Monday, January 16, 2012

காதல் என்பதை - குள்ளநரி கூட்டம்

பாடல்: காதல் என்பதை
திரைப்படம்: குள்ளநரி கூட்டம்
இசை: V.செல்வகணேஷ்
பாடியவர்: ஹரிஹரன்

காதல் என்பதை காதல் என்பதை
முத்தத்தில் கொடுத்து விட்டாய்
காதல் என்பதை காதல் என்பதை
மௌனத்தில் சொல்லி விட்டாய்

நான் உன்னை நினைத்தால் பூவாகும் மனது
என் உள்ளே இருக்கும் உயிர் கூட உனது
உன் சுவாசம் கொடுத்தாய் மண் மீது வாழ
இது ஒன்றே போதும் விண்ணை நான் ஆள
என்னமோ நெஞ்சுக்குள்ளே சந்தோஷம் இருக்க
இது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க

காதல் என்பதை காதல் என்பதை
முத்தத்தில் கொடுத்து விட்டாய்
காதல் என்பதை காதல் என்பதை
மௌனத்தில் சொல்லி விட்டாய்

நீ நடந்த பாதையை என் கால்கள் தேடும்
பார்த்த இடம் எல்லாம் என் பார்வை பார்க்கும்
பிரிவென்று நினைத்து பிரியாமல் போனாய்
தூரத்தில் நீ இருந்து என்னை தொட்டு அணைத்தாய்
பிரிவென்று நினைத்து பிரியாமல் போனாய்
தூரத்தில் நீ இருந்து என்னை தொட்டு அணைத்தாய்
என்னமோ நெஞ்சுக்குள்ளே சந்தோஷம் இருக்க
இது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க

காதல் என்பதை காதல் என்பதை
முத்தத்தில் கொடுத்து விட்டாய்

நெருப்பின் தூரம்தான் நீரோடு முடியும்
ஒலியின் தூரம்தான் காற்றோடு முடியும்
காற்றின் தூரமோ பூமியில் முடியும்
என் காதல் தூரமோ உன்னுள்ளே அடங்கும்
காற்றின் தூரமோ பூமியில் முடியும்
என் காதல் தூரமோ உன்னுள்ளே அடங்கும்
என்னமோ நெஞ்சுக்குள்ளே சந்தோஷம் இருக்க
இது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க

No comments: