அக்னி நட்சத்திரம் - இளையராஜா (1988)

பாடல்: நின்னுக்கோரி வர்ணம்
பாடியவர்: சித்ரா

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கென தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க இதழ்மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே அனுதினமும்
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும்

உன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்க
உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க
மொட்டுத்தான் மெல்லத்தான் பூபோல் பூக்க
தொட்டுப்பார் கட்டிப்பார் தேகம் வேர்க்க
பூஜைக்காக வாடுது தேவன் உன்னைத்தேடுது
ஆசை நெஞ்சில் ஏங்குது ஆட்டம் போட்டுத்தூங்குது
உன்னோடு நான் ஓயாமல் தேனாற்றிலே நீராட நினைக்கையில்

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கென தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க இதழ்மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே அனுதினமும்
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும்

பெண்ணல்ல வீணை நான் நீதான் மீட்டு
என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு
இன்றல்ல நேற்றல்ல காலம் தோறும்
உன்னோடு பின்னோடும் காதல் நெஞ்சம்
வண்ணப்பாவை மோகனம் வாடிப்போன காரணம்
கன்னித்தோகை மேனியில் மின்னல் பாய்ச்சும் வாலிபம்
உன் ஞாபகம் நீங்காமல் என் நெஞ்சிலே தீயாக கொதிக்குது

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கென தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க இதழ்மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே அனுதினமும்
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும்

************************************
பாடல்: ஒரு பூங்காவனம்
பாடியவர்: எஸ்.ஜானகி

ஒரு பூங்காவனம் புது மணம்
அதில் ரோமாஞ்சனம் தினம் தினம்
உலா வரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே
ஒரு பூங்காவனம் புது மணம்

நான் காலை நேரத் தாமரை
என் கானம் யாவும் தேன்மழை
நான் கால் நடக்கும் தேவதை
என் கோயில் இந்த மாளிகை
என்னோடு தென்றல் வந்து வீசிடும்
என்னோடு தோழி போல பேசிடும்

உலா வரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே
ஒரு பூங்காவனம் புது மணம்

நான் வானவில்லை வேண்டினால்
ஓர் விலை கொடுத்து வாங்குவேன்
வெண் மேகக்கூட்டம் யாவையும்
என் மெத்தையாக்கித் தூங்குவேன்
சந்தோஷப் பூக்கள் எந்தன் சோலையில்
சங்கீதம் பாடும் அந்தி மாலையில்

உலா வரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே
ஒரு பூங்காவனம் புது மணம்

உலா வரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே
ஒரு பூங்காவனம் புது மணம்

************************************

பாடல்: ரோஜாப்பூ ஆடி வந்தது
பாடியவர்: எஸ்.ஜானகி

ரோஜாப்பூ ஆடி வந்தது ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு பூவின் தேனில் நீராடு
பேசிப் பேசி தீராது ஆசை என்றும் ஆறாது
லவ் லவ் என்பதா சொல் சொல் மன்மதா
சொன்னால் போதுமா தாகம் தீருமா
ரோஜாப்பூ ஆடி வந்தது ராஜாவை தேடி வந்தது

நேற்று நீர் விட்டது இன்று வேர் விட்டது
நெஞ்சில் அம்மாடியோ நூறு பூ பூத்தது
சின்னஞ்சிறு பருவம் இன்னும் கொதிப்பதோ
சொல்லிச்சொல்லி பொழுதை இன்னும் கழிப்பதோ
தொடு தொடு தொடாமல்
நிலாவின் மேனி நாளெல்லாம் தேய்ந்ததே
ரோஜாப்பூ ஆடி வந்தது ராஜாவை தேடி வந்தது

நீயும் அச்சம் விடு நூறு முத்தம் இடு
மீதம் மிச்சம் எடு மேலும் சொல்லிக்கொடு
அந்திப்பகல் இரவு சிந்தை துடித்தது
அந்தப்புர நினைவில் சிந்து படித்தது
இதோ இதோ உன்னாலே
விடாமல் மோகம் வாட்டுது தாங்குமோ

ரோஜாப்பூ ஆடி வந்தது ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு பூவின் தேனில் நீராடு
பேசிப் பேசி தீராது ஆசை என்றும் ஆறாது
லவ் லவ் என்பதா சொல் சொல் மன்மதா
சொன்னால் போதுமா தாகம் தீருமா
ரோஜாப்பூ ஆடி வந்தது ராஜாவை தேடி வந்தது

************************************
பாடல்: ராஜா ராஜாதி ராஜன்
பாடியவர்: இளையராஜா

ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா
ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா
நேற்று இல்லே நாளை இல்லே எப்பவும் நான் ராஜா
நேற்று இல்லே நாளை இல்லே எப்பவும் நான் ராஜா
கோட்டை இல்லே கொடியும் இல்லே அப்பவும் நான் ராஜா

ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா

வரவும் செலவும் இரண்டும் இன்றி
வரவும் செலவும் உண்டு
உறவும் பகையும் உலகில் இன்றி
உறவும் பகையும் உண்டு
வரவும் செலவும் இரண்டும் இன்றி
வரவும் செலவும் உண்டு
உறவும் பகையும் உலகில் இன்றி
உறவும் பகையும் உண்டு
நெஞ்சம் விளையாடுது நித்தம் இசைபாடுது
எங்கும் சுகமானது எங்கள் வசமானது
விழியில் தெரியும் அழகு எதுவும் இனிமேல் நமது
விடியும் வரையில் கொண்டாட்டம் தான்
விழியில் தெரியும் அழகு எதுவும் இனிமேல் நமது
விடியும் வரையில் கொண்டாட்டம் தான்
நிலவும் மலரும் செடியும் கொடியும்
கடலும் நதியும் கவிதை சொல்லும்

ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா
நேற்று இல்லே நாளை இல்லே எப்பவும் நான் ராஜா
நேற்று இல்லே நாளை இல்லே எப்பவும் நான் ராஜா
கோட்டை இல்லே கொடியும் இல்லே அப்பவும் நான் ராஜா

ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா

இடையும் உடையும் இரண்டும் இன்றி
இடையும் உடையும் உண்டு
மானும் மீனும் இரண்டும் இன்றி
மானும் மீனும் உண்டு
இடையும் உடையும் இரண்டும் இன்றி
இடையும் உடையும் உண்டு
மானும் மீனும் இரண்டும் இன்றி
மானும் மீனும் உண்டு
உள்ளம் அலைபாயுது எண்ணம் அசைபோடுது
கண்கள் வலைவீசுது காதல் விலைபேசுது
விழியில் பொங்கும் அருவி மழலை கொஞ்சும் குருவி
தெருவில் சென்றால் தேரோட்டம் தான்
விழியில் பொங்கும் அருவி மழலை கொஞ்சும் குருவி
தெருவில் சென்றால் தேரோட்டம் தான்
நிலவும் மலரும் செடியும் கொடியும்
கடலும் நதியும் கவிதை சொல்லும்

ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா

ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா
நேற்று இல்லே நாளை இல்லே எப்பவும் நான் ராஜா
நேற்று இல்லே நாளை இல்லே எப்பவும் நான் ராஜா
கோட்டை இல்லே கொடியும் இல்லே அப்பவும் நான் ராஜா

ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா
ஹா ஹா கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா

ஹா ஹா ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா
ஹா ஹா கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா

************************************

பாடல்: தூங்காத விழிகள் ரெண்டு
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகி

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

மாமர இலை மேலே...ஆஆ...ஆஆ...ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ...ஆஆஆ ஆஆ
மாமர இலை மேலே மார்கழி பனிபோலே
பூமகள் மடிமீது நான் தூங்கவோ
மாமர இலை மேலே மார்கழி பனிபோலே
பூமகள் மடிமீது நான் தூங்கவோ
ராத்திரி பகலாக ஒருபோதும் விலகாமல்
ராஜனைக் கையேந்தி தாலாட்டவோ
நாளும் நாளும் ராகம் தாளம்
சேரும் நேரம் தீரும் பாரம்
ஆஆ...ஆஆ...ஆஆ...ஆஆ ஆஆ ஆஆ

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேரும் கதை அல்லவோ
மாதுளம் கனியாட மலராட கொடியாட
மாருதம் உறவாடும் கலை என்னவோ
வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற
வார்த்தையில் விளங்காத சுவை அல்லவோ
மேலும் மேலும் மோகம் கூடும்
தேகம் யாவும் கீதம் பாடும்
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ...ஆஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ...ஆஆ ஆஆ ஆஆ

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

************************************

பாடல்: வா வா அன்பே அன்பே
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகி

வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்

வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே

நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும்
காலம் தோறும் என்னைச் சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரைக்கூறும் பொன்மணி

காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்
காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்

நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே
நீயின்றி ஏது பூவைத்த மானே
இதயம் முழுதும் எனது வசம்
வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே

கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம்
கானல் அல்ல காதல் என்னும் காவியம்
அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம்
பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்

காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது

உன் தோளில் தானே பூமாலை நானே
சூடாமல் போனால் வாடாதோ மானே
இதயம் முழுதும் எனது வசம்
வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே

உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்
வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
************************************

No comments: