Tuesday, January 3, 2012

andhi mandhaaraippoo - muraN

பாடல்: அந்தி மந்தாரைப்பூ
திரைப்படம்: முரண்
இசை: சஜ்ஜன் மாதவ்
பாடியவர்கள்: நவீன் மாதவ், தயா, சுசித்ரா & மேகா

அந்தி மந்தாரைப்பூ பூ பூக்கும் நேரம்
அட இன்னும் என்ன தூரம்
துள்ளும் மனது கூ கூ கூச்சல் போடும்
எல்லைகளை மீறும்

அந்தி மந்தாரைப்பூ பூ பூக்கும் நேரம்
இன்னும் இன்னும் என்ன தூரம்
துள்ளும் மனது கூ கூ கூச்சல் போடும்
மெல்ல எல்லைகளை மீறும்
இங்கும் அங்கும் பல கண்கள் மேயும்
தனியே தூரத்தில் நிலவும் காயும்
எட்டி நிற்காதே வேண்டும் வேகம்
ஆசை தீராமல் இரவோ அலைந்து
தேயும் தேயும் உன்மேல் பாயும்

அந்தி மந்தாரைப்பூ பூ பூக்கும் நேரம்
இன்னும் இன்னும் என்ன தூரம்
துள்ளும் மனது கூ கூ கூச்சல் போடும்
மெல்ல எல்லைகளை மீறும்

விரலில் தான் வானவில் நான்
நீ தொட்டால் போதும் சிந்தும் எந்தன் வண்ணம்
பகலே ஏன் தேவை இல்லை
நீளட்டும் இந்த பொழுது இன்னும் இன்னும்
இள நெஞ்சில் ஆசை ஊஞ்சல்
இடைவேளை இன்றி ஆடும் யோகம் கொஞ்சம்
இடி மின்னல் புயலைப் போலே
மறு நொடியில் மாறும் நெஞ்சம்
இருட்டுக்கென்றும் கூச்சமில்லை நான் சொல்வது
அச்சம் விட்டு மிச்சம் தொட்டால்
உச்சம் உச்சம் நீ செல்வது ஹா ஹா ஹோ ஓ

அந்தி மந்தாரைப்பூ பூ பூக்கும் நேரம்
இன்னும் இன்னும் என்ன தூரம்
துள்ளும் மனது கூ கூ கூச்சல் போடும்
மெல்ல எல்லைகளை மீறும்

மேகமும் மேகமும் உரசிக்கொள்ளும் கருப்பு இரவிலே
தேகமும் தேகமும் உரசிக்கொண்டால் நெருப்பு மனதிலே
வட்டத்துக்குள்ளே வாழும் வாழ்க்கை இன்பம் இல்லையே
கோட்டைத்தாண்டும் ஸ்பரிசம் ஈர்க்கும் உன்னையே
கஞ்சத்தனம் உன் இடையிலும் உடையிலும் நான் காண்பது
பஞ்சம் மட்டும் இல்லை என் அழகிங்கு தீண்டத்தீண்ட திளைக்கிறது

அந்தி மந்தாரைப்பூ பூ பூக்கும் நேரம்
இன்னும் இன்னும் என்ன தூரம்
துள்ளும் மனது கூ கூ கூச்சல் போடும்
மெல்ல எல்லைகளை மீறும்
இங்கும் அங்கும் பல கண்கள் மேயும்
தனியே தூரத்தில் நிலவும் காயும்
எட்டி நிற்காதே வேண்டும் வேகம்
ஆசை தீராமல் இரவோ அலைந்து
தேயும் தேயும் உன்மேல் பாயும்

அந்தி மந்தாரைப்பூ பூ பூக்கும் நேரம்
இன்னும் இன்னும் என்ன தூரம்
துள்ளும் மனது கூ கூ கூச்சல் போடும்
எல்லைகளை மீறும்

No comments: