Monday, January 16, 2012

கைய தொட வேணாம் - டூ

பாடல்: கைய தொட வேணாம்
திரைப்படம்: டூ
இசை: அபிஷேக் - லாரன்ஸ்
பாடியவர்கள்: ரஞ்சித் & V.J.திவ்யா

கைய தொட வேணாம்
காலில் விழ வேணாம்
கண்ணால பேசு போதும்

மால தர வேணாம்
கூட வர வேணாம்
தள்ளி நீ போடா போதும்

வேற எது வேணும் சொல்லு புள்ள
வேதன ஒன்னால என்ன சொல்ல
போதும் வழியாத ஒண்ணும் வேணாம்
நீ வந்து என்ன தொல்ல பண்ண வேணாம்

அடியே உன்ன நானா விடுவேன்
நினைப்பால் நான் தொடுவேன்
நீ வேணான்னு சொன்னாலும் விடமாட்டேன்

பொறுடா உன்ன தீயா சுடுவேன்
தினம் சாறா புழிவேன்
நீ தாயேன்னு கேட்டாலும் தரமாட்டேன்

கைய தொட வேணாம்
காலில் விழ வேணாம்
கண்ணால பேசு போதும்

பூன குடிக்காத பாலு எதுக்காக
சொல்லு எனக்கு சொல்லு
பால குடிக்காம வாய தொறக்காம
நில்லு ஒதுங்கி நில்லு

ஈரம் காயாத ????? போல
எப்பவும் ஆச புள்ள
பேசக்கூடாத சேதிகள நீயும்
சொல்லிக்க தேவை இல்ல

அடி நந்தவனப்பூவே நீ நெட்டி முறிக்க
வெண்ணிலவும் வந்திடுமே உன்ன ரசிக்க
ஏய் குத்திடவே காத்து நீ பக்கம் இருக்க
கொள்ளி இட ஏங்கிடுமே கொஞ்சம் சிரிக்க

கைய தொட வேணாம்
காலில் விழ வேணாம்
கண்ணால பேசு போதும்

மீச செவப்பாக ஆச நெருப்பாக
வந்து எதுக்கு தொட்ட
வேல சலிப்பாக பாயும் வெறுப்பாக
என்ன கவுத்துப்புட்ட

மாதம் பூராவும் மார்கழிய போல
வெய்யில மாற வச்ச
மூடி போடாத சூரியன போல
கண்ணுல சூடு வச்ச

ஏ வந்ததடி ஆச நான் ஒன்ன அணைக்க
இப்பொழுதும் எப்பொழுதும் மெத்த விரிக்க
ஹே ஹேய் சொல்லுற கேளு நான் ஒத்து உழைக்க
முன்னழகும் பின்னழகும் மொத்தம் கொடுக்க

கைய தொட வேணாம்
காலில் விழ வேணாம்
கண்ணால பேசு போதும்

மால தர வேணாம்
கூட வர வேணாம்
தள்ளி நீ போடா போதும்

வேற எது வேணும் சொல்லு புள்ள
வேதன ஒன்னால என்ன சொல்ல
போதும் வழியாத ஒண்ணும் வேணாம்
நீ வந்து என்ன தொல்ல பண்ண வேணாம்

அடியே உன்ன நானா விடுவேன்
நினைப்பால் நான் தொடுவேன்
நீ வேணான்னு சொன்னாலும் விடமாட்டேன்

பொறுடா உன்ன தீயா சுடுவேன்
தினம் சாறா புழிவேன்
நீ தாயேன்னு கேட்டாலும் தரமாட்டேன்

No comments: