Monday, January 16, 2012

மெல்லச் சிரித்தாள் - உயிரே உயிரே

பாடல்: மெல்லச் சிரித்தாள்
திரைப்படம்: உயிரே உயிரே
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: சீர்காழி சிவசிதம்பரம் & வாணி ஜெயராம்

மெல்லச் சிரித்தாள் அள்ளித் தெளித்தாள்
மெல்லச் சிரித்தாள் அள்ளித் தெளித்தாள்
முல்லைக்கொடி இடை மெல்லப்பிடியென அழைத்தாள்

மெல்லச் சிரித்தாள் அள்ளித் தெளித்தாள்
மெல்லச் சிரித்தாள் அள்ளித் தெளித்தாள்
முல்லைக்கொடி இடை மெல்லப்பிடி என அழைத்தாள்

வஞ்சி அழகில் நெஞ்சைப் பறித்தாள்
வஞ்சி அழகில் நெஞ்சைப் பறித்தாள்
தஞ்சம் கொடு என கெஞ்சும் விழிகளை அசைத்தாள்
இவள் ரதியோ புது நிலவோ கொஞ்சும் கிளியோ கூவும் குயிலோ

பூங்கோதை நீ ராதை என் தேவை என்றவன்
பொய் நாணம் போதுமென்று மெய் நோக தொட்டவன்
பூங்கோதை நீ ராதை என் தேவை என்றவன்
பொய் நாணம் போதுமென்று மெய் நோக தொட்டவன்
கார்கூந்தல் தானாக தேன் வார்க்க வைத்தவன்
கார்கூந்தல் தானாக தேன் வார்க்க வைத்தவன்
கைகோர்த்து மெய்சேர்த்து கண்கோர செய்தவன்

மங்கை மனதில் தங்கத் துடித்தான்
மங்கை மனதில் தங்கத் துடித்தான்
வஞ்சி குலமகள் நெஞ்சில் இருப்பவன் சிரித்தான்
என்றும் இனிக்கும் இன்பம் துளிர்க்கும்
என்றும் இனிக்கும் இன்பம் துளிர்க்கும்
அந்த சுகம் தரும் அந்திப்பொழுதினில் மலர்ந்தான்
ஹா ஹா... ஆஆ ... ஓஓ ம்ஹ்ம் ம்ம்ம்

இந்திர வில் தினம் வந்திரவில் தொட்டு எனை பார்த்ததோ
சித்திரங்கள் அடி உன் அழகில் நாணி உடல் வேர்த்ததோ
மன்மதனின் மலர் வெண் சரங்கள் இளம் உடல் பாய்ந்ததோ
வாய் அமுதம் மருந்தாய் உதவும் செவ்விதழ் சேர்க்கவோ

மெல்லச் சிரித்தாள் அள்ளித் தெளித்தாள்
மெல்லச் சிரித்தாள் அள்ளித் தெளித்தாள்
முல்லைக்கொடி இடை மெல்லப்பிடியென அழைத்தாள்

வஞ்சி அழகில் நெஞ்சைப் பறித்தாள்
வஞ்சி அழகில் நெஞ்சைப் பறித்தாள்
தஞ்சம் கொடு என கெஞ்சும் விழிகளை அசைத்தாள்
ஹா ஹா... ஆஆ ... ஓஓ ம்ஹ்ம் ம்ம்ம்

No comments: