Friday, January 27, 2012

முத்தமிழே முத்தமிழே - நாங்க

பாடல்: முத்தமிழே முத்தமிழே
திரைப்படம்: நாங்க
இசை: பால பாரதி
பாடியவர்கள்: ரவி & அனிதா சுரேஷ்

முத்தமிழே முத்தமிழே நீ வருவாயா
முத்த இதழ் முடியும்வரை உனை தருவாயா
நான் உன்னை சந்தித்தேன் அட அந்த கணமே
நான் என்னை சந்தித்தேன் தினமே
காற்றே கொஞ்சம் நில்லு காதல் உலகம் செல்லு
இரு காதல் நெஞ்சின் கதையை சொல்லு
முத்தமிழே முத்தமிழே நீ வருவாயா

ஸ்வரங்களில் உன் முகம் சிரிக்க
ஸ்ருதி லயம் எதிலும் நீ வசிக்க
எந்தன் பாடலில் உந்தன் பேர் வந்து
சுகமாய் வார்த்தைகள் படிக்க

அபிநயம் இமைகளில் முடிக்க
அருகினில் அமர்ந்திட துடிக்க
எப்போதும் போல இப்போது இல்லை
இளமையும் விரதங்கள் இருக்க

உன் அங்கம் தங்கம் என்பேனே
உன் அழகை பருக வந்தேனே
பூவோ சம்மதம் ஏன் காற்றோ தாமதம்
அட ஏனோ ஏங்கினேன் நான்
முத்தமிழே முத்தமிழே நீ வருவாயா

இமைகளில் விழிகளும் சிவக்க
இதழ்களின் இனங்களும் வெளுக்க
நாணமும் வந்து நாதமும் மீட்ட
நெஞ்சமும் விழுந்தது துடிக்க

முக்கனி அருகினில் இருக்க
முதல்கனி அதை மெல்ல ருசிக்க
சங்கீதம் இல்லா சத்தங்களோடு
சரசமும் இரவினில் நடக்க

இரு நெஞ்சம் நெஞ்சம் நீங்காதே
இதழில் தேனை மிஞ்சாதே
இவளா கேட்கிறாள் இதை இவளே தருகிறாள்
தினம் சுகமாய் தோற்கிறாள் வா

முத்தமிழே முத்தமிழே நான் வருவேனே
முத்த இதழ் முடியுவரை எனை தருவேனே
நான் உன்னை சந்தித்தேன் அட அந்த கணமே
நான் என்னை சந்தித்தேன் தினமே
காற்றே கொஞ்சம் நில்லு காதல் உலகம் செல்லு
இரு காதல் நெஞ்சின் கதையை சொல்லு
முத்தமிழே முத்தமிழே நீ வருவாயா

No comments: