எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா ஜோடி பாடல்கள்

பாடல்: கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு
திரைப்படம்: மரிக்கொழுந்து
இசை: சந்திரபோஸ்

கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு
என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு
கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு
என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு
எழுதுகிறோம் பல பாடல்களை எங்கள் காதலுக்கு
இளம் உள்ளங்களில் அதன் எண்ணங்களில் சுகம் சேர்ந்திருக்கு

கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு
என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு

உள்ளங்கை ரேகை எந்தன் தோகை பேரை எழுதட்டும்
உள்ளங்கள் நாளும் நாளும் காதல் தேனில் நனையட்டும்
கண்ணுக்கும் ரேகை உண்டு காண வேண்டும் வா ராசா
பொண்ணுக்குள் பூவும் உண்டு தீவும் உண்டு நான் ரோசா
அம்மாடி அதிசய அபிநயம் அழகிய இதழ்களிலே
ஆத்தாடி இளமையின் ரகசியம் விளங்குது விழிகளிலே
ராசாத்தி ரோசாப்பூ வளருது மலருது மயங்குது மனசு

கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு
என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு

என்னென்ன கோலம் உண்டு ஜாலம் உண்டு உன் கண்ணில்
ஏழெட்டு நாகம் வந்து தீண்டுதம்மா என் நெஞ்சில்
தித்திக்கும் பாலும் கொம்புத்தேனும் கொண்டு நான் வாரேன்
ஒத்திகை தேவை இல்லை ஒடி வந்து நான் தாரேன்
வைகாசி பொறந்ததும் உனக்கொரு மங்கல சேதி வரும்
கைராசி இணைந்ததும் அதுக்கொரு வெற்றியும் தேடி வரும்
ஆதாரம் நீயாக தினம் ஒரு மணம் தரும் புன்னகைப்பூவே

கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு
என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு
எழுதுகிறோம் பல பாடல்களை எங்கள் காதலுக்கு
இளம் உள்ளங்களில் அதன் எண்ணங்களில் சுகம் சேர்ந்திருக்கு
கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு
என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு

------------------------------------------------------------------------------------------------------------------

பாடல்: அழகே பூவில் செய்தானோ பிரம்மன்
திரைப்படம்: டேவிட் அங்கிள்
இசை: ஆதித்யன்

அழகே பூவில் செய்தானோ பிரம்மன்
பார்வையே வாசமோ நாணமோ பேசுமோ
உனையே நினைந்து உருகித்தானே
எனக்குள் நானே கரைந்து போனேன்
வாழ்வே நீதானே இங்கு நீயே நான் ஆனேன்

அழகே கோவில் தந்தானோ தலைவன்
பார்வையே வாசலோ தீபமே நாணுதோ
உனையே நினைந்து உருகித்தானே
எனக்குள் நானே கரைந்து போனேன்
வாழ்வே நீதானே இங்கு நீயே நான் ஆனேன்
அழகே...

பளிங்கு மாடத்தில் ஊஞ்சல்கட்டும் வெண்ணிலா
குடிசை கூரைக்கு பந்தல் கட்ட வந்ததா
ஏழை வாழ்விலே இன்று ஏதோ திருவிழா
பருவத்துடிப்பினில் துள்ளி வந்த கங்கையே
புருவ அணைகளில் அள்ளி வைத்த கள்வனே
நாணம் என்பது நீ தானம் தந்தது
கட்டுப்பட்டாள் ம்ம்ம் இந்த முல்லை ஓஓஓ
மொட்டு விட்டாள் ம்ம்ம் என்ன விந்தை ஓஓ
முத்தமிட்டால் ஆஆஆ கொஞ்சம் இல்லை ஓஓஓ
இன்பத்தொல்லை ஆஆஆ எல்லை இல்லை ஓஓ
இனி நாளும் இளவேனில் உயிர்க்காதல் நிலவே நில்

அழகே கோவில் தந்தானோ தலைவன்

துவண்ட மீனிடம் தூண்டில் சிக்கிக்கொண்டதோ
சிலந்தி வலையினில் சிங்கம் சொக்கி நின்றதோ
காதல் மாயமோ இது காமன் லீலையோ
மலைத்த மேகங்கள் கட்டுக்குழல் பின்னலா
மல்லிகை பூச்சரம் கண்சிமிட்டும் மின்னலா
பாடும் பைங்கிளி என் பகலும் ராத்திரி
கெட்டிமேளம் ம்ம்ம் கொட்டும் மேகம் ஆஆஆ
அட்சதைகள் ஆஆஆ ஈரம் தூவும்
வானவில்லும் ம்ம்ம் மேடை போடும் ஓஓஓ
மந்திரங்கள் ஆஆஆ மௌனம் ஆகும் ம்ம்ம்
அந்த நாளில் பூவோடு தேனூறும் பாலாறு

அழகே பூவில் செய்தானோ பிரம்மன்
பார்வையே வாசலோ தீபமே நாணுதோ
உனையே நினைந்து உருகித்தானே
எனக்குள் நானே கரைந்து போனேன்
வாழ்வே நீதானே இங்கு நீயே நான் ஆனேன்
வாழ்வே நீதானே இங்கு நீயே நாஅ ஆனேன்
வாழ்வே நீதானே இங்கு நீயே நான் ஆனேன்

------------------------------------------------------------------------------------------------------------------

பாடல்: விழிகளில் கோடி அபிநயம்
திரைப்படம்: கண் சிமிட்டும் நேரம்
இசை: வி.எஸ்.நரசிம்மன்
 
விழிகளில் கோடி அபிநயம்
மனம் பரிமாறும் அவசரம்
இளங்குயில் பாடுது ராகம்
இசைத்திட தூண்டுது மோகம்
உனதிரு விழி...அதில் நவரசம்
மலர்ப்புது முகம்...குளிர் பௌர்ணமி
தினம் பரவசம்

விழிகளில் கோடி அபிநயம்
மனம் பரிமாறும் அவசரம்

இதயம் இங்கே குளிர்கிறதே
இனிமையிலே நனைகிறதோ
உல்லாசமே...வந்தாலென்ன
எந்நாளும் என் வாழ்வு உன்னோடுதான்

இதயம் இங்கே குளிர்கிறதே
இனிமையிலே நனைகிறதோ
உல்லாசமே...வந்தாலென்ன
எந்நாளும் என் வாழ்வு உன்னோடுதான்
உறவுக்குள் ஒன்றான காலமிது
உரிமைக்கு நான் தந்த பாலமிது
கண்ணில் ஒரு மின்னல்
புதுக் கவிதைகள் படிக்கட்டும்

விழிகளில் கோடி அபிநயம்
மனம் பரிமாறும் அவசரம்
இளங்குயில் பாடுது ராகம்
இசைத்திட தூண்டுது மோகம்
உனதிரு விழி...அதில் நவரசம்
மலர்ப்புது முகம்...குளிர் பௌர்ணமி
தினம் பரவசம்

மனம் எதிலோ அலைகிறதே
மௌனத்திலே சுகம் பெறவோ
சொல்லாமலே...சொன்னாலென்ன
பொன்னான என் வாழ்வில் நன்நாளிதே

மனம் எதிலோ அலைகிறதே
மௌனத்திலே சுகம் பெறவோ
சொல்லாமலே...சொன்னாலென்ன
பொன்னான என் வாழ்வில் நன்நாளிதே
ஒன்றுக்குள் ஒன்றான தேகமிது
உயிருக்குள் நான் கொண்ட பாகமிது
இன்பம் இனி என்றும்
புது சுரங்களும் பிறக்கட்டும்

விழிகளில் கோடி அபிநயம்
மனம் பரிமாறும் அவசரம்
இளங்குயில் பாடுது ராகம்
இசைத்திட தூண்டுது மோகம்
உனதிரு விழி...அதில் நவரசம்
மலர்ப்புது முகம்...குளிர் பௌர்ணமி
தினம் பரவசம்
விழிகளில் கோடி அபிநயம்
மனம் பரிமாறும் அவசரம்

------------------------------------------------------------------------------------------------------------------
 
பாடல்: இதோ இதோ என் பல்லவி
திரைப்படம்: சிகரம்
இசை: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
 
இதோ இதோ என் பல்லவி
எப்போது கீதம் ஆகுமோ
இவன் உந்தன் சரணம் என்றால்
அப்போது வேதம் ஆகுமோ
இதோ இதோ என் பல்லவி

என் வானம் எங்கும் பௌர்ணமி
இது என்ன மாயமோ
என் காதலா உன் காதலால்
நான் காணும் கோலமோ

என் வாழ்க்கை என்னும் கோப்பையில்
இது என்ன பானமோ
பருகாமலே ருசி ஏறுதே
இது என்ன ஜாலமோ
பசி என்பதே ருசி அல்லவா
அது இன்று தீருமோ

இதோ இதோ என் பல்லவி
எப்போது கீதம் ஆகுமோ
இவள் உந்தன் சரணம் என்றால்
அப்போது வேதம் ஆகுமோ
இதோ இதோ என் பல்லவி

அந்த வானம் தீர்ந்து போகலாம்
நம் வாழ்க்கை தீருமா
பருவங்களும் நிறம் மாறலாம்
நம் பாசம் மாறுமா

ஒரு பாடல் பாட வந்தவள்
உன் பாடல் ஆகினேன்
விதி மாறலாம் உன் பாடலில்
ஸ்ருதி மாறக்கூடமா
நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை
பொருந்தாமல் போகுமா

இதோ இதோ என் பல்லவி
எப்போது கீதம் ஆகுமோ
இவள் உந்தன் சரணம் என்றால்
அப்போது வேதம் ஆகுமோ
இதோ...ம்ம்ம்
இதோ...ம்ம்ம்
என் பல்லவி...ம்ம்ம் ம்ம்
 
------------------------------------------------------------------------------------------------------------------
 
பாடல்: வானம்பாடி பாடும் நேரம்
திரைப்படம்: எல்லாமே என் தங்கச்சி
இசை: கங்கை அமரன்

வானம்பாடி பாடும் நேரம் வானம் வாழ்த்தி பூவைத்தூவும்
அந்தி பொன்வானம் எங்கேயும் மேகம் சிந்து பாடுதே
ஆஆ...ஆ அந்த நேரத்தில் மண்மீது தூரல் சந்தம் போடுதே
வானம்பாடி பாடும் நேரம் வானம் வாழ்த்தி பூவைத்தூவும்

நானும் நீயும் சேரும் போது தேகம் தீபாவளி
பூவும் பூவும் மோதும் போது ராகம் கீதாஞ்சலி
நடையைப்பார்த்து இடையைக்கேட்டு தாளம் உண்டானது
அன்பே...தேகம் திண்டாடுது

வானம்பாடி பாடும் நேரம் வானம் வாழ்த்தி பூவைத்தூவும்

பூவின் மேலே தாவும் காற்று பாடும் பூபாளமே
சேலை மூடும் சோலை யாவும் காமன் போராட்டமே
விழியின் ஓரம் பொழியும் ராகம் யாரும் பாடாதது
அன்பே...பூமி கேளாதது

வானம்பாடி பாடும் நேரம் வானம் வாழ்த்தி பூவைத்தூவும்
அந்தி பொன்வானம் எங்கேயும் மேகம் சிந்து பாடுதே
ஓ...அந்த நேரத்தில் மண்மீது தூரல் சந்தம் போடுதே
வானம்பாடி பாடும் நேரம் வானம் வாழ்த்தி பூவைத்தூவும்
 
------------------------------------------------------------------------------------------------------------------

பாடல்: அன்னமே அன்னமே
திரைப்படம்: வாலிப விளையாட்டு
இசை: ஷங்கர் கணேஷ்

அன்னமே அன்னமே ஆசையின் சின்னமே வா இங்கே
அன்னமே அன்னமே ஆசையின் சின்னமே வா இங்கே
மீனே கொக்குக்குத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே
மீனே கொக்குக்குத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே

மன்மதா மன்மதா அம்புடன் ஓடிவா நானாச்சு
மன்மதா மன்மதா அம்புடன் ஓடிவா நானாச்சு
மீனே கொக்குக்குத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே
மீனே கொக்குக்குத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே

தேன் நாவில் பட்டால்தான் தித்திக்கும் உன் தேகம்
தொட்டாலும் தித்திக்கும் என் பார்வை
பட்டாலும் பத்திக்கும் உன் கர்ப்பை
தொட்டாலும் ஒட்டிக்கும்
அங்கங்கே தங்கங்கள் உண்டு
நீ ஆடைக்குள் தேன் தேடும் வண்டு
அங்கங்கே தங்கங்கள் உண்டு
நீ ஆடைக்குள் தேன் தேடும் வண்டு

நிலவுதான் எழும்வரை பழகலாம் பலமுறை
நீ கொஞ்சம் கண் காட்டம்மா

மன்மதா மன்மதா அம்புடன் ஓடிவா நானாச்சு
அன்னமே அன்னமே ஆசையின் சின்னமே வா இங்கே
மீனே கொக்குக்குத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே
மீனே கொக்குக்குத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே

தங்கங்கள் அப்போதும் எப்போதும் வண்டோடு
பேரின்பம் எப்போதும் பெண்ணோடு
நூறின்பம் இப்போது உன்னோடு
கூசாமல் கொண்டாடு
முடி கொண்ட ராஜாக்கள் உண்டு
பெண் முடியாலே யுத்தங்கள் உண்டு
முடி கொண்ட ராஜாக்கள் உண்டு
பெண் முடியாலே யுத்தங்கள் உண்டு

தலைமுதல் நுனிவரை தலைவனின் தனியறை
தாள் போட்டுத் தாலாட்டுவேன்

அன்னமே அன்னமே ஆசையின் சின்னமே வா வா வா இங்கே
மன்மதா மன்மதா அம்புடன் ஓடிவா நானாச்சு
மீனே கொக்குக்குத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே
மீனே கொக்குக்குத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே
 ------------------------------------------------------------------------------------------------------------------

பாடல்: காவலுக்கு போனா கோபக்காரி
திரைப்படம்: நல்ல காலம் பொறந்தாச்சு
இசை: ஷங்கர் கணேஷ்

காவலுக்கு போனா கோபக்காரி
காதலிச்சு ஆனா வீட்டுக்காரி

என்னாச்சு என்னாச்சு
தாகம் நெஞ்சில் உண்டாச்சு
ஒண்ணாச்சு ஒண்ணாச்சு
தேகம் ரெண்டும் ஒண்ணாச்சு

காதல் தேனைப் பருகிப் பருகி
தினமும் ரசிக்கலாம்

காவலுக்கு போனா கோபக்காரி
ஹோய் காதலிச்சு ஆனா வீட்டுக்காரி

என்னாச்சு என்னாச்சு
தாகம் நெஞ்சில் உண்டாச்சு
ஒண்ணாச்சு ஒண்ணாச்சு
தேகம் ரெண்டும் ஒண்ணாச்சு

காதல் தேனைப் பருகிப் பருகி
தினமும் ரசிக்கலாம்
காவலுக்கு போனா கோபக்காரி
ஹோய் காதலிச்சு ஆனா வீட்டுக்காரி

நாள் புதுமுகம் இனிதான் அறிமுகம்
ஏன் அவசரம் தருவேன் அதிசயம்

காமன் ஊரிலே காற்றில் போகலாம்
காதில் ஆயிரம் சேதி கூறலாம்

பாதி என்னில் நீயும் மீதி உன்னில் நானும்
தேடும் இன்பம் நூறு தேடி மெல்லப் பாரு
ஹோ ஹோ ஹோ ஹே ஹெ ஹே
ஹே ஹே ஹே ஹோ ஹொ ஹோ

காவலுக்கு போனா கோபக்காரி
காதலிச்சு ஆனா வீட்டுக்காரி

என்னாச்சு என்னாச்சு
தாகம் நெஞ்சில் உண்டாச்சு
ஒண்ணாச்சு ஒண்ணாச்சு
தேகம் ரெண்டும் ஒண்ணாச்சு

காதல் தேனை பருகிப் பருகி
தினமும் ரசிக்கலாம்
காவலுக்கு போனா கோபக்காரி
காதலிச்சு ஆனா வீட்டுக்காரி

நாள் முழுவதும் நினைத்தால் சுடுகிறாய்
ஹய்யோ என் கனவிலே அணைத்தால் குளிர்கிறாய்

காற்று தீண்டினால் காயம் ஆகுதே
காவல் மீறவே ஆசை ஆகுதே

பாரம் நெஞ்சில் ஏறும் மோகம் எல்லை மீறும்
பேச்சு இன்றிப் போகும் பார்வை மட்டும் பேசும்
ஹே ஹே ஹோ ஹோ ஹொ ஹோ
ஹா ஹோ ஹே ஹே ஹெ ஹே

காவலுக்கு போனா கோபக்காரி
காதலிச்சு ஆனா வீட்டுக்காரி

என்னாச்சு என்னாச்சு
தாகம் நெஞ்சில் உண்டாச்சு
ஒண்ணாச்சு ஒண்ணாச்சு
தேகம் ரெண்டும் ஒண்ணாச்சு

காதல் தேனை பருகிப் பருகி
தினமும் ரசிக்கலாம்
 
------------------------------------------------------------------------------------------------------------------
 
பாடல்: ஹே ஒரு பூஞ்சோலை ஆளானதே
திரைப்படம்: வாத்தியார் வீட்டு பிள்ளை
இசை: இளையராஜா

ஹே ஒரு பூஞ்சோலை ஆளானதே
ஹே ஒரு பொன்மாலை தோள் சேருதே

மலர்களில் முன்னும் பின்னும்
பனித்துளி மின்னும் மின்னும்

பருவங்கள் துள்ளும் துள்ளும்
பழகிட சொல்லும் சொல்லும்

முத்தம் தரும் சத்தம்
அதில் நித்தம் நித்தம் நெஞ்சம் மயங்குதே
ஹே ஒரு பூஞ்சோலை ஆளானதே
ஹே ஒரு பொன்மாலை தோள் சேருதே

சிங்கார வெண்ணிலா மண் மீதிலே
சங்கீதம் பாடுதே உன் கண்ணிலே

செண்டாடும் பொன்மயில் உன் தோளிலே
நின்றாட ஏங்குதே இந்நாளிலே

காதல் தேனாறு பாய்ந்தோடும் நேரம்
ஆசை தேரேறி ஊர்கோலம் போகும்
அழகிய சித்திரமே மதன்கலை புத்தகமே
இளமை எழுதும் இனிய கதையில்
இரு உடல் அனுதினம் எழுதட்டுமே

ஹே ஒரு பூஞ்சோலை ஆளானதே
ஹே ஒரு பொன்மாலை தோள் சேருதே

ஆகாய மேகமாய் நான் மாறினேன்
உன்மீது வெண்பனி நான் தூவவா

விண்மீனை பூக்களாய் நான் கிள்ளியே
உன் தோளில் மாலையாய் நான் போடவா

கண்ணில் காணாத இன்பங்கள் யாவும்
மண்ணில் காண்பேனே உன்னாலே நானும்
கரும்பினில் வில்லெடுத்து அரும்பினில் அம்பெடுத்து
உருவம் இழந்த ஒருவன் எனது
உருகிடும் இதயத்தை துளைப்பதும் ஏன்

No comments: