Sunday, December 18, 2011

raathiri nilaavil - sandhippu

பாடல்: ராத்திரி நிலாவில்
திரைப்படம்: சந்திப்பு
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.ஜானகி

ராத்திரி நிலாவில் ரகசிய கனாவில்
காதல் சங்கீதம்தான் நான் பாடவோ

ராத்திரி நிலாவில் ரகசிய கனாவில்
காதல் சங்கீதம்தான் நான் பாடவோ
ராகம் கெடாமல் தாளம் விடாமல்
துள்ளும் பொன்மானைப்போல் நான் ஆடவோ

ராத்திரி நிலாவில் ரகசிய கனாவில்
காதல் சங்கீதம்தான் நான் பாடவோ

சொந்தம் என்னும் சந்தம் சொல்லவோ
புது மெட்டு ஒன்று இட்டுக்கட்டவோ
மெல்லிசை தேவதை மேனிதான் தாமரை

பத்து வித பக்க மேளமோ
இவை சத்தமிட இன்ப கோலமோ
மோகமோ தேகமோ நான் தரும் தாகமோ
ஓசை உண்டாக ஆசை வண்டாக
ஆடும் இந்நாளிலே ஆனந்தமோ

ராத்திரி நிலாவில் ரகசிய கனாவில்
காதல் சங்கீதம்தான் நான் பாடவோ

நித்தம் நித்தம் இங்கு வரவோ
உங்கள் நெஞ்சங்களில் தங்கி விடவோ
நானொரு கீதமே யாரிதன் நாதமே

முத்து நவ ரத்தினம் இதோ
உடை மூடி வைத்த சித்திரம் இதோ
செவ்விதழ் பூநகை சேர்த்திடும் மேனகை
காலம் கொண்டாடும் கவிதை என்றாக
பாடும் சிங்காரமே நானல்லவோ

ராத்திரி நிலாவில் ரகசிய கனாவில்
காதல் சங்கீதம்தான் நான் பாடவோ

No comments: