Tuesday, November 25, 2008

uthadugaLil unadhu peyar - thanga rangan

பாடல்: உதடுகளில் உனது பெயர்
திரைப்படம்: தங்க ரங்கன்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & பி.சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது
உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது

கனவுகளில் உன்னைக்கண்டு வெட்கம் வந்தது
அந்த நினைவுகளில் ஆசை என்னை கட்டிக்கொண்டது
கனவுகளில் உன்னைக்கண்டு வெட்கம் வந்தது
அந்த நினைவுகளில் ஆசை என்னை கட்டிக்கொண்டது

முந்தானை சிந்தாட வந்தாடும் நேரத்தில்
உன் தோளில் கண்மூட வேண்டும்
ஆஹா...உன் தோளில் கண்மூட வேண்டும்
கண்மூடும் நேரத்தில் பொன்பூவின் தேகத்தில்
தள்ளாடும் வண்டாக வேண்டும்
ஆஹா...தள்ளாடும் வண்டாக வேண்டும்
செவ்வானம் தேன் சிந்தும் உல்லாச பாடங்கள்
இதழோரம் கற்றாக வேண்டும்
ஆஹா...இதழோரம் கற்றாக வேண்டும்
தொட்டாலும் பட்டாலும் கொண்டாடும் காலத்தில்
வெட்கங்கள் பூமாலை போடும்
ஆஹா...வெட்கங்கள் பூமாலை போடும்

மாலைக்கு பின்னாலே காலங்கள் பூத்துவர
மானோடு நான் பாட வேண்டும்
ஆஹா...மானோடு நான் பாட வேண்டும்
வானத்தில் பூவாகி மேகத்தில் தேன்பாய
மௌனத்தில் நாம் வாழ வேண்டும்
ஆஹா...மௌனத்தில் நாம் வாழ வேண்டும்
ராகங்கள் பாவங்கள் தாளங்கள் எல்லாமே
மோகத்தில் ஊடாட வேண்டும்
ஆஹா...மோகத்தில் ஊடாட வேண்டும்
தாகங்கள் தீராமல் பருவங்கள் மாறாமல்
தேகங்கள் சுகம் காண வேண்டும்
ஆஹா...தேகங்கள் சுகம் காண வேண்டும்

உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது
கனவுகளில் உன்னைக்கண்டு வெட்கம் வந்தது
அந்த நினைவுகளில் ஆசை என்னை கட்டிக்கொண்டது

http://www.musicplug.in/multiple_song_flashplayer.php?songid=29795&br=high&id=5596&songname=Uthadugalil_thangarangan_pj---Ps-Poor&page=movies

Friday, November 7, 2008

chinna pUngkiLi - paarvadhi ennai pAradi

பாடல்: சின்னப்பூங்கிளி
திரைப்படம்: பார்வதி என்னை பாரடி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா

சின்னப்பூங்கிளி சிந்தும் தேன்மொழி இனிக்கும் நன்நாளிது
வண்ணப்பூங்கொடி வந்ததோ மடி இணையும் பொன்நாளிது
சோலையோ நடுச்சாலையோ தேடினேன் உனையே
காலையோ அந்தி மாலையோ ஏங்கினேன் இதயம்...இனி உன் சரணம்

சின்னப்பூங்கிளி சிந்தும் தேன்மொழி இனிக்கும் நன்நாளிது
வண்ணப்பூங்கொடி வந்ததோ மடி இணையும் பொன்நாளிது

ஆசைதீர பேசவேண்டும் பூங்காவிலே
ஆயுள் காலம் யாவும் உன்னை நீங்காமலே
உன்னைச்சேர ஏங்கும் மாது எல்லைக்கோட்டை தாண்டாதா
தென்றல் காற்றை தீண்டச்சொல்லி தென்னங்கீற்று வேண்டாதா
வேண்டினால் விரல் தீண்டுமே தீண்டினால் சுகம் தோன்றுமே
தூங்குமோ இரு நேத்திரம் தாங்குமோ இதயம்...இனி உன் சரணம்

சின்னப்பூங்கிளி சிந்தும் தேன்மொழி இனிக்கும் நன்நாளிது
வண்ணப்பூங்கொடி வந்ததோ மடி இணையும் பொன்நாளிது

காலை மாலை கேட்பதுந்தன் ஆலாபனம்
காலம் தோறும் காண்பதுந்தன் ஆராதனம்
உன்னைத்தீண்டும் கைகள் வேறு பெண்ணைத்தீண்டி வாழாது
சங்கப்பாடல் என்றும் இங்கே சந்தம் நீங்கிப்போகாது
காதலே ஒரு காவியம் நீண்டநாள் நிற்கும் ஓவியம்
கண்மணி என்னைக்கூடவா நாளெல்லாம்...இனி உன் சரணம்

சின்னப்பூங்கிளி சிந்தும் தேன்மொழி இனிக்கும் நன்நாளிது
வண்ணப்பூங்கொடி வந்ததோ மடி இணையும் பொன்நாளிது
சோலையோ நடுச்சாலையோ தேடினேன் உனையே
காலையோ அந்தி மாலையோ ஏங்கினேன் இதயம்...இனி உன் சரணம்

சின்னப்பூங்கிளி சிந்தும் தேன்மொழி இனிக்கும் நன்நாளிது
வண்ணப்பூங்கொடி வந்ததோ மடி இணையும் பொன்நாளிது

http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=

Tuesday, November 4, 2008

isaikkavO - malargaLE malarungaL

பாடல்: இசைக்கவோ
திரைப்படம்: மலர்களே மலருங்கள்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & எஸ்.ஜானகி
இசை: கங்கை அமரன்

இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண்மூடி மௌனமாய் நாண மேனியில்
கோலம் போடும் போது...இசைக்கவோ

ராசலீலை வாசல் திறப்பாய் பூஜை நேரத்தில்
ராகதாள மேடை அழைப்பாய் பாதி ஜாமத்தில்
வீதிவலம் போகும் நாளிலே
தேவன் தோளிலே மலர்வேனே
நாதஸ்வரம் பாட சூழ்ந்து
நலம் காண வாழ்த்தவே தருவேனே
சிரிப்பில் புது ராகமாளிகை...நீ

ரசிக்கவோ நம் கல்யாண ராகம்
கண்மூடி மௌனமாய் நாண மேனியில்
கோலம் போடும் போது...ரசிக்கவோ

நிசநிசக பகபகரிச நிசநிசக
கமகமதமரி ரிககமரிநி
ரிரிநி ரிகரி கமக மதம மதநிரிச


பாதிமூடி ஜாதி மலர்போல் பார்வை ஏங்குதே
ராஜவீதி மார்பில் மலர்வேன் பாரிஜாதமாய்
போதும் இது காதல் போதையே
காணும் பூவையே போராடு
மீதி வரும் நாளில் நாமும்
திருநாளைக் காணவே நீ ஆடு
ரசிப்பில் ஒரு ராஜபல்லவன்...நீ

இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண்மூடி மௌனமாய் நாண மேனியில்
கோலம் போடும் போது...ரசிக்கவோ

Monday, November 3, 2008

maunamalla mayakkam - azhagu

பாடல்: மௌனமல்ல மயக்கம்
திரைப்படம்: அழகு
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & எஸ்.ஜானகி
இசை: ஜி.கே.வெங்கடேஷ்

மௌனமல்ல...மயக்கம்
இளமை ரதங்கள் வெள்ளோட்டம்
சலனம் பாரிவையில் சரசம் வார்த்தையில்
மெய் சிலிர்க்கும் வேளையில்

ஏதோ பேச வேண்டும் என்னை ஏதோ பழகத் தூண்டும்
ஏதோ பேச வேண்டும் என்னை ஏதோ பழகத் தூண்டும்
ஆனால் வார்த்தையில்லை அது ஏன் சொல்லு கண்ணா
அதுதான் உன் மனம் அறியா பெண் மனம்
ஓர் அலைபோல் போய் வரும்

மௌனமல்ல...மயக்கம்
இளமை ரதங்கள் வெள்ளோட்டம்
சலனம் பார்வையில் சரசம் வார்த்தையில்
மெய் சிலிர்க்கும் வேளையில்

நதியில் இரண்டு தோணி இரண்டும் இரண்டு பாணி
நதியில் இரண்டு தோணி இரண்டும் இரண்டு பாணி
இணைந்தே பயணம் செல்ல நினைத்தால் என்ன சொல்ல
ஸ்தலங்கள் இரண்டுதான் கரையோ ஒன்றுதான்
நாம் காண்போம் இன்றுதான்

மௌனமல்ல...மயக்கம்
இளமை ரதங்கள் வெள்ளோட்டம்
சலனம் பார்வையில் சரசம் வார்த்தையில்
மெய் சிலிர்க்கும் வேளையில்

தென்றல் காற்று தீண்டும் இந்த தேகம் குளிர வேண்டும்
ஆனால் கொதிப்பதென்ன அது ஏன் சொல்லு கண்ணா
நெருப்பாய் கொதிப்பதும் நீராய் குளிர்வதும்
உன் நினைவின் நாடகம்

மௌனமல்ல...மயக்கம்
இளமை ரதங்கள் வெள்ளோட்டம்
சலனம் பார்வையில் சரசம் வார்த்தையில்
மெய் சிலிர்க்கும் வேளையில்

Friday, October 31, 2008

kaNNE azhagiya kaNNE - manadhil oru paattu

பாடல்: கண்ணே அழகிய கண்ணே
திரைப்படம்: மனதில் ஒரு பாட்டு
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா

கண்ணே அழகிய கண்ணே கம்பன் கற்பனை பெண்ணே

கண்ணே அழகிய கண்ணே கம்பன் கற்பனை பெண்ணே
கண்ணே அழகிய கண்ணே கம்பன் கற்பனை பெண்ணே
பாராமல் விழிகளும் தூங்காது பேசாமல் என் மனம் தாங்காது
கனவிலும் நினைவிலும் உன் முகம் தெரியுது

கண்ணா மன்மத கண்ணா காதல் தேசத்து மன்னா

ஆனந்த வெள்ளம் இங்கே ஆறாக ஓடும்
ஆசைக்கு பெண்மை அங்கே அணை போட்டு மூடும்
ஆனந்த வெள்ளம் இங்கே ஆறாக ஓடும்
ஆசைக்கு பெண்மை அங்கே அணை போட்டு மூடும்
இதழ்களில் ஊறும் இன்ப தேன் விருந்தாகும்
பருகிடும் போது பெண்மை நாணத்தில் ஒடும்
பூமேனி...தாங்காது...என்னாசை...தீராது
பிடிவாத...மாறாது...மணமானால்...தப்பேது
கனவிலும் நினைவிலும் உன் முகம் தெரியுது

கண்ணா மன்மத கண்ணா காதல் தேசத்து மன்னா

காலங்கள் தோறும் எந்தன் காதல்தான் வாழும்
ராகங்கள் பாடும் நெஞ்சம் காலத்தை மாற்றும்
காலங்கள் தோறும் எந்தன் காதல்தான் வாழும்
ராகங்கள் பாடும் நெஞ்சம் காலத்தை மாற்றும்
மோகத்தை தேடும் அன்பே பாதையை மாற்று
பாதையை மாற்றும் பெண்ணே மாலையை சூட்டு
நேரங்கள்...கூடட்டும்...சொந்தங்கள்...வாழ்த்தட்டும்
உள்ளங்கள்...சேரட்டும்...மேளங்கள்...கொட்டட்டும்
கனவிலும் நினைவிலும் உன் முகம் தெரியுது

கண்ணே அழகிய கண்ணே கம்பன் கற்பனை பெண்ணே
கண்ணா மன்மத கண்ணா காதல் தேசத்து மன்னா
பாராமல் விழிகளும் தூங்காது பேசாமல் என் மனம் தாங்காது
கனவிலும் நினைவிலும் உன் முகம் தெரியுது
கண்ணா மன்மத கண்ணா...கண்ணே அழகிய கண்ணே

kalaimAmaNiyE suvaimAnkaniyE - paNam peN paasam

பாடல்: கலைமாமணியே சுவை மாங்கனியே
திரைப்படம்: பணம் பெண் பாசம்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & வாணிஜெயராம்

கலைமாமணியே சுவை மாங்கனியே
எந்தன் சிங்கார செவ்வானமே...அன்பே சங்கீதமே
மணிமாளிகையே திருவாசகமே
ஒளிமங்காத பொன்னாரமே...அன்பே சங்கீதமே

கலைமாமணியே சுவை மாங்கனியே
எந்தன் சிங்கார செவ்வானமே...அன்பே சங்கீதமே
மணிமாளிகையே திருவாசகமே
ஒளிமங்காத பொன்னாரமே...அன்பே சங்கீதமே

தேரிலே உலாவரும் செந்தூரப்பூ வண்ணமே
தேனிலே பலா விழும் இன்பம் உன் கை வண்ணமே
தேரிலே உலாவரும் செந்தூரப்பூ வண்ணமே
தேனிலே பலா விழும் இன்பம் உன் கை வண்ணமே
இணைந்தே அருந்தும் இளமை விருந்து
இணைந்தே அருந்தும் இளமை விருந்து

மணிமாளிகையே திருவாசகமே
ஒளிமங்காத பொன்னாரமே...அன்பே சங்கீதமே
கலைமாமணியே சுவை மாங்கனியே
எந்தன் சிங்கார செவ்வானமே...அன்பே சங்கீதமே

ஆசை நீரில் ஆடிடும் ஓடங்கள் நம் உள்ளமே
ஆடும் வேகம் கூடினால் ஆனந்த மீன் துள்ளுமே
ஆசை நீரில் ஆடிடும் ஓடங்கள் நம் உள்ளமே
ஆடும் வேகம் கூடினால் ஆனந்த மீன் துள்ளுமே
நினைத்தால் இனிக்கும் அணைத்தால் அடங்கும்
நினைத்தால் இனிக்கும் அணைத்தால் அடங்கும்

கலைமாமணியே சுவை மாங்கனியே
எந்தன் சிங்கார செவ்வானமே...அன்பே சங்கீதமே
மணிமாளிகையே திருவாசகமே
ஒளிமங்காத பொன்னாரமே...அன்பே சங்கீதமே

வானவீதி மீதிலே மேகத்தின் ஊர்கோலமோ
நானும் நீயும் காண்பது மோகத்தின் போர்க்கோலமோ
வானவீதி மீதிலே மேகத்தின் ஊர்கோலமோ
நானும் நீயும் காண்பது மோகத்தின் போர்க்கோலமே
ஜகத்தை மயக்கும் சுகத்தில் மிதப்போம்
ஜகத்தை மயக்கும் சுகத்தில் மிதப்போம்

கலைமாமணியே சுவை மாங்கனியே
எந்தன் சிங்கார செவ்வானமே...அன்பே சங்கீதமே

http://www.musicplug.in/multiple_song_flashplayer.php?songid=29970&br=high&id=5596&songname=41-Kalaimammaniyae&page=movies

anuraagamE undhan iLandhEgamE - kiLippiLLai

பாடல்: அனுராகமே உந்தன் இளந்தேகமே
திரைப்படம்: கிளிப்பிள்ளை
பாடியவர்: பி.ஜெயசந்திரன்

அனுராகமே உந்தன் இளந்தேகமே

அனுராகமே உந்தன் இளந்தேகமே
அணையாத ஒளி சிந்தும் எழில் தீபமே
அனுராகமே உந்தன் இளந்தேகமே

பாரிஜாத பூவை சூடி தேவலோக தேரிலேறி
மாலைசூட வரும் நேரம்...பாவை மேனி அரங்கேறும்
கண்ணோடு கண்ணாகி நெஞ்சோடு ஒன்றாகி
பாடும் காதல் ராகம் வாழ்வில் சேர்க்கும் இன்பமே

அனுராகமே உந்தன் இளந்தேகமே
அணையாத ஒளி சிந்தும் எழில் தீபமே
அனுராகமே உந்தன் இளந்தேகமே

பூவில்லாத சோலையாக நீரில்லாத பாலையாக
வாடும் ராமனது சீதை...கீதை கண்ணனது ராதை
மண்கூட உன்னாலே பொன்னாகும் பூவாகும்
பூவைப்போல பாவை நாளை தேனை சிந்துமே

அனுராகமே உந்தன் இளந்தேகமே
அணையாத ஒளி சிந்தும் எழில் தீபமே
அனுராகமே உந்தன் இளந்தேகமே

http://www.musicplug.in/multiple_song_flashplayer.php?songid=29971&br=high&id=5596&songname=45-Anu-Raagamae&page=movies

Thursday, October 30, 2008

nandhA nI en nilA - nandhA nI en nilA

பாடல்: நந்தா நீ என் நிலா
திரைப்படம்: நந்தா நீ என் நிலா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: வி.தக்ஷ்ணாமூர்த்தி

நந்தா என் நிலா...

நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ...வா
விழி...மீனாடும் விழி மொழி
தேனாடும் மொழிக் குழல்
பூவாடும் குழல் எழில் நீ நாடும் எழில்
மின்னி வரும் சிலையே மோஹன கலையே
வண்ண வண்ண ஒளியே வானவரமுதே
ஆசை நெஞ்சில் தெய்வம் நீயே
ஆடி நிற்கும் தீபம் நீயே
பேசுகின்ற வீணை நீயே
கனியிதழ் அமுதினை வழங்கிட
அருகினில் வா

நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ...வா

ஆயிரம் மின்னல் ஓர் உருவாகி
ஆயிழையாக வந்தவள் நீயே
அகத்தியன் போற்றும் அருந்தமிழ் நீயே
அருந்ததி போலே பிறந்து வந்தாயே

நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ...வா

ஆகமம் கண்ட சீதையும் இன்று
ராகவன் நானென்று திரும்பி வந்தாள்
மேகத்திலாடும் ஊர்வசி எந்தன்
போகத்திலாட இறங்கி வந்தாளோ

நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ...வா

sarigamapadhani - raaga bandhangaL

பாடல்: சரிகமபதநி
திரைப்படம்: ராக பந்தங்கள்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணிஜெயராம்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்

சரிகமபதநி எனும் சப்தஸ்வர ஜாலம்

சரிகமபதநி எனும் சப்தஸ்வர ஜாலம்
உரையுடனே புரிந்து கொண்டால் சங்கீதமாகும்
சரிகமபதநி எனும் சப்தஸ்வர ஜாலம்
முறையுடனே புரிந்து கொண்டால் சங்கீதமாகும்
சரிகமபதநிச சநிதபமகரிச...சரிகமபதநிச சநிதபமகரிச

வண்ண மலர்களில் சரம்
தொடுத்தால் பூமாலையாகும்
வண்டு துணை கொண்டு ஸ்வரம்
தொடுத்தால் பாமாலையாகும்
ராகங்கள்...தாளங்கள்...கீதங்கள்
சரிமகரிசரிகரிம ரிமபதமபகபரிம

சரிகமபதநி எனும் சப்தஸ்வர ஜாலம்
முறையுடனே புரிந்து கொண்டால் சங்கீதமாகும்

ராகம் அற்புத ராகம்
ஆ ஆ ஆ....ராகம் அற்புத ராகம்
கீதம் இன்னிசை கீதம்
இறைவனை வழிபடவே முன்னோர்கள்
இசையே சிறந்ததென கண்டார்கள்
திருப்புகழ் திருமுறை காவடிச்சிந்துகள்
ஆண்டாள் திருப்பாவை அனைத்திலும் இறைவனே
திருப்புகழ் திருமுறை காவடிச்சிந்துகள்
ஆண்டாள் திருப்பாவை அனைத்திலும் இறைவனே
அனைத்திலும் இறைவனே அனைத்திலும் இறைவனே
அனைத்திலும்...இறைவனே

ச..ரிசரிச...நி..சநிசரி...த..நிதபத
சரிக ரிகம கமப மபத பதநி தநிச
சசரிநி ததமப மபமக
கம..கமக...மபத....பதநி.....தநிச
சரிம..கரி சரிகரிச ரிமபதமப தபமகரிச

சரிகமபதநி எனும் சப்தஸ்வர ஜாலம்
முறையுடனே புரிந்து கொண்டால் சங்கீதமாகும்

Wednesday, October 29, 2008

raagam thaaLam - kizhakkE oru kaadhalpAttu

பாடல்: ராகம் தாளம்
திரைப்படம்: கிழக்கே ஒரு காதல்பாட்டு
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா

ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்
இது ஒரு காமன் கீதம் இன்ப மயம்
ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்
இது ஒரு காமன் கீதம் இன்ப மயம்
பெண்மகள் தங்கமேனி சந்தனம்
தந்தேன் உந்தன் சீதனம்
பெண்மை ஒன்றுதான் தெய்வீகம்

ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்
இது ஒரு காமன் கீதம் இன்ப மயம்

எத்தனை இரவு கனவு வந்தது
இன்று கண்டது பொய்யில்லை
பந்தி வைக்கவே ஆசை உள்ளது
பரம்பரை நாணம் விடவில்லை
கட்டிலில் மெத்தையில் இன்பமென்ற சொந்தம்
சேவல்கள் கூவியும் விலகிடாத பந்தம்
மரம்மீது பறவை ஆவோமா
சிறகோடு வானம் போவோமா
நீலவானில் காதல் பாடி
நிலவைத் தேடி போவோம்
கோடைக்காலம் போன பின்பு
மீண்டும் மண்ணில் சேர்வோம்

ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்
இது ஒரு காமன் கீதம் இன்ப மயம்

காதலென்னும் ஓர் புதிய பள்ளியில்
உந்தன் மாணவி ஆனேனே
காமன் என்பவன் நமது பள்ளியில்
பாடம் கேட்கிறான் பெண்மானே
நீரிலே நீர்த்துளி சங்கமிக்கும் வேளை
ஆயிரம் தூவிடும் பெண்மையென்ற சாலை
நான் என்ற வார்த்தை முடியட்டுமே
நாம் என்ற வார்த்தை தொடங்கட்டுமே
மாரிக்காலம் போன பின்பு பூமி எண்ணும் பூக்கள்
எந்தன் வாழ்வில் காண வேண்டும் ஈரமான நாட்கள்

ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்
இது ஒரு காமன் கீதம் இன்ப மயம்
பெண்மகள் தங்கமேனி சந்தனம்
தந்தேன் உந்தன் சீதனம்
பெண்மை ஒன்றுதான் தெய்வீகம்

ஆ...ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்
இது ஒரு காமன் கீதம் இன்ப மயம்

ravivarman OviyamO - pudhu vayal

பாடல்: ரவிவர்மன் ஓவியமோ
திரைப்படம்: புது வயல்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: அரவிந்த்

ரவிவர்மன் ஓவியமோ

ரவிவர்மன் ஓவியமோ
நான் தினம் மோஹனமோ
ரவிவர்மன் ஓவியமோ
நான் தினம் மோஹனமோ
தென்றல் காற்றோ மின்னல் கீற்றோ
உன் சதங்கையொலி கலகலவென
குலுங்க வரும் தேவதையோ
வானில் வரும் தாரகையோ

ரவிவர்மன் ஓவியமோ
நான் தினம் மோஹனமோ

கபதசத தசரிகரி சரிகப கரிகப தசதப
தசரிக ரிசகரி ககரிரி சசததபப ரிரிசசததபபகக
தரிகிட தரிகிட தோம் தரிகிட தரிகிட தோம்
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
தலாங்கு தகதிமி தலாங்கு தகதிமி தரிகிட தோம்


தா தத்தி தாவென்று நீ தத்தி ஆடென்று
காத்துக்கு பாட்டொன்று யார் தந்தது
நீ வந்த நேரத்தில் வானத்தில் மேகத்தில்
தேன் சிந்தும் வான்வில்லை யார் வைத்தது
விழிகளில் கவிநயமோ விரல்களில் அபிநயமோ
இயற்கையின் அதிசயமோ இளமையின் ரகசியமோ
பாதங்கள் மண்மீது மேவாமலே
பார்க்கின்ற என்னுள்ளம் நோகாமலே
அழகே...வருவாய்...அருகே...இளமயிலே புதுவயலே

ரவிவர்மன் ஓவியமோ
நான் தினம் மோஹனமோ

கூ குக்கூ கூவென்று ஆனந்த பாட்டொன்று
பாடட்டும் பாடட்டும் கோகிலங்கள்
தேன் சொட்டும் பூவொன்று பூஞ்சிட்டு நானென்று
ஆடட்டும் ஆடட்டும் நாட்டியங்கள்
அடிமுதல் முடிவரையும் அமுதத்தின் நதி வழியும்
எவனடி உனை படைத்தான் இளமையை சிறை வடித்தான்
நீர் கொண்டு போகின்ற மேகங்களே
தேர் கொண்டு பூமிக்கு வாருங்களே
மயிலும்...பரதம்...பயிலும்...கலைநிலவு வரும்பொழுது

ரவிவர்மன் ஓவியமோ
நான் தினம் மோஹனமோ
தென்றல் காற்றோ மின்னல் கீற்றோ
உன் சதங்கையொலி கலகலவென
குலுங்க வரும் தேவதையோ
வானில் வரும் தாரகையோ

ரவிவர்மன் ஓவியமோ
நான் தினம் மோஹனமோ

vaan vandhu thEn sindhum nEram - engaL thaaykkulamE varuga

பாடல்: வான் வந்து தேன் சிந்தும் நேரம்
திரைப்படம்: எங்கள் தாய்க்குலமே வருக
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா

வான் வந்து தேன் சிந்தும் நேரம்
ஏன் இந்த பூமிக்கு நாணம்
வான் வந்து தேன் சிந்தும் நேரம்
ஏன் இந்த பூமிக்கு நாணம்
காதல் வேகத்தில் இளமனம் பாடும் ராகத்தில்
சுப தினமே...ஆ ஆ...மலர்கிறதே...ஆ ஆ

வான் வந்து தேன் சிந்தும் நேரம்
ஏன் இந்த பூமிக்கு நாணம்

தாமரைப்பாதம் தரையில் நடந்தால்
சந்தன பூக்களும் வாடும்
புன்னகை சோலை இதழில் மலர்ந்தால்
போதையில் என் மனம் ஆடும்
மல்லிகைப்பூவில் மஞ்சம் விரித்தேன்
மல்லிகைப்பூவில் மஞ்சம் விரித்தேன்
என்னை கொண்டாடு அதுவரை ஏக்கம் தீராது
என்னை கொண்டாடு அதுவரை ஏக்கம் தீராது

வான் வந்து தேன் சிந்தும் நேரம்
ஏன் இந்த பூமிக்கு நாணம்

வாழ்க்கையில் காணா வசந்தம் இன்று
வந்தது உன் துணையாலே
கொடியினில் இல்லா கோவைப்பழங்கள்
கனிந்தது உன் இதழ்மேலே
பறவையைப்போலே கனியை நீயும்
பறவையைப்போலே கனியை நீயும்
காயம் செய்யாதே ஆசையை நெஞ்சில் தூவாதே
காயம் செய்யாதே ஆசையை நெஞ்சில் தூவாதே

வான் வந்து தேன் சிந்தும் நேரம்
ஏன் இந்த பூமிக்கு நாணம்
காதல் வேகத்தில் இளமனம் பாடும் ராகத்தில்
சுப தினமே...ஆ ஆ...மலர்கிறதே...ஆ ஆ

வான் வந்து தேன் சிந்தும் நேரம்...ஆ ஆ
ஏன் இந்த பூமிக்கு நாணம்...ஆ ஆ

http://www.esnips.com/doc/65171837-fac1-45e8-b4c9-8218d39f60a1/Vaan-Vandhu

kaNNE vaa kaNmaNiyE vaa - kuzhandhai yEsu

பாடல்: கண்ணே வா கண்மணியே வா
திரைப்படம்: குழந்தை இயேசு
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
இசை: ஷ்யாம்

(பொன்னோடை கீழ்வானில் பாய்கின்றது
பூபாளம் என் காதில் கேட்கின்றது
தீராத துன்பங்கள் தீர்கின்றது
என் தேவன் உன் வண்ணம் நேர் நின்றது)

கண்ணே வா கண்மணியே வா
கண்ணே வா கண்மணியே வா
விடிகாலை பொழுதாக ஒளிதர நீ வா
திருச்சபை முழுதும் அருள்மழை
பொழியும்...குழந்தை இயேசுவே
சரணம் சரணம் திருவடி சரணம்
கண்ணே வா கண்மணியே வா
விடிகாலை பொழுதாக ஒளிதர நீ வா

(ஆற்றாக ஊற்றாக வந்தானவன்
கண்ணோடும் நெஞ்சோடும் நின்றானவன்
நேற்றாகி இன்றாகி வாழ்கின்ற‌வன்
செய்கின்ற‌ பாவ‌ங்க‌ள் தீர்க்கின்ற‌வ‌ன்)

நினையாத முன்னே அழகான பொன்னே
வரவேண்டும் இங்கே என் தேவனே
ஒருபோதும் உன்னை மறவாது நாளும்
நான் பாட வேண்டும் உன் நாமமே
மன ஆலயம் உனதல்லவோ
மன ஆலயம் உனதல்லவோ
குழந்தை இயேசுவே...சரணம் சரணம் திருவடி சரணம்

கண்ணே வா கண்மணியே வா
விடிகாலை பொழுதாக ஒளிதர நீ வா

(ஆகாய‌ ராஜாங்க‌ம் ஆள்கின்ற‌வ‌ன்
அன்பென்னும் வண்ணத்தில் வாழ்கின்றவன்
மேய்பானும் காப்பானும் தானானவன்
வேதங்கள் போதங்கள் எல்லாமவன்)

ஒருகோடி செல்வம் இருந்தென்ன லாபம்
எதிர்காலம் எங்கள் பேர் சொல்லுமோ
உன் போல பிள்ளை என் வீட்டில் இல்லை
மனம் கொண்ட ஏக்கம் நான் சொல்லவோ
அருளன்னையின் ஒரு பிள்ளையே
அருளன்னையின் ஒரு பிள்ளையே
குழந்தை இயேசுவே...சரணம் சரணம் திருவடி சரணம்

கண்ணே வா கண்மணியே வா
விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா
திருச்சபை முழுதும் அருள்மழை பொழியும்
குழந்தை இயேசுவே...சரணம் சரணம் திருவடி சரணம்

(பொன்னோடை கீழ்வானில் பாய்கின்றது
பூபாளம் என் காதில் கேட்கின்றது
தீராத துன்பங்கள் தீர்கின்றது
என் தேவன் உன் வண்ணம் நேர் நின்றது)