Monday, January 16, 2012

ஒரு நாள் விடுமுறை - டூ

பாடல்: ஒரு நாள் விடுமுறை
திரைப்படம்: டூ
இசை: அபிஷேக் - லாரன்ஸ்
பாடியவர்கள்: ஹரிசரண் & பிரஷாந்தினி

ஒரு நாள் விடுமுறை நீ எடுத்தால்
விழிகள் மட்டும் சுரம் அடிக்கும்
மறு நாள் உனை பார்ப்பதற்கு
உன் தெருவில் கால்கள் அடம் பிடிக்கும்
வருகைப்பதிவில் இல்லை என்றால்
மனது கிடந்து படபடக்கும்
உன் பேரை அழைக்கையிலே
என் உயிரும் வந்து அங்கு குரல் கொடுக்கும்
எனக்குள் வந்து எத்தனை நாளாச்சு
நெனைப்புலதானே வாழுது என் மூச்சு
உன்னை சுத்தி காதல் கிரகணம் வந்தாச்சு

வகுப்புகள் முடிந்தும் முன் இருக்கையிலே
அமர்ந்து வானத்தில் பறக்கின்றேன்
கரும்பலகையிலே எழுத்துக்கள் எல்லாம்
உன் பெயர்தானே நினைக்கின்றேன்
ஒருமுறை ஏற்றும் கொடியினிலே
நான் தினம் தினம் உன் முகம் பார்க்கின்றேன்
மாலையில் அடிக்கும் பள்ளி மணி
ஓசையை நானும் வெறுக்கின்றேன்
எனது புத்தகத்தில் முதல் பக்கம் நீதானே
உன்னுடன் இருப்பதற்கு மறுபக்கம் நான் ஆனேன்
வீட்டுக்கு வருவதற்கு என் தெருவும் வரம் கிடக்கு
தாழ்ப்பாளும் போடாமல் வீட்டுக்கதவு திறந்திருக்கு

என் வலி என்ன புரியலையா
எனது காதல் ஒரு பிழையா
புரிந்து கொள் என் மனமே
இளமை இன்னும் சில தினமே

உனது முகவரியில்
என் பெயரை சேர்த்துவிட்டேன்
நானும் இடம் மாற
நாள் ஒன்றை பார்த்துவிட்டேன்
இனி உன்னை மறப்பதற்கு
என்னாலும் முடியாது
இடம் பிடித்து நடந்துவிட்டேன்
இனி பிரிவும் இருக்காது

உனக்குள் வந்து எத்தனை நாளாச்சு
நெனைப்புலதானே வாழுது என் மூச்சு
நம்மை சுத்தி காதல் கிரகணம் வந்தாச்சு
உனக்குள் வந்து எத்தனை நாளாச்சு
நெனைப்புலதானே வாழுது என் மூச்சு
நம்மை சுத்தி காதல் கிரகணம் வந்தாச்சு

No comments: