Monday, January 2, 2012

ellElamA - ezhaam aRivu

பாடல்: எல்லேலமா
திரைப்படம்: ஏழாம் அறிவு
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், கார்த்திக், ஷ்ருதி ஹாசன் & ஷாலினி

எல்லேலமா ஏலே ஏலமா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா
வந்தாளம்மா வெள்ளம் அள்ளுமா
என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க

எல்லேலமா ஏலே ஏலமா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா
வந்தாளம்மா வெள்ளம் அள்ளுமா
என் ஜன்னல் கதவிலே
இவன் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில் தாவியது குதிக்க

அடி நியூட்டன் ஆப்பிள் விழ
புவியீர்ப்பைக் கண்டானடி
இன்று நானோ உன்னில் விழ
விழியீர்ப்பைக் கண்டேனடி

ஓசை கேட்காமலே
இசை அமைத்தான் பீத்தோவனே
நீ என்னை கேட்காமலே
எனை காதல் செய் நண்பனே

குத்து மதிப்பாய் என்னை பார்த்தவளும் நீதானே
குப்பைக்கூடை போல் நெஞ்சை கலைச்சவ நீதானே
மேலும் மேலும் அழகாய் மாறிப்போனேன் மானே

எல்லேலமா ஏலே ஏலமா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா
சந்தோஷமா வெள்ளம் அள்ளுமா
என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க

சிறு வேரும் இல்லாமலே
துளி நீரும் இல்லாமலே
இள வெயிலும் தொடாமலே
பூ பூக்கும் இன்பம் தந்தாய்

தோளில் விழாமலே
கை சிறிதும் படாமலே
உன் நிழலும் தொடாமலே
நீ என்னை கொள்ளை இட்டாய்

இருவரும் மட்டும் வாழ பூமி ஒன்று செய்வோமா
இரவொன்றே போதும் என்று பகலிடம் சொல்வோமா
வேறு வேலை ஏதும் இன்றி காதல் செய்வோம் வா வா

எல்லேலமா ஏலே ஏலமா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா
வந்தாளம்மா வெள்ளம் அள்ளுமா
என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க

No comments: