Tuesday, November 22, 2011

azhagaana mEni shruthi sErkkum nEram - aasai manaivi

பாடல்: அழகான மேனி ஸ்ருதி சேர்க்கும் நேரம்
திரைப்படம்: ஆசை மனைவி
இசை: ஷங்கர் காணேஷ்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

அழகான மேனி ஸ்ருதி சேர்க்கும் நேரம்
அழகான மேனி ஸ்ருதி சேர்க்கும் நேரம்
சுகமான ராகம் நான் பாட வேண்டும்
அழகான மேனி ஸ்ருதி சேர்க்கும் நேரம்

இடையோடு கை சேர்க்கும் போது
இதழோடு இதழ் சேர்க்கும் போதை
இடையோடு கை சேர்க்கும் போது
இதழோடு இதழ் சேர்க்கும் போதை
ஆடை தடை போடும்
விரல் தானாகவே தந்தி மீட்டும்
காதல் தரும் கூடல்
என்றும் தானாக சொர்க்கங்கள் காட்டும்
அழகான மேனி ஸ்ருதி சேர்க்கும் நேரம்

கன்னங்கள் மெதுவாக சேரும்
கல்யாண அங்கங்கள் கூடும்
சூடா என துள்ளும்
அது ஆறாத தாகத்தைக் காட்டும்
போதும் என்று கூறும்
அது போதாது எனும் ஆசை காட்டும்

பதமான பாராட்டு கேட்கும்
இரவோடு கண்ணாடி பார்க்கும்
காலை எழும் ஜோடி
அது தண்ணீரில் நீராடி ரசிக்கும்
காயம் சில கண்டு
அது தானாக தனக்குள்ளே சிரிக்கும்
அழகான மேனி ஸ்ருதி சேர்க்கும் நேரம்

aanandha veeNai naan meettum pOdhu - mELa thaaLangaL

பாடல்: ஆனந்த வீணை நான் மீட்டும் போது
திரைப்படம்: மேள தாளங்கள்
இசை: ரமேஷ் நாயுடு
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் ராகமே ஹே...ஹே
தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம்
விளையாடும் கலை மோகமே ஹே...ஹே

ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் ராகமே...ஹே
தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம்
விளையாடும் கலை மோகமே...ஹே

அஹா...ஹா ஆஹா...அஹா...ஹா
லலா...லா லாலா...லல...லா

நடை செல்ல செல்ல செல்ல இடை பட்ட பாடு...ஆஆ
நடை செல்ல செல்ல செல்ல இடை பட்ட பாடு
அடி எந்தன் கண்ணே கொஞ்சும் தமிழ்ப்பாட்டு பாடு

மதனனும் ரதியென இருவர் உலாவ
மறைந்திருந்தே சில கண்மலர் தூவ
சரம் சரம் என வரும் சுகங்கள் கொண்டாட
சந்தோஷ பாட்டுக்கு தாளங்கள் போட

ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் ராகமே ஹே...ஹே
தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம்
விளையாடும் கலை மோகமே...ஹே

அஹா...ஹா ஆஹா...அஹா...ஹா
ஒஹோ...ஹோ லாலா...லல...லா

இலை மறைந்தே இருக்கும் கனிகளை போலே...ஆஆ
இலை மறைந்தே இருக்கும் கனிகளை போலே
இளமை மறைந்திருந்து துடிப்பதனாலே

புதுப்புது உலகங்கள் போய் வருகின்றோம்
பொங்கிய கங்கையில் நீராடுகின்றோம்
அதிசய சுகத்துக்கு அடிக்கல் எடுத்தோம்
அம்மாடி ஆயிரம் பாடங்கள் படித்தோம்

ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் ராகமே...ஹே
தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம்
விளையாடும் கலை மோகமே...ஹே

அஹா...ஹா லாலா...லல...லா
லலா...லா ஆஹா...அஹா...ஹா
லலா...லா ஆஹா...அஹா...ஹா
அஹா...ஹா லாலா...லல...லா