Tuesday, January 3, 2012

arai kiRukkan arai kiRukkan - vengaayam

பாடல்: அரை கிறுக்கன் அரை கிறுக்கன்
திரைப்படம்: வெங்காயம்
இசை: பரணி
பாடியவர்கள்: சுஜித் & மதுமிதா

அரை கிறுக்கன் அரை கிறுக்கன் அடியே நானடி
உனக்கிருக்கும் உனக்கிருக்கும் அந்த கிறுக்கே நானடா
உன்னைத்தள்ளி உயிரே பூட்டிக்கொண்டேன்
அழகே வேறு எங்கும் தேடாதே
ஓ உன்னை அள்ளி அழகாய் மாட்டிக்கொண்டேன்
முழுதாய் காதல் சட்டம் போடாதே
இமைகள் இமைகள் விசிறிட வரவே
வேர்வை வெய்யில் நனைகிறதே

அரை கிறுக்கன் அரை கிறுக்கன் அடியே நானடி
உனக்கிருக்கும் உனக்கிருக்கும் அந்த கிறுக்கே நானடா

ஆசை உயிரழகி உன்னுடன் என்றும் மகிழ்ச்சியிலே
மடியினில் உன் மடியினில் நிம்மதியாய் கிடப்பேன்
காதல் கனவழகா அன்பினில் கொஞ்சும் சிலிர்ப்பினிலே
நெஞ்சினில் உன் நெஞ்சினில் உன் உயிராய் துடிப்பேன்

கடித்திடும் எறும்பினை சிரித்திட அடிப்பேன்
வியர்த்திடும் சிலையினை நொறுங்கிட அணைப்பேன்
இதழே சுவடாய் நடப்பேன்
சிரித்திடும் கவிதையை சிணுங்களில் படிப்பேன்
இறுகிடும் விரல்களை சிறகென நினைப்பேன்
நிலவாய் உயரே மிதப்பேன்
முட்டும் மூச்சு முட்டும் மூளும் காதல் யுத்தம்
கட்டி அணைத்து உயிர் கலந்திட வா

அரை கிறுக்கன் அரை கிறுக்கன் அடியே நானடி
உனக்கிருக்கும் உனக்கிருக்கும் அந்த கிறுக்கே நானடா

பார்வை பசியழகா வல்லினம் கிள்ளும் வலியினிலே
மெல்லிடம் என் இடையினம் சில்லிடவே சிலிர்ப்பேன்
கூச்ச குயிலழகி கண்களில் பொங்கும் புணர்ச்சியிலே
வெற்றிடம் என் வெற்றிடம் கொள்ளிடமாய் நனைப்பேன்

விண்வெளி நகரினில் உன்னுடன் வசிப்பேன்
நிலவினில் அருவியில் உயிர்தொட குளிப்பேன்
மழையை கயிறாய் திரிப்பேன்
மின்மினி விழிகளில் கதவுகள் திறப்பேன்
முன்பனி குளிர்களை தழுவலில் மறப்பேன்
உயிரின் கவிதை தொகுப்பேன்
வெட்கம் விலகிவிட முத்தம் பருகிவிட
வெப்பம் பெருகிவிடும் இருவருக்கும்

அரை கிறுக்கன் அரை கிறுக்கன் அடியே நானடி
உனக்கிருக்கும் உனக்கிருக்கும் அந்த கிறுக்கே நானடா
உன்னைத்தள்ளி உயிரே பூட்டிக்கொண்டேன்
அழகே வேறு எங்கும் தேடாதே
ஓ உன்னை அள்ளி அழகாய் மாட்டிக்கொண்டேன்
முழுதாய் காதல் சட்டம் போடாதே
இமைகள் இமைகள் விசிறிட வரவே
வேர்வை வெய்யில் நனைகிறதே

அரை கிறுக்கன் அரை கிறுக்கன் அடியே நானடி
உனக்கிருக்கும் உனக்கிருக்கும் அந்த கிறுக்கே நானடா
 

No comments: