Monday, January 16, 2012

கனவா நெசமா - மைதானம்

பாடல்: கனவா நெசமா
திரைப்படம்: மைதானம்
இசை: சபேஷ் முரளி
பாடியவர்: சின்மயி

கனவா நெசமா என்னை கிள்ளி கிள்ளி பாக்குறேன்
அடடா நெசந்தான் மெல்ல மொட்டுவிட்டு பூக்குறேன்
உன் மூச்சுக்காத்து வந்துதான் என் மூச்சுக்காத்து தீண்டுதே
வழியெல்லாம் வானவில்லை தருதே
நீ என்ன பார்க்கும் போதிலும்
நான் உன்ன பார்க்கும் போதிலும்
நெஞ்சோடு கோடி மின்னல் வருதே

கனவா நெசமா என்னை கிள்ளி கிள்ளி பாக்குறேன்
அடடா நெசந்தான் மெல்ல மொட்டுவிட்டு பூக்குறேன்

என்னென்னவோ ஆசைகள உள்ளுக்குள்ள சேக்குறேன்
அத்தனையும் சொல்லிவிட தனிமைய கேக்குறேன்
ஓ அறுபட்ட கோழிய போல் சுத்தி சுத்தி துடிச்சேனே
கண்ணுமுழி மூக்கு எல்லாம் மொத்தமாக வேர்த்தேனே
ஒரு வார்த்த பேச நெனைக்கிறேன் எதனாலோ தவிச்சு நிக்கிறேன்
ஒதட்டோடு ஒளிச்சு வைக்கிறேன் ஆசையத்தானே
ஓ எதிர்காத்தில் நாத்த போல நீ உன பார்த்து சரிஞ்சு நிக்குறேன்
உன் காதல் வரத்த கேக்குறேன் தினம் தினம் தினம் நானே

கனவா நெசமா என்னை கிள்ளி கிள்ளி பாக்குறேன்
அடடா நெசந்தான் மெல்ல மொட்டுவிட்டு பூக்குறேன்

பெண் மனசு ஆழமுன்னு சொன்னவங்க யாருங்க
உண்மையில ஆண் மனசே அதவிட ஆழங்க
ஓ என்னவிட்டு தள்ளி நின்னா விட்டுவிட மாட்டேனே
உன் மனசு கல்லுயின்னா தட்டித்தட்டி திறப்பேனே
சொல்லாத காதல் என்பது செல்லாத காச போலது
சொன்னாதான் காதல் மேகத்தில் மழை வந்து குதிக்கும்
மலமேல பூக்கும் பூவதான் மறைச்சாலும் வாசம் தெரியுமே
மனசோரம் காதல் வந்துட்டா கண்ணில் அது தெரியும்

No comments: