Saturday, January 14, 2012

நேற்று இல்லை இல்லை - தம்பி வெட்டோத்தி சுந்தரம்

பாடல்: நேற்று இல்லை இல்லை
திரைப்படம்: வெட்டோத்தி சுந்தரம்
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: மது பாலகிருஷ்ணன் & பின்னி கிருஷ்ணகுமார்

நேற்று இல்லை இல்லை இல்லை இந்த ஆனந்தம்
வானம் எல்லாம் நிலவாய் மாறும் வாழ்வில் பேரின்பம்
ஐயோ என் ஆசை உள்ளம் சொல்லாமல் ஆடும்
பொல்லாத நாணம் கொண்டு என் கண்ணை மூடும்
பொய்யானம் நாணம் வந்து மெய்யான ஆசை சொல்ல
என் கண்கள் உன் வாசல் தேடும்
என் கைகள் தாழ்பாளை போடும்

நேற்று இல்லை இல்லை இல்லை இந்த ஆனந்தம்
வானம் எல்லாம் நிலவாய் மாறும் வாழ்வில் பேரின்பம்

வெண் மேகம் சேர்த்து ஒரு பொன் பந்தல் அமைப்போம்
வான் மீனையும் தேன் காற்றையும் வா வாழ்த்த அழைப்போம்
வாய்ப்புள்ள நேரம் நம் வாய்த்தேனில் குளிப்போம்
வாழ்வின் துளி தீரும் வரை வா வாழ்ந்து முடிப்போம்
வேதனை தீயிலே வேகுதே மோகமே
வேர்வையின் ஆற்றிலே நீந்தினால் மோட்சமே
இன்பமான துன்பம் என்னை கொஞ்சம் கொஞ்சம் கொல்லுதே

நேற்று இல்லை இந்த ஆனந்தம்

வாயூறும் போது சிறு தேனூற வேண்டும்
நீ தூங்கவே என் கூந்தலில் போய் போட வேண்டும்
என் காதல் பாரம் அடி நீ தாங்க வேண்டும்
உன் மேனிக்குள் என் ஆசைகள் தேரோட வேண்டும்
கட்டிலை பார்த்ததும் கட்டளை போடுவாய்
வெற்றிலை போட்டு நீ என்னையே மெல்லுவாய்
தோற்பதாக சொல்லிக்கொண்டு நித்தம் என்னை வெல்லுவாய்

நேற்று இல்லை இல்லை இல்லை இந்த ஆனந்தம்
வானம் எல்லாம் நிலவாய் மாறும் வாழ்வில் பேரின்பம்





No comments: