Saturday, October 27, 2012

கோவில் மணி ஓசைதன்னை - கிழக்கே போகும் ரயில்

பாடல்: கோவில் மணி ஓசைதன்னை
திரைப்படம்: கிழக்கே போகும் ரயில்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி

கோவில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ பாஞ்சாலி...பாஞ்சாலி

கோவில் மணி ஓசைதன்னை செய்ததாரோ
அவர் என்ன பேரோ பரஞ்சோதி...பரஞ்சோதி

கோவில் மணி ஓசைதன்னை
கேட்டதாரோ இங்கு வந்ததாரோ
கன்னிப்பூவோ பிஞ்சுப்பூவோ
ஏழைக்குயில் கீதம் தரும் நாதம்
அது காற்றானதோ தூதானதோ

கோவில் மணி ஓசைதன்னை
செய்ததாரோ அவர் என்ன பேரோ
பாட்டுப்பாடும் கூட்டத்தாரோ
ஏழைக்குயில் கீதம் தரும் நாதம்
அது கொண்டாந்ததோ என்னை இங்கு

கோவில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ

பாடல் ஒரு கோடி செய்தேன்
கேட்டவர்க்கு ஞானம் இல்லை
ஆசைக்கிளியே வந்தாயே பண்ணோடு
நான் பிறந்த நாளில் இது நல்ல நாளே
சின்னச்சின்ன முல்லை கிளிப்பிள்ளை
என்னை வென்றாளம்மா

கோவில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ

ஊருக்கு போன பொண்ணு
உள்ளூரு செல்லக்கண்ணு
கோவில் மணி ஓசை கேட்டாளே வந்தாளே
பாவம் உந்தன் கச்சேரிக்கு பொண்ணு நானா
பாடும்வரை பாடு தாளம் போடு
அதை நீயே கேளு

கோவில் மணி ஓசைதன்னை செய்ததாரோ

என் மனது தாமரைப்பூ
உன் மனது முல்லை மொட்டு
காலம் வருமே நீ கூட பெண்ணாக

ஊரில் ஒரு பெண்ணா இல்லை தேடிப்பாரு
நல்ல பெண்ணைக் கண்டால் கொஞ்சம் சொல்லு
அது நீதானம்மா

கோவில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ...பாடுப்பாடும் கூட்டத்தாரோ
ஏழைக்குயில் கீதம் தரும் நாதம்
அது கொண்டாந்ததோ என்னை இங்கு
கோவில் மணி ஓசைதன்னை செய்ததாரோ

Saturday, October 13, 2012

மனசெல்லாம் மழையே - சகுனி

பாடல்: மனசெல்லாம் மழையே
திரைப்படம்: சகுனி
இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்
பாடியவர்கள்: சோனு நிகாம் & சைந்தவி

மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய்
என்னாகும் உயிரே...உயிரே
என் கண்ணில் வந்து நின்று என்னைப் பறித்தாய்
என்னாகும் உயிரே...உயிரே

இரவில் வந்தது சந்திரனா
என் அழகே  வந்தது உன் முகம்தான்
வெண்ணிலவோ வளர்ந்ததும் தேய்ந்திடுமே
உன் அழகோ தேய்ந்திடாத வெண்ணிலா

பகலில் இருப்பது சூரியனா
என் அழகே உன் இரு பார்வைகள்தான்
உன் இமைகள் போரிடும் ஆயுதம்தான்
என் உயிரே என்னை என்ன செய்கிறாய்

மழையே...மனம் உன்னாலே பூ பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே

வானில் போகும் பறவைகளாய்
நீயும் நானும் பிறந்திடலாம்
உலகையே...மறக்கலாம்
வேறு வேறு விண்வெளியில்
மாறி மாறி திரிந்திடலாம்
பறக்கலாம்...மிதக்கலாம்

காற்றாகி கை கோர்த்துப் போவோமே
முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சலாடுவோம்

கனவில் வாழ்வது சாத்தியமா
என் எதிரே நடப்பது மந்திரமா
கண் பார்க்கும் காட்சிகள் தந்திரமா
என் தேகம் எங்கு நீந்திப் போகுதோ

கனவில் வாழ்வது சாத்தியமே
என் கனவும் பலிப்பது நிச்சயமே
உன் விரலைப் பிடிப்பேன் இக்கணமே
உன் உருவம் என்னுள் என்றும் வாழுமே

மழையே...மனம் உன்னாலே பூ பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே

காதலாகி கரைந்து விட்டால்
காலம் நேரம் மறைந்திடுமே
வானிலை...மாறுமே
ஏழு வண்ண வானவில்லில்
நூறு வண்ணம் தோன்றிடுமே
யாவுமே...மாயமே

வெயிலோடு மழை வந்து தூறுமே
முகிலாகி அங்கும் ஊஞ்சலாடுவோம்

தரையில் விண்மீன் வருவதில்லை
வந்தாலும் கண் அதை பார்ப்பதில்லை
பார்த்தாலும் கை அதை தொடுவதில்லை
தொட்டாலோ என்ன ஆகும் என் மனம்

தரையில் விண்மீன் வருவதுண்டு
வந்தாலும் கண் அதை பார்ப்பதுண்டு
பார்த்தாலும் கை அதை தொடுவதுண்டு
தொட்டாலோ காதல் ஆகும் உன் மனம்

மழையே...மனம் உன்னாலே பூ பூக்குதே
மனசெல்லாம் மழையே




Monday, October 8, 2012

வேதம் நீ - கோவில் புறா

பாடல்: வேதம் நீ
திரைப்படம்: கோவில் புறா
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

வேதம் நீ...இனிய நாதம் நீ
வேதம் நீ...இனிய நாதம் நீ
நிலவு நீ...கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்

வேதம் நீ...இனிய நாதம் நீ
நிலவு நீ...கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்
வேதம் நீ...இனிய நாதம் நீ

கருணை மேவும் பூவிழிப் பார்வையில்
கவிதை இன்பம் காட்டுகிறாய்

கருணை மேவும் பூவிழிப் பார்வையில்
கவிதை இன்பம் காட்டுகிறாய்
இளைய தென்றல் காற்றினிலே...ஏ ஏ ஏ

இளைய தென்றல் காற்றினிலே
இனிய சந்தப் பாட்டினிலே
இளைய தென்றல் காற்றினிலே
இனிய சந்தப் பாட்டினிலே
எதிலும் உந்தன் நாதங்களே
நினைத்த பொருள் தரும்
நிரந்தர சுகம் தரும்

வேதம் நீ...இனிய நாதம் நீ
நிலவு நீ...கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்
வேதம் நீ...இனிய நாதம் நீ

அண்டம் பகிரண்டம் உனை அண்டும்படி வந்தாய்
அண்டம் பகிரண்டம் உனை அண்டும்படி வந்தாய்
தண்டை ஒலி ஜதி தருமோ கமல பாதம் சதிரிடுமோ
தண்டை ஒலி ஜதி தருமோ கமல பாதம் சதிரிடுமோ
மனமும் விழியும் தினமும் எழுதும் அழகே
மலையும் கடலும் நதியும் அடியுன் வடிவே

நெஞ்சம் இது தஞ்சம் என உனைத்தினம் நினைத்தது
நித்தம் ஒரு புத்தம் புது இசைத்தமிழ் வடித்தது
ஒருமுறை தரிசனமும் தருக
இசையில் உனது இதயம் இசையும்
மனம்...குணம்...அறிந்தவள்
குழலது சரியுது சரியுது
குறுநகை விரியுது விரியுது
விழிக்கருணை மழை அதில்
நனைய வரும் ஒரு மனம் பரவும்

வேதம் நீ...இனிய நாதம் நீ
நிலவு நீ...கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்

நிலவு நீ...கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்
வேதம் நீ...இனிய நாதம் நீ



காத்திருந்து காத்திருந்து - வைதேகி காத்திருந்தாள்

பாடல்: காத்திருந்து காத்திருந்து
திரைப்படம்: வைதேகி காத்திருந்தாள்
இசை: இளையராஜா
பாடியவர்: பி.ஜெயசந்திரன்

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்துவரை சேர்த்துவச்ச ஆசைகள் வேகுதடி
நீ இருந்து நான் அணைச்சா நிம்மதி ஆகுமடி

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி

முக்குளிச்சு நானெடுத்த முத்துச்சிப்பி நீதானே
முத்தெடுத்து நெஞ்சுக்குள்ள பத்திரமா வெச்சேனே
வெச்சதிப்ப காணாம நானே தேடுறேன்
ராத்திரியில் தூங்காம ராகம் பாடுறேன்
நான் படிக்கும் மோகனமே நான் படைச்ச சீதனமே
தேன் வடிச்ச பாத்திரமே தென்மதுர பூச்சரமே
கண்டது என்னாச்சு...கண்ணீரில் நின்னாச்சு

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி

நீரு நிலம் நாலு பக்கம் நான் திரும்பி பாத்தாலும்
அந்தப்பக்கம் இந்தப்பக்கம் அத்தனையும் நீயாகும்
நெஞ்சுக்குள்ள நீங்காம நீதான் வாழுற
நாடியிலே சூடேத்தி நீதான் வாட்டுற
ஆலையிட்ட செங்கரும்பா ஆட்டுகிற எம் மனச
யாரவிட்டு தூதுசொல்லி நான் அறிவேன் உம் மனச
உள்ளமும் புண்ணாச்சு...காரணம் பெண்ணாச்சு

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்துவரை சேர்த்துவச்ச ஆசைகள் வேகுதடி
நீ இருந்து நான் அணைச்சா நிம்மதி ஆகும

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடிடி

கோடைகால காற்றே - பன்னீர் புஷ்பங்கள்

பாடல்: கோடைகால காற்றே
திரைப்படம்: பன்னீர் புஷ்பங்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: மலேசியா வாசுதேவன்

கோடைகால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே
மனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசைபாடு
அதை கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும்
இவைகள் இளமாலை பூக்களே புதுச்சோலை பூக்களே
கோடைகால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே

வானில் போகும் மேகம் இங்கே யாரைத் தேடுதோ
வாசம் வீசும் பூவின் ராகம் யாரைப் பாடுதோ
தன் உணர்வுகளை மெல்லிசையாக
தன் உறவுகளை வந்து கூடாதோ
இது நாளும் கூடட்டும் சுகம் தேடி ஆடட்டும்

இவைகள் இளமாலை பூக்களே புதுச்சோலை பூக்களே
கோடைகால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே
கோடைகால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே

ஏதோ ஒன்றைத் தேடும் நெஞ்சம் இங்கே கண்டதே
ஏங்கும் கண்ணில் தோன்றும் இன்பம் இங்கே என்றதே
வெண்மலை அருவி பன்னீர் தூவி
பொன்மலை அழகின் சுகம் ஏற்றாதோ
இவை யாவும் பாடங்கள் இனிதான வேதங்கள்

இவைகள் இளமாலை பூக்களே புதுச்சோலை பூக்களே
கோடைகால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே
மனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசைபாடு
அதை கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும்
இவைகள் இளமாலை பூக்களே புதுச்சோலை பூக்களே
கோடைகால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே

நல்ல மனம் வாழ்க - ஒரு ஊதாப்பூ கண் சீமிட்டுகிறது

பாடல்: நல்ல மனம் வாழ்க
திரைப்படம்: ஒரு ஊதாப்பூ கண் சீமிட்டுகிறது
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்


நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ்போல் வான் மழைபோல்
சிறந்து என்றும் வாழ்க
நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க

பூவுலகின் லட்சியங்கள் பூபோன்றே வாடும்
பூவுலகின் லட்சியங்கள் பூபோன்றே வாடும்
தெய்வ சொர்க்க நிச்சயம்தான் திருமணமாய் கூடும்
பொருத்தமென்றால் புது பொருத்தம் பொருந்திவிட்ட ஜோடி
பொருத்தமென்றால் புது பொருத்தம் பொருந்திவிட்ட ஜோடி
நான் புலவனென்றால் பாடிடுவேன் கவிதை ஒரு கோடி
நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க

மணவாழ்க்கை அமைவதற்கோ மனைவி வாய்க்கவேண்டும்
மணவாழ்க்கை அமைவதற்கோ மனைவி வாய்க்கவேண்டும்
குலமகளாய் கிடைப்பதற்கோ கொடுத்து வைக்கவேண்டும்
அருமைகளும் பெருமைகளும் நிறைவதுதான் இன்பம்
அருமைகளும் பெருமைகளும் நிறைவதுதான் இன்பம்
நீ அத்தனையும் பெற்றுவிட்டாய் ஆனந்தமாய் வாழ்க

நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ்போல் வான் மழைபோல்
சிறந்து என்றும் வாழ்க
நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க

Sunday, October 7, 2012

நாயகன் அவன் ஒரு புறம் - ஒரு விடுகதை ஒரு தொடர்கதை

பாடல்: நாயகன் அவன் ஒரு புறம்
திரைப்படம்: ஒரு விடுகதை ஒரு தொடர்கதை
இசை: கங்கை அமரன்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகி

நாயகன் அவன் ஒரு புறம்
அவன் விழியில் மனைவி அழகு

நாயகன் அவன் ஒரு புறம்
அவன் விழியில் மனைவி அழகு

நாயகி அவள் மறு புறம்
அவள் வானில் இரண்டு நிலவு

நாயகன் அவன் ஒரு புறம்
அவன் விழியில் மனைவி அழகு

பூஜைக்கொரு புஷ்பம் வந்தது
புனிதம் என்று பேரைக் கொண்டது

தெய்வம் அதை சூடிக் கொண்டது
மாலையென தோளில் கொண்டது

பூவில் உள்ள தேனைக்கண்டு
ஒரு சோலை வண்டு அதை திருடிச்சென்றது

தலைவன் ஒரு கோயிலில்
அவன் தேவியோ தெரு வாசலில்

நாயகன் அவன் ஒரு புறம்
அவன் விழியில் மனைவி அழகு

நாயகி அவள் மறு புறம்
அவள் வானில் இரண்டு நிலவு

மானிடத்தில் மோகம் வந்தது
சீதைக்கதில் சோகம் வந்தது

யாரை இதில் குற்றம் சொல்வது
விதியின்வழி வாழ்க்கை செல்வது

போட்டுவைத்த கோடு தாண்டி
தன் வீடுதாண்டி அன்னப்பேடு சென்றது

மணக்கும் வரை பூக்கடை
மணம் மாறினால் அது சாக்கடை

நாயகன் அவன் ஒரு புறம்
அவன் விழியில் மனைவி அழகு

நாயகி அவள் மறு புறம்
அவள் வானில் இரண்டு நிலவு

நாயகன் அவன் ஒரு புறம்
அவன் விழியில் மனைவி அழகு









கனவு காணும் வாழ்க்கை - நீங்கள் கேட்டவை

பாடல்: கனவு காணும் வாழ்க்கை
திரைப்படம்: நீங்கள் கேட்டவை
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம் என்று
கரையைத் தேடும் ஓடங்கள்
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்

பிறக்கின்ற போதே...பிறக்கின்ற போதே
இறக்கின்ற தேதி இருக்கின்றதென்பது மெய்தானே
ஆசைகள் என்ன...ஆசைகள் என்ன
ஆணவம் என்ன உறவுகள் என்பதும் பொய்தானே
உடம்பு என்பது...உடம்பு என்பது
உண்மையில் என்ன கனவுகள் வாங்கும் பைதானே

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம் என்று
கரையைத் தேடும் ஓடங்கள்
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்

காலங்கள் மாறும்...காலங்கள் மாறும்
கோலங்கள் மாறும் வாலிபம் என்பது பொய் வேஷம்
தூக்கத்தில் பாதி...தூக்கத்தில் பாதி
ஏக்கத்தில் பாதி போனது போக எது மீதம்
பேதை மனிதனே...பேதை மனிதனே
கடமையை இன்றே செய்வதில்தானே ஆனந்தம்

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம் என்று
கரையைத் தேடும் ஓடங்கள்
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்