Sunday, December 18, 2011

imayam kaNdEn - imayam

பாடல்: இமயம் கண்டேன்
திரைப்படம்: இமயம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.எஸ்.சசிரேகா

இமயம் கண்டேன்
இமயம் கண்டேன்
பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின்
பட்டுப்பூவை தொட்டுப்பார்த்தேன் சுகங்கள்
அழகு மிகு ரகங்கள் பெருமை மிகு மதங்கள்

பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின்
பட்டுப்பூவை தொட்டுப்பார்த்தேன் சுகங்கள்
அழகு மிகு ரகங்கள் பெருமை மிகு மதங்கள்

இயற்கை எனக்கு தந்த அழைப்பு
இந்த நதியோட்டாமே
ஏங்கும் இளமை தாங்கும் அழகு
வான வில் வண்ணமே
காதல் தேன் கிண்ணமே
பருவ மழை மேகம்
பனி படரும் தேகம்
இலைகளிலும் ராகம்
அதிக சுக மோகம்

இமயம் கண்டேன்
பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின்
பட்டுப்பூவை தொட்டுப்பார்த்தேன் சுகங்கள்
அழகு மிகு ரகங்கள் பெருமை மிகு மதங்கள்

நிலத்தின் செழிப்பு தேவன் விரிப்பு
நீல விழி பூக்களே
நெஞ்சில் எடுத்து மஞ்சம் வளர்த்து
கொஞ்சும் பொன் மீன்களே
வைர விண்மீன்களே
இதழில் ஒரு பாடல்
இடையில் ஒரு கூடல்
பனி மலையின் சூழல்
நடு நடுவில் ஊடல்
இமயம் கண்டேன்

பழத்தின் நடுவில் வடித்த இனிப்பு
அன்பு சுவை அல்லவா
பாதி விழியில் சேதி படித்தால்
ஞான கலை அல்லவா
மௌன நிலை அல்லவா
பழக ஒரு மாலை
இணைய ஒரு மாலை
நடனமிட சோலை
நல்லதொரு வேளை

இமயம் கண்டேன்
பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின்
பட்டுப்பூவை தொட்டுப்பார்த்தேன் சுகங்கள்
அழகு மிகு ரகங்கள் பெருமை மிகு மதங்கள்
அழகு மிகு ரகங்கள் பெருமை மிகு மதங்கள்

No comments: