப்படம்: சேலம் விஷ்ணு
இசை: சங்கீதராஜன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

கை தொட்டுப் பாக்கணும் வாம்மா வா
ம்ஹ்ம் ம்ஹூம் ஹூம் நான் வர மாட்டேன்
கத்துக்க வேணும் காதல் பாடம்
ஆ ஹ ஆ ஹா ஹா இடம் தர மாட்டேன்
கல்யாணம் ஆகட்டும் போய்யா போ
ஆ ஹாஹா ஹா ஹா நான் விட மாட்டேன்
பக்கத்தில் யாரும் பாக்கும் போது
ஓ ஹோ ஹோ ஹோ அப்ப தொட மட்டேன்

நீ என்னை தோளில் வைத்து தாலாட்ட
நான் உந்தன் பிள்ளை போல வாலாட்ட
கூச்சங்கள் என்னை விட்டு போகாது
கும்மாளம் போடச்சொன்னா ஆகாது
ஊசிக்குள் நூலாய் உறவாடு
ஆசைக்கும் நீயும் அணை போடு
தடை சொல்லாதே எனை கொல்லாதே

ஹேய் லல்ல லாலல லாலா போ
ஆ ஹாஹா ஹா ஹா நான் போவ மாட்டேன்
பக்கத்தில் யாரும் பாக்கும் போது
அட பரவாயில்ல அப்ப தொட மாட்டேன்

தேகத்தில் ஊறும் தேன் கூடு
தேவைகள் தீரும் வரை நீராடு
பெண்ணல்ல நீயும் ஒரு பாலாறு
எல்லாமே காதல் செய்யும் கோலாறு
வேகத்தில் நீயும் உரசாதே
ஹோ நான் கொஞ்சும் நேரம் ஒதுங்காதே
அடி அம்மாடி நீ கில்லாடி

கை தொட்டுப் பாக்கணும்
வா வா வாம்மா வா வா வா
ம்ஹ்ம் ம்ஹூம் ஹூம் நான் வர மாட்டேன்
ஹோ கத்துக்க வேணும் காதல் பாடம்
இடம் தர மாட்டேன்
கல்யாணம் ஆகட்டும் போய்யா போ போ
ஆ ஹா ஹா ஹா நான் விட மாட்டேன்
ஹே பக்கத்தில் யாரும் பாக்கும் போது
ம்ஹ்ம் ம்ஹூம் ஹூம் அப்ப தொட மாட்டேன்

raathiri nilaavil - sandhippu

பாடல்: ராத்திரி நிலாவில்
திரைப்படம்: சந்திப்பு
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.ஜானகி

ராத்திரி நிலாவில் ரகசிய கனாவில்
காதல் சங்கீதம்தான் நான் பாடவோ

ராத்திரி நிலாவில் ரகசிய கனாவில்
காதல் சங்கீதம்தான் நான் பாடவோ
ராகம் கெடாமல் தாளம் விடாமல்
துள்ளும் பொன்மானைப்போல் நான் ஆடவோ

ராத்திரி நிலாவில் ரகசிய கனாவில்
காதல் சங்கீதம்தான் நான் பாடவோ

சொந்தம் என்னும் சந்தம் சொல்லவோ
புது மெட்டு ஒன்று இட்டுக்கட்டவோ
மெல்லிசை தேவதை மேனிதான் தாமரை

பத்து வித பக்க மேளமோ
இவை சத்தமிட இன்ப கோலமோ
மோகமோ தேகமோ நான் தரும் தாகமோ
ஓசை உண்டாக ஆசை வண்டாக
ஆடும் இந்நாளிலே ஆனந்தமோ

ராத்திரி நிலாவில் ரகசிய கனாவில்
காதல் சங்கீதம்தான் நான் பாடவோ

நித்தம் நித்தம் இங்கு வரவோ
உங்கள் நெஞ்சங்களில் தங்கி விடவோ
நானொரு கீதமே யாரிதன் நாதமே

முத்து நவ ரத்தினம் இதோ
உடை மூடி வைத்த சித்திரம் இதோ
செவ்விதழ் பூநகை சேர்த்திடும் மேனகை
காலம் கொண்டாடும் கவிதை என்றாக
பாடும் சிங்காரமே நானல்லவோ

ராத்திரி நிலாவில் ரகசிய கனாவில்
காதல் சங்கீதம்தான் நான் பாடவோ

nee ezhuthum kaditham - athipathi

பாடல்: நீ எழுதும் கடிதம்
திரைப்படம்: அதிபதி
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & பெண் குரல்?

நீ எழுதும் கடிதம்
தேன் மலரின் அமுதம்
வா வா சுக மழைதனில் நனைவோம்
கண்ணால் கவிதை கோடி வரைவோம்

நான் எழுதும் கடிதம்
தேன் மலரின் அமுதம்
வா வா சுக மழைதனில் நனைவோம்
கண்ணால் கவிதை கோடி வரைவோம்

பூந்தென்றல் தேரேறி விளையாடுவோம்
பூக்கள் சூடியே உறவாடுவோம்
அமுதூறும் இதழோரம் சுவை தேடுவோம்
ஆசை ராகமே தினம் பாடுவோம்
இளங்காதல் அரங்கேறி சதிராடுவோம்
இனிப்பான கதை சொல்லி விழி மூடுவோம்

நீ எழுதும் கடிதம்
தேன் மலரின் அமுதம்

உன் பாசமடல் யாவும் உயர் காவியம்
உந்தன் அன்புதான் எழில் ஓவியம்
அழகான உன் பார்வை ரதி ஆலயம்
ஆடும் பாவை நீ புது நூலகம்
உனக்காக மலர்ந்தாடும் பூங்காவனம்
உன் கைகள் தர வேண்டும் ஆலிங்கனம்

நான் எழுதும் கடிதம்
தேன் மலரின் அமுதம்
வா வா சுக மழைதனில் நனைவோம்
கண்ணால் கவிதை கோடி வரைவோம்

நான் எழுதும் கடிதம்
தேன் மலரின் அமுதம்

ponnE boomiyadi - manidhari ithanai niRangaLA

பாடல்: பொன்னே பூமீயடி
திரைப்படம்: மனிதரில் இத்தனை நிறங்களா
இசை: ஷ்யாம்
பாடியவர்கள்: எஸ்.ஜானகி & வாணி ஜெயராம்

பொன்னே பூமியடி
ஆ சரி சரி சரி சரி
ரெண்டும் தாய்மையடி
ஆ சரி சரி சரி சரி
சாதம் ஊட்டும் கைகள் பாரடியோ
தாலாட்டும் பச்சைத்தொட்டில்
சிறு சிறு மணி வித வித நிற மணி
சிறு சிறு மணி வித வித நிற மணி

பொன்னே பூமியடி
ஆ சரி சரி சரி சரி
ரெண்டும் தாய்மையடி
ஆ சரி சரி சரி சரி
சாதம் ஊட்டும் கைகள் பாரடியோ
தாலாட்டும் பச்சைத்தொட்டில்
சிறு சிறு மணி வித வித நிற மணி
சிறு சிறு மணி வித வித நிற மணி
பொன்னே பூமியடி
ஆ சரி சரி சரி சரி
ரெண்டும் தாய்மையடி

ஆளைப்பார்த்து சேர்த்தால்தான்டி பூமி பொன்னாகும்
அன்பைப்பார்த்து சேர்ந்தால்தான்டி பெண்மை சீராகும்
பாயும் தண்ணீர் வெள்ளம் ஆனால் மண்ணும் தாங்காது
அதிக தண்ணீர் வெள்ளக்காடு அறிவு போனால் மானக்கேடு

நிஜமடி இது நிஜமடி நிஜமடி
நிஜமடி இது நிஜமடி நிஜமடி
பொன்னே பூமியடி
ஆ சரி சரி சரி சரி
ரெண்டும் தாய்மையடி

பூவும் பொட்டும் மணியும் இன்றி மண்ணில் அழகில்லை
பொங்கும் மங்கல வாழ்க்கை இன்றி பெண்ணில் அழகில்லை
பார்க்கும் கண்கள் இல்லை என்றால் வாழ்வில் சுகமில்லை
எந்த மண்ணில் என்ன பயிறோ எந்த தலையில் என்ன எழுத்தோ

வருவது வரும் வரவிடு வரவிடு
வருவது வரும் வரவிடு வரவிடு
பொன்னே பூமியடி
ஆ சரி சரி சரி சரி
ரெண்டும் தாய்மையடி
ஆ சரி சரி சரி சரி
சாதம் ஊட்டும் கைகள் பாரடியோ
தாலாட்டும் பச்சைத்தொட்டில்
சிறு சிறு மணி வித வித நிற மணி
சிறு சிறு மணி வித வித நிற மணி

பொன்னே பூமியடி
ஆ சரி சரி சரி சரி
ரெண்டும் தாய்மையடி

manja kuLichidum - vaLartha kadA

பாடல்: மஞ்ச குளிச்சிடும்
திரைப்படம்: வளர்த்த கடா
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: எஸ்.என்.சுரேந்தர் & வாணி ஜெயராம்

மஞ்ச குளிச்சிடும் வஞ்சி மலர்க்கொடி
கொச்சை மொழி சொல்லும் பச்சை பசுங்கிளி
பொன்னாட்டம் சிரிச்சா பூவாட்டம்
இடை ஒரு தேராட்டம் இங்கே ஆட முந்தானை மூட
ஒரு கும்மாளம் கொண்டாட்டம் உல்லாசம்

மஞ்ச குளிச்சிடும் வஞ்சி மலர்க்கொடி
கொச்சை மொழி சொல்லும் பச்சை பசுங்கிளி
உன்னோடு இருக்கா பின்னோடு
இடை ஒரு தேராட்டம் இங்கே ஆட முந்தானை மூட
என்ன கும்மாளம் கொண்டாட்டம் உல்லாசம்

ஒவ்வொரு ராத்திரியும் உன் உறக்கம் கலையும்
வந்திழுக்கும் வேளை வரை உன் நினைப்பாகும்
எத்தனை சொப்பனமோ என் விழியில் வருமோ
பாய் விரிச்சி நான் படுத்தா உன் கனவாகும்
மேனி மெலிந்ததென்ன மேலாடை சுடுவதென்ன
காதல் விளைஞ்சதடி கல்யாணம் வேண்டுதடி
நீதானய்யா நாள் பார்த்து வா
நாள் பார்க்கும் முன் தோள் சேர வா

மஞ்ச குளிச்சிடும் வஞ்சி மலர்க்கொடி
கொச்சை மொழி சொல்லும் பச்சை பசுங்கிளி
உன்னோடு இருக்கா பின்னோடு
இடை ஒரு தேராட்டம் இங்கே ஆட முந்தானை மூட
என்ன கும்மாளம் கொண்டாட்டம் உல்லாசம்

மல்லிகை செண்டல்லவா நான் மெதுவாய் தொடவா
தொட தொடத்தான் சுட சுடத்தான் சுகம் பிறக்காதா
மெல்லிடை துள்ளிடவா துள்ளி மடியில் விழவா
முதல் முதல் உன் விரல் படத்தான் முகம் சிவக்காதா
உடம்பு கொதிக்குதடி ஓயாமல் உருகுதடி
எனக்கும் அப்படித்தான் ஏதேதோ கற்பனைதான்
மாமான்னு தான் நீ கொஞ்சணும்
ஆஹா ஏம்மான்னு தான் நீ கெஞ்சணும்

மஞ்ச குளிச்சிடும் வஞ்சி மலர்க்கொடி
கொச்சை மொழி சொல்லும் பச்சை பசுங்கிளி
உன்னோடு இருக்கா பின்னோடு
இடை ஒரு தேராட்டம் இங்கே ஆட முந்தானை மூட
என்ன கும்மாளம் கொண்டாட்டம் உல்லாசம்

vaammA varattumA - Raja Yuvaraja

பாடல்: வாம்மா வரட்டுமா
திரைப்படம்: ராஜா யுவராஜா
இசை: Ben Surendar
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்

வாம்மா வரட்டுமா
நான் ஏங்குறேன் ரொம்ப நேரமா
ஏம்மா பிடிவாதமா
அம்மாடியோ தாங்காதம்மா
ஹேய் தொட்டா என்ன கெட்டா விடும்

மாமா மயக்கமா
பார்த்தாலுமே சூடேறுமா
மோகமா முழு தாகமா
புது வேகம்தான் தலைக்கேறுமா
அம்மாடி நான் என்னாவது

மாம்பழக் குலையாட்டம் மடியில தாங்கி
விளையாட வேண்டாமா மேல்மூச்சு வாங்கி

மாம்பழக் குலையாட்டம் மடியில தாங்கி
விளையாட வேண்டாமா மேல்மூச்சு வாங்கி
மயக்குது உன் பாட்டு மெதுவாக தாலாட்டு
மல்லிகைப் பூவாட்டம் மாமா நீ சீராட்டு
துடிக்குது தேகம் அதுக்காகத்தான்

ஆசைதான் அலைபாயுதா
அங்கங்குதான் தேன் தேடுதா
அம்மாடி நான் என்னாவது

வா...ம்மா வரட்டுமா
நான் ஏங்குறேன் ரொம்ப நேரமா ஹா

வாலிபம் அரங்கேற அமைந்தது மேடை
வரவேற்பு கூறாதோ நாம் காட்டும் ஜாடை
ததும்புது தேனாறு திருமேனி பதினாறு
என்னையும் வாட்டாதோ ஆளான கோலாறு
நெருங்கிடு என்னை இதமாகத்தான்

காதலி...ஹா கனி தானடி
கனி தேடும் நான் அணில் தானடி
ஹேய் தொட்டா என்ன கெட்டா விடும்

மாமா...ஹோய் மயக்கமா...ஆஹா
பார்த்தாலுமே சூடேறுமா

ஏம்மா...ஹா பிடிவாதமா...ம்ஹூம்
அம்மாடியோ தாங்காதம்மா
ஹேய் தொட்டா என்ன கெட்டா விடும்
வாம்மா...வரட்டுமா

aayiram piRaigaL - thookku mEdai

பாடல்: ஆயிரம் பிறைகள்
திரைப்படம்: தூக்கு மேடை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: வாணி ஜெயராம்

ஆயிரம் பிறைகள் காணும் வரை
அலைகடல் ஓசை அடங்கும் வரை
தமிழே உனக்காக...நீ தனியே எனக்காக
காத்திருப்பேன் நான் காத்திருப்பேன்

ஆயிரம் பிறைகள் காணும் வரை
அலைகடல் ஓசை அடங்கும் வரை
தமிழே உனக்காக...நீ தனியே எனக்காக
காத்திருப்பேன் நான் காத்திருப்பேன்

கதிரவன் ஊர்வலம் நிற்கும் வரை
கனிவளம் உலகில் வற்றும் வரை
கதிரவன் ஊர்வலம் நிற்கும் வரை
கனிவளம் உலகில் வற்றும் வரை
பொதிகை தென்றல் தூங்கும் வரை
பொன்னி நதியாள் பொய்க்கும் வரை
பொதிகை தென்றல் தூங்கும் வரை
பொன்னி நதியாள் பொய்க்கும் வரை
தமிழே உனக்காக...நீ தனியே எனக்காக

ஆயிரம் பிறைகள் காணும் வரை
அலைகடல் ஓசை அடங்கும் வரை
தமிழே உனக்காக...நீ தனியே எனக்காக
காத்திருப்பேன் நான் காத்திருப்பேன்

இயற்கை வளங்கள் இருக்கும் வரை
இலக்கிய செல்வம் வாழும் வரை
இயற்கை வளங்கள் இருக்கும் வரை
இலக்கிய செல்வம் வாழும் வரை
இளமை அழகு தேயும் வரை
முதுமை உடலில் பாயும் வரை
இளமை அழகு தேயும் வரை
முதுமை உடலில் பாயும் வரை
தமிழே உனக்காக...நீ தனியே எனக்காக

ஆயிரம் பிறைகள் காணும் வரை
அலைகடல் ஓசை அடங்கும் வரை
தமிழே உனக்காக...நீ தனியே எனக்காக
காத்திருப்பேன் நான் காத்திருப்பேன்
காத்திருப்பேன் நான் காத்திருப்பேன்
காத்திருப்பேன் நான் காத்திருப்பேன்
 

indha nimisham - Hello

பாடல்: இந்த நிமிஷம்
திரைப்படம்: ஹலோ
இசை: தேவா
பாடியவர்கள்: ஹரிஹரன் & சித்ரா

இந்த நிமிஷம் என் நிமிஷம்
எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம்
பாலைவனத்தில் ஒரு தேவதை மேகம்
பாலை வார்த்ததொரு பால் நிமிஷம்
வாழ்வின் கடைசி அந்த நிமிஷம் வரைக்கும்
வாசனை வீசும் பூ நிமிஷம்
இந்த நிமிஷம் என் நிமிஷம்
எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம்

இப்படியே இப்படியே இருந்துவிடக் கூடாதா
என் கண்ணில் உன் இமைகள் பொறுந்திவிடக் கூடாதா
இப்படியே இப்படியே இறந்துவிடக் கூடாதா
இப்படியே காலங்கள் உறைந்துவிடக் கூடாதா
வெட்டவெளி பூவனமாய் மலர்ந்துவிடக் கூடாதா
விண்மீன்கள் நிலவாக வளர்ந்துவிடக் கூடாதா
அன்பே உன் கக்கத்தில் அணைக்கின்ற வெப்பத்தில்
உயிருள்ள காலம்வரை ஊடாடக் கூடாதா

இந்த நிமிஷம் என் நிமிஷம்
எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம்

நிம்மதியே நிம்மதியே நெஞ்சைவிட்டுப் போகாதே
என்னுயிரை தீக்குழியில் எரிந்துவிட்டுப் போகாதே
பல்லவியே பல்லவியே பாடல்விட்டுப் போகாதே
வாசல்வரை வந்த நதி வற்றிவிடக் கூடாதே
மனம் கொண்ட நம்பிக்கை மாறிவிடக் கூடாதே
மார்போடு உன் சூடு ஆறிவிடக் கூடாதே
அன்பே உன் கண் சிந்தும் ஆனந்தக் கண்ணீரில்
என்னோடு என் உயிரும் கரைந்துவிடல் ஆகாதா

இந்த நிமிஷம் என் நிமிஷம்
எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம்
பாலைவனத்தில் ஒரு தேவதை மேகம்
பாலை வார்த்ததொரு பால் நிமிஷம்
வாழ்வின் கடைசி அந்த நிமிஷம் வரைக்கும்
வாசனை வீசும் பூ நிமிஷம்
இந்த நிமிஷம் என் நிமிஷம்
எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம்

un paarvai sugamaanadhu - idhaaNdA needhi

பாடல்: உன் பார்வை சுகமானது
திரைப்படம்: இதாண்டா நீதி
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & வாணி ஜெயராம்

உன் பார்வை சுகமானது
நெஞ்சில் அழியாத கதையானது
நெஞ்சில் அழியாத கதையானது

உன் பார்வை சுகமானது
நெஞ்சில் அழியாத கதையானது
நெஞ்சில் அழியாத கதையானது

உன் காதல் ராகம் உள்ளம் தொடும் நேரம்
உலகினை நான் மறந்தேன்
கண்ணாடி தேகம் கையில் விழும் காலம்
கனவினில் நான் மிதந்தேன்
மன்னன் உந்தன் தோளை கொஞ்சுகின்ற மாலை
மன்னன் உந்தன் தோளை கொஞ்சுகின்ற மாலை
நானன்றி வேறிங்கே யாருண்டு கண்ணா

உன் பார்வை சுகமானது
நெஞ்சில் அழியாத கதையானது
நெஞ்சில் அழியாத கதையானது

நீ போகும் வேளை என்றும் உந்தன் பாதை
நிழலென நான் வருவேன்
உன் கோயில் தன்னில் என்றும் உனக்காக
ஒளியினை நான் தருவேன்
மண்ணில் உள்ள காலம் இன்று முதல் நானும்
மண்ணில் உள்ள காலம் இன்று முதல் நானும்
உனக்காக கரைகின்ற நிலவாக இருப்பேன்

உன் பார்வை சுகமானது
நெஞ்சில் அழியாத கதையானது
நெஞ்சில் அழியாத கதையானது

உன் பார்வை சுகமானது
நெஞ்சில் அழியாத கதையானது
நெஞ்சில் அழியாத கதையானது
 

Raja ennai mannithu vidu - andha June pathinARaam naaL

பாடல்: ராஜா என்னை மன்னித்து விடு
திரைப்படம்: அந்த ஜூன் பதினாறாம் நாள்
இசை: ராம மூர்த்தி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

Darling don't leave me
Excuse me

லா லா...லா லா...லா ல லா
லா லா...லா லா...லா ல ல ல ல லா

ராஜா என்னை மன்னித்து விடு
ரோஜா மெல்ல அணைத்து எடு
ராஜா என்னை மன்னித்து விடு
No...no...no
ரோஜா மெல்ல அணைத்து எடு
No...no...no
உன்னாலே சொந்தங்கள்
எல்லாமே சொர்க்கங்கள்
உன்னாலே சொந்தங்கள்
எல்லாமே சொர்க்கங்கள்
உலகமே நீ அல்லவா
உறவுகள் நான் அல்லவா

ராஜா என்னை மன்னித்து விடு
Excuse me...Excuse me
Hey don't you squeeze me huh

ராணி அழகு உந்தன் மேனி
இன்பத்தோணி பழக மெல்ல வா நீ
ராணி அழகு உந்தன் மேனி
இன்பத்தோணி பழக மெல்ல வா நீ
இதழ் செந்தூர கிண்ணங்கள்
உடல் செவ்வாழை பந்தல்கள்
செந்தூர கிண்ணங்கள்
செவ்வாழை பந்தல்கள்
மோகத்தின் தாகத்தை
தேகத்தின் வேகத்தில் கேட்டாயம்மா
Oh...no

லீனா அழகு உந்தன் மேனி
ராணி பழக மெல்ல வா நீ

க ப ஸா நி ஸ ரி நி ஸா
ப க ம ம க ம க ம ம க
ம க ம ம க க க கா
ரி ம பா ரி ஸ நி த பா
ரி ஸ ரி ரி க ரி ஸ ரி ரி நி
ரி ஸ ரி ரி க ரி ஸ ரி ரி நி
ல ல லா ல ல லா ல ல லா

அலைமோதும் நெஞ்சம் இன்று
நினைந்தேங்கும் மஞ்சம்
இனி நீயே தஞ்சம் என்று
எனை மீறிக் கொஞ்சும்

அலைமோதும் நெஞ்சம் இன்று
நினைந்தேங்கும் மஞ்சம்
இனி நீயே தஞ்சம் என்று
எனை மீறிக் கொஞ்சும்
சுகமோ சுவையோ தினமும் வருமோ

சிலை உன்னை மெல்ல அள்ள
புது கலைகள் சொல்ல சொல்ல
என் ஆசை கண்ணில் மின்ன
பொன் மேனி என்னில் பின்ன

சிலை உன்னை மெல்ல அள்ள
புது கலைகள் சொல்ல சொல்ல
என் ஆசை கண்ணில் மின்ன
பொன் மேனி என்னில் பின்ன
சுகமே வரவோ இரவே தருமோ

லீனா அழகு உந்தன் மேனி
ராணி பழக மெல்ல வா நீ
லா லா ல ல ல ல லா லா
லா லா ல ல ல ல லா லா
ல ல ல ல ல ல லா
ல ல ல ல லா ல் லா
லா லா...லா லா...லா லா

maalai nEram dEvan pOtta kOlam ennammA - aNNi en deivam

பாடல்: மாலை நேரம் தேவன் போட்ட கோலம்
திரைப்படம்: அண்ணி என் தெய்வம்
இசை: குண சிங்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.எஸ்.சசிரேகா

மாலை நேரம் தேவன் போட்ட
கோலம் என்னம்மா
மாறன் வந்து நெஞ்சில் போட்ட
தாளம் என்னம்மா
அது தானே இன்ப ராகம்
இனி எந்நாளுமே இன்பம் ஆகும்
நடந்ததை நினைக்கையில்
மனசுக்குள் இனிக்குது சும்மா
அடிக்கடி அதை எண்ணி தவிக்குது
மனமிது காரணம் என்னம்மா
இது தானே பருவ காலம்
இது ரதிதேவன் கொடுத்த தாகம்

முல்லைப்பூ மலர் உன் நெஞ்சம்
என்றும் அதுதான் என் மஞ்சம்
எந்தன் நெஞ்சிலும் ஓர் எண்ணம்
அங்கே மின்னும் உன் வண்ணம்
கண்ணா நானும் உன்னை சேரும்
நன்நாள் வேண்டும் என் மன்னா
கங்கை வெள்ளம் பொங்கும் வேகம்
இன்பம் வேண்டும் என் கண்ணா
இன்பம் வேண்டும் என் கண்ணா

மாலை நேரம் தேவன் போட்ட
கோலம் என்னம்மா
மாறன் வந்து நெஞ்சில் போட்ட
தாளம் என்னம்மா
அது தானே இன்ப ராகம்
இனி எந்நாளுமே இன்பம் ஆகும்

முத்துக்கள் தெளிக்கிற வண்ணச்சிரிப்பு
மோகத்தை கொடுக்குது உந்தன் அழைப்பு
தொட்டதும் வந்தது வெட்கம் எனக்கு
சொர்க்கத்தை காட்டுது உந்தன் அணைப்பு
ஏதோ ஒரு தாகம் தினம் வந்தாடுது
எங்கோ எனை கை தந்து கொண்டோடுது
அது தானே தேவன் லீலை
இனி எந்நாளும் இன்ப மாலை

மாலை நேரம் தேவன் போட்ட
கோலம் என்னம்மா
மாறன் வந்து நெஞ்சில் போட்ட
தாளம் என்னம்மா
அது தானே இன்ப ராகம்
இனி எந்நாளுமே இன்பம் ஆகும்

azhagiya poomagaL varugaiyil - oor kuruvi

பாடல்: அழகிய பூமகள் வருகையில்
திரைப்படம்: ஊர்க்குருவி
இசை: கங்கை அமரன்
பாடியவர்: எஸ்.ஜானகி

அழகிய பூமகள் வருகையில்
மலர்களை பொழியுது பூமரமே
பழகிய தேவதை விழிகளில்
ஆயிரம் கனவுகள் ஊர்வலமே
தோகை மயில் ஒரு தூது விடும்
தோள்களிலே இனி மாலை விழும்
ஆயிரம் ஆயிரம் பூ மலரும்
அழகிய பூமகள் வருகையில்
மலர்களை பொழியுது பூமரமே
பழகிய தேவதை விழிகளில்
ஆயிரம் கனவுகள் ஊர்வலமே

மார்கழி வேளையில்
மன்மதன் சோலையில்
மழைத்துளி விழுகிறதே
திருமண மாலையும்
அழகிய சேலையும்
கனவினில் வருகிறதே
பழைய கதை இனி மாறி விடும்
பருவ சுகம் இனி ஊறி வரும்
வளர்ந்து விரிந்து கொழுந்து எழுந்து
மலர்களைத் தழுவிடும் புதிய சுகம்

அழகிய பூமகள் வருகையில்
மலர்களை பொழியுது பூமரமே
பழகிய தேவதை விழிகளில்
ஆயிரம் கனவுகள் ஊர்வலமே

இனி ஒரு தடை இல்லை
வழியினில் அணை இல்லை
நதியினை நகர விடு
மங்கல வேளையில்
மன்மதன் சோலையில்
மலர்களை மலர விடு
புதிய கலை எனை எழுத விடு
மலர் அணையில் எனை மகிழ விடு
சிறந்த விருந்து அருந்து விரைந்து
இளமையின் அமுதங்கள் பருகி விடு

அழகிய பூமகள் வருகையில்
மலர்களை பொழியுது பூமரமே
பழகிய தேவதை விழிகளில்
ஆயிரம் கனவுகள் ஊர்வலமே
தோகை மயில் ஒரு தூது விடும்
தோள்களிலே இனி மாலை விழும்
ஆயிரம் ஆயிரம் பூ மலரும்
அழகிய பூமகள் வருகையில்
மலர்களை பொழியுது பூமரமே
பழகிய தேவதை விழிகளில்
ஆயிரம் கனவுகள் ஊர்வலமே
 

kaadhal sOlaiyil kannippuRA - sagalakalA vaaNdugaL

பாடல்: காதல் சோலையில் கன்னிப்புறா
திரைப்படம்: சகலகலா வாண்டுகள்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்: பி.ஜெயசந்திரன்

காதல் சோலையில் கன்னிப்புறா
கண்ணில் மின்னுது ஆசை நிலா
வெண்மதி ஆடவே கால்களும் தேவையா
சிரிக்கும் மானே மயக்கம் ஏனோ
காவிய கோயிலின் ஓவியம் போலே
கவிதை பொழிவாய் கலை மாமணியே

காதல் சோலையில் கன்னிப்புறா
கண்ணில் மின்னுது ஆசை நிலா
வெண்மதி ஆடவே கால்களும் தேவையா
சிரிக்கும் மானே மயக்கம் ஏனோ
காவிய கோயிலின் ஓவியம் போலே
கவிதை பொழிவாய் கலை மாமணியே
காதல் சோலையில் கன்னிப்புறா
கண்ணில் மின்னுது ஆசை நிலா

உனை காணும் நேரம் உள்ளம் ராகம்
அழில் சிந்தும் தேகம் எந்தன் வீணை ஆகும்
உனை காணும் நேரம் உள்ளம் ராகம்
அழில் சிந்தும் தேகம் எந்தன் வீணை ஆகும்
தேவன் கோவிலில் தேவி நீயடி
தேவன் என்னுடன் சேர்ந்து ஆடடி
ஆசை தேர் மேலே ஒரு ஊர்வலம் போய் வருவோம்
அழியா கதை போலே இந்த பூமியில் வாழ்ந்திடுவோம்

காதல் சோலையில் கன்னிப்புறா
கண்ணில் மின்னுது ஆசை நிலா
வெண்மதி ஆடவே கால்களும் தேவையா
சிரிக்கும் மானே மயக்கம் ஏனோ
காவிய கோயிலின் ஓவியம் போலே
கவிதை பொழிவாய் கலை மாமணியே
காதல் சோலையில் கன்னிப்புறா
கண்ணில் மின்னுது ஆசை நிலா

எழில் வானவில்லும் நிறம் மாறி போகும்
உட சாயும் போதும் உண்மை காதல் வாழும்
எழில் வானவில்லும் நிறம் மாறி போகும்
உட சாயும் போதும் உண்மை காதல் வாழும்
உந்தன் பாதமாய் நானும் மாறுவேன்
வாழ்க்கை பாதையில் தீபம் ஏற்றுவேன்
தினமும் உனக்காக எந்தன் கால்களும் ஆடிடுமே
திருநாள் பூமாலை இனி சூடட்டும் பூங்கரமே

காதல் சோலையில் கன்னிப்புறா
கண்ணில் மின்னுது ஆசை நிலா
வெண்மதி ஆடவே கால்களும் தேவையா
சிரிக்கும் மானே மயக்கம் ஏனோ
காவிய கோயிலின் ஓவியம் போலே
கவிதை பொழிவாய் கலை மாமணியே
காதல் சோலையில் கன்னிப்புறா
கண்ணில் மின்னுது ஆசை நிலா
 

kothu kothA malliyappoo - puthu vaarisu

பாடல்: கொத்துக் கொத்தா மல்லியப்பூ
திரைப்படம்: புது வாரிசு
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & வாணி ஜெயராம்

கொத்துக் கொத்தா மல்லிகைப்பூ
கொண்டு வந்தேன் நான் உனக்கு
கொத்துக் கொத்தா மல்லிகைப்பூ
கொண்டு வந்தேன் நான் உனக்கு
எந்தன் பூந்தேரு வந்து நீ சேரு
இன்பம் பூவாய் பூக்குமே ஹோய்

கொத்துக் கொத்தா மல்லிகைப்பூ
கொண்டு வந்தாய் நீ எனக்கு
கொத்துக் கொத்தா மல்லிகைப்பூ
கொண்டு வந்தாய் நீ எனக்கு
இது பூந்தேரு வந்து நீ சேரு
இன்பம் பூவாய் பூக்குமே ஹோய் ஹோய்

கொத்துக் கொத்தா மல்லிகைப்பூ
கொண்டு வந்தாய் நீ எனக்கு

கன்னியாய் ஒரு தாமரைப்பூ
காதலை சொல்லுதா
விண்ணிலே வந்த சூரியனும்
சம்மதம் சொன்னதா
வெள்ளியில் செய்த புள்ளி மயில்
பள்ளிக்கு இன்று நான் வரவா
தேனிலா வந்த தேன் நிலா
தேகத்தில் புது பாடலா
இந்த ராஜாத்தி நெஞ்சில் ரோஜாப்பூ
வந்து தானாய் பூத்ததோ ஹோய்

கொத்துக் கொத்தா மல்லிகைப்பூ
கொண்டு வந்தாய் நீ எனக்கு
கொத்துக் கொத்தா மல்லிகைப்பூ
கொண்டு வந்தேன் நான் உனக்கு
இது பூந்தேரு வந்து நீ சேரு
இன்பம் பூவாய் பூக்குமே ஹோய்

கொத்துக் கொத்தா மல்லிகைப்பூ
கொண்டு வந்தேன் நான் உனக்கு
கொத்துக் கொத்தா மல்லிகைப்பூ

poovE poojai seiya vaa - pattu sElai

பாடல்: பூவே பூஜை செய்ய வா
திரைப்படம்: பட்டுச்சேலை
இசை: கங்கை அமரன்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & குழுவினர்

பூவே பூஜை செய்ய வா
வா...வா வா...வா வா
உனை பூபோல் நானும் அள்ள வா
வா...வா வா...வா வா
நெஞ்சில் மலையருவி பெருகுதே
இந்த இள மனது உருகுதே
மலைத்தேனே மானே வா...ஆ ஆ ஆ

பூவே பூஜை செய்ய வா
வா...வா வா...வா வா
உனை பூபோல் நானும் அள்ள வா
வா...வா வா...வா வா

காதல் பொங்கும் பூங்காவனம்
கண்ணே நீ என் பிருந்தாவனம்
மனதைக் கெடுத்த சகுந்தலையே
மயக்கம் எதனால் விளங்கலையே
இரவில் நானும் உறங்கலையே

பூவே பூஜை செய்ய வா
வா...வா வா...வா வா
உனை பூபோல் நானும் அள்ள வா
வா...வா வா...வா வா

ராதா ராதிகா நீ ஊர்வசி
நாளும் ஏறும் காதல் பசி
சரிதா வனிதா கலையரசி
தொடவா மெதுவா உனை உரசி
எனக்கு நீயே இளவரசி

பூவே பூஜை செய்ய வா
வா...வா வா...வா வா
உனை பூபோல் நானும் அள்ள வா
வா...வா வா...வா வா
நெஞ்சில் மலையருவி பெருகுதே
இந்த இள மனது உருகுதே
மலைத்தேனே மானே வா...ஆ ஆ ஆ

பூவே பூஜை செய்ய வா
வா...வா வா...வா வா
உனை பூபோல் நானும் அள்ள வா
வா...வா வா...வா வா