Tuesday, January 3, 2012

nilavil piRandha mugam - maaRupatta kONangaL

பாடல்: நிலவில் பிறந்த முகம்
திரைப்படம்: மாறுபட்ட கோணங்கள்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & வாணி ஜெயராம்

நிலவில் பிறந்த முகம்
ஹேய் நிலவில் பிறந்த முகம்
நினைவை மயக்கும் தினம்
இதய பறவை சிறகை விரிக்கும்
இனிய கவிதை விழிகள் படிக்கும்

நிலவில் பிறந்த முகம்
ஹேய் நிலவில் பிறந்த முகம்
நினைவை மயக்கும் தினம்
இதய பறவை சிறகை விரிக்கும்
இனிய கவிதை விழிகள் படிக்கும்
நிலவில் பிறந்த முகம்

அணைக்கத் துடிக்கும் கரம்
நினைக்க நினைக்க சுகம்
உன்னோடு என் நெஞ்சம் உலா வரும்
கனிந்து சிவந்த பலா
பருவம் நடத்தும் விழா
உன் வானில் மங்கை நான் ஒரே நிலா

அணைக்கத் துடிக்கும் கரம்
நினைக்க நினைக்க சுகம்
உன்னோடு என் நெஞ்சம் உலா வரும்
கனிந்து சிவந்த பலா
பருவம் நடத்தும் விழா
உன் வானில் மங்கை நான் ஒரே நிலா

இரவுகள் வரும் போது
கனவுகள் பல நூறு
உறவினில் தொடும் போது
மயங்கிடும் இளம் மாது

நிலவில் பிறந்த முகம்
ஹேய் நிலவில் பிறந்த முகம்
நினைவை மயக்கும் தினம்
இதய பறவை சிறகை விரிக்கும்
இனிய கவிதை விழிகள் படிக்கும்
நிலவில் பிறந்த முகம்

அழகு தவழும் நடை
நடையில் ஒடியும் இடை
கண்டாலே பொங்காதோ ஆசை மடை
எடுத்துக் கொடுக்கும் கொடை
இனிக்கும் வகையில் தடை
எப்போதும் தப்பாது காமன் கணை

அழகு தவழும் நடை
நடையில் ஒடியும் இடை
கண்டாலே பொங்காதோ ஆசை மடை
எடுத்துக் கொடுக்கும் கொடை
இனிக்கும் வகையில் தடை
எப்போதும் தப்பாது காமன் கணை

கரைகளில் அலை மோதும்
அலைகளில் மனம் ஆடும்
இரு மனம் இணைந்தாடும்
திருமண மலர் சூடும்

நிலவில் பிறந்த முகம்
ஹேய் நிலவில் பிறந்த முகம்
நினைவை மயக்கும் தினம்
இதய பறவை சிறகை விரிக்கும்
இனிய கவிதை விழிகள் படிக்கும்

லலல லலல லலா
ஓஹோ லலல லலல லலா
ஓஹோ லலல லலல லலா
ம்ஹ்ம் லலல லலல லலா

No comments: