Friday, January 27, 2012

மலர்ந்தது ரோஜா - விஷக்கன்னி

பாடல்: மலர்ந்தது ரோஜா
திரைப்படம்: விஷக்கன்னி
இசை: விஜய கிருஷ்ணமூர்த்தி
பாடியவர்: வாணி ஜெயராம்

மலர்ந்தது ரோஜா தெரியுமா ராஜா
மலர்ந்தது ரோஜா தெரியுமா ராஜா
மங்கை பருவம் மயக்கும் மயங்கும்
முதல் பார்வையிலே உடல் மறக்கும்
உயிர் மறக்கும் இருவருக்கும் சுகம் பிறக்கும்
மலர்ந்தது ரோஜா தெரியுமா ராஜா

ரதிதேவன் காமன் நீதானே
ரசனையுள்ள ரசிகன் நீயே என் ஜோடி
நீ மன்மத லீலையின் பொருள் கூற வா

இங்கு ரதிதேவன் காமன் நீதானே
ரசனையுள்ள ரசிகன் நீயே என் ஜோடி
நீ மன்மத லீலையின்
பொருள் கூற வா
இனி நாளொரு ஜாடைகளே
நித்யானந்த சேவைகளே
இந்த இளமையின் ரூபம்
நான் தரும் சொர்க்கம்
வருவாயடா வடுவாயடா

மலர்ந்தது ரோஜா தெரியுமா ராஜா

உனக்காக ஒரு உள்ளம் மலர்ந்து
எண்ணமும் வளர்ந்து ஆசை மிகுந்து
மெய் மறந்து நீ தருவதைப் பெற
இங்கு தவம் செய்யுது
மனதில் இன்பத்தேன் துளிகள்
மலையில் பனி நீர் மணிகள்
நீ தொடுகின்ற நேரம்
சுடுகின்ற தேகம்
குளிர்கின்றதே குளிர்கின்றதே

மலர்ந்தது ரோஜா தெரியுமா ராஜா
மங்கை பருவம் மயக்கும் மயங்கும்
முதல் பார்வையிலே உடல் மறக்கும்
உயிர் மறக்கும் இருவருக்கும் சுகம் பிறக்கும்

மல்லிகை மலரெடுத்து - இளங்கேஸ்வரன்

பாடல்: மல்லிகை மலரெடுத்து
திரைப்படம்: இளங்கேஸ்வரன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: வாணி ஜெயராம்

மல்லிகை மலரெடுத்து மாறன் கணை தொடுக்க
மன்னவன் நினைவெடுத்து மங்கை மனம் துடிக்க
கிடைத்ததோ அவன் தரிசனம் இனித்ததோ ஓர் இள மனம்

மல்லிகை மலரெடுத்து மாறன் கணை தொடுக்க
மன்னவன் நினைவெடுத்து மங்கை மனம் துடிக்க
கிடைத்ததோ அவன் தரிசனம் இனித்ததோ ஓர் இள மனம்
தேவன் வடிவோ என் தெய்வம் இதுவோ
தையல் மனதில் ஓர் மையல் தருமோ
அவன் மணிக்கரம் எனை தழுவுமோ
இவள் மனக்குறை இனி தணியுமோ

மல்லிகை மலர் எடுத்து மாறன் கணை தொடுக்க
மன்னவன் நினைவெடுத்து மங்கை மனம் துடிக்க
கிடைத்ததோ அவன் தரிசனம் இனித்ததோ ஓர் இள மனம்

வனத்திலும் மனத்திலும் வசிப்பவன் வசப்படும்
வேளை நான் கண்டேன் சேரும் தோளை நான் கண்டேன்
வளைக்கரம் குலுங்கிட மதுக்குடம் ததும்பிட
பாவை நான் வந்தேன் ஏதோ தேவை நான் வந்தேன்
என் நெஞ்சில் தாபம் மிஞ்ச என் கண்கள் ரெண்டும் கெஞ்ச
என் நெஞ்சில் தாபம் மிஞ்ச என் கண்கள் ரெண்டும் கெஞ்ச
ஒரு மயக்கம் பிறக்க நடுக்கம் எடுக்க
மோகம் உருவாக இளம் தேகம் தனலாக
ஹா மோகம் உருவாக இளம் தேகம் தனலாக
அவன் விழிப்புனல் எனை நனைக்குமோ
உடல் பனிக்கடல் என குளிருமோ

கரங்களை தொடுப்பவன் சடைமுடி சரிப்பவன்
காட்டில் வந்தானோ காம கானம் கேட்டானோ
எனக்கொரு வரம் தர விரும்பிய சுகம் தர
நேரில் வந்தானோ வேண்டும் நேசம் தந்தானோ
என் அச்சம் நாணம் கொள்ள நான் இன்னும் என்ன சொல்ல
இனி நெருங்க நெருங்க அணைத்தும் வழங்க
நேரம் இனிதாக அந்தி மாலைப்பொழுதாக
நேரம் இனிதாக அந்தி மாலைப்பொழுதாக
அவன் மடித்தளம் நிழல் கொடுக்குமோ
இவள் நலம்பெற அருள் கிடைக்குமோ

மல்லிகை மலரெடுத்து மாறன் கணை தொடுக்க
மன்னவன் நினைவெடுத்து மங்கை மனம் துடிக்க
கிடைத்ததோ அவன் தரிசனம் இனித்ததோ ஓர் இள மனம்
 

யாரந்த பெண் அவளோ - சகாக்கள்

பாடல்: யாரந்த பெண் அவளோ
திரைப்படம்: சகாக்கள்
இசை: Sri.M.அழகப்பன் தயாரத்னம்
பாடியவர்: ஶ்ரீனிவாஸ்

யாரந்த பெண் அவளோ
ஊரென்ன பேரும் என்ன

யாரந்த பெண் அவளோ தெரியதே
ஊரென்ன பேரும் என்ன அறியேனே
யாரந்த பெண் அவளோ தெரியதே
ஊரென்ன பேரும் என்ன அறியேனே
மல்லிகையைப்போல மெல்ல சிரிப்பா
மெல்லிசையா பேசி நெஞ்சை பறிப்பா
கொஞ்சி கலப்பா

யாரந்த பெண் அவளோ தெரியதே
ஊரென்ன பேரும் என்ன அறியேனே

செக்க சிவந்த நிலவே
நீ இருந்தால் உச்சி வெயிலும் குளிரே
பக்கம் இருக்க வாடி
எனக்கு ஒரு சொர்க்கம் கிடைக்கும் தோழி
உலகம் நமக்கு பறந்து கிடக்கு
உனக்கும் எனக்கும் தனிமை எதுக்கு
உன் பார்வை எப்பொழுதும் என் காதல் புத்தகமே
பக்கங்கள் இருக்காது
உன் பேச்சு சலிக்காது உன் பேச்சு சலிக்காது

தெரியாதே...அறியேனே...

மெத்தை மடியில் படுத்து
உனக்கு ஒரு குட்டிக்கதையும் சொல்லவா
தத்தோம் திகிட தகதோம்
உனது விழி தாளம் போடும் அள்ளவா
தெறிச்ச விதையா நிலத்தில் விழுந்தேன்
எனக்கு மழையா எப்போது வருவாயோ
நீ என்னை திட்டுவதும் நான் வந்து ஒட்டுவதும்
எல்லைக்குள் இருக்காது
என் ஆசை குறையாது என் ஆசை குறையாது

தெரியாதே...அறியேனே
யாரந்த பெண் அவளோ தெரியதே
ஊரென்ன பேரும் என்ன அறியேனே
மல்லிகையைப்போல மெல்ல சிரிப்பா
மெல்லிசையா பேசி நெஞ்சை பறிப்பா
கொஞ்சி கலப்பா
யாரந்த பெண் அவளோ தெரியதே
ஊரென்ன பேரும் என்ன அறியேனே

இதுவரையில் நான் வாழ்ந்த வாழ்க்கை - சகாக்கள்

பாடல்: இதுவரையில் நான் வாழ்ந்த வாழ்க்கை
திரைப்படம்: சகாக்கள்
இசை: Sri.M.அழகப்பன் தயாரத்னம்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & K.S.சித்ரா

இதுவரையில் நான் வாழ்ந்த வாழ்க்கை காற்றில் போனதோ
ஒரு நொடியில் உன் வாசத்தோடு கூடி வந்ததோ
ஏனோ இங்கு நான் மாறினேன் என்னோடு தான் பேசினேன்
நீ இங்கு என் பாதியா தாலாட்டும் என் அன்னையா
பல கோடி கோடி இன்பம் தந்தவனே
விட்டுப்போகும் போது போகும் என்னுயிரே
இதுவரையில் நான் வாழ்ந்த வாழ்க்கை காற்றில் போனதோ
ஒரு நொடியில் உன் வாசத்தோடு கூடி வந்ததோ

நேற்றுவரைக்கும் காதல் என்பதை தவறென்று நினைத்தேனே
விழி வாசல்வரைக்கும் வந்த கனாவை நெஞ்சுக்குள் அடைத்தேனே
யாரென்று எதையும் பாராமல் என் தந்தையின் உயிர் காத்தாய்
இன்று எனக்கும்கூட தெரியாமல் வந்து இதயத்தில் கறை எடுத்தாய்
பல எண்ணத்தடைகளை தாண்டி நான் உன்னுள் முடிகிற வானம்
பல எண்ணத்தடைகளை தாண்டி நான் உன்னுள் முடிகிற வானம்
நீ இல்லாமல் செல்லாது வாழும் மணித்துளி ஒவ்வொன்றும்

பல கோடி கோடி இன்பம் தந்தவனே
விட்டுப்போகும் போது போகும் என்னுயிரே

இதுவரையில் நான் வாழ்ந்த வாழ்க்கை காற்றில் போனதோ
ஒரு நொடியில் உன் வாசத்தோடு கூடி வந்ததோ

நண்பர்கள் பேசும் காதலைக்கூட வேடிக்கையாய் நினைத்தேன்
இன்று உன்விழி ஜாடையின் அர்த்தங்கள் தேடி உலகத்தை மறந்துவிட்டேன்
சாலைக்கும் தெருவுக்கும் வீசிய காற்றை மூங்கிலுக்குள் அடைத்தாய்
உன் சடுகுடு பேச்சை கேட்பதற்காக மறுபடி பிறக்க வைத்தாய்
விளையாடித்திரிந்தவன் என்னை களவாடிப்போனவள் நீயா
விளையாடித்திரிந்தவன் என்னை களவாடிப்போனவள் நீயா
அட எப்போது என் வீடு வருவாய் என்பதை சொல்வாயா

பல கோடி கோடி இன்பம் தந்தவளே
விட்டுப்போகும் போது போகும் என்னுயிரே

இதுவரையில் நான் வாழ்ந்த வாழ்க்கை காற்றில் போனதோ
ஒரு நொடியில் உன் வாசத்தோடு கூடி வந்ததோ
 

உந்தன் வார்த்தையில் - பேசு

பாடல்: உந்தன் வார்த்தையில்
திரைப்படம்: பேசு
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: கிருஷ் & ராஜலக்ஷ்மி

உந்தன் வார்த்தையில் எந்தன் கவிதைகள்
என்ன காரணம்...ஓ ஓ ஓ ஹோ
உந்தன் கண்களில் எந்தன் பார்வைகள்
என்ன காரணம்...ஓ ஓ ஓ ஹோ
ஒரு பட்டாம்பூச்சி கூட்டம்
என்னை என்னை மெல்ல மிரட்டுதே மிரட்டுதே
ஒரு சுராவளிக்காற்று வந்து வந்து குடை பிடிக்குதே
ஓ...ஓ...ஓ...ஓ ஹோ இதுதானோ காதல் கலவரம்
ஓ...ஓ...ஓ...ஓ ஹோ உனக்குள்ளே என்ன நிலவரம்
ஓ...ஓ...ஓ...ஓ ஹோ

ஓடை மீன் போலே நீந்துதே ஆசை
ஆசையை சொல்லத்தானே பாஷை இல்லையே
ஆசையை சொல்லும் பாஷைகள் இருந்தும்
ஓசைகள் மட்டும் ஏனோ மௌனம் ஆனதே
அருகினில் இருந்தும் நான் உன்னை அனுகவே இல்லை
தொலைவினில் இருந்தும் நீ என்னைத் தொடர்வதே தொல்லை
பூமிக்கு வெளியே போகின்ற வழியை
காதல்தான் இப்பொழுது திறக்கிறதே

பகலெல்லாம் கனவு கனவெல்லாம் நிலவு
நிலவெல்லாம் உன் நிழல்தான் தெரிகிறதே
தலைமேலே பூமி தரைபோலே வானம்
காற்றெல்லாம் வர்ணமாக ஜொளிக்கிறதே
புதுவித அலைகள் கண்முன்னே சுழலுதே மெதுவாய்
பொய்களும் கூட இப்போதான் பிடிக்குதே பொதுவாய்
காதலின் கணக்கு கண்ணுக்குள் இருக்கு
விடைதேடி தானே காதல் விரைகிறதே

உந்தன் வார்த்தையில் எந்தன் கவிதைகள்
என்ன காரணம்...ஓ ஓ ஓ ஹோ
உந்தன் கண்களில் எந்தன் பார்வைகள்
என்ன காரணம்...ஓ ஓ ஓ ஹோ
ஒரு பட்டாம்பூச்சி கூட்டம்
என்னை என்னை மெல்ல மிரட்டுதே மிரட்டுதே
ஒரு சுராவளிக்காற்று வந்து வந்து குடை பிடிக்குதே
ஓ...ஓ...ஓ...ஓ ஹோ இதுதானோ காதல் கலவரம்
ஓ...ஓ...ஓ...ஓ ஹோ உனக்குள்ளே என்ன நிலவரம்
ஓ...ஓ...ஓ...ஓ ஹோ

முத்தங்கள் கொடுத்து என்னை கொல்லாதே - எப்படி மனசுக்குள் வந்தாய்

பாடல்: முத்தங்கள் கொடுத்து என்னை கொல்லாதே
திரைப்படம்: எப்படி மனசுக்குள் வந்தாய்
இசை: A.J.டேனியல்
பாடியவர்கள்: பாம்பே ஜெயஶ்ரீ, உன்னிமேனன் & ஜெய்கீதா

ஏய்...முத்தங்கள் கொடுத்து என்னை கொல்லாதே
வெட்கங்கள் கொடுத்து என்னை வெல்லாதே...சீ

முத்தங்கள் கொடுத்து என்னை கொல்லாதே
வெட்கங்கள் கொடுத்து என்னை வெல்லாதே
முத்தங்கள் கொடுத்து என்னை கொல்லாதே
வெட்கங்கள் கொடுத்து என்னை வெல்லாதே

யாரடா கண்ணா உன்னை செய்தான்
உயிர் தந்து என்னை பழியை தீர்த்தான்
யாரடா கண்ணா உன்னை செய்தான்
உயிர் தந்து என்னை பழியை தீர்த்தான்

முத்தங்கள் கொடுத்து என்னை கொல்லாதே
வெட்கங்கள் கொடுத்து என்னை வெல்லாதே
முத்தங்கள் கொடுத்து என்னை கொல்லாதே
வெட்கங்கள் கொடுத்து என்னை வெல்லாதே

என் முதுகினில் பட்டுவிட்ட மூச்சுக்காற்றை
வாழ்வதற்கு சுவாசக்காற்றாய் மாற்றிக்கொள்வேன்
நீ கண்விழித்துப் பார்க்கும்போது சேவை செய்து
வாழ்க்கையினை உன்னடிமை ஆக்கிக்கொள்வேன்
என் ரகசியங்கள் உன் உலகத்திலே
புத்தகங்கள் போல் குவிந்திருக்கும்
புத்தகத்திலே கடைசிப் பக்கம்
ரகசியமாய் ஏனோ தொலைந்திருக்கும்

காற்றோடு காற்றோடு ஒரு வார்த்தை
காதோடு காதோடு சொல்லி வைப்பேன்
கண்ணீரே சிந்தாத வாழ்க்கை தந்தே
காதலை கொள்முதல் செய்து கொள்வேன்

யாரடா கண்ணா உன்னை செய்தான்
உயிர் தந்து என்னை பழியை தீர்த்தான்
யாரடா கண்ணா உன்னை செய்தான்
உயிர் தந்து என்னை பழியை தீர்த்தான்

முத்தங்கள் கொடுத்து என்னை கொல்லாதே
வெட்கங்கள் கொடுத்து என்னை வெல்லாதே
முத்தங்கள் கொடுத்து என்னை கொல்லாதே
வெட்கங்கள் கொடுத்து என்னை வெல்லாதே

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
என் கனவினில் அப்போதே
வந்துவிட்டாய் வந்துவிட்டாய்
என் உயிரினில் இப்போதே...ஹே

அதிகாலையில் வீட்டுப்பக்கம் வந்து சென்றாய் என்று
ரோஜாக்கூட்டம் சொன்னவுடன் வெட்கம் கொண்டேன்
என் கனவினில் ஒரு நொடி வந்து சென்றாய்
என் தூக்கத்தை தொலைத்திட்ட மாயம் கண்டேன்
தலையணைகள் கோவித்துக்கொள்ளும்
உன்னை அணைத்து நான் தூங்க
தாயின் மடி இனி எனக்கு மறந்துவிடும் நீ இருக்க
உன் நண்பனின் வீட்டிற்கு வரும் போது
அவன் தங்கையின் புத்தகம் கேட்டு வருவேன்
நீ போகும் கல்யாண வீடு தேடி
பக்கத்தில் ஹாய் சொல்லி வந்து அமர்வேன்

யாரடி பெண்ணே உன்னை செய்தான்
உயிர் தந்து என்னை பழியை தீர்த்தான்
யாரடி பெண்ணே உன்னை செய்தான்
உயிர் தந்து என்னை பழியை தீர்த்தான்

முத்தங்கள் கொடுத்து என்னை கொல்லாதே
வெட்கங்கள் தொலைத்து என்னை வெல்லாதே
முத்தங்கள் கொடுத்து என்னை கொல்லாதே
வெட்கங்கள் தொலைத்து என்னை வெல்லாதே

இதழில் கதை எழுத வேண்டும் - நாங்க

பாடல்: இதழில் கதை எழுத வேண்டும்
திரைப்படம்: நாங்க
இசை: பால பாரதி
பாடியவர்கள்: கார்த்திக் & சின்மயி

இதழில் கதை எழுத வேண்டும்
இரு இமையில் சுகம் பருக வேண்டும்
சிறு இடையில் நகம் வரைய வேண்டும்
என் அன்பே

உனக்கே உடல் எழுத வேண்டும்
நான் மெழுகாய் தினம் உருக வேண்டும்
மெய் மறந்து தன்னை இழக்க வேண்டும்
என் உயிரே

சில உறவுகள் சில தவறுகள்
சில உறவுகள் அதிசய ராகம்
சில தவறுகள் கலந்தது மோகம்
இது முறையோ
இளமையிலே தனிமையிலே
முதல்முறை அனுபவம்
பழகிட பழகிட

இதழில் கதை எழுத வேண்டும்
இரு இமையில் சுகம் பருக வேண்டும்
சிறு இடையில் நகம் வரைய வேண்டும்
என் அன்பே

யார் விரல் முதலில் படுமென்று
யார் இதழ் முதலில் சுடுமென்று
ஆசைகள் கேட்குதே
ஆயிரம் தாகம் தணியென்று

இரவுகள் இங்கே நிலவில்லை
இருவரில் யாரும் தடையில்லை
உறவிலே கலந்தபின்
இலக்கணம் ஒன்றும் இதற்கில்லை

வேர்வைகள் இங்கே போர்வைகள் ஆகும்
இதழ் ஈரத்தாலே இரு மூச்சு காயும்
உறவாய் உறையாடிடு
உருமாறிடு தடுமாறிடு
தடம் மாறிடு

மூச்சிலே ஏதோ அனல் பாய
மோகமா என்றே பதில் தேட
மெல்லவே மெல்லவே
மெல்லிசை மேலே அலைமோத

மூங்கிலின் உள்ளே இசை தூங்க
முன்பனி தென்றல் அதை தீண்ட
என்னவோ என்னவோ
என் மனம் எங்கும் தடுமாற

இது என்ன பாவம் கரை தாண்டும் நேரம்
கரை தாண்டும் போது முறை மாறக்கூடும்
மலர்த்தேன் மகரந்ததேன்
மலராததேன் மயங்காததேன்
மனம் சாய்ந்ததேன்

இதழில் கதை எழுத வேண்டும்
இரு இமையில் சுகம் பருக வேண்டும்
சிறு இடையில் நகம் வரைய வேண்டும்
என் அன்பே

உனக்கே உடல் எழுத வேண்டும்
நான் மெழுகாய் தினம் உருக வேண்டும்
மெய் மறந்து தன்னை இழக்க வேண்டும்
என் உயிரே

சில உறவுகள் சில தவறுகள்
சில உறவுகள் அதிசய ராகம்
சில தவறுகள் கலந்தது மோகம்
இது முறையோ
இளமையிலே தனிமையிலே
முதல்முறை அனுபவம்
பழகிட பழகிட

முத்தமிழே முத்தமிழே - நாங்க

பாடல்: முத்தமிழே முத்தமிழே
திரைப்படம்: நாங்க
இசை: பால பாரதி
பாடியவர்கள்: ரவி & அனிதா சுரேஷ்

முத்தமிழே முத்தமிழே நீ வருவாயா
முத்த இதழ் முடியும்வரை உனை தருவாயா
நான் உன்னை சந்தித்தேன் அட அந்த கணமே
நான் என்னை சந்தித்தேன் தினமே
காற்றே கொஞ்சம் நில்லு காதல் உலகம் செல்லு
இரு காதல் நெஞ்சின் கதையை சொல்லு
முத்தமிழே முத்தமிழே நீ வருவாயா

ஸ்வரங்களில் உன் முகம் சிரிக்க
ஸ்ருதி லயம் எதிலும் நீ வசிக்க
எந்தன் பாடலில் உந்தன் பேர் வந்து
சுகமாய் வார்த்தைகள் படிக்க

அபிநயம் இமைகளில் முடிக்க
அருகினில் அமர்ந்திட துடிக்க
எப்போதும் போல இப்போது இல்லை
இளமையும் விரதங்கள் இருக்க

உன் அங்கம் தங்கம் என்பேனே
உன் அழகை பருக வந்தேனே
பூவோ சம்மதம் ஏன் காற்றோ தாமதம்
அட ஏனோ ஏங்கினேன் நான்
முத்தமிழே முத்தமிழே நீ வருவாயா

இமைகளில் விழிகளும் சிவக்க
இதழ்களின் இனங்களும் வெளுக்க
நாணமும் வந்து நாதமும் மீட்ட
நெஞ்சமும் விழுந்தது துடிக்க

முக்கனி அருகினில் இருக்க
முதல்கனி அதை மெல்ல ருசிக்க
சங்கீதம் இல்லா சத்தங்களோடு
சரசமும் இரவினில் நடக்க

இரு நெஞ்சம் நெஞ்சம் நீங்காதே
இதழில் தேனை மிஞ்சாதே
இவளா கேட்கிறாள் இதை இவளே தருகிறாள்
தினம் சுகமாய் தோற்கிறாள் வா

முத்தமிழே முத்தமிழே நான் வருவேனே
முத்த இதழ் முடியுவரை எனை தருவேனே
நான் உன்னை சந்தித்தேன் அட அந்த கணமே
நான் என்னை சந்தித்தேன் தினமே
காற்றே கொஞ்சம் நில்லு காதல் உலகம் செல்லு
இரு காதல் நெஞ்சின் கதையை சொல்லு
முத்தமிழே முத்தமிழே நீ வருவாயா

எனது நெஞ்சிலே இருப்பதென்னவோ - நாங்க

பாடல்: எனது நெஞ்சிலே இருப்பதென்னவோ
திரைப்படம்: நாங்க
இசை: பால பாரதி
பாடியவர்கள்: ஹரிசரண் & ஷைலஜா சுப்ரமணியன்

எனது நெஞ்சிலே இருப்பதென்னவோ
எனக்கு சொல்லவே வா
எனது கண்ணிலே எழுதியுள்ளதே
படித்து பார்க்கவே வா
தூங்காமல் கிடந்தேன் இரவெல்லாம் நடந்தேன்
பொல்லாத காதல் மன நோயால்
நான் கூட இங்கே முன் போல இல்லை
நான் கொண்ட காதல் என்னை வதைக்குதே

எனது நெஞ்சிலே இருப்பதென்னவோ
எனக்கு சொல்லவே வா

சினிமாவில் கண்ட காதல் நிஜமா இங்கு மாறாதா
உன்னோடு எந்தன் கைகள் ஒன்றாகாதா
நேராக சென்ற என்னை உன்னைச்சுற்ற வைத்தாயே
எனைவிட்டு வேறு எங்கும் நீ செல்வாயா
நிலம்போல உனை ஏந்தி நானும் தினம் வாழ்வேனே
வான்போல நிறம் தந்து நானும் உன்னில் வாழ்வேனே
ஆசைகள் தீருமா உயிர் சேரும் நாள் வருமா

உனது நெஞ்சிலே இருப்பதென்னவோ
உனக்கு சொல்லுவேன் நான்

விழியோரம் ஈரம் வந்து ரகசியமாக கசிகிறதே
நம் காதல் அழியாதென்று நீ சொல்வாயா
உன் மூச்சுக்காற்றில் நானும் சுவாசம் வாங்கி வாழ்கின்றேன்
நீ இல்லை என்றால் இங்கே நான் வாழ்வேனா
விடிந்தாலும் விடியாத இரவைப்போல நம் காதல்
புரிந்தாலும் பிரியாமல் மூளைக்குள்ளே ஒரு மோதல்
உள்ளங்கை ரேகைபோல் என் வாழ்க்கை உன்னிடமே

எனது நெஞ்சிலே இருப்பதென்னவோ
எனக்கு சொல்லவே வா
எனது கண்ணிலே எழுதியுள்ளதே
படித்து பார்க்கவே வா
தூங்காமல் கிடந்தேன் இரவெல்லாம் நடந்தேன்
பொல்லாத காதல் மன நோயால்
நான் கூட இங்கே முன் போல இல்லை
நான் கொண்ட காதல் என்னை வதைக்குதே

எனது நெஞ்சிலே இருப்பதென்னவோ
எனக்கு சொல்லவே வா

எவன் இவன் இவன் - உதயன்

பாடல்: எவன் இவன் இவன்
திரைப்படம்: உதயன்
இசை: மணிகாந்த் கத்ரி
பாடியவர்: ஷ்ருதி ஹாசன்

எவன் இவன் இவன் ரகசிய காதலன்
I wanna know...I wanna know
எவன் இவன் இவன் அழகிய ராவணன்
I wanna know...I wanna know
எவன் இவன் இவன் சிரிக்கிற பாலகன்
I wanna know...I wanna know
எவன் இவன் இவன் குளிர்கிற சூரியன்
I wanna know...I wanna know

கொஞ்சும் கோபக்காரா கொல்லும் பார்வையாலே
என்னை மேயாதே
வெட்கம் மூட்டியே வெப்பம் பூக்கக்கூடும்
என்னை தீண்டாதே
கள்ளம் செய்யவேணும் பொய்யும் பேசிடவேணும்
எதுவும் மறைக்காதே
உன்னை சேரும்போது பெண்மை தீர்கிறபோது
உயிரும் பிரியாதோ
சிறு புன்னகை பூத்திட வேண்டாம்
பொய்யொரு பார்வை போதும்
அடடா திருடா அழகா கருடா நிழலாய் வாராய் ஓ

எவன் இவன் இவன் ரகசிய காதலன்
I wanna know...know...know
எவன் இவன் இவன் அழகிய ராவணன்
I wanna know...know...know
எவன் இவன் இவன் சிரிக்கிற பாலகன்
I wanna know I wanna...I wanna
எவன் இவன் இவன் குளிர்கிற சூரியன்
I wanna know

இது இரவின் மிச்ச கனவா
பகலின் மொத்த நிஜமா
கனவோ நிஜவோ தெரியாதே
நீ பனியில் புதைந்த அனலா
வெயிலில் கலந்த குளிரா
அனலோ குளிரோ தெரியாதே
வருடிச்செல்லும் மென்பனி காற்றில்
என் மௌனம் மெல்ல கலைந்தேனே
நீ விரும்பி கேட்டு திரும்பி பார்த்தாய்
என் உயிர் மொத்தம் இழந்தேனே

I wanna know...I wanna know
I wanna know...I wanna know
அடடா திருடா...எனை மேயாதே
அழகா கருடா...எனை தீண்டாதே
வருடும் குருடா...எதையும் மறைக்காதே
உயிரும் பிரியாதோ...உயிரும் பிரியாதோ

இது உலகின் மொத்த சுகமா
உயிரின் உச்ச ரணமா
சுகமோ ரணமோ தெரியாதே
நீ குறுக தரித்த குரலா
குரலில் பொதிந்த பொருளா
குரலோ பொருளோ தெரியாதே
விலகி செல்லும் ஒரு நொடி பொழுதை
நான் விசனம் கொண்டு கழித்தேனே
நீ நெருங்கி வந்து இறுக்கி அணைக்க
மரணம் வென்று ஜெயிப்பேனே

கொஞ்சும் கோபக்காரா கொல்லும் பார்வையாலே
என்னை மேயாதே
வெட்கம் மூட்டியே வெப்பம் பூக்கக்கூடும்
என்னை தீண்டாதே
கள்ளம் செய்யவேணும் பொய்யும் பேசிடவேணும்
எதுவும் மறைக்காதே
உன்னை சேரும்போது பெண்மை தீர்கிறபோது
உயிரும் பிரியாதோ
சிறு புன்னகை பூத்திட வேண்டாம்
பொய்யொரு பார்வை போதும்
அடடா திருடா அழகா கருடா நிழலாய் வாராய் ஓ

எவன் இவன் இவன் ரகசிய காதலன்
I wanna know...know...know
எவன் இவன் இவன் அழகிய ராவணன்
I wanna know...know...know
எவன் இவன் இவன் சிரிக்கிற பாலகன்
I wanna know I wanna...I wanna
எவன் இவன் இவன் குளிர்கிற சூரியன்
I wanna know

மழையுதிர் காலம் - எத்தன்

பாடல்: மழையுதிர் காலம்
திரைப்படம்: எத்தன்
இசை: தாஜ்நூர்
பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ் & சைந்தவி

மழையுதிர் காலம் மழையுதிர் காலம் நெஞ்சில் தெரிகிறதே
மனசுக்குள் ஏதோ மனசுக்குள் ஏதோ மின்னல் அடிக்கிறதே
பனியின் துளிகள் விழும்போது இலைகள் அறியாதே
உன் முகம் பார்த்து உன்னுடன் நடந்தால் தூரம் குறைகிறதே
வார்த்தை சொல்ல துடிப்பதை உன் பார்வை சொல்கிறதே
மௌனம் போலவே ஒரு மொழிதான் ஏதடி
மழையுதிர் காலம் மழையுதிர் காலம் நெஞ்சில் தெரிகிறதே

எத்தனையோ பயணங்கள் வந்தது போனது
இதுபோல் பயணமில்லை
என்னை விட்டுத்தள்ளி நின்று என்னை நானே பார்க்கிறேன்
பரவசம் குறையவில்லை
கத்திமேல் நடக்கும் மாயம் இந்த காதலில் நடக்கும்
இங்கு வலிகளும் இனித்திடுமே
புத்தியினை குழப்பும் ஆனால் மனதுக்கு பிடிக்கும்
அது மறுபடி குழப்பிடுமே
காதல் அது பொல்லாதது கொல்லாமலே கொல்லும் அது
கூச்சம் நாச்சம் இல்லாதது ஐய்யோ ஐய்யோ

மழையுதிர் காலம் மழையுதிர் காலம் நெஞ்சில் தெரிகிறதே
மனசுக்குள் ஏதோ மனசுக்குள் ஏதோ மின்னல் அடிக்கிறதே

சின்னதொரு புன்னகை என்னை என்ன பண்ணுது
எனக்கே புரியவில்லை
புயல் வந்த படகென புலன்களும் துடிக்குது
கரையேற தெரியவில்லை
கண்ணில் ஒரு கனவு விடிந்தால் அது கனிந்திடும் தெரியுது
ஆனால் மனம் நம்பிவிட மறுக்கிறது
ரெண்டும்கெட்ட வயசு மெதுவாய் ஒரு தூண்டிலை போடுது
மனசும் அதில் மாட்டிக்கிட்டு முழிக்கிறது
பெண்ணே நாளை என்ன நடக்கும்
உன்னை என்னை காலம் இணைக்கும்
பெண்ணே நாளை என்ன நடக்கும்
உன்னை என்னை

மழையுதிர் காலம் மழையுதிர் காலம் நெஞ்சில் தெரிகிறதே
மனசுக்குள் ஏதோ மனசுக்குள் ஏதோ மின்னல் அடிக்கிறதே
வார்த்தை சொல்ல துடிப்பதை உன் பார்வை சொல்கிறதே
மௌனம் போலவே ஒரு மொழிதான் ஏதடி

மழையுதிர் காலம் மழையுதிர் காலம் நெஞ்சில் தெரிகிறதே
மனசுக்குள் ஏதோ மனசுக்குள் ஏதோ மின்னல் அடிக்கிறதே

உன்னை விரும்பி விரும்பி - கருங்காலி

பாடல்: உன்னை விரும்பி விரும்பி
திரைப்படம்: கருங்காலி
இசை: ஶ்ரீகாந்த் தேவா
பாடியவர்கள்: நரேஷ் ஐயர் & பிரியதர்ஷினி

உன்னை விரும்பி விரும்பி வருவேனே
உன் நிழலாய் நிழலாய் தொடர்வேனே
உன் நினைவில் நினைவில் அலைவேனே
உன் அழகில் தொலைவேனே

உன் சின்னச்சின்ன அசைவுகள் ரசித்தேன்
உன் அன்பைக்கண்டு அன்பே நான் வியந்தேன்
உன் முகம் கொஞ்சம் சோர்ந்தால் சோர்வேன்
உன் இதழது மலர்ந்தால் மலர்வேன்
இனி நீயின்றி நானில்லையே
இனி நானின்றி நீயில்லையே

உன்னை விரும்பி விரும்பி வருவேனே
உன் நிழலாய் நிழலாய் தொடர்வேனே
உன் நினைவில் நினைவில் அலைவேனே
உன் அழகில் தொலைவேனே

என்னைக்கண்டு கண்டு காதல்கொண்டு கொண்டு
கொஞ்சிக் கொஞ்சி என்னை அள்ளி செல்கிறாய்
மூச்சுக்காற்றில் காற்றில் நெஞ்சுக்குள்ளே உள்ளே
என் உயிரைக் காயம் நீயும் செய்கிறாய்
மறுபடியும் மறுபடியும் உனக்காய் பிறப்பேனே
ஓஹ் ஓஹ் என் மனதில் என் மனதில் உன்னை சுமப்பேனே

உன் சின்னச்சின்ன அசைவுகள் ரசித்தேன்
உன் அன்பைக்கண்டு அன்பே நான் வியந்தேன்
உன் முகம் கொஞ்சம் சோர்ந்தால் சோர்வேன்
உன் இதழது மலர்ந்தால் மலர்வேன்
இனி நீயின்றி நானில்லையே
இனி நானின்றி நீயில்லையே

ஹோ தடையம் இன்றி இன்றி திருடிச்சென்றாய் சென்றாய்
இன்பம் அதன் எல்லை எல்லை எல்லைக்கே
உருவம் இன்றி இன்றி உரசிச் சென்றாய் சென்றாய்
காதல் அதை நெஞ்சில் நெஞ்சில் வளர்த்தாய்
ஹோ ஒரு நொடியும் ஒரு நொடியும் பிரிய மனம் இல்லையே
ஹோ சில நொடிகள் சில நொடிகள் வாழ்ந்தால் போதும் அன்பே

உன்னை விரும்பி விரும்பி வருவேனே
உன் நிழலாய் நிழலாய் தொடர்வேனே
உன் நினைவில் நினைவில் அலைவேனே
உன் அன்பால் தொலைவேனே

உன் சின்னச்சின்ன அசைவுகள் ரசித்தேன்
உன் அன்பைக்கண்டு அன்பே நான் வியந்தேன்
உன் முகம் கொஞ்சம் சோர்ந்தால் சோர்வேன்
உன் இதழது மலர்ந்தால் மலர்வேன்
உன் அழகில் தொலைந்தேனே

தென்றலே தென்றலே - இளமை

பாடல்: தென்றலே தென்றலே தேடினேன் வா
திரைப்படம்: இளமை
இசை: கங்கை அமரன்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், எஸ்.என்.சுரேந்தர்,
எஸ்.பி.ஷைலஜா & பி.எஸ்.சசிரேகா?

தென்றலே தென்றலே தேடினேன் வா
வாலிபம் வந்ததும் வாடினேன் வா
தென்றலே தென்றலே தேடினேன் வா
வாலிபம் வந்ததும் வாடினேன் வா
உன் கண்ணுக்குள் ஏன் இந்த வெப்பங்கள்
என் நெஞ்சுக்குள் பூ அள்ளி கொட்டுங்கள்
தென்றலே தென்றலே தேடினேன் வா
வாலிபம் வந்ததும் வாடினேன் வா

ஏனோ பருவம் வந்தது
உனை யார் பழக சொன்னது
ஆஹா பறவை வந்தது
மரமா கடிதம் போட்டது
பெண்மை வயசு வந்தது
துணை யார் வருகவென்றது
ஆஹா நதியும் வந்தது
கடலா கண் அடித்தது
உனையே நினைத்தேன்
உயிரை வெறுத்தேன்
நதியாய் இளைத்தேன்
நகமும் கருத்தேன்
நதியே உனக்கும்
நடுக்கம் ஏனோ

தென்றலே தென்றலே தேடினேன் வா
வாலிபம் வந்ததும் வாடினேன் வா
உன் கண்ணுக்குள் ஏன் இந்த வெப்பங்கள்
என் நெஞ்சுக்குள் பூ அள்ளி கொட்டுங்கள்
தென்றலே தென்றலே தேடினேன் வா
வாலிபம் வந்ததும் வாடினேன் வா

ஆஹா புதிய வெள்ளமே
வா வா அன்புடைக்க வா
நீயோ அழகு ராஜ்ஜியம்
நாளும் படையெடுக்க வா
வா வா காமன் தந்தியே
நீயும் கனி கிடக்கு வா
ஆசை மனது போலவே
நானும் மடை திறக்கவா
இளமை மயக்கம்
இதமாய் இருக்கும்
இருக்கும் வரைக்கும்
இதயம் சுரக்கும்
உயிரை கசக்கும்
நெருக்கம் இன்பம்

தென்றலே தென்றலே தேடினேன் வா
வாலிபம் வந்ததும் வாடினேன் வா
தென்றலே தென்றலே தேடினேன் வா
வாலிபம் வந்ததும் வாடினேன் வா
உன் கண்ணுக்குள் ஏன் இந்த வெப்பங்கள்
என் நெஞ்சுக்குள் பூ அள்ளி கொட்டுங்கள்
தென்றலே தென்றலே தேடினேன் வா
வாலிபம் வந்ததும் வாடினேன் வா

வானும் மண்ணும் மறையாதோ - நான் சிவனாகிறேன்

பாடல்: வானும் மண்ணும் மறையாதோ
திரைப்படம்: நான் சிவனாகிறேன்
இசை: K.S.மனோஜ்
பாடியவர்கள்: பிரசன்னா & மனோஜ்

வானும் மண்ணும் மறையாதோ
நிலவும் நீயும் போதாதோ
வார்த்தை ஒன்றும் பேசாமல்
விரல்கள் பேசி செல்லாதோ

வானும் மண்ணும் மறையாதோ
நிலவும் நீயும் போதாதோ
வார்த்தை ஒன்றும் பேசாமல்
விரல்கள் பேசி செல்லாதோ

உணர்வு மழைகள் இங்கு பொழிகிறதே
உயிரும் ததும்பி வந்து சிரிக்கிறதே
உலகை ஆள என்னை அழைக்கிறதே
இறையாய் என்னை மாற்றியதாரோ

உணர்வு மழைகள் இங்கு பொழிகிறதே
உயிரும் ததும்பி வந்து சிரிக்கிறதே
உலகை ஆள என்னை அழைக்கிறதே
இறையாய் என்னை மாற்றியதாரோ

வானும் மண்ணும் மறையாதோ
நிலவும் நீயும் போதாதோ
வார்த்தை ஒன்றும் பேசாமல்
விரல்கள் பேசி செல்லாதோ

இரவான பிறகும் கூட
வான வில்லும் தெரிகிறதே
வண்ணங்கள் கலையும் போதே வரியே
கரை வந்த பிறகும் கூட
அலைகள் என்னை தொடர்கிறதே
உன் பின்னால் எந்தன் கால்கள் வருதே
தவிக்கிறதே கண்ணும் சிவக்கிறதே
இது ஒரு மயக்கமும் தருகிறதே
துடிக்கிறதே நெஞ்சும் துடிக்கிறதே
இது ஒரு புது வழி தருகிறதே

என் நெஞ்சம் வாழாதோ
நீ இல்லா போது
என் பாவம் தீராதோ
நீ பார்க்கும் போது
வரமாக என் வாழ்வில்
நீ இங்கு வந்தாயடி

கல்லான எனக்கும் கூட
ஈரம் ஒன்று இருக்கிறதே
இதயங்கள் வளரும் போது சுடுதே
இறையான பிறகும் கூட
காதல் ஒன்று வளர்கிறதே
மண்ணான உணர்வுகள் கூட வருதே
எரிகிறதே உயிர் கரைகிறதே
இது ஒரு புது சுகம் தருகிறதே
நனைகிறதே உடல் சுடுகிறதே
இது ஒரு புது ரணம் தருகிறதே

என் மௌனம் கலையாதோ
நீ பேசும் போது
என் வாழ்வே மாறாதோ
நீ வாழும் போது
வரமாக என் வாழ்வில்
நீ இங்கு வந்தாயடி

வானும் மண்ணும் மறையாதோ மறையாதோ
நிலவும் நீயும் போதாதோ போதாதோ
வார்த்தை ஒன்றும் பேசாமல்
விரல்கள் பேசி செல்லாதோ செல்லாதோ

வானும் மண்ணும் மறையாதோ
நிலவும் நீயும் போதாதோ
வார்த்தை ஒன்றும் பேசாமல்
விரல்கள் பேசி செல்லாதோ

உணர்வு மழைகள் இங்கு பொழிகிறதே
உயிரும் ததும்பி வந்து சிரிக்கிறதே
உலகை ஆள என்னை அழைக்கிறதே
இறையாய் என்னை மாற்றியதாரோ

உணர்வு மழைகள் இங்கு பொழிகிறதே
உயிரும் ததும்பி வந்து சிரிக்கிறதே
உலகை ஆள என்னை அழைக்கிறதே
இறையாய் என்னை மாற்றிய நீ யாரோ
 

வண்டினத்தை சும்மா சும்மா - மாவீரன்

பாடல்: வண்டினத்தை சும்மா சும்மா
திரைப்படம்: மாவீரன்
இசை: மரகதமணி
பாடியவர்கள்: R.ஜெயதேவ் & ஜானகி ஐயர்

வண்டினத்தை சும்மா சும்மா
பட்டுப்பூ வாட்டுது அம்மா
மாலைப்போதில் உம்மா உம்மா
முத்துபோல் வழங்கிடு அம்மா
ஆசைதான் தாக்கும் இங்கே
அணைத்திட தாவும் நெஞ்சே
தாபம் தீரம்மா

சிறு பூவாய் நெஞ்சொடு கொஞ்சாதா பொன்மான்
புது தென்றலைப்போலே தொடாதா என் மான்
சிறு பூவாய் நெஞ்சொடு கொஞ்சாதா பொன்மான்
புது தென்றலைப்போலே தொடாதா என் மான்

பூவும் இங்கு தன்னைத்தான்
தீண்டும் காற்றைத் திட்டாதே
மயங்கும்போது கொஞ்சிடும் என் மலரே

பூவில் நீயும் கை வைக்காதே
பூவைச்சுற்றி முள் உண்டே
அல்லி கொஞ்சம் மெல்ல குத்தாதா

தாகமான நெஞ்சம் தான்
தள்ளி என்றும் நிற்காதே
வெறுப்பு ஏன்டி கூறடி பெண்மானே

நெருப்பு மெல்ல உரு மாற
உரிமை வாய்த்து விளையாடத்தான்
வஞ்சி என்னை மாற்றுது உன் பேச்சா

வளர்க்காதல் வரம் அதை வழங்காய் அம்மா
நீ முறைத்தாலும் உனை பெறுவேனே அம்மா
சிறு பூவாய் நெஞ்சொடு கொஞ்சாதா பொன்மான்
புது தென்றலைப்போலே தொடாதா என் மான்

காற்றும் நின்னைத் தாக்கிடுதே
கதிரும் நின்னைத் தாக்கிடுதே
நானும் நின்னைத் தாக்கினால் தப்பா

காற்று பூவை தாக்காது
கதிரும் என்னை சாய்க்காது
ரெண்டும் நீயா தாங்காதப்பா

மழையின் சாரல் தீண்டாதா
சிதறும் தூரல் தீண்டாதா
பாரபட்சம் பார்ப்பதும் முறையா

மழையும் எந்தன் பூமேனி
கழுவும் என்னை புதிதாக்கி
ஏடாகூட போட்டிகள் உனக்கேன்டா

அது பெண்ணுக்குண்மையில் துணையாய் ஆகிடுமா
உனை நிழலாய்த்தொடர்ந்து நான் வருவேனம்மா
சிறு பூவாய் நெஞ்சொடு கொஞ்சாதா பொன்மான்
புது தென்றலைப்போலே தொடாதா என் மான்
 

ஆண்டவன் போட்ட புள்ளியை - தென்னங்கீற்று

பாடல்: ஆண்டவன் போட்ட புள்ளியைதிரைப்படம்: தென்னங்கீற்று
இசை: ஜி.கே.வெங்கடேஷ்
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற
அருகதை எனக்கு கிடையாது
ஆசைகள் நெஞ்சில் ஆயிரம் ஊஞ்சல்
ஆடிட செய்தால் துயர் ஏது
ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற

மேடை ஏறினேன் பாடினேன்
இனிமை இல்லாமல்
மாலை சூடினேன் கணவன் ஆகினேன்
மங்கலம் காணாமல்

மேடை ஏறினேன் பாடினேன்
இனிமை இல்லாமல்
மாலை சூடினேன் கணவன் ஆகினேன்
மங்கலம் காணாமல்

பூவோடுதான் பிறப்பது தேனே தேனே
அரும்பாக நீ இருப்பது வீணே வீணே
தனிமர வாழ்க்கை வாழுகின்றோமே

ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற
அருகதை எனக்கு கிடையாது
ஆசைகள் நெஞ்சில் ஆயிரம் ஊஞ்சல்
ஆடிட செய்தால் துயர் ஏது
ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற

கேட்டுப் பார்க்கிறேன் தவிக்கிறேன்
தெய்வம் தரும் என்று
கூட்டிக் கழித்தவன் கணக்கை சொல்கிறான்
விதியே பெரிதென்று

உயிர் வாழ நீ கொடுத்தாய் பிறவி பிறவி
இல் வாழ்வில் நான் தனிமை துறவி துறவு
தென்றலின் பாதை தேடுகின்றேனே

ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற
அருகதை எனக்கு கிடையாது
ஆசைகள் நெஞ்சில் ஆயிரம் ஊஞ்சல்
ஆடிட செய்தால் துயர் ஏது
ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற

சந்திக்காத கண்களில் இன்பங்கள் - நூற்றெண்பது

பாடல்: சந்திக்காத கண்களில் இன்பங்கள்
திரைப்படம்: நூற்றெண்பது
இசை: சரத்
பாடியவர்கள்: K.S.சித்ரா, சௌம்யா & உன்னிமேனன்

சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்யப் போகிறேன்
அன்பின் ஆலை ஆனாய்
ஏங்கும் ஏழை நானாய்
தண்ணீரைத் தேடும் மீனாய்
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்

ஊகம் செய்தேன் இல்லை
மோகம் உன் மீதானேன்
கதைகள் கதைகள் கதைத்து
விட்டுப் போகாமல்
விதைகள் விதைகள் விதைத்து
விட்டுப் போவோமே

ரி...நி...க...ரி
திசை அறியா
ரி...ம...நி...ப...க...ரி
பறவைகளாய்
நி ரி ஸா...நீ...ரி...நான்...க
நீள்...ம...வான்...ப த நி ஸா
வெளியிலே மிதக்கிறோம்

சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்யப் போகிறேன்

போகும் நம் தூரங்கள்
நீளம் தான் கூடாதோ
இணையும் முனையம்
இதயம் என்று ஆனாலே
பயணம் முடியும் பயமும்
விட்டுப் போகாதோ

த...நி...த...ம...க...ரி
முடிவு அறியா
ரி...ப...ம...நி...ப...க...ரி
அடி வானமாய்
ரி நி ஸா...ஏன்...ரி...ஏன்...க
நீ...ம...நான்...ப த நி ஸா
தினம் தினம் தொடர்கிறோம்

சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்யப் போகிறேன்
அன்பின் ஆலை ஆனாய்
ஏங்கும் ஏழை நானாய்
தண்ணீரைத் தேடும் மீனாய்

மணிக்குயிலே மனம் தினம் - சத்தியம் அது நிச்சயம்

பாடல்: மணிக்குயிலே மனம் தினம்
திரைப்படம்: சத்தியம் அது நிச்சயம்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: மனோ & உமா ரமணன்

மணிக்குயிலே மனம் தினம்
கவிதைகள் பாடுதே
புதுமைகள் சேர்ந்ததே
துரை மகனே சுகம் ஒரு
தொடர்கதை ஆனதே
மலர்ந்தது வாழ்க்கையே
உருகுது ஏழு ஸ்வரமே
மரகத வீணை இசை தேடுதே

மணிக்குயிலே மனம் தினம்
கவிதைகள் பாடுதே
புதுமைகள் சேர்ந்ததே
துரை மகனே சுகம் ஒரு
தொடர்கதை ஆனதே
மலர்ந்தது வாழ்க்கையே
உருகுது ஏழு ஸ்வரமே
மரகத வீணை இசை தேடுதே
மணிக்குயிலே மனம் தினம்
கவிதைகள் பாடுதே
புதுமைகள் சேர்ந்ததே

கன்னிப்பூமேனி எங்கும் நான் தேனீ
கள்ளும் மதுவும் கலந்தாள் முத்தத்தால்
கங்கை நீரானேன் கையில் தேனானேன்
கன்னம் சிவந்தேன் கனிந்தேன் கன்னித்தேன்
எந்தன் ஆராதனை சிந்தும் ஆலாபனை
பஞ்சில் தீ சேர்ந்தது நெஞ்சைத் தாலாட்டுது
இடை மேலே உடை பாதி இனி ஏது கால நேரமே

மணிக்குயிலே மனம் தினம்
கவிதைகள் பாடுதே
புதுமைகள் சேர்ந்ததே
துரை மகனே சுகம் ஒரு
தொடர்கதை ஆனதே
மலர்ந்தது வாழ்க்கையே
உருகுது ஏழு ஸ்வரமே
மரகத வீணை இசை தேடுதே
மணிக்குயிலே மனம் தினம்
கவிதைகள் பாடுதே
புதுமைகள் சேர்ந்ததே

பொங்கும் காட்டாறு தங்கத்தேராச்சு
இங்கு துரும்பும் கரும்பாய் தித்திக்கும்
எங்கள் கூடாரம் மண்ணில் ஆகாயம்
கண்கள் இரண்டை விடியல் சந்திக்கும்
சின்னப்பூவால் ஒரு வண்ண தேவாலயம்
அன்று சூராவளி இன்று தீபாவளி
இது ஆசை திருநாளே இனி ஆறு கால பூஜையே

துரை மகனே சுகம் ஒரு
தொடர்கதை ஆனதே
மலர்ந்தது வாழ்க்கையே
மணிக்குயிலே மனம் தினம்
கவிதைகள் பாடுதே
புதுமைகள் சேர்ந்ததே
உருகுது ஏழு ஸ்வரமே
மரகத வீணை இசை தேடுதே
மணிக்குயிலே மனம் தினம்
கவிதைகள் பாடுதே ஆஹ ஹா
புதுமைகள் சேர்ந்ததே ம்ஹ் ஹூம்
துரை மகனே சுகம் ஒரு
தொடர்கதை ஆனதே ஆஹ ஹா
மலர்ந்தது வாழ்க்கையே லால லா

அடி ஆத்தாடி - கடலோரக் கவிதைகள்

பாடல்: அடி ஆத்தாடி
திரைப்படம்: கடலோரக் கவிதைகள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & எஸ்.ஜானகி

அடி ஆத்தாடி...

அடி ஆத்தாடி இளம் மனசொண்ணு
ரெக்கை கட்டி பறக்குது சரிதானா
அடி அம்மாடி ஒரு அலை வந்து
மனசுல அடிக்குது அதுதானா
உயிரோடு உறவாடும்
ஒரு கோடி ஆனந்தம்
இவன் மேகம் ஆக யாரோ காரணம்
ஆஆ...ஆஆ...ஆஆ...ஆஆ
அடி ஆத்தாடி இள மனசொண்ணு
ரெக்கை கட்டி பறக்குது சரிதானா
அடி அம்மாடி...

மேல போகும் மேகம் எல்லாம்
கட்டுப்பட்டு ஆடாதோ
உன்னைப்பார்த்து அலைகள் எல்லாம்
மெட்டுக்கட்டி பாடாதோ
இப்படி நான் ஆனதில்ல
புத்தி மாறிப் போனதில்ல
முன்னப்பின்ன நேர்ந்ததில்ல
மூக்கு நுனி வேர்த்ததில்ல
கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள
கத்திச்சண்டை கண்டாயோ
படபடக்கும் நெஞ்சுக்குள்ள
பட்டாம்பூச்சி பார்த்தாயோ
இசை கேட்டாயோ...ஓஓ ஓ ஓஓஓ

லல லல லா லல லல லல லல லா
லல லல லா லல லல லா
லல லல லா லல லல லல லல லா

தாகப்பட்ட நெஞ்சுக்குள்ளே
ஏகப்பட்ட சந்தோஷம்
உண்மை சொல்லு பொண்ணே
என்னை என்ன செய்ய உத்தேசம்
வார்த்தை ஒண்ணு வாய் வரைக்கும்
வந்து வந்து போவதென்ன
கட்டுமரம் பூ பூக்க
ஆசைப்பட்டு ஆவதென்ன
கட்டுத்தறி காளை நானே
கன்னுக்குட்டி ஆனேனே
தொட்டுத்தொட்டு தென்றல் பேச
தூக்கம் கெட்டுப்போனேனே
சொல் பொன்மானே...ஏஏ ஏ ஏஏஏ

அடி ஆத்தாடி இளம் மனசொண்ணு
ரெக்கை கட்டி பறக்குது சரிதானா
அடி அம்மாடி ஒரு அலை வந்து
மனசுல அடிக்குது அதுதானா
உயிரோடு உறவாடும்
ஒரு கோடி ஆனந்தம்
இவன் மேகம் ஆக யாரோ காரணம்
ஆஆ...ஆஆ...ஆஆ...ஆஆ
அடி ஆத்தாடி இள மனசொண்ணு
ரெக்கை கட்டி பறக்குது சரிதானா
அடி ஆத்தாடி...

போறானே போறானே - வாகை சூட வா

பாடல்: போறானே போறானே
திரைப்படம்: வாகை சூட வா
இசை: M Ghibran
பாடியவர்கள்: KG Ranjith & Neha Bhasin

போறானே...போறானே

போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
அழகா நீ நிறைஞ்சே அடடா பொந்துக்குள் புகைய போல

போறாளே போறாளே காத்தோட தூத்தல போல
போறாளே போறாளே போவாமத்தான் போறாளே
போறாளே போறாளே காத்தோட தூத்தல போல
போறாளே போறாளே போவாமத்தான் போறாளே

பருவம் தொடங்கி ஆசை வச்சேன்
இல்லாத சாமிக்கும் பூசை வச்சேன்
மழையில் நனைஞ்ச காத்தை போல
மனசை நீயும் நனைச்சுப்புட்ட
ஈரக்குலைய கொஞ்சம் இரவல் தாய்யா
பொண்ணு மனசை கொஞ்சம் புனைய வாய்யா
ஏற இறங்க பார்க்கும் ரோசக்காரா
டீத்தூளு வாசம் கொண்ட மோசக்காரா
அட நல்லாங்குருவி ஒண்ணு மனச மனச
சிறு கன்னங்குழியிலே பதுக்கிருச்சே
சின்ன சின்ன தொரட்டிப்பொண்ணு
கண்ணு முழியத்தான் ஈச்சங்காயா ஆஞ்சிருச்சே

போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே

கிணத்து நிலவா நான் இருந்தேன்
கல்லை எரிஞ்சு குழப்பிப்புட்ட
உன்னை பார்த்து பேசையில
ரெண்டாம் முறையா குத்த வச்சேன்
மூக்கணாங்கவுற போல உன் நினைப்பு
சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு
அடை காக்கும் கோழி போல என் தவிப்பு
பொசுக்குன்னு பூத்திருக்கே என் பொழப்பு
அடி மஞ்சக்கிழங்கு உன்னை நினைச்சு நினைச்சு
தினம் மனசுக்குள்ள வச்சு பூட்டிக்கிட்டேன்
உன் பிஞ்சுவிரல் பதிச்ச மண்ணை எடுத்து
நான் காயத்துக்கு பூசிக்கிட்டேன்

போறாளே...போறாளே
போறாளே...போவாமத்தான் போறாளே

அழகா நீ நிறைஞ்சே அடடா பொந்துக்குள் புகைய போல
போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
போறானே...போறானே...போறானே

மலர துடிக்கும் பூவே - நினைவுகள் மறைவதில்லை

பாடல்: மலர துடிக்கும் பூவே
திரைப்படம்: நினைவுகள் மறைவதில்லை
இசை: எம்.எஸ்.வி.ராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா

மலர துடிக்கும் பூவே மடியில் ஆட வா
மலர துடிக்கும் பூவே மடியில் ஆட வா
முத்தாரமே பொன் தீபமே
என் தோளின்மீது ஊஞ்சல் ஆட
வா பூந்தென்றலே
மலர துடிக்கும் பூவே மடியில் ஆட வா

குழந்தையின் பூமுகம் மலர்களின் ஞாபகம்
கனவுகளோ விழியில் உறங்கும்
குழந்தையின் பூமுகம் மலர்களின் ஞாபகம்
கனவுகளோ விழியில் உறங்கும்

பொன் அல்லவா அருகில் வா
பொன்முல்லைபோல பிள்ளை வேண்டும்
வா நீ கொண்டு வா
மலர துடிக்கும் பூவே மடியில் ஆட வா

கொடி ஒரு பூவிடம் அதற்கொரு நாள் வரும்
இரவுகளோ இனிமை வழங்கும்
கண் அல்லவா மெல்ல வா
என் பிள்ளை போல உன்னைக்கிள்ள
நான் தாய் அல்லவா
மலர துடிக்கும் பூவே மடியில் ஆட வா

முத்தாரமே பொன் தீபமே
என் தோளின்மீது ஊஞ்சல் ஆட
வா பூந்தென்றலே
மலர துடிக்கும் பூவே மடியில் ஆட வா

Monday, January 16, 2012

மெல்லச் சிரித்தாள் - உயிரே உயிரே

பாடல்: மெல்லச் சிரித்தாள்
திரைப்படம்: உயிரே உயிரே
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: சீர்காழி சிவசிதம்பரம் & வாணி ஜெயராம்

மெல்லச் சிரித்தாள் அள்ளித் தெளித்தாள்
மெல்லச் சிரித்தாள் அள்ளித் தெளித்தாள்
முல்லைக்கொடி இடை மெல்லப்பிடியென அழைத்தாள்

மெல்லச் சிரித்தாள் அள்ளித் தெளித்தாள்
மெல்லச் சிரித்தாள் அள்ளித் தெளித்தாள்
முல்லைக்கொடி இடை மெல்லப்பிடி என அழைத்தாள்

வஞ்சி அழகில் நெஞ்சைப் பறித்தாள்
வஞ்சி அழகில் நெஞ்சைப் பறித்தாள்
தஞ்சம் கொடு என கெஞ்சும் விழிகளை அசைத்தாள்
இவள் ரதியோ புது நிலவோ கொஞ்சும் கிளியோ கூவும் குயிலோ

பூங்கோதை நீ ராதை என் தேவை என்றவன்
பொய் நாணம் போதுமென்று மெய் நோக தொட்டவன்
பூங்கோதை நீ ராதை என் தேவை என்றவன்
பொய் நாணம் போதுமென்று மெய் நோக தொட்டவன்
கார்கூந்தல் தானாக தேன் வார்க்க வைத்தவன்
கார்கூந்தல் தானாக தேன் வார்க்க வைத்தவன்
கைகோர்த்து மெய்சேர்த்து கண்கோர செய்தவன்

மங்கை மனதில் தங்கத் துடித்தான்
மங்கை மனதில் தங்கத் துடித்தான்
வஞ்சி குலமகள் நெஞ்சில் இருப்பவன் சிரித்தான்
என்றும் இனிக்கும் இன்பம் துளிர்க்கும்
என்றும் இனிக்கும் இன்பம் துளிர்க்கும்
அந்த சுகம் தரும் அந்திப்பொழுதினில் மலர்ந்தான்
ஹா ஹா... ஆஆ ... ஓஓ ம்ஹ்ம் ம்ம்ம்

இந்திர வில் தினம் வந்திரவில் தொட்டு எனை பார்த்ததோ
சித்திரங்கள் அடி உன் அழகில் நாணி உடல் வேர்த்ததோ
மன்மதனின் மலர் வெண் சரங்கள் இளம் உடல் பாய்ந்ததோ
வாய் அமுதம் மருந்தாய் உதவும் செவ்விதழ் சேர்க்கவோ

மெல்லச் சிரித்தாள் அள்ளித் தெளித்தாள்
மெல்லச் சிரித்தாள் அள்ளித் தெளித்தாள்
முல்லைக்கொடி இடை மெல்லப்பிடியென அழைத்தாள்

வஞ்சி அழகில் நெஞ்சைப் பறித்தாள்
வஞ்சி அழகில் நெஞ்சைப் பறித்தாள்
தஞ்சம் கொடு என கெஞ்சும் விழிகளை அசைத்தாள்
ஹா ஹா... ஆஆ ... ஓஓ ம்ஹ்ம் ம்ம்ம்