Saturday, August 25, 2012

பார்வையின் மறுபக்கம் - பார்வையின் மறுபக்கம்

பாடல்: பார்வையின் மறுபக்கம்
திரைப்படம்: பார்வையின் மறுபக்கம்
இசை: சந்திரபோஸ்
பாடியவர்: வாணி ஜெயராம்

பார்வையின் மறுபக்கம் ராகங்கள் கேட்டு
பாடாமல் பாடுகிறேன்
பாடச் சொன்னாலும் ஆடச் சொன்னாலும்
என் வாழ்வு உன் வசமே எல்லாமும் உன்னிடமே

பார்வையின் மறுபக்கம் ராகங்கள் கேட்டு
பாடாமல் பாடுகிறேன்

கனவோ இது நினைவோ
என்ன சுகமோ கண்ணில் நான் காண்பது
மயக்கம்...மயக்கம் தீராத ஆனந்த மயக்கம்
இலையோ புது மலரோ
இளங்கனியோ இன்று பெண்ணானது
இரண்டும்...இரண்டும் நூறாகும் நாளின்று நமக்கு

பார்வையின் மறுபக்கம் ராகங்கள் கேட்டு
பாடாமல் பாடுகிறேன்

அழைத்தாய் அள்ளிக் கொடுத்தாய்
கன்னி பிழைத்தேன் இன்ப நீராடினேன்
எழுது...எழுது முன்னூறு பாடல்கள் உதட்டில்
பகலோ அது இரவோ
இந்த உறவு புது ராமாயணம்
வருக...வருக கண்ணோடு காமனின் கடிதம்

பார்வையின் மறுபக்கம் ராகங்கள் கேட்டு
பாடாமல் பாடுகிறேன்
பாடச் சொன்னாலும் ஆடச் சொன்னாலும்
என் வாழ்வு உன் வசமே எல்லாமும் உன்னிடமே
பார்வையின் மறுபக்கம் ராகங்கள் கேட்டு
பாடாமல் பாடுகிறேன்

நேற்று பூந்தளிர் - ராஜா நீ வாழ்க

பாடல்: நேற்று பூந்தளிர் இன்று பூங்கொடி
திரைப்படம்: ராஜா நீ வாழ்க
இசை: K.ரவி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணிஜெயராம்

நேற்று பூந்தளிர் இன்று பூங்கொடி
காற்றில் ஆடும் இரு காதல் மாங்கனி
ஹோய் ஹோய்
நேற்று பூந்தளிர் இன்று பூங்கொடி
காற்றில் ஆடும் இரு காதல் மாங்கனி
தோற்றம் மாறியது தொட்டதும்
நெஞ்சில் பட்டதென்ன மலர் அம்பு
தோற்றம் மாறியது தொட்டதும்
நெஞ்சில் பட்டதென்ன மலர் அம்பு


பார்த்த நாள்முதல் தொட்ட நாள்வரை
காத்திருந்ததும் உண்மை
பார்த்த நாள்முதல் தொட்ட நாள்வரை
காத்திருந்ததும் உண்மை
நீ தொடாமல் உன் கை படாமல்
இங்கு பூத்ததில்லை என் பெண்மை
நீ தொடாமல் உன் கை படாமல்
இங்கு பூத்ததில்லை என் பெண்மை


லால்ல லால்லலா லால்ல லால்லலா
லால்ல லால்லலா லால்லா

லால்ல லால்லலா லால்ல லால்லலா
லால்ல லால்லலா லால்லா


லல லா...லல லா லல லா...லல லா

நிலா முகம் நாணத்தில் சிவந்திடும் நேரத்தில்
உலா வரும் ஏக்கம் நூறு தூக்கம் வேறு தேவையோ
நிலா முகம் நாணத்தில் சிவந்திடும் நேரத்தில்
உலா வரும் ஏக்கம் நூறு தூக்கம் வேறு தேவையோ

கலா முகில் ஆட வந்தால் கவிக்குயில் பாடுமோ
கலா முகில் ஆட வந்தால் கவிக்குயில் பாடுமோ
கனவுகள் பின்னிப்பின்னி கன்னிப்பெண்மை ஏங்குமோ
கனவுகள் பின்னிப்பின்னி கன்னிப்பெண்மை ஏங்குமோ


நேற்று பூந்தளிர் இன்று பூங்கொடி
காற்றில் ஆடும் இரு காதல் மாங்கனி
தோற்றம் மாறியது தொட்டதும்
நெஞ்சில் பட்டதென்ன மலர் அம்பு


விழிகளில் ஆரத்தி எடுப்பது போலத்தீ
விளைந்ததென் நெஞ்சுக்குள்ளே மோகம் என்ற தாகமோ
விழிகளில் ஆரத்தி எடுப்பது போலத்தீ
விளைந்ததென் நெஞ்சுக்குள்ளே மோகம் என்ற தாகமோ

மொழித்துணையின்றி நெஞ்சில் துடிக்கின்ற கீதமோ
மொழித்துணையின்றி நெஞ்சில் துடிக்கின்ற கீதமோ
இளந்தென்றல் தொட்டுத்தொட்டு துள்ளும் இன்பம் கேட்குமோ
இளந்தென்றல் தொட்டுத்தொட்டு துள்ளும் இன்பம் கேட்குமோ


பார்த்த நாள்முதல் தொட்ட நாள்வரை
காத்திருந்ததும் உண்மை
நீ தொடாமல் உன் கை படாமல்
இங்கு பூத்ததில்லை என் பெண்மை
நீ தொடாமல் உன் கை படாமல்
இங்கு பூத்ததில்லை என் பெண்மை


நேற்று பூந்தளிர் இன்று பூங்கொடி
காற்றில் ஆடும் இரு காதல் மாங்கனி
தோற்றம் மாறியது தொட்டதும்
நெஞ்சில் பட்டதென்ன மலர் அம்பு
 

வான் வெளியில் நீ மலர - ராஜா நீ வாழ்க

பாடல்: வான் வெளியில் நீ மலர
திரைப்படம்: ராஜா நீ வாழ்க
இசை: K.ரவி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

வான் வெளியில் நீ மலர
என் நினைவில் தீ வளர
தென்றல் பிறந்தொரு தேகம் எடுத்தது
தேவதையோ சொல் வெண்ணிலவோ


வான் வெளியில் நீ மலர
என் நினைவில் தீ வளர
மின்னல் பிறந்தொரு மேனி எடுத்தது
மன்னவனோ சொல் வெண்ணிலவே


இன்றென் கைகளிலே பூமாலை ஆகிவிடு
என்றும் உன்னோடுதான் இப்போது மெல்லத்தொடு
கண்ணன் எந்தன் சன்னதிக்கு கன்னி வடிவில்
ஒரு புல்லாங்குழல் வந்ததோ

ராதை இங்கு கண் சிவக்க ராகம் நூறு நீ படிக்க
ராதை இங்கு கண் சிவக்க ராகம் நூறு நீ படிக்க
ராஜா உன் விளையாடலோ


வான் வெளியில் நீ மலர
என் நினைவில் தீ வளர

மின்னல் பிறந்தொரு மேனி எடுத்தது
மன்னவனோ சொல் வெண்ணிலவே


ஹே நீ தேன் கொண்டு வா என்னாசை தீராதது
நாணம் வெட்கம் என என்னுள்ளம் போராடுது
ஹே நீ தேன் கொண்டு வா என்னாசை தீராதது
நாணம் வெட்கம் என என்னுள்ளம் போராடுது
கைவளை நழுவுது கால் தடுமாறுது
கட்டுப்படலாகாது பாப்பா ஹா

மைவிழி சொறுகுது மந்திரம் போடுது
என் மனக் கதவுக்கு தாப்பா

அடி பூட்டையும் உடைப்பேன்
கோட்டையும் புடிப்பேன்
புலிக்குப் பிறந்தவன் நானடி
பூட்டையும் உடைப்பேன்
கோட்டையும் புடிப்பேன்
புலிக்குப் பிறந்தவன் நானடி

பாட்டுக்கு மட்டும் பாவனை செய்தேன்
பாக்கி வேலையை நீ முடி


வான் வெளியில் நீ மலர
என் நினைவில் தீ வளர

தென்றல் பிறந்தொரு தேகம் எடுத்தது
தேவதையோ சொல் வெண்ணிலவே

தென்றலே மலர் சூடவா - ராஜா நீ வாழ்க

பாடல்: தென்றலே மலர் சூடவா
திரைப்படம்: ராஜா நீ வாழ்க
இசை: K.ரவி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

தென்றலே மலர் சூடவா
கொடி மின்னலே வளை போடவா
மேகமே மழைத் துளிகளில்
மணிச் சதங்கைகள் கட்ட ஓடிவா

தென்றலே மலர் சூடவா
கொடி மின்னலே வளை போடவா
மேகமே மழைத் துளிகளில்
மணிச் சதங்கைகள் கட்ட ஓடிவா
தென்றலே மலர் சூடவா

நிலவே ஒரு மலரென மலர்வதும்
நிழலே மணி ஒலியென விரிவதும்
கனவா இல்லை நினைவா உன் முகமா
நிலவே ஒரு மலரென மலர்வதும்
நிழலே மணி ஒலியென விரிவதும்
கனவா இல்லை நினைவா உன் முகமா
காவியம் ஆயிரம் பாடுவதென் மனம்

பார்வையே மலர் சூடுமே
ஒளி புன்னகை வளை போடுமே
என் கண்களின் மழைத்துளிகளே
உன் கால்களில் ஜதி போடுமே
தென்றலே மலர் சூடவா

வீணை நாதஸ்வர மேள தாளமின்றி
வெண்ணிலா தினம் உதிப்பதில்லையா

வீணை நாதஸ்வர மேள தாளமின்றி
வெண்ணிலா தினம் உதிப்பதில்லையா
கனவு மலர கண் இமைகள் நெகிழ
புதுக்கனவு மலர கண் இமைகள் நெகிழ
ஒரு மழலை வடிவம் உன் மடியில் தவழ வரும்

வெண் புறா...
வெண் புறா விளையாட வா
குயில் பேடையே குழலூதி வா
அலைக்கரங்களில் நுரைக்குடங்களில்
நதி அன்னையே சீர் கொண்டு வா
தென்றலே மலர் சூடவா
கொடி மின்னலே வளை போடவா

லாலலா லல லாலலா
லல லாலலா லல லால லா
 
 

நீல வண்ண மயிலே - தம்பி வருவானாம்

பாடல்: நீல வண்ண மயிலே
திரைப்படம்: தம்பி வருவானாம்
இசை: T.T.சௌந்தரராஜன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

நீல வண்ண மயிலே மயிலே
நீந்தும் சின்னக் குயிலே குயிலே
நீல வண்ண மயிலே நீந்தும் சின்னக் குயிலே
நீ எந்தன் சொர்க்கம் வா எந்தன் பக்கம்
நீ எந்தன் சொர்க்கம் வா எந்தன் பக்கம்
ஆடு கண்ணே...பாடு கண்ணே
ஆடு கண்ணே...பாடு கண்ணே
நீல வண்ண மயிலே மயிலே
நீந்தும் சின்னக் குயிலே

சோலையிலே பூத்திருக்கும் புன்னகையே பூங்குயிலே
மாலையிலே பாட்டிருக்கும் பஞ்சணையில் பைங்கிளியே

சோலையிலே பூத்திருக்கும் புன்னகையே பூங்குயிலே
மாலையிலே பார்த்திருக்கும் பஞ்சணையே பைங்கிளியே

சோலையிலே பூத்திருக்கும் புன்னகையே பூங்குயிலே
மாலையிலே பார்த்திருக்கும் பஞ்சணையே பைங்கிளியே
இது பூத்ததா பூவே பூத்ததா
இன்று காய்த்ததா கனியே காய்த்ததா
இது பூத்ததா பூவே பூத்ததா
இன்று காய்த்ததா கனியே காய்த்ததா
தென்றலிலே ஏறி வந்தேன்
தேவி உனைத் தேடி வந்தேன்

நீல வண்ண மயிலே மயிலே
நீந்தும் சின்னக் குயிலே குயிலே
நீல வண்ண மயிலே நீந்தும் சின்னக் குயிலே
நீ எந்தன் சொர்க்கம் வா எந்தன் பக்கம்
நீ எந்தன் சொர்க்கம் வா எந்தன் பக்கம்
ஆடு கண்ணே...பாடு கண்ணே
ஆடு கண்ணே...பாடு கண்ணே

நாணத்திலே வானத்திலே வந்திருக்கு தாரகையே
சாமத்திலே மோகத்திலே பூத்திருக்கு தாமரையே

நாணத்திலே வானத்திலே வந்திருக்கு தாரகையே
சாமத்திலே மோகத்திலே பூத்திருக்கு தாமரையே
இது பூவையா மானே பூவையா
வண்ணப் பாவையா மயிலே பாவையா
இது பூவையா மானே பூவையா
வண்ணப் பாவையா மயிலே பாவையா
வானத்திலே ஏழு வண்ணம்
கன்னத்திலே காணும் வண்ணம்

நீல வண்ண மயிலே மயிலே
நீந்தும் சின்னக் குயிலே குயிலே
நீல வண்ண மயிலே நீந்தும் சின்னக் குயிலே
நீ எந்தன் சொர்க்கம் வா எந்தன் பக்கம்
நீ எந்தன் சொர்க்கம் வா எந்தன் பக்கம்
ஆடு கண்ணே...பாடு கண்ணே
ஆடு கண்ணே...பாடு கண்ணே
நீல வண்ண மயிலே மயிலே
நீந்தும் சின்னக் குயிலே

பதினெட்டு வயசுல பொண்ணு - வெள்ளை மனசு

பாடல்: பதினெட்டு வயசுல பொண்ணு
திரைப்படம்: வெள்ளை மனசு
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்

ஹே பதினெட்டு வயசுல பொண்ணு
இளவட்டத் தேடுது கண்ணு
பதினெட்டு வயசுல பொண்ணு
இளவட்டம் தேடுது கண்ணு
எதுக்காக...அதுக்காக
காதலிக்க...ரகசிய கதை படிக்க
காதலிக்க...ரகசிய கதை படிக்க
ஜாலி...அடி வேற என்ன ஜோலி
வாம்மா நம் ஆசைக்கேது வேலி
பதினெட்டு வயசுல பொண்ணு
இளவட்டம் தேடுது கண்ணு


கண்ணே நீ கல்யாணி ராகம்
உண்டாச்சு கச்சேரி மோகம்
கண்ணே நீ கல்யாணி ராகம்
உண்டாச்சு கச்சேரி மோகம்
ஸ்ருதி லயங்கள் எனது வசம் பல நயங்கள்
ஸ்ருதி லயங்கள் எனது வசம் பல நயங்கள்


மேனி தான் மிருதங்கம்
விரல்கள் விளையாட வேண்டும்
தொட்டாலே முன்னூறு தாளம்
தன்னாலே உண்டாகக் கூடும்


பதினெட்டு வயசுல பொண்ணு
இளவட்டம் தேடுது கண்ணு
எதுக்காக...அதுக்காக
காதலிக்க...ரகசிய கதை படிக்க
காதலிக்க...ரகசிய கதை படிக்க
ஜாலி...அடி வேற என்ன ஜோலி
வாம்மா நம் ஆசைக்கேது வேலி
பதினெட்டு வயசுல பொண்ணு
இளவட்டம் தேடுது கண்ணு


என்னோடு நீதானே ஆட
நெஞ்சோடு எதேதோ ஆக
என்னோடு நீதானே ஆட
நெஞ்சோடு எதேதோ ஆக
இள மயக்கம் இது எனக்கு புது மயக்கம்
இள மயக்கம் இது எனக்கு புது மயக்கம்

ஜாடைகள்... காட்டினால்...
சபலம் உண்டாகக் கூடும்
அன்பே வா உன் மீது ஆசை
அன்றாடம் செய்தேனே பூஜை


பதினெட்டு வயசுல பொண்ணு
இளவட்டம் தேடுது கண்ணு
எதுக்காக...அதுக்காக
காதலிக்க...ரகசிய கதை படிக்க
காதலிக்க...ரகசிய கதை படிக்க
ஜாலி...அடி வேற என்ன ஜோலி
வாம்மா நம் ஆசைக்கேது வேலி


லால லல்ல லால லல்ல லால்லா
லால லல்ல லால லல்ல லால்லா
லால லல்ல லால லல்ல லால்லா
லால லல்ல லால லல்ல லால்லா

மன்னவன் ஊர்வலமோ - காலம்

பாடல்: மன்னவன் ஊர்வலமோ
திரைப்படம்: காலம்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

மன்னவன் ஊர்வலமோ தாய் மனமெனும் தேர் வருமோ
பொன் மகள் சீதனமோ உன் புன்னகை மோஹனமோ
வான் நிலவோ விண்மீன்களின் நயனங்களோ
தேன் மலரோ மணமேடையின் நளினங்களோ
மன்னவன் ஊர்வலமோ தாய் மனமெனும் தேர் வருமோ
பொன் மகள் சீதனமோ உன் புன்னகை மோஹனமோ

காவிரியோ காவியமோ காலத்தின் கோலங்களோ
காவிரியோ காவியமோ காலத்தின் கோலங்களோ
மார்கழி மாதமோ மல்லிகை வாசமோ வசந்தமே வந்ததோ

மன்னவன் ஊர்வலமோ தாய் மனமெனும் தேர் வருமோ
பொன் மகள் சீதனமோ உன் புன்னகை மோஹனமோ
வான் நிலவோ விண்மீன்களின் நயனங்களோ
தேன் மலரோ மணமேடையின் நளினங்களோ
மன்னவன் ஊர்வலமோ தாய் மனமெனும் தேர் வருமோ
பொன் மகள் சீதனமோ உன் புன்னகை மோஹனமோ

பூங்குயிலோ பொன் எழிலே தென்றலின் ஆலாபனை
பூங்குயிலோ பொன் எழிலே தென்றலின் ஆலாபனை
ஆனந்த ராகமோ அன்பெனும் தீபமோ தெய்வமே தந்ததோ

மன்னவன் ஊர்வலமோ தாய் மனமெனும் தேர் வருமோ
பொன் மகள் சீதனமோ உன் புன்னகை மோஹனமோ
வான் நிலவோ விண்மீன்களின் நயனங்களோ
தேன் மலரோ மணமேடையின் நளினங்களோ
மன்னவன் ஊர்வலமோ தாய் மனமெனும் தேர் வருமோ
பொன் மகள் சீதனமோ உன் புன்னகை மோஹனமோ

பார்வையோ உன்னிடம் - நிஜங்கள் நிலைக்கின்றன

பாடல்: பார்வையோ உன்னிடம்
திரைப்படம்: நிஜங்கள் நிலைக்கின்றன
இசை:
பாடியவர்கள்: N.V.ஹரிதாஸ் & வாணி ஜெயராம்

பார்வையோ உன்னிடம்
லால லா லால லா
போகுமோ வேறிடம்
லால லா லால லா
நீ நடக்கும் பாதையிலே
என்றும் செல்லும் எந்தன் பாதம்
உன்னைத் தேடியே


பார்வையோ உன்னிடம்
போகுமோ வேறிடம்
நீ நடக்கும் பாதையிலே
என்றும் செல்லும் எந்தன் பாதம்
உன்னைத் தேடியே

பார்வையோ உன்னிடம்
லால லா லால லா

ஆயிரம் சொல்லி
தன னன னனா
ஆசையைக் கிள்ளி
சென்றது எண்ணி

தன னன னனா
ஏங்குது பொன்னி
பூக்களை போடவா
பாக்களை பாடவா சுகம் தேடவா

எனை மீட்டலாம் கொடி நாட்டலாம்
லல லால லல லல லல லல


பார்வையோ உன்னிடம்
போகுமோ வேறிடம்

நீ நடக்கும் பாதையிலே
என்றும் செல்லும் எந்தன் பாதம்
உன்னைத் தேடியே

பார்வையோ உன்னிடம்
லால லா லால லா

மோஹன பாட்டு
தன னன னனா
முத்திரை போட்டு
வாலிபக் காற்று

தன னன னனா
வந்தது நேற்று
மன்னனைக் கண்டதோ
சொந்தமே கொண்டதோ கதை சொன்னதோ

எனைத் தொட்டதோ குளிர் விட்டதோ
தன னான னன னன னன னன


பார்வையோ உன்னிடம்
போகுமோ வேறிடம்

பிறவிகள் தோறும்
தன னன னனா
நீ வர வேண்டும்
தாலியும் பூவும்

தன னன னனா
நிலைத்திட வேண்டும்
தேவி நீ ஜானகி
தேவனின் நாயகி இன்பம் நூறடி

இவள் உன் கிளி மனம் தேன் துளி
லல லால லல லல லல லல


பார்வையோ உன்னிடம்
போகுமோ வேறிடம்

நீ நடக்கும் பாதையிலே
என்றும் செல்லும் எந்தன் பாதம்
உன்னைத் தேடியே

லால லா லால லா
லால லா லால லா
லால லா லால லா
 

ஒய்ய ஒய்ய ஒய்யால - மன்மதன் அம்பு

பாடல்: ஒய்ய ஒய்ய ஒய்யால
திரைப்படம்: மன்மதன் அம்பு
இசை: தேவி ஸ்ரீபிரசாத்
பாடியவர்கள்: முகேஷ் & சுசித்ரா

ஏ ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்யால
ஏ கைய கைய கைய கைய
கைய கைய கைய கைய
கைய கைய கைய கைய கையால

ஏ நெலாவ புட்டு வச்ச நெத்தியில பொட்டு வச்ச
உன்னோட ஒட்ட வச்ச ஒய்யால
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்யால
ஹே உள்ளார பத்த வச்ச உம் பேர கத்த வச்ச
அங்கங்க கிள்ளி வச்ச கையால
கைய கைய கைய கைய கையால
ஹேய் மாங்கா வத்தல் இருக்கு மாமன் உதடிருக்கு
ஆச சொல்லு எனக்கு கண்ணால
மாங்கா எனக்கெதுக்கு மாசம் அதுக்கிருக்கு
மாமன் உதடு பட்டா
மத்ததெல்லாம் நடக்கும் தன்னால

ஏ ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்யால
ஏ கைய கைய கைய கைய
கைய கைய கைய கைய
கைய கைய கைய கைய கையால

ஏ நாட்டுக்கட்ட உன்ன பாத்ததுமே
மனசு ஆட்டம் போட்டு குதிக்கும்
எனக்கு கொஞ்சம் நாட்டுப்பற்று அதிகம்
பூட்டுப்போட்டு வச்ச பேரழக
உனக்கு காட்ட ரொம்ப விருப்பம்
நடுவில் இந்த கூச்சம் வந்து தொலைக்கும்
ஹே சேல கட்டும் ஒடம்பு சீவி வச்ச கரும்பு
நீதான் உச்ச வரம்பு அழகுக்கு
நானோ பச்ச நரம்பு நீயோ வீட்டு எறும்பு
வேணாம் இந்த குறும்பு
நெருப்புடன் பயம் உண்டு மெழுகுக்கு

ஏ ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்யால
ஏ கைய கைய கைய கைய
கைய கைய கைய கைய
கைய கைய கைய கைய கையால

அட ஏத்தி வச்ச ஒரு குத்து வெளக்காக
பாத்து நீ சிரிக்கிற
மனசுக்குள்ள வேர்த்துக் கொட்ட வைக்குற
சாத்தி வச்ச ஒரு ஜன்னலாக இருந்தேன்
காத்துப் போல தொறந்த
உடலில் உசுராக நீயும் கலந்த
ஹேய் பாதி நல்ல விஷயம் பாதி கள்ள விஷயம்
சேர்த்து செஞ்ச வசியம் நீதானே
சூட பூவத்தருவ சூடா ஆசத்தருவ
பாரு முகப் பருவ
இத்தனைக்கும் காராணம் நீதானே

ஏ ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்யால
ஏ கைய கைய கைய கைய
கைய கைய கைய கைய
கைய கைய கைய கைய கையால

மெல்லப் பேசும் விழி - குளிர்கால மேகங்கள்

பாடல்: மெல்லப் பேசும் விழி
திரைப்படம்: குளிர்கால மேகங்கள்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்

மெல்லப் பேசும் விழி
மௌனம் தானே மொழி
மெல்லப் பேசும் விழி
மௌனம் தானே மொழி
காதல் ரகசியம்
அதற்கொரு காவல் அவசியம்
காதல் ரகசியம்
அதற்கொரு காவல் அவசியம்
எங்கே...இங்கே
எங்கே...இங்கே

மெல்லப் பேசும் விழி
மௌனம் தானே மொழி
மெல்லப் பேசும் விழி
மௌனம் தானே மொழி
காதல் ரகசியம்
அதற்கொரு காவல் அவசியம்
எங்கே...இங்கே

கண்ணே நீ கல்யாணி ராகம்
கண்ணா வா கச்சேரி நேரம்
கண்ணே நீ கல்யாணி ராகம்
கண்ணா வா கச்சேரி நேரம்
இரவிலே இசை மழை
மடியிலே இளம் பிறை
பூதழ்...திறந்திட திறந்திட
தேன்துளி...ததும்பிட ததும்பிட
மீண்டும் மீண்டும் வேண்டும் வேண்டும்
முழுவதும் வழங்கிவிடு

மெல்லப் பேசும் விழி
மௌனம் தானே மொழி
மெல்லப் பேசும் விழி
மௌனம் தானே மொழி
காதல் ரகசியம்
அதற்கொரு காவல் அவசியம்
எங்கே...இங்கே

தென்றல்தான் மேலாடை நீக்க
அங்கங்கே நீ கொஞ்சம் பார்க்க
தென்றல்தான் மேலாடை நீக்க
அங்கங்கே நீ கொஞ்சம் பார்க்க
அதிலொரு பரவசம்
எதற்கிந்த அவசரம்
நான் உனை...ஒரு தரம் தழுவிட
பூவுடல்...மறுபுறம் நழுவிட
மாலை தோறும் மையல் தீர
இளமைக்கு வேலை கொடு

மெல்லப் பேசும் விழி
மௌனம் தானே மொழி
மெல்லப் பேசும் விழி
மௌனம் தானே மொழி
காதல் ரகசியம்
அதற்கொரு காவல் அவசியம்
எங்கே...ஹா இங்கே
ஆஹா ஹா எங்கே...இங்கே
 

தொடு வானம் நிஜமல்ல - கவிதை பாட நேரமில்லை

பாடல்: தொடு வானம் நிஜமல்ல
திரைப்படம்: கவிதை பாட நேரமில்லை
இசை: L.வைத்தியநாதன்
பாடியவர்கள்: எஸ்.ஜானகி & ராஜ்குமார் பாரதி

தொடு வானம் நிஜமல்ல
தொடுவது சுலபமல்ல
புரிய மறுக்கும் வயதல்ல
கரையை மறந்தால்
அதன் பேர் நதியல்ல
தொடு வானம் நிஜமல்ல
தொடுவது சுலபமல்ல
புரிய மறுக்கும் வயதல்ல
கரையை மறந்தால்
அதன் பேர் நதியல்ல
தொடு வானம் நிஜமல்ல
தொடுவது சுலபமல்ல


அடக்கம் இல்லாமல் அலைகின்ற காளை
விஷயம் இல்லாமல் முறுக்குது வாலை
வீட்டைத் தாங்காது விரிகின்ற வாழை
அன்பு இல்லாத வீரனும் கோழை
வானத்தை மூட போர்வை இல்லை
வன்முறையாலே தீர்வு இல்லை
இனிமேல் மனங்கள் இருண்டால்
உலகில் ஒளி இல்லை

தொடு வானம் நிஜமல்ல
தொடுவது சுலபமல்ல
புரிய மறுக்கும் வயதல்ல
கரையை மறந்தால்
அதன் பேர் நதியல்ல
தொடு வானம் நிஜமல்ல
தொடுவது சுலபமல்ல


நேற்று வரலாற்றில் நிகழ்ந்தது என்ன
ரத்தம் சிந்தாமல் நடந்தது என்ன
காகிதம் எல்லாமே பழங்கதை கூறும்
ஆயுதம் ஏந்தாமல் எது இங்கு மாறும்
வீட்டுக்கூரை எரியும் போது
பாட்டு கேட்க நேரம் ஏது
கிளியே விழிகள் சிவந்தால்
உலகில் ஒளி உண்டு

தொடு வானம் நிஜமல்ல
அதை தொட விருப்பமல்ல
கவிதை பாடும் பொழுதல்ல
முள்ளை முள்ளால்
எடுத்தால் தவறல்ல

விரக தாபமெனும் - உறவைக்காத்த கிளி

பாடல்: விரக தாபமெனும் தீயை மூட்டுவது
திரைப்படம்: உறவைக்காத்த கிளி
இசை: டி.ராஜேந்தர்
பாடியவர்: எஸ்.ஜானகி

விரக தாபமெனும் தீயை மூட்டுவது
பருவ காலமே னன னன னன னன...னா
அதில் விழுந்த பூவெனவே வெந்து காய்கிறது
பாவை தேகமே னன னன னன னன...னா
விரக தாபமெனும் தீயை மூட்டுவது
பருவ காலமே னன னன னன னன...னா
அதில் விழுந்த பூவெனவே வெந்து காய்கிறது
பாவை தேகமே னன னன னன னன...னா
தனிமையிலே வாடுகிறேன் இனிமைதனை தேடுகிறேன்
தனிமையிலே ஹா வாடுகிறேன் இனிமைதனை ஹோ தேடுகிறேன்

மோகத்தின் கலைத் திருவிழா நடத்தினாள் ஒரு பெண் நிலா
உணர்வுகள் தேராய் ஆகிட உணர்வெனும் வீதியில் ஓடிட
உணர்வுகள் தேராய் ஆகிட உணர்வெனும் வீதியில் ஓடிட
அம்மம்மா ஒரு திண்டாட்டம் அதிலும்தான் ஒரு கொண்டாட்டம்

விரக தாபமெனும் தீயை மூட்டுவது
பருவ காலமே னன னன னன னன...னா
அதில் விழுந்த பூவெனவே வெந்து காய்கிறது
பாவை தேகமே னன னன னன னன...னா
தனிமையிலே வாடுகிறேன் இனிமைதனை தேடுகிறேன்

மனமெனும் ஒரு நாட்டிலே அமைதியே எங்கும் நிலவிட
வாலிபம் என்றொரு ராணுவம் ஆட்சியை பிடித்ததும் கலவரம்
வாலிபம் என்றொரு ராணுவம் ஆட்சியை பிடித்ததும் கலவரம்
தூக்கத்தை அது கலைத்தது ஏக்கத்தை அது வளர்த்தது

விரக தாபமெனும் தீயை மூட்டுவது
பருவ காலமே னன னன னன னன...னா
அதில் விழுந்த பூவெனவே வெந்து காய்கிறது
பாவை தேகமே னன னன னன னன...னா
தனிமையிலே ஹா வாடுகிறேன் இனிமைதனை ஹோ தேடுகிறேன்
 

பாடு ராவில் ஆடும் - விலாங்கு மீன்

பாடல்: பாடு ராவில் ஆடும் வானவில்லே
திரைப்படம்: விலாங்கு மீன்
இசை: ஷ்யாம்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & உஷா ஊதுப்

Oh my darling c'mon swing
The night is still c'mon swing
Youth is blooming c'mon swing
Don't quit sweet love

பாடு ராவில் ஆடும் வானவில்லே ஆடு
பாடு ராவில் ஆடும் வானவில்லே ஆடு
நாளை என்பதை நம்பவில்லையே
இன்று ஒன்றுதான் உண்மை
சொர்க்கம் என்பது விண்ணில் இல்லையே
கண்ணில் காட்டுதே பெண்மை
என் கையில் அடங்கு பேரிம்பம் தொடங்கு
சுகம் நூறு மடங்கு ஹோ ஹோ ஹோ ஹோ

Swing...swing...swing...swing
Oh my darling c'mon swing
I say swing
The night is still c'mon swing
Everybody to the ???
Youth is blooming c'mon swing
Swing...swing...swing...swing
Don't quit sweet love

உலகம் இன்ப அரங்கம்
இங்கு பெண்கள் தங்க சுரங்கம்
காதல் எங்கள் வழக்கம்
காமன் பூஜை நடக்கும்
உலகம் இன்ப அரங்கம்
இங்கு பெண்கள் தங்க சுரங்கம்
காதல் எங்கள் வழக்கம்
காமன் பூஜை நடக்கும்
இரவு தீரும் வரைக்கும்
இன்ப லீலை இருக்கும்
நாள்தோறும் விழா வரும்
நான் சொன்னால் நிலா வரும்
நாள்தோறும் விழா வரும்
C'mon நான் சொன்னால் நிலா வரும்

Swing...swing...swing...swing
Oh my darling c'mon swing
Swing for the tempo
The night is still c'mon swing
Swing...swing...swing...swing
Youth is blooming c'mon swing...swing
Don't quit sweet love
Hey...hey...hey...hey
Hey...hey...hey...hey

Oh my darling c'mon swing
The night is still c'mon swing
Youth is blooming c'mon swing
Don't quit sweet love
Don't quit sweet love

என் நெஞ்சு சின்ன இலை - உத்தமபுத்திரன்

பாடல்: என் நெஞ்சு சின்ன இலை
திரைப்படம்: உத்தமபுத்திரன் (2010)
இசை: விஜய் ஆண்டணி
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ் & சைந்தவி

Hey...you are my love
You are my destiny
என் நெஞ்சு சின்ன இலை
நீதான் என் காதல் மழை
உன்னாலே நான் நனைய வேண்டும்


என் நெஞ்சு சின்னக் கொடி
நீதான் என் காதல் செடி
உன்மீது சுற்றிக்கொள்ள வேண்டும்


பார்வைகள் புது வார்த்தை பரிமாறுதே
இதயங்கள் இடம் மாறுதே

உன்னால் என் நிமிடங்கள் அழகானதே
வலி கூட சுகமானதே


என் நெஞ்சு சின்ன இலை
நீதான் என் காதல் மழை
உன்னாலே நான் நனைய வேண்டும்


என் நெஞ்சு சின்னக் கொடி
நீதான் என் காதல் செடி
உன்மீது சுற்றிக்கொள்ள வேண்டும்


உன்னோடு பேசிக் கொள்ள
வார்த்தைகள் சேர்த்து வைத்து
முள்ளுக்குள் திக்கி தவித்தேனே

உன் பேரை மட்டும் தினம்
நெஞ்சுக்குள் சொல்லி சொல்லி
என் பேரை இன்று மறந்தேனே

மஞ்சள் நிலவே கொஞ்சல் மொழியே
வெட்கத்திமிரே சாய்க்காதே

ஆசைக்கனவே மீசை புயலே
நித்தம் இசையில் நீ கொல்லாதே


என் நெஞ்சு சின்ன இலை
நீதான் என் காதல் மழை
உன்னாலே நான் நனைய வேண்டும்


என் நெஞ்சு சின்னக் கொடி
நீதான் என் காதல் செடி
உன்மீது சுற்றிக்கொள்ள வேண்டும்


உன் மூச்சுக்காற்று பட்டு
பூக்கின்ற பூக்கள் எல்லாம்
உன்போலே வாசனைகள் வீசும்

உன்னோடு நான் இருக்கும்
நேரங்கள் அத்தனையும்
போதாது என்று மனம் ஏங்கும்

மின்னல் விழியே கன்னக்குழியே
குட்டிக்கவிதை நீதானே

முத்தத்தடமே சுட்டித்தனமே
மொத்த சுகமும் நீ என்பேனே


என் நெஞ்சு சின்ன இலை
நீதான் என் காதல் மழை
உன்னாலே நான் நனைய வேண்டும்


என் நெஞ்சு சின்னக் கொடி
நீதான் என் காதல் செடி
உன்மீது சுற்றிக்கொள்ள வேண்டும்


பார்வைகள் புது வார்த்தை பரிமாறுதே
இதயங்கள் இடம் மாறுதே

உன்னால் என் நிமிடங்கள் அழகானதே
வலி கூட சுகமானதே


என் நெஞ்சு சின்ன இலை
நீதான் என் காதல் மழை
உன்னாலே நான் நனைய வேண்டும்


என் நெஞ்சு சின்னக் கொடி
நீதான் என் காதல் செடி
உன்மீது சுற்றிக்கொள்ள வேண்டும்

இரவினில் பனியினில் - நெருப்பிலே பூத்த மலர்

பாடல்: இரவினில் பனியினில்
திரைப்படம்: நெருப்பிலே பூத்த மலர்
இசை: K.V.மகாதேவன்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & வாணி ஜெயராம்

இரவினில் பனியினில்
இருவரும் விழித்திருப்போம்
ஒருவரின் மடியினில்
ஒருவரை அணைத்திருப்போம்
நமக்குள் இனி என்ன ரகசியமோ
உலகில் இது என்ன அதிசயமோ
நமக்குள் இனி என்ன ரகசியமோ
உலகில் இது என்ன அதிசயமோ


இரவினில் பனியினில்
இருவரும் விழித்திருப்போம்
ஒருவரின் மடியினில்
ஒருவரை அணைத்திருப்போம்
நமக்குள் இனி என்ன ரகசியமோ
உலகில் இது என்ன அதிசயமோ
நமக்குள் இனி என்ன ரகசியமோ
உலகில் இது என்ன அதிசயமோ


இலைகளின் மறைவினில்
கனி ஒன்று தெரிந்தால்
கிளிகள் விடுவதில்லை

இதயத்தின் நடுவினில்
ஒளி ஒன்று தெரிந்தால்
எண்ணம் விடுவதில்லை

ஆஆ...இலைகளின் மறைவினில்
கனி ஒன்று தெரிந்தால்
கிளிகள் விடுவதில்லை

இதயத்தின் நடுவினில்
ஒளி ஒன்று தெரிந்தால்
எண்ணம் விடுவதில்லை

இரண்டு பக்கம் மின்னிடும் காசு
என்ன வெட்கம் பேசடி பேசு
ம்ம்...இரண்டு பக்கம் மின்னிடும் காசு
என்ன வெட்கம் பேசடி பேசு
திரண்டு வரும் கவிதையை வீசு
உறவுக்கு வேலை கொடு
நல் உறவுக்கு வேலை கொடு


இரவினில் பனியினில்
இருவரும் விழித்திருப்போம்

ஒருவரின் மடியினில்
ஒருவரை அணைத்திருப்போம்

நமக்குள் இனி என்ன ரகசியமோ
உலகில் இது என்ன அதிசயமோ
நமக்குள் இனி என்ன ரகசியமோ
உலகில் இது என்ன அதிசயமோ

ரா ரா ர ரா ரா ர...ரா ரா
லா லா ல லா லா ல...லா லா

முடி தொட்டு அடி தொட்டு
பெருகிய கூந்தல்
முகத்தை மறைக்கட்டுமே

இடை தொட்டு உடை தொட்டு
ஜடை தொட்டுப் பார்த்து
பாடல் எழுதட்டுமே

முடி தொட்டு அடி தொட்டு
பெருகிய கூந்தல்
முகத்தை மறைக்கட்டுமே

இடை தொட்டு உடை தொட்டு
ஜடை தொட்டுப் பார்த்து
பாடல் எழுதட்டுமே

தாமரையின் விருந்துக்கு அழைப்பு
தாகம் உண்டு அருந்திட நினைப்பு
தாமரையின் விருந்துக்கு அழைப்பு
தாகம் உண்டு அருந்திட நினைப்பு

போதும் இங்கு பொங்குது துடிப்பு
திருமணம் ஆக்கட்டுமே

நமக்குள் திருமணம் ஆக்கட்டுமே

இரவினில் பனியினில்
இருவரும் விழித்திருப்போம்

ஒருவரின் மடியினில்
ஒருவரை அணைத்திருப்போம்

நமக்குள் இனி என்ன ரகசியமோ
உலகில் இது என்ன அதிசயமோ

நமக்குள் இனி என்ன ரகசியமோ
உலகில் இது என்ன அதிசயமோ


ல லா ல லா ல லா ல லா
லா லா ல ல ல ல லா

ல லா ல லா ல லா ல லா
லா லா ல ல ல ல லா

ல லா ல லா ல லா ல லா
லா லா ல ல ல ல லா

வெளக்கு வச்சா - மருதாணி

பாடல்: வெளக்கு வச்சா
திரைப்படம்: மருதாணி
இசை: கங்கை அமரன்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & பி.சுசீலா

வெளக்கு வச்சா படிச்சிடத்தான்
வாத்தியார் வீட்டுக்கு வாரியா சொல்லடி
கத்துக்க உண்டு ஏராளம்
எம் மனம் ரொம்ப தாராளம்


வெளக்கு வச்சா படிச்சிடத்தான்
வாத்தியார் வீட்டுக்கு வாரேனே நானுந்தான்
கத்துக்க உண்டு ஏராளம்
உம் மனம் ரொம்ப தாராளம்


கேட்காத கேள்வி நான் கேட்டா நீ மாட்டுவே
நூத்துக்கு நூறுதான் நான் வாங்கிக் காட்டுவேன்
இளமையின் சரித்திரம் இருட்டுல படிக்கணும்
இருட்டுல படிச்சதை பகலில நினைக்கணும்
நாள்தோறும் மாலை நேரம் பாடம் ஆரம்பம்
என்னை நீ தொடக்கூடாது
என்னாலே அது ஆகாது
வெளக்கு வச்சா...படிச்சிட வா

நான் போட்ட சேலையை பூங்காத்து நீக்குது
ரோசாப்பூ மேனியை லேசாக பாக்குது
அதுக்குத்தான் ஆத்திரம் உனக்குமா அவசரம்
மொத மொத தரிசனம் எனக்குத்தான் கெடைக்கணும்
ராப்போது ஆனா போதும் நானும் ஏங்கிறேன்
பக்கத்தில் வந்து நான் கூட
வெக்கத்தில் மனம் போராட

வெளக்கு வச்சா படிச்சிடத்தான்
வாத்தியார் வீட்டுக்கு வாரேனே நானுந்தான்
கத்துக்க உண்டு ஏராளம்
உம் மனம் ரொம்ப தாராளம்
கத்துக்க உண்டு ஏராளம்
எம் மனம் ரொம்ப தாராளம்
 

பூவென்னும் கால்கள் ஓட - சந்தன மலர்கள்

பாடல்: பூவென்னும் கால்கள் ஓட
திரைப்படம்: சந்தன மலர்கள்
இசை: கங்கை அமரன்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி

பூவென்னும் கால்கள் ஓட
போடாத தாளம் போட
நான் பாடுவேன் காதல் சுப்ரபாதம்

தூங்காத கண்களும் அதில்
தோன்றிடும் உன் வண்ணமும்
நீ பாடுகின்ற பாட்டைக்கேட்டு விழித்திடும்

பூவென்னும் கால்கள் ஓட
போடாத தாளம் போட
நான் பாடுவேன் காதல் சுப்ரபாதம்


பன்னீரைத்தூவும் மேகம்
பெண் நெஞ்சில் காதல் தாகம்
உன்னை வேண்டி வந்தது ஏன்

பதமான இதழின் ஓரம்
இதமான இனிய ஈரம்
சுகமான சுவைகள் ஊறும்
சுகங்கள் யாவும் தந்ததே

தினம் தினமும் தேடிடும்
இன்பமே என் மனம் வேண்டுமே


பூவென்னும் கால்கள் ஓட
போடாத தாளம் போட
நான் பாடுவேன் காதல் சுப்ரபாதம்


காலங்கள் போன போதும்
கை சேர்ந்து வாழ வேண்டும்
கண்ணே நீதான் என் துணை

கலையாத இன்ப நாதம்
கண் மீதில் நூறு பாவம்
கை சேரும் காலம் யாவும்
காண வேண்டும் மன்னனே

இணைந்திருப்போம் இன்று போல்
என்றுமே இன்பமே வேண்டுமே


பூவென்னும் கால்கள் ஓட
போடாத தாளம் போட
நான் பாடுவேன் காதல் சுப்ரபாதம்

நான் பாடுவேன் காதல் சுப்ரபாதம்

விழிகளே கனிகளே - மெட்ராஸ் வாத்தியார்

பாடல்: விழிகளே கனிகளே
திரைப்படம்: மெட்ராஸ் வாத்தியார்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்: ஜெயசந்திரன்

விழிகளே...கனிகளே திருநாள் இதுதான்
இளமையின் நிறைகுடம் இணைந்தது இரு மனம்
புதுவகை அறிமுகம் மனதுக்கு சுகம் தரும்

விழிகளே...கனிகளே திருநாள் இதுதான்
இளமையின் நிறைகுடம் இணைந்தது இரு மனம்
புதுவகை அறிமுகம் மனதுக்கு சுகம் தரும்

மாலை இளவெயில் சோலை மணிக்குயில்
ரகசிய மொழிகளில் நவரச கலைகளை
அறிந்திட அழைக்கிறதே
மாலை இளவெயில் சோலை மணிக்குயில்
ரகசிய மொழிகளில் நவரச கலைகளை
அறிந்திட அழைக்கிறதே
நேசம் எனும் வலை விரித்திடும் பேசும் உயிர்ச்சிலை
சிரிக்கையில் அலையாய் எழுந்தே
குடையாய் விரிந்தே பறக்குது வாலிப பறவை

விழிகளே...கனிகளே திருநாள் இதுதான்
இளமையின் நிறைகுடம் இணைந்தது இரு மனம்
புதுவகை அறிமுகம் மனதுக்கு சுகம் தரும்

ஆடும் புது நிலா காதல் தரும் கலா
இருபது வயதுக்கு அழகிய கனவுக்கு
எழுதிய முகவுரையே
ஆடும் புது நிலா காதல் தரும் கலா
இருபது வயதுக்கு அழகிய கனவுக்கு
எழுதிய முகவுரையே
காதல் நதிக்கரை அதை இரு கைகள் தொடும்வரை
இமை எனும் கதவோ தினமும் திறந்தே இருக்கும்
புதுவித மயக்கத்தில் தவிக்கும்

விழிகளே...கனிகளே திருநாள் இதுதான்
இளமையின் நிறைகுடம் இணைந்தது இரு மனம்
புதுவகை அறிமுகம் மனதுக்கு சுகம் தரும்
புதுவகை அறிமுகம் மனதுக்கு சுகம் தரும்

வெண்நீல வானில் - குங்குமக் கோலங்கள்

பாடல்: வெண்நீல வானில்
திரைப்படம்: குங்குமக் கோலங்கள்
இசை: ஷ்யாம்
பாடியவர்கள்: எஸ்.ஜானகி & குழுவினர்

வெண்நீல வானில் என் எண்ண மேகம்
பொன்னான கோலங்கள் போடும்
என் ஆசை யாவும் சங்கீதம் ஆகும்
என்னென்னவோ நெஞ்சிலே

இனிமைகள் பறந்திடும் வயதிது
ஆஆ ஆஆ ஆஆஆ...ஆஆஆ

வெண்நீல வானில் என் எண்ண மேகம்
பொன்னான கோலங்கள் போடும்
என் ஆசை யாவும் சங்கீதம் ஆகும்
என்னென்னவோ நெஞ்சிலே


பூங்கனவினிலே பெண் நெஞ்சம் செல்ல
புலர்ந்ததே புதுவித காலை
பொன் அலைகளிலே என் உள்ளம் துள்ள
புரளுதே தழுவிடும் வேளை
ஆசைகள் ஆயிரம் தினம் வர
ஆனந்த உறவுகள் சுகம் தர
ஆடிடும் இனிமைகள் தினம் பெற
ஆலிலை மேனியும் மெலிந்திட
இனிய ராகம் நெஞ்சில் வர
இன்பங்களே என் சொந்தமே
என்னென்னவோ நெஞ்சிலே

இனிமையில் இனித்திடும் வயதிது
ஆஆ ஆஆ ஆஆஆ...ஆஆஆ

வெண்நீல வானில் என் எண்ண மேகம்
பொன்னான கோலங்கள் போடும்
என் ஆசை யாவும் சங்கீதம் ஆகும்
என்னென்னவோ நெஞ்சிலே


கண் இமைகளிலே ஒரு தாளம் தட்ட
கவிதைகள் படித்தது நெஞ்சம்
பெண் உணர்வினிலே பல பாவம் வந்து
புது சுகம் பிறந்தது கொஞ்சம்
காவிரி நீர் என நினைவுகள்
காற்றினில் ஆடிய உணர்வுகள்
பூவினில் தோன்றிய இனிமைகள்
போனது தவித்திடும் தனிமைகள்
புதிய ராகம் நெஞ்சில் வர
காலங்களே வாழ்த்துங்களே
என்னென்னவோ நெஞ்சிலே

கனவுகள் பறந்திடும் விழியிது
ஆஆ ஆஆ ஆஆஆ...ஆஆஆ

வெண்நீல வானில் என் எண்ண மேகம்
பொன்னான கோலங்கள் போடும்
என் ஆசை யாவும் சங்கீதம் ஆகும்
என்னென்னவோ நெஞ்சிலே
லா லா லா...லா ல லா

தென்றல் அடிக்குது - குங்குமக்கோடு

பாடல்: தென்றல் அடிக்குது
திரைப்படம்: குங்குமக்கோடு
இசை: எஸ்.ஏ.ராஜ்குமார்
பாடியர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா

ஹே முப்பது முக்கோடி தேவர்கள் சாட்சியா
சூரியன் சந்திரன் இந்திரன் சாட்சியா
பாடுற குயிலு ஆடுற மயிலு
பாடுற குயிலு ஆடுற மயிலு
காக்கா குருவி வானம் பூமி சாட்சியா ம்ம்ம்

தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது தேனே
ஷெண்பகப்பூவிழி என்னை அழைக்குது மானே
மலர் உன்னைத்தொடவா...ம்ஹூம்
மடியினில் விழவா...ம்ஹூம்
உனக்கென்ன மதனே...அடடா
எனக்கின்று மயக்கம் தயக்கம்
தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது தேனே
ஷெண்பகப்பூவிழி என்னை அழைக்குது மானே

அந்திவர பாத்து...பாத்து
மின்மினியும் பூக்கும்...பூக்கும்
ஒம் மொகத்தப் பாத்து...பாத்து
எம் மனசும் பூக்கும்...பூக்கும்
ஒன்னோடு ஒண்ணா சேர உள்ளம் ஏங்குது
மன்னாதி மன்னன் பேச்சு பொன்னத் தூவுது
தேனிருக்கும் பூமலர சூடிக்கொள்ளணும்
வானிருக்கும் நாள்வரைக்கும் வாழ்ந்திருக்கணும்

உறவுக்கு பிறந்தேன்...ம்ம்ஹ்ம்
கனவுக்குள் மலர்ந்தேன்...ம்ம்ஹ்ம்
நெலவுக்குள் வலர்ந்தேன்...அடடா
நெருக்கத்தில் மயங்க மயங்க

தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது தேனே
ஷெண்பகப்பூவிழி என்னை அழைக்குது மானே

கல்யாண மேளம்...மேளம்
காதலுக்கு வேணும்...வேணும்
எப்போது கேட்கும்...கேட்கும்
அத்திமரம் பூக்கும்...ம்ஹூம்
ஒன் வயசு பொண்ணுங்க எல்லாம் புள்ளைய பெத்தாச்சு
என் நெனப்பு ஒன்கிட்ட வச்சேன் என் கதை என்னாச்சு
சீர் எடுத்து பூமுடிக்க காலம் வந்துரும்
ஊர் முழுக்க பந்தலிட்டு தாலி கட்டணும்

தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது தேனே
ஷெண்பகப்பூவிழி என்னை அழைக்குது மானே
மலர் உன்னைத்தொடவா ம்ஹூம்
மடியினில் விழவா ம்ஹூம்
உனக்கென்ன மதனே அடடா
எனக்கின்று மயக்கம் தயக்கம்
தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது தேனே
ஷெண்பகப்பூவிழி என்னை அழைக்குது மானே
 

தாலாட்டும் நிலவுக்கு - குங்குமக்கோடு

பாடல்: தாலாட்டும் நிலவுக்கு
திரைப்படம்: குங்குமக்கோடு
இசை: எஸ்.ஏ.ராஜ்குமார்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

தாலாட்டும் நிலவுக்கு காவலாய் வானம் இருக்குது
தள்ளாடும் மலருக்கு காவலாய் தென்றல் இருக்குது
பெண்ணே உனக்கு காவலாய் என்ன இருக்குது
பெண்ணே உனக்கு காவலாய் என்ன இருக்குது
தாலாட்டும் நிலவுக்கு காவலாய் வானம் இருக்குது
தள்ளாடும் மலருக்கு காவலாய் தென்றல் இருக்குது

பொட்டும் இல்ல பூவும் இல்ல குத்தம் யாருது
பொட்டும் இல்ல பூவும் இல்ல குத்தம் யாருது
பச்ச மரம் பட்டுவிட்டா பாவம் யாருது
புயல் வீசும் ஒரு நேரம் மழை தூவும் மறு நேரம்
இது காலம் செய்யும் வாதம் துயர்கோலம் என்று மாறும்
பாறையில போட்ட விதை பயிறாகும் நாளும் எது

தாலாட்டும் நிலவுக்கு காவலாய் வானம் இருக்குது
தள்ளாடும் மலருக்கு காவலாய் தென்றல் இருக்குது

கேள்வியில குத்தம் இல்ல மௌனம் ஏனம்மா
கேள்வியில குத்தம் இல்ல மௌனம் ஏனம்மா
காவல் தரும் நெஞ்சுக்குள்ள கள்ளம் ஏதம்மா
கண்ணோரம் என்ன சோகம் பெண் சாபம் என்று தீரும்
கொடிபூவில் இன்னும் வாசம் கொடுமைதானே வெள்ளைக்கோலம்
ஒரு பிள்ளைக்கென வாழ்ந்துவிட்டால் தெய்வங்கள் வாழ்த்து சொல்லும்

தாலாட்டும் நிலவுக்கு காவலாய் வானம் இருக்குது
தள்ளாடும் மலருக்கு காவலாய் தென்றல் இருக்குது
பெண்ணே உனக்கு காவலாய் என்ன இருக்குது
பெண்ணே உனக்கு காவலாய் என்ன இருக்குது
தாலாட்டும் நிலவுக்கு காவலாய் வானம் இருக்குது
தள்ளாடும் மலருக்கு காவலாய் தென்றல் இருக்குது
 

நெஞ்சில் நெஞ்சில் இதோ - எங்கேயும் காதல்

பாடல்: நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
திரைப்படம்: எங்கேயும் காதல்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவகள்: ஹரிஷ் ராகவேந்திரா & சின்மாயி

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் மூலை வானம் ஜுவாலை மூட்டுதோ

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் மூலை வானம் ஜுவாலை மூட்டுதோ

என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின் சாரல்தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்பத்துகள் இன்பங்கள் பொழிகையில்


நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் மூலை வானம் ஜுவாலை மூட்டுதோ


ஒரு மௌனம் பரவும் சிறு காதல் பொழுதில்
விழியில் விளையும் மொழியில் எதுவும் கவிதையடி
அசையும் இமையின் இசையில் எதுவும் இனிமையடி


வெண்மார்பில் படரும் உன் பார்வை திரவம்
இதயப்புதரில் சிதறி சிதறி வழிவது ஏன்
ஓர் உதிரும் துளியில் உதிரம் முழுதும் அதிர்வது ஏன்


உருகாதே உயிரே விலகாதே மலரே
உன் காதல் வேரைக்காண வேண்டி
வானம் தாண்டி உனக்குள் நுழைந்த


நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் மூலை வானம் ஜுவாலை மூட்டுதோ


பசையூறும் இதழும் பசியேறும் விரலும்
விரதம் முடித்து இரையை விரையும் நேரமிது
உயிரின் முனையில் மயிரின் இழையும் தூரமது


ஒரு வெள்ளைத்திரையாய் உன் உள்ளம் திறந்தாய்
சிறுக சிறுக இரவைத் திருடும் காரிகையே
விடியும்வரையில் விரலும் இதழும் தூரிகையே


விடியாதே இரவே முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம் நீளக் கோரி
காதல்காரி துடிக்க துடிக்க


நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் மூலை வானம் ஜுவாலை மூட்டுதோ


என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின் சாரல்தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்பத்துகள் இன்பங்கள் பொழிகையில்
 

யாரது யாரது - காவலன்

பாடல்: யாரது யாரது
திரைப்படம்: காவலன்
இசை: வித்யாசாகர்
பாடியவர்: கார்த்திக் (Humming: சுசித்ரா)

யாரது...யாரது யாரது...யார் யாரது
சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது
யாரது...யாரது யாரது...யாரது

நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
வினையாக கேள்வி தந்தது
தெளிவாக குழம்ப வைத்தது
யாரது...யாரது யாரது...யார் யாரது

என்னில் ஒரு சடுகுடு சடுகுடு
காலை மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதக்களி கதக்களி
தூங்கும் போதும் தொடர்கிறதே

என்னில் ஒரு சடுகுடு சடுகுடு
காலை மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதக்களி கதக்களி
தூங்கும் போதும் தொடர்கிறதே

இரவிலும் அவள் பகலிலும் அவள்
மனதினை தொடுவது தெரிகிறதே
கனவிலும் அவள் நினைவிலும் அவள்
நிழலென தொடர்வது புரிகிறதே
இருந்தாலும் இல்லா அவளை இதயம் தேடுதே
யாரது...யாரது யாரது...யார் யாரது

உச்சந்தலை நடுவினில் அவள் ஒரு
வேதாளம் போல் இறங்குகிறாள்
என்னுள் அவள் இறங்கிய திமிரினில்
இம்சை ராஜ்ஜியம் தொடங்குகிறாள்

அவள் இவள் என எவள் எவள் என
மறைவினில் இருந்தவள் குழப்புகிறாள்
அவளது முகம் எவளையும் விட
அழகிலும் அழகென உணர்த்துகிறாள்
இருந்தாலும் இல்லாமல் அவள் கலகம் செய்கிறாள்
யாரது...யாரது யாரது...யார் யாரது

சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது
யாரது...யாரது யாரது...யாரது

நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
வினையாக கேள்வி தந்தது
தெளிவாக குழம்ப வைத்தது

ஏடி கள்ளச்சி - தென்மேற்குப் பருவக்காற்று

பாடல்: ஏடி கள்ளச்சி
திரைப்படம்: தென்மேற்குப் பருவக்காற்று
இசை: N.R.Rahnanthan
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ் & ஷ்ரேயா கோஷல்

ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா
போடி வெள்ளச்சி என்ன புரியலையா
நெஞ்சு நோங்குது நோங்குது உன்ன
உன் கால் ரெண்டு போகுது பின்ன
நான் முத்தம் போடத்துடிக்கிறேன் உன்ன
நீ முள்ளைக்கட்டி அடிக்கிற கண்ண
நீ காய்தானா பழந்தானா சொன்னால் என்ன
ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா
போடி வெள்ளச்சி என்ன புரியலையா


ஓ...அத்தமகன் போல வந்து அங்க இங்க மேய்வ
அத்து வானக்காட்டில் விட்டு அத்துக்கிட்டு போவ

முள்ளுத்தச்ச ஆடு போல நெஞ்சுக்குழி நோக
முட்டையிட்ட காடை எங்கே காட்டைவிட்டு போக

கிடை ஆட்டுக்கோமியம்கூட ஒரு வாரம் வாசம் வரும்
கிறுக்கேத்தும் மாம்பழ சொல்லு மறுநாளு மாறிவிடும்

நான் பொம்பள கிறுக்குல வல்லன்
என் புத்தியில் வேறொண்ணும் இல்ல
நான் உடும்புக்கு பொறந்தவன் புள்ள
சொன்ன ஒரு சொல்லு மாறுவதில்ல

நீ வெறும் வாய மெல்லாத வெளையாட்டுல

ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா
போடி வெள்ளச்சி என்ன புரியலையா


ஆண்டிப்பட்டி தாலுக்காவில் பொம்பளைக்கா பஞ்சம்
ஆக மொத்தம் ஒன்னக்கண்டு ஆடிப்போச்சு நெஞ்சம்

பித்தம் கொஞ்சம் கூடிப்போனா இப்படித்தான் கெஞ்சும்
சத்தம் போடும் நெஞ்சுக்கூட்ட சாத்திவையி கொஞ்சம்

கொடியோடும் சக்கரவள்ளி தெரியாம கெழங்கு வைக்கும்
அதுபோல பொம்பள சாதி அறியாம மனச வைக்கும்

நீ பட்டுன்னு முன்ன வந்து நில்லு
எம் பொட்டுல அடிச்சி நீ சொல்லு
இனி நமக்குள்ள எதுக்குய்யா முள்ளு
அட நாவுக்கு தூரமில்ல பல்லு

நான் முடிபோட ரெடிதான்டி முடிவா சொல்லு

ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா
போடி வெள்ளச்சி என்ன புரியலையா
நெஞ்சு நோங்குது நோங்குது உன்ன
உன் கால் ரெண்டு போகுது பின்ன
நான் முத்தம் போடத்துடிக்கிறேன் உன்ன
நீ முள்ளைக்கட்டி அடிக்கிற கண்ண
நீ காய்தானா பழந்தானா சொன்னால் என்ன
ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா
போடி வெள்ளச்சி
 

ஏழிசை கீதமே - ரசிகன் ஒரு ரசிகை

பாடல்: ஏழிசை கீதமே
திரைப்படம்: ரசிகன் ஒரு ரசிகை
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
இசை: ரவீந்திரன்


ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே
வாழும் காலம் யாவும் உனக்காக நான்தான்
காவிய வீணையில் ஸ்வரங்களை மீட்டுவேன் கானம்
கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே
ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே

ஏதோ ராகம் எனது குரலின் வழி
தாளம் பாவம் இரண்டும் இணைந்து வர
கேட்கும் யாரும் உருகி உருகி விழ
காதில் பாயும் புதிய கவிதை இது
அழகு மொழியில் ஒரு அமுத மழையும் வர
நினைவும் மனமும் அதில் நனைய நனைய
சுகமோ...ஏதோ
நாளெல்லாம் சந்தோஷம் நெஞ்செல்லாம் சங்கீதம்
உயிரே...உயிரே
ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே

கையில் ஏந்தும் மதுவின் மயக்கமுண்டு
கண்ணில் நீந்தும் கனவில் இனிமையுண்டு
நெஞ்சே நெஞ்சே எதையும் மறந்துவிடு
போதை ஆற்றில் மனதை மிதக்கவிடு
உறவும் எதுவுமில்லை கவலை சிறிதுமில்லை
தனிமை கொடுமையில்லை இனிமை இனிமை
இதுதான்...நான்தான்
பாசங்கள் கொள்ளாத பந்தங்கள் இல்லாத
மனிதன்...மனிதன்

ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே
வாழும் காலம் யாவும் உனக்காக நான்தான்
காவிய வீணையில் ஸ்வரங்களை மீட்டுவேன் கானம்
கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே
ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே

பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள் - முப்பெரும் தேவியர்

பாடல்: பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள்
திரைப்படம்: முப்பெரும் தேவியர்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & எஸ்.ஜானகி

பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள் குளிக்க வந்ததோ
பாராட்டும் இரு காவிய கண்கள் ரசிக்க வந்ததோ
பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள் குளிக்க வந்ததோ
பாராட்டும் இரு காவிய கண்கள் ரசிக்க வந்ததோ
இரு தாமரை மொட்டுகள் சிந்திய முத்துக்கள்
எத்தனை எத்தனையோ

எனை தாங்கிய மன்னவன் வாங்கிய முத்தங்கள்
எத்தனை அத்தனையோ

இரு தாமரை மொட்டுகள் சிந்திய முத்துக்கள்
எத்தனை எத்தனையோ

எனை தாங்கிய மன்னவன் வாங்கிய முத்தங்கள்
எத்தனை அத்தனையோ


பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள் குளிக்க வந்ததோ
பாராட்டும் இரு காவிய கண்கள் ரசிக்க வந்ததோ

காவடிச்சிந்து விழி பாடிட வண்டு
எனை வா வா வா என்றது

காவடிச்சிந்து விழி பாடிட வண்டு
எனை வா வா வா என்றது

முத்திரைப்பொன்னே அடி மோஹனப்பெண்ணே
இதழ் தேன் தேன் தேன் என்றது
இதழ் தேன் தேன் தேன் என்றது

எந்தன் சிற்றிடை தொட்டதும் முற்றுகை இட்டதும்
போர்க்கள ஞாபகமோ

இந்த சித்திரப்பூவிழி ஒத்திகை பார்த்தது
அந்தியில் நாடகமோ


பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள் குளிக்க வந்ததோ
பாராட்டும் இரு காவிய கண்கள் ரசிக்க வந்ததோ

பூரணக்கும்பம் இடை தாங்கியவண்ணம்
கொடி ஏன் ஏன் ஏன் வந்ததோ

பூரணக்கும்பம் இடை தாங்கியவண்ணம்
கொடி ஏன் ஏன் ஏன் வந்ததோ

காரணம் என்ன வந்த காரியம் என்ன
அதை நான் நான் நான் சொல்லவோ
அதை நான் நான் நான் சொல்லவோ

இந்த அஞ்சுக பெண்ணுக்குள் அஞ்சனக் கண்ணுக்குள்
ஆயிரம் கற்பனைகள்

உந்தன் கைவிரல் தொட்டதும் கண்ணடி பட்டதும்
ஆனந்த சொப்பனங்கள்


பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள் குளிக்க வந்ததோ
பாராட்டும் இரு காவிய கண்கள் ரசிக்க வந்ததோ
பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள் குளிக்க வந்ததோ
பாராட்டும் இரு காவிய கண்கள் ரசிக்க வந்ததோ
 

திருக்கோவில் சிற்பம் - தென்றல் தொடாத மலர்

பாடல்: திருக்கோவில் சிற்பம்
திரைப்படம்: தென்றல் தொடாத மலர்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

திருக்கோவில் சிற்பம் வந்தாள்
தேவாரப்பாடல் சொன்னாள்
ஒரு பார்வை என்னைப் பார்த்தாள்
விலை என்னைக் கேட்டாள்
திருக்கோவில் சிற்பம் வந்தாள்
தேவாரப்பாடல் சொன்னாள்
ஒரு பார்வை என்னைப் பார்த்தாள்
விலை என்னைக் கேட்டாள்
திருக்கோவில் சிற்பம் வந்தாள்

இன்னும் பிள்ளைத்தமிழ் சொல்லும்
பெண்மை எழில் மான் மான் இவளே
இன்னும் பிள்ளைத்தமிழ் சொல்லும்
பெண்மை எழில் மான் மான் இவளே
இவள் கண்ணில் நானூறு மின்னல்
நின்றாடும் காதல் தீபாவளி
சொந்தம் தந்தாள் நல்ல சந்தம் சொன்னாள்
இன்று சங்கீதம் நான் இசைக்க இங்கே

திருக்கோவில் சிற்பம் வந்தாள்
தேவாரப்பாடல் சொன்னாள்
ஒரு பார்வை என்னைப் பார்த்தாள்
விலை என்னைக் கேட்டாள்
திருக்கோவில் சிற்பம் வந்தாள்

நெஞ்சின் நிலா இவள் தென்றல்
தொடா மலர் தேன் தேன் தருவாள்
நெஞ்சின் நிலா இவள் தென்றல்
தொடா மலர் தேன் தேன் தருவாள்
இடை என்னைத் தாலாட்டும்
வண்ணத் தென்பாங்கு பாடும் நீலாம்பரி
முன்னும் பின்னும் விழி துள்ளும்
தத்தைக்கிளி தோளோடு நான் தழுவ இங்கே

திருக்கோவில் சிற்பம் வந்தாள்
தேவாரப்பாடல் சொன்னாள்
ஒரு பார்வை என்னைப் பார்த்தாள்
விலை என்னைக் கேட்டாள்
திருக்கோவில் சிற்பம் வந்தாள்

வெள்ளிக்கொலுசு துள்ளாதோ - தென்றல் தொடாத மலர்

பாடல்: வெள்ளிக்கொலுசு துள்ளாதோ
திரைப்படம்: தென்றல் தொடாத மலர்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்: எஸ்.ஜானகி & குழுவினர்

வெள்ளிக்கொலுசு துள்ளாதோ
சங்கதி சொல்லாதோ
வெள்ளிக்கொலுசு துள்ளாதோ
சங்கதி சொல்லாதோ
இதழோடு இலைபோடு பசிதீர பரிமாறு
தலைகாணி பாய்போடு
குளத்தங்கரையில் குடும்பம் நடத்து
தவறு தள்ளிப்படு
வெள்ளிக்கொலுசு துள்ளாதோ
சங்கதி சொல்லாதோ
இதழோடு இலைபோடு பசிதீர பரிமாறு
தலைகாணி பாய்போடு
குளத்தங்கரையில் குடும்பம் நடத்து
தவறு தள்ளிப்படு
வெள்ளிக்கொலுசு துள்ளாதோ
சங்கதி சொல்லாதோ

ஆத்தோரமா தென்னம்பாள
பூத்திருக்கே பொன்னப்போல
ஆத்தோரமா தென்னம்பாள
பூத்திருக்கே பொன்னப்போல
உனக்குன்னு ஆளானேன்
பசிக்கொரு பாலானேன்
கண் மூடிய போதும்
உன் ஞாபகம் மீறும்
கண் மூடிய போதும்
உன் ஞாபகம் மீறும்
உசிரு பொறந்த போது
எழுந்த உறவல்லவா

வெள்ளிக்கொலுசு துள்ளாதோ
சங்கதி சொல்லாதோ
வெள்ளிக்கொலுசு துள்ளாதோ
சங்கதி சொல்லாதோ
இதழோடு இலைபோடு பசிதீர பரிமாறு
தலைகாணி பாய்போடு
குளத்தங்கரையில் குடும்பம் நடத்து
தவறு தள்ளிப்படு
வெள்ளிக்கொலுசு துள்ளாதோ
சங்கதி சொல்லாதோ

புத்தம் புது முத்தம் தர
சத்தம் வரும் இளங்கிளியே
பாவம் பொறு மோட்சம் செல்ல
இல்லை ஒரு இடைவெளியே

புத்தம் புது முத்தம் தர
சத்தம் வரும் இளங்கிளியே
பாவம் பொறு மோட்சம் செல்ல
இல்லை ஒரு இடைவெளியே
உரசுது காத்து ஒதுங்குது நாத்து
உரசுது காத்து ஒதுங்குது நாத்து
சந்தோஷம் தாங்காம பொங்குது ஊத்து

வெள்ளிக்கொலுசு துள்ளாதோ
சங்கதி சொல்லாதோ
வெள்ளிக்கொலுசு துள்ளாதோ
சங்கதி சொல்லாதோ
இதழோடு இலைபோடு பசிதீர பரிமாறு
தலைகாணி பாய்போடு
குளத்தங்கரையில் குடும்பம் நடத்து
தவறு தள்ளிப்படு
வெள்ளிக்கொலுசு துள்ளாதோ
சங்கதி சொல்லாதோ
வெள்ளிக்கொலுசு துள்ளாதோ
சங்கதி சொல்லாதோ
 

வான் மழையின் துளிகள் - நர்த்தகி

பாடல்: வான் மழையின் துளிகள்
திரைப்படம்: நர்த்தகி
இசை: ஜி.வி.பிரகாஷ்
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன் & சுதா ரகுநாதன்

வான் மழையின் துளிகள்
ஆணின் துளியா பெண்ணின் துளியா
பார்க்கடலின் அலைகள்
ஆணின் அலையா பெண்ணின் அலையா
காற்றில் ஆண் பெண்கள் பேதமில்லை
மழையில் காட்டும் வானவில்லை
இரு நேர்க்கோடு இணையும்
இடத்தின் உருவம் இதுவல்லவா
சிவனை நீ பார்த்தால் சிவன் உருவம்
உமையை நீ பார்த்தால் உமை உருவம்
கண் பார்வை காட்டாத முழு உருவம்
உடலில் தெய்வீகம் பொழியாத புது வடிவம்

வான் மழையின் துளிகள்
ஆணின் துளியா பெண்ணின் துளியா
பார்க்கடலின் அலைகள்
ஆணின் அலையா பெண்ணின் அலையா

கடலின் ஆழத்தை யாரும் கண்டு சொல்லலாம்
உடலின் ஆழத்தை யாரும் காண முடியுமா
குழந்தைக் காலத்தில் ஒரு உடல் ஒரு உடல்
வளர்ந்த காலத்தில் வேறுடலே
சிதையினில் தீவைத்து எரித்திடும் வரையினில்
உடலின் உரு மாற்றம் தொடர்கதையே
ஆண்கள் என்பதும் பெண்கள் என்பதும்
மாய தோற்றங்களே
திரு நங்கை இவள்
இரு கரை நடுவினில் ஓடும் நதியா

வான் மழையின் துளிகள்
ஆணின் துளியா பெண்ணின் துளியா
பார்க்கடலின் அலைகள்
ஆணின் அலையா பெண்ணின் அலையா
காற்றில் ஆண் பெண்கள் பேதமில்லை
மழையில் காட்டும் வானவில்லை
இரு நேர்க்கோடு இணையும்
இடத்தின் உருவம் இதுவல்லவா
சிவனை நீ பார்த்தால் சிவன் உருவம்
உமையை நீ பார்த்தால் உமை உருவம்
கண் பார்வை காட்டாத முழு உருவம்
உடலில் தெய்வீகம் பொழியாத புது வடிவம்

வான் மழையின் துளிகள்
ஆணின் துளியா பெண்ணின் துளியா
பார்க்கடலின் அலைகள்
ஆணின் அலையா பெண்ணின் அலையா

சின்னஞ்சிறு இதயத்திலே - நர்த்தகி

பாடல்: சின்னஞ்சிறு இதயத்திலே
திரைப்படம்: நர்த்தகி
இசை: ஜி.வி.பிரகாஷ்
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ் & பிரஷாந்தினி

சின்னஞ்சிறு இதயத்திலே மழைத்துளி குதிக்கிறதே
என்ன இந்த சொந்தமென்று எட்டிஎட்டி பார்க்கிறதே
மழைத்துளி விழுவது மண்ணுக்குத் தெரியும்
மழைத்துளி சேரும் இடம் யாருக்குத் தெரியும்
இது நதியாக ஓடி கடலோடு கூடி
முத்தாகுமா இல்லை உப்பாகுமா

சின்னஞ்சிறு இதயத்திலே மழைத்துளி குதிக்கிறதே
என்ன இந்த சொந்தமென்று எட்டிஎட்டி பார்க்கிறதே
மழைத்துளி விழுவது மண்ணுக்குத் தெரியும்
மழைத்துளி சேரும் இடம் யாருக்குத் தெரியும்
இது நதியாக ஓடி கடலோடு கூடி
முத்தாகுமா இல்லை உப்பாகுமா

கிளைகளில் பூ பூத்தால் ஊருக்குத் தெரிந்துவிடும்
வேரிலும் பூ பூக்கும் அதுதான் பெண் இதயம்
பெண் மனதின் காதல் எல்லாம் கைரேகை போலே
வளர வளரக் கூட வளரும் இன்னும் கொஞ்சம் மேலே
இது கண்ணாடி பிம்பம் அதை கைதீண்டும் வயது
தினம் அன்பாகி அன்பாகி அலைபாயும் மனது

சின்னஞ்சிறு இதயத்திலே மழைத்துளி குதிக்கிறதே
என்ன இந்த சொந்தமென்று எட்டிஎட்டி பார்க்கிறதே

ஒவ்வொரு வயதினிலும் ஒவ்வொரு கனவிருக்கும்
வாழ்வே கனவு மயம் என்பதே மறந்திருக்கும்
தோழமையின் கைப்பிடித்து நடந்து செல்லும்போது
காதலெனும் ஊருக்கது கூட்டிச்செல்லும் பாரு
சிலர் தெரியாமல் போவார் சிலை தெரிந்தேதான் போவார்
இனி எதிர்காலம் என்னாகும் யார் சொல்லக்கூடும்

சின்னஞ்சிறு இதயத்திலே மழைத்துளி குதிக்கிறதே
என்ன இந்த சொந்தமென்று எட்டிஎட்டி பார்க்கிறதே
மழைத்துளி விழுவது மண்ணுக்குத் தெரியும்
மழைத்துளி சேரும் இடம் யாருக்குத் தெரியும்
இது நதியாக ஓடி கடலோடு கூடி
முத்தாகுமா இல்லை உப்பாகுமா

பூவின் மணம் பூவில் இல்லை - நர்த்தகி

பாடல்: பூவின் மணம் பூவில் இல்லை
திரைப்படம்: நர்த்தகி
இசை: ஜி.வி.பிரகாஷ்
பாடியவர்கள்: டிப்பு & ஹரிணி

பூவின் மணம் பூவில் இல்லை
பூந்தென்றலோ தொடவே இல்லை
தீயின் குணம் தீயில் இல்லை
தீண்டும் விரல் சுடவே இல்லை

பூவின் மணம் பூவில் இல்லை
பூந்தென்றலோ தொடவே இல்லை
தீயின் குணம் தீயில் இல்லை
தீண்டும் விரல் சுடவே இல்லை
ஓ உடல் என்னும் படகு தண்ணீரில் ஆட
இரு கரைகளின் நடுவே மிதந்தேன் அலைந்தேன்
ஒரு குளமும் மலராய் என் தேகமும் மாற
மறு குளமும் தீயாய் தகித்தேன் எரிந்தேன் அன்பே
உதிரும் போதும் சரம் கோர்க்கிறேன்
அலைகள் மோத மணல் சேர்க்கிறேன்
இடியின் நடுவே இசை கேட்கிறேன்
எனை நான் தோற்று உனை மீட்கிறேன்

பருவத்தில் பேய் ஆட்டங்கள் பாலினத் தடுமாற்றங்கள்
உருவத்தை உரு மாற்றவா உள்ளத்தை அது மாற்றுமா
ஓ எனக்குள்ளே ஆண்மை நீ தேட வேண்டும்
உனக்குள்ளே பெண்மை நான் தேட வேண்டும்
வேப்பம் மரக்கிளையில் வேறேதோ செடிதான்
வளர்வதைப் போல வலியை உணர்ந்தேன்

பூவின் மணம் பூவில் இல்லை
பூந்தென்றலோ தொடவே இல்லை

கானலின் நீரோடையில் மீன்களை நீ கேட்கிறாய்
கேள்விகள் புரியாமலே பதில்களை நீ சேர்க்கிறாய்
ஆ சில நேரம் விளக்கின் வெளிச்சங்கள் ஈர்க்கும்
விளக்குக்கும் கீழே இருட்டொன்று இருக்கும்
இருளும் ஒளியும் ஒன்றாகத் தீண்ட
குழப்பத்திலே நானும் தவித்தேன் துடித்தேன்

பூவின் மணம் பூவில் இல்லை
பூந்தென்றலோ தொடவே இல்லை
தீயின் குணம் தீயில் இல்லை
தீண்டும் விரல் சுடவே இல்லை
 

யாதுமாகியே வேதமாகியே - சீடன்

பாடல்: யாதுமாகியே வேதமாகியே
திரைப்படம்: சீடன்
இசை: தினா
பாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன், கவிதா கிருஷ்ணமூர்த்தி & குழுவினர்

ஜகன ஜகனனன தகிட தகிடதக
ஜகன ஜகனனன தகிட தகிடதக
ஜகன ஜகனனன ஜகன ஜகனனன
ஜகன ஜகனனன ஜகன ஜகனனன
ஜகன ஜகனனன ஜகன ஜகனனன
ஜகன ஜகனனன ஜகன ஜகனனன

ஜகன ஜகனனன ஜகன ஜகனனன
ஜகன ஜகனனன ஜகன ஜகனனன

ஆ ராரா ராரா ராரா ராரா தீர தீரனா
ராரா ராரா ராரா ராரா தீர தீரனா

யாதுமாகியே வேதமாகியே நிற்கும் காதலே
காதல் என்பதும் கடவுள் என்பதும் அன்பின் மீறலே
ஓ யாதுமாகியே வேதமாகியே நிற்கும் காதலே
காதல் என்பதும் கடவுள் என்பதும் அன்பின் மீறலே
கல்லோடு வரும் காதல் மாறும் பக்தியாய்
கண்ணோடு வரும் காதல் வாழும் சக்தியாய்
அறிவாய் மனமே அறிந்தால் நலமே
ஸக ஸஸ நிஸ நிநி பநி பப
மப மம கம கக ஸக ஸஸ...க ம ப நி
அகலும் பயமே அனைத்தும் ஜெயமே

ஓ யாதுமாகியே வேதமாகியே நிற்கும் காதலே
காதல் என்பதும் கடவுள் என்பதும் அன்பின் மீறலே

ஆ ராரா ராரா ராரா ராரா தீர தீரனா
ராரா ராரா ராரா ராரா தீர தீரனா

ஸா நிஸ நி கம பா நிஸ கரி ஸா நிஸ நி கம பா
ஸா நிஸ நி கம பா நிஸ கரி ஸா நிஸ நி கம பா
தரிகிட ததாம்திதா ததாம்திதா ததாம்திதா தரிகிட தகதா

நாதம் வந்தது வெளியிடம்
வேதம் வந்தது ஒலியிடம்
நாவும் வந்தது மொழியிடம்
யாவும் வந்தது அவனிடம்

என் மனம் எங்கும் மலர்ச்சோலை அவன் தந்தது
இலையுதிர்க்காலம் அதில் இங்கு ஏன் வந்தது
எதிலும் எதிலும் ஒரு நன்மை இருக்கும் என
எடுத்துக்கொள்க என் அன்னமே
நினைக்க நினைக்க அது நடக்கும் நடக்கும் எனும்
நம்பும் உள்ளம் வரும் முன்னமே
அறிவாய் மனமே அறிந்தால் நலமே
ஸக ஸஸ நிஸ நிநி பநி பப
மப மம கம கக ஸக ஸஸ...க ம ப நி
அகலும் பயமே அனைத்தும் ஜெயமே

தாம் தகிடதாம் தகிடதாம் தகிடதாம் தகிட தகதகிட
ஓ யாதுமாகியே வேதமாகியே நிற்கும் காதலே
காதல் என்பதும் கடவுள் என்பதும் அன்பின் மீறலே

தோம் தகிடதக தோம் தகிடதக தோம் தகிடதக தோம் தகிடதக
தோம் தரிகிட கிடதோம் தகிட தகிட தக தரிகிட தகிட தகதின
தோம் தகிடதக தோம் தகிடதக தோம் தகிடதக தோம் தகிடதக
தகிட தகிட தகிட தகிட தரிகிடதக தகிட தகிட தகிட தகிட தரிகிடதக
ஸே கிரனன ஸே கிரனன கிரனன
ஸே கிரனன ஸே கிரனன கிரனன
ஸே கிரனன ஸே கிரனன கிரனன
ஸே கிரனன ஸே கிரனன கிரனன
கிரன கிரன கிரன கிரன கிரனன
கிரன கிரன கிரன கிரன கிரனன
கிரன கிரன கிரன கிரன கிரனன...னா

நாளும் இனியும்தான் என் செய்யும்
கொடும் கோலும் கூற்றுமே என் செய்யும்
நம்பி ஓடிவா நடந்திடும்
இனி உந்தன் வேதனை கடந்திடும்

என் நினைவோடும் கனவோடும் அவன் சிந்தனை
என இருந்தாலும் எனக்கென்று நிதம் நிந்தனை
உனது உனது மனம் உணரும் உணரும் விதம்
நிகழும் நிகழும் இது சத்தியம்
உருக உருக உள்ளம் பருக பருக உடன்
உதவ வருவதவன் தத்துவம்

அறிவாய் மனமே அறிந்தால் நலமே
ஸக ஸஸ நிஸ நிநி பநி பப
மப மம கம கக ஸக ஸஸ...க ம ப நி
அகலும் பயமே அனைத்தும் ஜெயமே

தாம் தகிடதாம் தகிடதாம் தகிடதாம் தகிட தகதகிட
ஓ யாதுமாகியே வேதமாகியே நிற்கும் காதலே
காதல் என்பதும் கடவுள் என்பதும் அன்பின் மீறலே
ஓ யாதுமாகியே வேதமாகியே நிற்கும் காதலே
காதல் என்பதும் கடவுள் என்பதும் அன்பின் மீறலே

னன னன னன னன னன னன னன னன தீர தீரனா
னன னன னன னன னன னன னன னன தீர தீரனா

என்னதான் இந்த மௌனம் - கடவுளுக்கு ஒரு கடிதம்

பாடல்: என்னதான் இந்த மௌனம்
திரைப்படம்: கடவுளுக்கு ஒரு கடிதம்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: P.ஜெயசந்திரன் & வாணி ஜெயராம்

என்னதான் இந்த மௌனம்
சன்னிதானத்தில் இந்த நேரத்தில்
உனக்கெந்த தியானத்தில் கவனம்

என்னதான் இந்த மௌனம்
சன்னிதானத்தில் இந்த நேரத்தில்
உனக்கெந்த தியானத்தில் கவனம்


வலம் வந்து தம்பியின்
வாழ்வுக்கு வேண்டினேன்
வரம் தரவே மனம் இல்லையோ

தினம் வந்து தினம் வந்து
தீபத்தை ஏற்றினேன்
தெய்வத்தின் கருணை இல்லையோ

எந்தன் உள்ளத்தை
எந்தன் எண்ணத்தை
எந்தன் உள்ளத்தை
எந்தன் எண்ணத்தை
இங்கு யார்முன்னே நான் சொல்லுவேன்
இங்கு யார்முன்னே நான் சொல்லுவேன்


என்னதான் இந்த மௌனம்
சன்னிதானத்தில் இந்த நேரத்தில்
உனக்கெந்த தியானத்தில் கவனம்


மலர்கொண்டு மணம்கொண்டு
திருமண நாள் கண்டு
வாழ்ந்திடவே மனம் துடிக்குதே

துயர்கொண்டு தினம் இங்கு
துடிக்கின்ற பொன் வண்டு
வாழ்க்கையிலே அங்கு தவிக்குதே

சுகம் தோன்றுமோ
துன்பம் நீங்குமோ
சுகம் தோன்றுமோ
துன்பம் நீங்குமோ
புது வசந்தங்கள் உருவாகுமோ
புது வசந்தங்கள் உருவாகுமோ


என்னதான் இந்தப் பார்வை
சன்னிதானத்தில் இந்த நேரத்தில்
உனக்கெந்த காரியம் தேவை


மனம் என்னும் படகொன்று
அலை வந்து மோதவே
பாசத்திலே அது ஆடுதே

கலை வண்ணச்சிலை ஒன்று
கண்களில் நீர் கொண்டு
காதலிலே தினம் வாடுதே

இது நியாயமோ
செய்த பாவமோ
இது நியாயமோ
செய்த பாவமோ
எந்தன் எண்ணங்கள் நிறைவேறுமோ
எந்தன் எண்ணங்கள் நிறைவேறுமோ


என்னதான் இந்த மௌனம்
சன்னிதானத்தில் இந்த நேரத்தில்
உனக்கெந்த தியானத்தில்
 

ஆயிரம் விழிகள் மயங்கும் - வாழப்பிறந்த பூக்கள்

பாடல்: ஆயிரம் விழிகள் மயங்கும்
திரைப்படம்: வாழப்பிறந்த பூக்கள்
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: P.ஜெயசந்திரன் & வாணி ஜெயராம்

ஆயிரம் விழிகள் மயங்கும் அழகில் என்னைக்கண்டு
காவிய மகளோ மயங்குகின்றாள் உன்னைக்கண்டு
இதில் பெருமை யாருக்கு என் தேவன் பேருக்கு


ஆண்டவன் அழகை அள்ளி எடுத்தான் பெண்ணை வடித்தான்
பூங்கொடி அவளை வாரி அணைத்திட என்னைப் படைத்தான்
இதில் பெருமை யாருக்கு என் தேவியின் பேருக்கு


ஆயிரம் விழிகள் மயங்கும் அழகில் என்னைக்கண்டு

வானில் ஊரும் நிலவாக தேனில் ஊறும் மலராக
வானில் ஊரும் நிலவாக தேனில் ஊறும் மலராக

காலங்கள் தோறும் உன் மடிமீதிலே
இளைப்பாற வேண்டும் உன் மார்மீதிலே
மஞ்சத்தில் நெஞ்சங்கள் என்றும் கலந்தாடுமே

ஆயிரம் விழிகள் மயங்கும் அழகில் என்னைக்கண்டு

காதல் தேவி ரதியாக இன்ப கங்கை நதியாக
காதல் தேவி ரதியாக இன்ப கங்கை நதியாக

என்னோடு நீ கொஞ்சும் வேளைகளே
எந்நாளும் காணாத லீலைகளே
உள்ளத்தில் வெள்ளங்கள் என்றும் அலைமோதுமே

ஆண்டவன் அழகை அள்ளி எடுத்தான் பெண்ணை வடித்தான்
பூங்கொடி அவளை வாரி அணைத்திட என்னைப் படைத்தான்

இதில் பெருமை யாருக்கு என் தேவன் பேருக்கு
இதில் பெருமை யாருக்கு என் தேவியின் பேருக்கு
 

நாம் வாழும் நாளெல்லாம் - ஒரு கோயில் இரு தீபங்கள்

பாடல்: நாம் வாழும் நாளெல்லாம்
திரைப்படம்: ஒரு கோயில் இரு தீபங்கள்
இசை: வி.தக்ஷ்ணாமூர்த்தி
பாடியவர்: வாணி ஜெயராம்

நாம் வாழும் நாளெல்லாம்
இன்பக்காவியம் வண்ண ஓவியம்
வா வா...வா வா
நாம் வாழும் நாளெல்லாம்
இன்பக்காவியம் வண்ண ஓவியம்
வா வா...வா வா
நாம் வாழும் நாளெல்லாம் ஆனந்தமே

பக்கத்தில் உன்னைத்தேடி வந்தேனுங்க
வெட்கத்தில் நானும் வந்து நின்னேனுங்க
பக்கத்தில் உன்னைத்தேடி வந்தேனுங்க
வெட்கத்தில் நானும் வந்து நின்னேனுங்க
தேன் பொங்கும் கன்னம் மின்னும் வண்ணம்
தந்தால் என்ன வந்தால் என்ன
பெண்ணிடம் என்ன இல்லை
பொன்னான ராகம் உண்டு
உன்னிடம் என்ன இல்லை
கண்ணான தாளம் உண்டு
பாடல் ஊடல் கூடல் உண்டு வா

நாம் வாழும் நாளெல்லாம்
இன்பக்காவியம் வண்ண ஓவியம்
வா வா...வா வா

மல்லிகைத்தோட்ட முகம் பார்த்தானுங்க
மயக்கத்தைத்தந்து தந்து சுகம் சேர்த்தானுங்க
மல்லிகைத்தோட்ட முகம் பார்த்தானுங்க
மயகத்தைத்தந்து தந்து சுகம் சேர்த்தானுங்க
வா துள்ளும் பெண்மை அள்ளும் மென்மை
கள்ளும் நானே பூவும் நானே
பருவத்தில் மோகம் வைத்து
பழகாத தேகம் வைத்தான்
உருவத்தில் வேகம் வைத்து
உறாங்காத தாகம் வைத்தான்
நீயும் நானும் கூடும் நேரம் வா

நாம் வாழும் நாளெல்லாம்
இன்பக்காவியம் வண்ண ஓவியம்
வா வா...வா வா
நாம் வாழும் நாளெல்லாம் ஆனந்தமே

ஒத்த சொல்லால - ஆடுகளம்

பாடல்: ஒத்த சொல்லால
திரைப்படம்: ஆடுகளம்
இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்
பாடியவர்: வேல்முருகன்

ஹேய் ஒத்த சொல்லால என் உசிரெடுத்து வச்சிக்கிட்டா
ரெட்டக்கண்ணால எனத்தின்னாடா
பச்சத்தண்ணிபோல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி
நித்தம் குடிச்சே எனக்கொன்னாடா
ஏ பொட்டக்காட்டுல ஆலங்கட்டி மழபேஞ்சி
ஆறொண்ணு ஓடுறதப் பாரு
அட பட்டாம்பூச்சிதான் என் சட்டையில ஒட்டிக்கிச்சி
பட்டாசுபோல நான் வெடிச்சேன்
முட்டக்கண்ணால என் மூச்செடுத்து போனவதான்
தொட்ட பின்னாலே ஏதோ ஆனேன்டா

ஏ பவுடர் டப்பா தீர்ந்து போனதே
அந்த கண்ணாடியும் கடுப்பு ஆனதே
நான் குப்புறத்தான் படுத்துக்கெடந்தேன்
என்ன குதிர மேல ஏத்தி விட்டாயே
ஒண்ணும் சொல்லாம உசிரத்தொட்டாயே
மனச இனிக்கவச்ச சீனி மிட்டாயே

ஹேய் ஒத்த சொல்லால என் உசிரெடுத்து வச்சிக்கிட்டா
ரெட்டக்கண்ணால எனத்தின்னாடா
பச்சத்தண்ணிபோல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி
நித்தம் குடிச்சே எனக்கொன்னாடா

ஏ கட்டவண்டி கட்டி வந்துதான்
அவ கண்ணழக பாத்துப்போங்கடா
அட கட்டுச்சோறு கட்டி வந்துதான்
அவ கழுத்தழக பாத்துப்போங்கடா
கத்தாழ பழச்செவப்பு முத்தாத எளஞ்சிரிப்பு
வத்தாத அவ இடுப்பு நான் கிறுக்கானேன்

ஹேய் ஒத்த சொல்லால என் உசிரெடுத்து வச்சிக்கிட்டா
ரெட்டக்கண்ணால எனத்தின்னாடா
பச்சத்தண்ணிபோல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி
நித்தம் குடிச்சே எனக்கொன்னாடா

அட ரேஷன்கார்டில் பேரை ஏத்துவேன்
ஒரு நாள் குறிச்சி தட்டு மாத்துவேன்
ஏ ஊருக்கெல்லாம் சேதி சொல்லுவேன்
அவ காதில்மட்டும் ஊதி சொல்லுவேன்
பொண்ணு கருப்பட்டி கண்ணு தீப்பெட்டி
மென்னு தின்னாலே என்ன ஒருவாட்டி

ஹேய் ஒத்த சொல்லால என் உசிரெடுத்து வச்சிக்கிட்டா
ரெட்டக்கண்ணால எனத்தின்னாடா
பச்சத்தண்ணிபோல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி
நித்தம் குடிச்சே எனக்கொன்னாடா
அட பொட்டக்காட்டுல ஆலங்கட்டி மழபேஞ்சி
ஆறொண்ணு ஓடுறதப் பாரு
அட பட்டாம்பூச்சிதான் என் சட்டையில ஒட்டிக்கிச்சி
பட்டாசுபோல நான் வெடிச்சேன்
முட்டக்கண்ணால என் மூச்செடுத்து போனவதான்
தொட்ட பின்னாலே ஏதோ ஆனேன்டா

Thursday, August 23, 2012

அக நக நக நக - கோ

பாடல்: அக நக நக நக சிரிப்புகள்
திரைப்படம்: கோ
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: Vijay Prakash, Tippu, Ranina Reddy,
Priya Subramaniam & Solar Sai

அக நக நக நக சிரிப்புகள் அழகா
திகு தக தக நிலவுகள் அழகா
Very very very சமத்துகள் அழகா
கொழு கொழுப்புகள் அழகா

அக நக நக நக சிரிப்புகள் அழகா
திகு தக தக நிலவுகள் அழகா
Very very very சமத்துகள் அழகா
கொழு கொழுப்புகள் அழகா
 
Lamborghini...lover many
வெள்ளி சனி இரவெல்லாம் இதழ்பனி
நீ பத்தினி...தீப்பத்து நீ
உன்மேல் இனி யாரடி தேனீ
தோள் சாய்ந்த அணைப்பு
அவன் தோழன் என்ற நினைப்பு
ஏன் இந்த படைப்பு இங்கில்லை களைப்பு
தோள் சாய்ந்த அணைப்பு
அவன் தோழன் என்ற நினைப்பு
ஏன் இந்த படைப்பு இங்கில்லை களைப்பு
 
தாக்க தாக்கவே துடிக்குதே நெஞ்சம்
நோக்க நோக்கவே புடிக்குதே கொஞ்சம்
Here we go...yeah
தொட தொட தொட rolex மின்ன
தொன தொன தொன virtue பேச
ஜிலு ஜிலு ஜிலு champagne பொங்க
Swiss cheese-ஐ மெல்ல
 
தொட தொட தொட rolex மின்ன
தொன தொன தொன virtue பேச
ஜிலு ஜிலு ஜிலு champagne பொங்க
Swiss cheese-ஐ மெல்ல
 
Brand-டோடு வாழ்க்கை friend-டோடு சேர்க்கை
கையோடு யார் கை ஆ...ன...ந்த யாக்கை
மனம் மாறும் fashion மாறாது passion
பகலெல்லாம் வேஷம் மா...லை...யில் நேசம்
வா காதல் Ferrari இள நெஞ்சை அள்ளும் Sonali
Louis Vuitton கண்ணாடி பல கண்கள் பின்னாடி
வா காதல் Ferrari இள நெஞ்சை அள்ளும் Sonali
Louis Vuitton கண்ணாடி பல கண்கள் பின்னாடி
 
Yo...yo...yo...yo
Gucci shoe goes switch your standard
No local only branded
தில் இருந்தா ஆட்டம் போடு வா
முடியாட்டி கைய கட்டிப்பார்
 
தாக்க தாக்கவே துடிக்குதே நெஞ்சம்
Yeah Fashoin-க்கு இல்லை ration ஆனால்
கடவுள் தந்த வரம்தான் passion now
Let me make my little confession
Love has no brands understand that right now

நூறு நூறு பேர் அருகே அருகே
யாரு யாரு சொல் அழகே
வேறு வேறு ஊர் மனமே மனமே
வேர்த்திடாத ஓர் இனமே
நூறு நூறு பேர் அருகே அருகே
யாரு யாரு சொல் அழகே
வேறு வேறு ஊர் மனமே மனமே
வேர்த்திடாத ஓர் இனமே

மின் மினுமினுப்பாக
மின் வீழ்ச்சிகள் கொட்டும்
சிலு சிலுப்பாக
சில சில்மிஷம் சொட்டும்
இதுதான் இதுதான் இளமை உலகம்
வெற்றி ஒன்றுதான் இங்கே உதவும்

அக நக நக நக சிரிப்புகள் அழகா
திகு தக தக நிலவுகள் அழகா
Very very very சமத்துகள் அழகா
கொழு கொழுப்புகள் அழகா

அக நக நக நக சிரிப்புகள் அழகா
திகு தக தக நிலவுகள் அழகா
Very very very சமத்துகள் அழகா
கொழு கொழுப்புகள் அழகா

Lamborghini...lover many
வெள்ளி சனி இரவெல்லாம் இதழ்பனி
நீ பத்தினி...தீப்பத்து நீ
உன்மேல் இனி யாரடி தேனீ
தோள் சாய்ந்த அணைப்பு
அவள் தோழி என்ற நினைப்பு
ஏன் இந்த படைப்பு இங்கில்லை களைப்பு
தோள் சாய்ந்த அணைப்பு
அவள் தோழி என்ற நினைப்பு
ஏன் இந்த படைப்பு இங்கில்லை களைப்பு
 

அமளி துமளி - கோ

பாடல்: அமளி துமளி
திரைப்படம்: கோ
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஹரன், சின்மயி & ஸ்வேதா மோகன்

அமளி துமளி நெளியும் valley
எனை கவ்விக் கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி
எனை அள்ளிச் சென்றதே
கொலம்பஸ் கனவிலும் நினைக்காத
ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
குளிர்க்காற்றும் வீசுதே
ரோஜாப்பூவும்
அடி முள்ளில் பூக்கும் என அறிவேனே
பேனா முள்ளில்
இந்த பூவும் பூத்ததொரு மாயம்
மாறி மாறி
உன்னைப் பார்க்க சொல்லி விழி கெஞ்சும்
எந்தன் நெஞ்சோடு நெஞ்சோடு
காதல் பொங்கி வருதே

அமளி துமளி நெளியும் valley
எனை கவ்விக் கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி
எனை அள்ளிச் சென்றதே
கொலம்பஸ் கனவிலும் நினைக்காத
ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
குளிர்க்காற்றும் வீசுதே

வா என சொல்லவும் தயக்கம்
மனம் போ என தள்ளவும் மறுக்கும்
இங்கு காதலின் பாதையில் அனைத்தும்
அட பெரும் குழப்பம்
ஆறுகள் அருகினில் இருந்தும்
அடைமழை அது சோவென பொழிந்தும்
அடி நீ மட்டும் தூரத்தில் இருந்தால்
நா வரண்டும் விடும்
ஹே கூவா கூவா கூவா கூவா குயிலேது
ஹே தவ்வா தவ்வா தவ்வா தவ்வா மனமேது
ஓ முதல்மழை நனைத்ததைப் போலே
முதல் புகழ் அடந்ததைப் போலே
குதிக்கிறேன் குதிக்கிறேன் மேலே ஆருயிரே
ஓ எனக்குனை கொடுத்தது போதும்
தரைத்தொட மறுக்குது பாதம்
எனக்கினி உறக்கமும் தூரம் தேவதையே

அமளி துமளி நெளியும் valley
எனை கவ்விக் கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி
எனை அள்ளிச் சென்றதே
கொலம்பஸ் கனவிலும் நினைக்காத
ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
குளிர்க்காற்றும் வீசுதே

கால்களில் ஆடிடும் கொலுசு
அதன் ஓசைகள் பூமிக்கு புதுசு
அதை காதுகள் கேட்டிடும் பொழுது
நான் கவியரசு
மேற்கிலும் சூரியன் உதிக்கும்
நீர் மின்மினி சூட்டிலும் கொதிக்கும்
அட அருகினில் நீ உள்ள வரைக்கும்
மிக மண மணக்கும்
ஹே பூவா பூவா பூவா பூவா சிரிப்பாலே
ஹே அவ்வா அவ்வா அவ்வா அவ்வா தீர்த்தாயே
ஹே சுடாமலே அணிகலன் இல்லை
தொடாமலே உடல் பலன் இல்லை
விடாமலே மனதினில் தொல்லை காதலியே
தொடத் தொட இனித்தடை இல்லை
இடைவெளி மிகப்பெரும் தொல்லை
அடையலாம் மகிழ்ச்சியின் எல்லை கூடலிலே

அமளி துமளி நெளியும் valley
எனை கவ்விக் கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி
எனை அள்ளிச் சென்றதே
கொலம்பஸ் கனவிலும் நினைக்காத
ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
குளிர்க்காற்றும் வீசுதே
ரோஜாப்பூவும்
அடி முள்ளில் பூக்கும் என அறிவேனே
பேனா முள்ளில்
இந்த பூவும் பூத்ததொரு மாயம்
மாறி மாறி
உன்னைப் பார்க்க சொல்லி விழி கெஞ்சும்
எந்தன் நெஞ்சோடு நெஞ்சோடு
காதல் பொங்கி வருதே
 

முத்தங்கள் தித்திக்கும் - மன்மதா என்னைத்தேடிவா

பாடல்: முத்தங்கள் தித்திக்கும் முதலிரவு
திரைப்படம்: மன்மதா என்னைத்தேடிவா
இசை: சேதுபதி
பாடியவர்: எஸ்.ஜானகி

முத்தங்கள் தித்திக்கும் முதலிரவு
என் அத்தானின் முத்தான முதலுறவு
கொத்தாத கனி நானே நேற்றிரவு
கிளி கொத்தும் இன்பக்கனியானேன் இன்றிரவு
முத்தங்கள் தித்திக்கும் முதலிரவு

கொத்தாக மலர் இங்கே சேர்ந்தாடுது
அது பத்தாமல் விழி எங்கோ கூத்தாடுது

கொத்தாக மலர் இங்கே சேர்ந்தாடுது
அது பத்தாமல் விழி எங்கோ கூத்தாடுது
சித்தங்கள் எங்கெங்கோ பறந்தோடுது
தனிமை தேடுது இளமை பாடுது இனிமை நாடுது
முத்தங்கள் தித்திக்கும் முதலிரவு

வெட்கமாய் இருந்தது விலகி நின்றேன்
வெட்கமாய் இருந்தது விலகி நின்றேன்
சொர்க்கமாய் இருந்தது தழுவிக்கொண்டேன்
சொந்தங்கள் சுகம் தேடி ஒன்றானது
இளமை பாடுது இனிமை நாடுது தனிமை தேடுது

முத்தங்கள் தித்திக்கும் முதலிரவு
என் அத்தானின் முத்தான முதலுறவு
கொத்தாத கனி நானே நேற்றிரவு
கிளி கொத்தும் இன்பக்கனியானேன் இன்றிரவு
முத்தங்கள் தித்திக்கும் முதலிரவு

ஆயிரம் விழிகள் மயங்கும் - வாழப்பிறந்த பூக்கள்

பாடல்: ஆயிரம் விழிகள் மயங்கும்
திரைப்படம்: வாழப்பிறந்த பூக்கள்
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: P.ஜெயசந்திரன் & வாணி ஜெயராம்

ஆயிரம் விழிகள் மயங்கும் அழகில் என்னைக்கண்டு
காவிய மகளோ மயங்குகின்றாள் உன்னைக்கண்டு
இதில் பெருமை யாருக்கு என் தேவன் பேருக்கு


ஆண்டவன் அழகை அள்ளி எடுத்தான் பெண்ணை வடித்தான்
பூங்கொடி அவளை வாரி அணைத்திட என்னைப் படைத்தான்
இதில் பெருமை யாருக்கு என் தேவியின் பேருக்கு


ஆயிரம் விழிகள் மயங்கும் அழகில் என்னைக்கண்டு

வானில் ஊரும் நிலவாக தேனில் ஊறும் மலராக
வானில் ஊரும் நிலவாக தேனில் ஊறும் மலராக

காலங்கள் தோறும் உன் மடிமீதிலே
இளைப்பாற வேண்டும் உன் மார்மீதிலே
மஞ்சத்தில் நெஞ்சங்கள் என்றும் கலந்தாடுமே

ஆயிரம் விழிகள் மயங்கும் அழகில் என்னைக்கண்டு

காதல் தேவி ரதியாக இன்ப கங்கை நதியாக
காதல் தேவி ரதியாக இன்ப கங்கை நதியாக

என்னோடு நீ கொஞ்சும் வேளைகளே
எந்நாளும் காணாத லீலைகளே
உள்ளத்தில் வெள்ளங்கள் என்றும் அலைமோதுமே

ஆண்டவன் அழகை அள்ளி எடுத்தான் பெண்ணை வடித்தான்
பூங்கொடி அவளை வாரி அணைத்திட என்னைப் படைத்தான்

இதில் பெருமை யாருக்கு என் தேவன் பேருக்கு
இதில் பெருமை யாருக்கு என் தேவியின் பேருக்கு

தேடுகிறாள் ஒரு தேவதை - பார்த்த ஞாபகம் இல்லையோ

பாடல்: தேடுகிறாள் ஒரு தேவதை
திரைப்படம்: பார்த்த ஞாபகம் இல்லையோ
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

தேடுகிறாள் ஒரு தேவதை
தூவுகிறாள் விழிப் பூமழை
தேடுகிறாள் ஒரு தேவதை
தூவுகிறாள் விழிப் பூமழை
எண்ணங்களில் வாழும் பெண் சித்திரம்
கண்ணின்வழி பேசும் நட்சத்திரம்
சின்னப்பூங்குயில் சிந்தும் மொழிகளில்
என்னைப்பாடுவாள் அந்தி நிலவினில்
விட்டுப்போகுமோ தொட்ட நினைவுகள்
பெண் உள்ளம் போராடுமோ
தேடுகிறாள் ஒரு தேவதை
தூவுகிறாள் விழிப் பூமழை

தாலாட்டும் வேளை அவள் நீலாம்பரி
நீராட்டும் நேரம் அவள் கோதாவரி
தாலாட்டும் வேளை அவள் நீலாம்பரி
நீராட்டும் நேரம் அவள் கோதாவரி
நான்தானே தேடும் என் ஆசைக்கிளி
நாள்தோறும் பாடும் ஒரு கீதாஞ்சலி
உள்ளக்கோவிலில் வெள்ளி ரதமென
எண்ணச்சோலையில் வண்ண மலரென
கொஞ்சும் கோகிலம் கொண்ட உறவுகள்
நெஞ்சோடு நின்றாடுமோ

தேடுகிறாள் ஒரு தேவதை
தூவுகிறாள் விழிப் பூமழை

நீ பார்க்கும் பார்வை இளமான் தந்தது
நீ பேசும் வார்த்தை மலர்த்தேன் தந்தது
நீ கொண்ட காதல் அடி நான் தந்தது
நான் கொண்ட ஏக்கம் அது நீ தந்தது
தங்கத்தேன்குடம் அள்ளி அணைக்கையில்
சின்னப்பூச்சரம் கிள்ளி எடுக்கையில்
அன்புக்காவியம் பள்ளி அறையினில்
வேறென்ன நான் சொல்வது

தேடுகிறாள் ஒரு தேவதை
தூவுகிறாள் விழிப் பூமழை
எண்ணங்களில் வாழும் பெண் சித்திரம்
கண்ணின்வழி பேசும் நட்சத்திரம்
சின்னப்பூங்குயில் சிந்தும் மொழிகளில்
என்னைப்பாடுவாள் அந்தி நிலவினில்
விட்டுப்போகுமோ தொட்ட நினைவுகள்
பெண் உள்ளம் போராடுமோ

எழுதாத கவிதை - தசரதனுக்கு ஒன்பது பெண்கள்

பாடல்: எழுதாத கவிதை
திரைப்படம்: தசரதனுக்கு ஒன்பது பெண்கள்
இசை: முரளிதர்
பாடியவர்: எஸ்.ஜானகி

எழுதாத கவிதை என் சோக ராகம்
எழுதாத கவிதை என் சோக ராகம்
எதிர்காலம் கேட்கும் உயிருள்ள தீபம்
எதிர்காலம் கேட்கும் உயிருள்ள தீபம்
எழுதாத கவிதை என் சோக ராகம்

துணை தேடித்தேடி மனம் நொந்து வாடி
தடுமாறும் நெஞ்சமோ
மணவாழ்க்கை காண மலர் மாலையோடு
எதிர்பார்க்கும் மஞ்சமோ
துணை தேடித்தேடி மனம் நொந்து வாடி
தடுமாறும் நெஞ்சமோ
மணவாழ்க்கை காண மலர் மாலையோடு
எதிர்பார்க்கும் மஞ்சமோ
விதி சொன்ன ராகமோ
இளம்பெண்ணின் பாடலோ
நிலா...உலா...வரும்...தினம் ம்ம் ம்ம்

எழுதாத கவிதை என் சோக ராகம்

சிலர் வாழ வாழ பலர் வாட வாட
யாருக்கு யார் சொந்தமோ
சிலையான தெய்வம் உயிரோடு வந்து
வழி காட்டிச்செல்லுமோ
சிலர் வாழ வாழ பலர் வாட வாட
யாருக்கு யார் சொந்தமோ
சிலையான தெய்வம் உயிரோடு வந்து
வழி காட்டிச்செல்லுமோ
விதி சொன்ன ராகமோ
இளம்பெண்ணின் பாடலோ
நிலா...உலா...வரும்...தினம் ம்ம் ம்ம்

எழுதாத கவிதை என் சோக ராகம்
எதிர்காலம் கேட்கும் உயிருள்ள தீபம்
எதிர்காலம் கேட்கும் உயிருள்ள தீபம்
எழுதாத கவிதை என் சோக ராகம்

ஆரம்பமாகும் ஆனந்த ராகம் - புயல் கடந்த பூமி

பாடல்: ஆரம்பமாகும் ஆனந்த ராகம்
திரைப்படம்: புயல் கடந்த பூமி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: ராஜ்குமார் பாரதி & வாணி ஜெயராம்

ஆரம்பமாகும் ஆனந்த ராகம்
நாம் பாடலாம் மோஹனம்
ஆரம்பமாகும் ஆனந்த ராகம்
நாம் பாடலாம் மோஹனம்
பொன்மேக வானில் பூந்தென்றல் தேரில்
நாம் போகலாம் ஊர்வலம்
பொன்மேக வானில் பூந்தென்றல் தேரில்
நாம் போகலாம் ஊர்வலம்
நாம் போகலாம் ஊர்வலம்
ஆரம்பமாகும் ஆனந்த ராகம்
நாம் பாடலாம் மோஹனம்

நீலக்கண்ணில் ஊஞ்சல் ஆடும் இமையாகவா
நீலக்கண்ணில் ஊஞ்சல் ஆடும் இமையாகவா
என் ராதை நாவில் ஊறும் தேனில் சுவையாகவா
மழை நீயாகவா நிலம் நானாகவா
மழை நீயாகவா நிலம் நானாகவா
நான் நாள்தோறும் தோள் சேரும் கொடியாகவா
நான் நாள்தோறும் தோள் சேரும் கொடியாகவா

ஆரம்பமாகும் ஆனந்த ராகம்
நாம் பாடலாம் மோஹனம்

காமன் வந்து வேதம் சொல்ல நான் சேருவேன்
காமன் வந்து வேதம் சொல்ல நான் சேருவேன்
செந்தாழம்பூவில் தொட்டில்கட்டித் தாலாட்டுவேன்
இனி தாங்காதம்மா இமை தூங்காதம்மா
இனி தாங்காதம்மா இமை தூங்காதம்மா
நீ மேலாடை பாய்போட்டு பரிமாறம்மா
நீ மேலாடை பாய்போட்டு பரிமாறம்மா

ஆரம்பமாகும் ஆனந்த ராகம்
நாம் பாடலாம் மோஹனம்
பொன்மேக வானில் பூந்தென்றல் தேரில்
நாம் போகலாம் ஊர்வலம்
நாம் போகலாம் ஊர்வலம்
ஆரம்பமாகும் ஆனந்த ராகம்
நாம் பாடலாம் மோஹனம்

மங்கல குங்குமம் - அவள் மெல்ல சிரித்தாள்

பாடல்: மங்கல குங்குமம் வந்தது
திரைப்படம்: அவள் மெல்ல சிரித்தாள்
இசை: கங்கை அமரன்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & எஸ்.பி.ஷைலஜா

மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி
மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி
காதல் கல்யாணம் காமன் ஊர்கோலம்
இனி ஏந்நாளும் சந்தோஷம்தான்

மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி
மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி

வாழையும் தோரணமும்
மணமாலையும் மங்கலமும்
அது கண்டது சங்கமமே
ஒரு காவியம் ஆரம்பமே
காலையில் மணவறைதான்
வரும் மாலையில் தனியறைதான்
அந்த ஆனந்தம் பல முறைதான்
அதன் ஆரம்பம் உன்னிடம்தான்
பாதையை மாறிய கால்கள் இது
பாவலன் உன் வழி தேடியது
காதலன் உன் இரு கால்களிலே
கண்களும் பூவினைத் தூவியது
நானும் உனக்காக உயிரோடு இன்னும் வாழ்கிறேன்

மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி
மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி

கண் வழி வந்தவளே
என் நெஞ்சினில் நின்றவளே
இளம் பெண்ணெனும் பேரழகே
இனி உன் மனம் என்னுலகே
உன் உடல் கோவிலிலே
நான் என் உயிர் வாழ்ந்திருப்பேன்
உன் உறவினைக் காண்பதற்கே
நான் மறுபடி பிறந்திருப்பேன்
எத்தனை ஜென்மும் சேர்ந்திருப்போம்
அத்தனை இன்பமும் பார்த்திருப்போம்
சத்திய சோதனை தீர்ந்ததடி
சங்கமம் ஆனது நதிகளடி
பாலும் தெளிதேனும் பரிமாறும் இந்த நாயகி

மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி
மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி
காதல் கல்யாணம் காமன் ஊர்கோலம்
இனி ஏந்நாளும் சந்தோஷம்தான்

மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி
மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி

ஆசைகள் தேய்ந்ததே - கல்லுக்குள் தேரை

பாடல்: ஆசைகள் தேய்ந்ததே
திரைப்படம்: கல்லுக்குள் தேரை
இசை: ஷ்யாம்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

ஆசைகள் தேய்ந்ததே
பூஞ்சோலையும் முள்ளானதே
நதியில் ஓடமும் சாய்ந்ததே
நனைந்ததே கண்களே

ஆசைகள் தேய்ந்ததே
பூஞ்சோலையும் முள்ளானதே
நதியில் ஓடமும் சாய்ந்ததே
நனைந்ததே கண்களே

காலம் என்னும் வனவேடன்
வீசும் அம்பை யார் தாங்குவார்
காலம் என்னும் வனவேடன்
வீசும் அம்பை யார் தாங்குவார்
பழி யாவுமே என் மீதிலே
வழி இல்லையே இதை மாற்றவே
ஏங்கும் நெஞ்சை யார் தேற்றுவார்

ஆசைகள் தேய்ந்ததே
பூஞ்சோலையும் முள்ளானதே
நதியில் ஓடமும் சாய்ந்ததே
நனைந்ததே கண்களே

வீணை ஒன்று மண்மேலே
வீழ்ந்தே சோக பண்பாடுதே
வீணை ஒன்று மண்மேலே
வீழ்ந்தே சோக பண்பாடுதே
என் பாதையோ வெகு தூரமே
என் வாழ்க்கையோ சில காலமே
கானல் நீராய் கதையானதே

ஆசைகள் தேய்ந்ததே
பூஞ்சோலையும் முள்ளானதே
நதியில் ஓடமும் சாய்ந்ததே
நனைந்ததே கண்களே

ஆசைகள் தேய்ந்ததே
ஆசைகள் தேய்ந்ததே

காயா குறிஞ்சி மலை - நான் நானேதான்

பாடல்: காயா குறிஞ்சி மலை
திரைப்படம்: நான் நானேதான்
இசை: K.V.மகாதேவன்
பாடியவர்: வாணி ஜெயராம்

காயா குறிஞ்சி மலை
காத்தெல்லாம் மணக்கும் மலை
ஓயாத பனி அடிக்கும்
ஒத்தக்கல்லு முத்துமலை

முத்துமலை மேல முல்லைப்பூ மாலை
முல்லைப்பூ மாலையில முடிச்சிக்கையேன் வேலை
தொதுவா ஆஹா தொதுவா
ஆஹா தொதுவா தொதுவா தொதுவா
தொதுவா ஆஹா தொதுவா
ஆஹா தொதுவா தொதுவா தொதுவா

காயா குறிஞ்சி மலை காத்தெல்லாம் மணக்கும் மலை
ஓயாத பனி அடிக்கும் ஒத்தக்கல்லு முத்துமலை
முத்துமலை மேல முல்லைப்பூ மாலை
முல்லைப்பூ மாலையில முடிச்சிக்கையேன் வேலை
தொதுவா ஆஹா தொதுவா
ஆஹா தொதுவா தொதுவா தொதுவா
தொதுவா ஆஹா தொதுவா
ஆஹா தொதுவா தொதுவா தொதுவா

பூவெடுத்து நான் தொடுத்தேன் ரொம்ப நாளா
அந்த பூவைக்காண நியாயம் கண்டேன் ரெண்டு நாளா
பூவெடுத்து நான் தொடுத்தேன் ரொம்ப நாளா
அந்த பூவைக்காண நியாயம் கண்டேன் ரெண்டு நாளா
தாவி வந்த மான்குட்டிக்கு இந்த ஆளா
தாவி வந்த மான்குட்டிக்கு இந்த ஆளா
நீ தழுவும்போது என்ன சுகம் பொண்ணுமேல

தொதுவா ஆஹா தொதுவா
ஆஹா தொதுவா தொதுவா தொதுவா
தொதுவா ஆஹா தொதுவா
ஆஹா தொதுவா தொதுவா தொதுவா

மைனாக்குருவி போலே கொஞ்சம் பறந்து போவோம்
அந்த மரத்து மேலே ரெண்டு பேரும் இருந்து பார்ப்போம்
மைனாக்குருவி போலே கொஞ்சம் பறந்து போவோம்
அந்த மரத்து மேலே ரெண்டு பேரும் இருந்து பார்ப்போம்
தை மாசத்தில் மலையைவிட்டு பட்டணம் போவோம்
தை மாசத்தில் மலையைவிட்டு பட்டணம் போவோம்
எங்க சாமி பேரைச்சொல்லி சொல்லி தொட்டில் ஆட்டுவோம்

தொதுவா ஆஹா தொதுவா
ஆஹா தொதுவா தொதுவா தொதுவா
தொதுவா ஆஹா தொதுவா
ஆஹா தொதுவா தொதுவா தொதுவா

இப்படியா சுகம் இருக்கும் கண்ணை வைக்கையிலே
ஐயா இதுவரையில் தெரியலையே பூவை விக்கையிலே
இப்படியா சுகம் இருக்கும் கண்ணை வைக்கையிலே
ஐயா இதுவரையில் தெரியலையே பூவை விக்கையிலே
எப்படியோ இருக்குதைய்யா பக்கம் நிக்கையிலே
எப்படியோ இருக்குதைய்யா பக்கம் நிக்கையிலே
நெஞ்சு என்னென்னவோ நினைக்குதைய்யா வெக்கம் மிச்சமில்லே

தொதுவா ஆஹா தொதுவா
ஆஹா தொதுவா தொதுவா தொதுவா
தொதுவா ஆஹா தொதுவா
ஆஹா தொதுவா தொதுவா தொதுவா

காயா குறிஞ்சி மலை காத்தெல்லாம் மணக்கும் மலை
ஓயாத பனி அடிக்கும் ஒத்தக்கல்லு முத்துமலை
முத்துமலை மேல முல்லைப்பூ மாலை
முல்லைப்பூ மாலையில முடிச்சிக்கையேன் வேலை
தொதுவா ஆஹா தொதுவா
ஆஹா தொதுவா தொதுவா தொதுவா
தொதுவா ஆஹா தொதுவா
ஆஹா தொதுவா தொதுவா தொதுவா
 

Do you love me - சித்திரைப் பூக்கள்

பாடல்: Do you love me
திரைப்படம்: சித்திரைப் பூக்கள்
இசை: முராரி
பாடியவர்கள்: மனோ & உமா ரமணன்

Do you love me
Yes I do
You don't love me
I love you
காதலிக்கிறேன் உன்னை
காதில் சுற்றும் பூவா
ஆசை வைத்தது உண்மை
வேஷம் போடும் ரோஜா
Do you love me
Yes I do
You don't love me
C'mon I love you

என்னைப் பார்க்க வருவாயா
சமயம் இதுவா
கன்னம் ரெண்டும் தொடுவாயா
பழகும் வயதா
தென்றல் காற்று மயக்காதோ
சிலையாய் இருப்பேன்
கண்கள் தூங்க மறுக்காதோ
கதைகள் படிப்பேன்
உன்னைத்தேடி வந்தால்
என்னவாகும் கண்ணே
பார்க்காமல் நெஞ்சம் வாடுதே
ஜன்னல் ஓரம் நின்றால்
ஓடிப்போக சொல்வேன்
பார்த்தாலே துன்பம் சேருமே
இதயம் உருகும்
இது காதலென்னும் நாடகம்தான்

Do you love me
Yes I do
You don't love me
I love you

நெஞ்சோடு நெஞ்சாக
சேர்ந்தோம் ஒரு நாள்
கொஞ்சாமல் கொள்ளாமல்
இருந்தோம் பல நாள்
கண்ணோடு கண் பேசும்
பருவம் இதுதான்
கையோடு கை சேரும்
உறவும் முறைதான்
வானவில்லின் ஜாலம்
போல உந்தன் வார்த்தை
மாறாமல் இருந்தால் இன்பமே
மாறவில்லை நானும்
காலம் செய்த கோலம்
தவறேதும் என்மேல் இல்லையே
நினைத்தால் அழைப்பேன்
உடன் தோன்றவேண்டும் நேரிலே

Do you love me
Yes I do
Hey tell me once more
I love you
காதலிக்கிறேன் உன்னை
ஒப்புக்கொள்கிறேன் மானே
தப்பு செய்தது நானே
வேஷம் போடும் ரோஜா
Don't you love me
Yes I do
Hey tell me once more
I love you

அன்பே புதுக்கவிதைகள் - யாமிருக்க பயமேன்

பாடல்: அன்பே புதுக்கவிதைகள் பல படிக்கிறேன்
திரைப்படம்: யாமிருக்க பயமேன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: வாணி ஜெயராம்

அன்பே புதுக்கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
அன்பே புதுக்கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
பூமடல் விரிக்கும் வேளையன்றோ
தேன் கிடைக்கும் இடம் இதுவன்றோ

அன்பே புதுக்கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்

மன்மத பானம் ஒன்று
புகுந்து பாயும் இன்ப வேகங்களில்
ஆனந்த கங்கை ஒன்று
எழுந்து பொங்கும் இந்த மோகங்களில்
கட்டிளம் காளை ஒன்று
நெருங்கக்கூடும் நூறு ஆசைகளில்
மத்தள மேளம் ஒன்று
ஒலிக்கக்கூடும் முத்த ஓசைகளில்

அன்பே புதுக்கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்

என் மடி ஊஞ்சல் உண்டு
இளைத்து ஏங்கும் அந்தி நேரங்களில்
உன் பசி தீரும் இங்கு
உதட்டில் ஊறும் இன்ப சாரங்களில்

அன்பே புதுக்கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
பூமடல் விரிக்கும் வேளையன்றோ
தேன் கிடைக்கும் இடம் இதுவன்றோ

சிட்டான் சிட்டான் குருவி - காவலன் அவன் கோவலன்

பாடல்: சிட்டான் சிட்டான் குருவி
திரைப்படம்: காவலன் அவன் கோவலன்
இசை: விஜய் ஆனந்த்
பாடியவர்: எஸ்.ஜானகி

சிட்டான் சிட்டான் குருவி சின்னக்குருவி
சிந்துதான் படிக்குதைய்யா
சிறகை அடிக்குதைய்யா
பங்குனி சித்திரை வந்ததும்
பரிசம் ஒண்ணு போடு பொழுதோடு
அட மிச்சமும் மீதியும் அப்ப நீ பார்த்துக்கலாம்

பொண்ணுதான் ஆளாச்சு பூவுடம்பு நூலாச்சு
கன்னி நான் என்னத்தை சொல்ல கண்ணுறங்கி நாளாச்சு
என்னவோ ஆயாச்சு என் மனசு நோயாச்சு
உன்னத்தான் எண்ணிய வண்ணம் புத்திகெட்டு போயாச்சு
அசத்துற நேரத்துல...அசத்துற நேரத்துல
என்னை நீ உசுப்புறியே
துவைச்ச ரவிக்கைபோல என் மன்சை புழியுறியே
தேதியை வச்சு மேளத்தைக் கொட்டு
ஐயரை வைச்சு தாலையைக்கட்டு மாமா சின்ன மாமா
அட செக்குபோல் எப்பவும் உன்னையே சுத்தி வாரேன்
சிட்டான் சிட்டான் குருவி சின்னக்குருவி

ஏத்தம்தான் போடாம ஏரெடுத்துப் பூட்டாம
கத்திரி வெயிலில் காயும் பச்சைமண்ணு நான்தானே
ஏனின்னு கேக்காம ஏறெடுத்துப் பாக்காம
நிக்கிற கள்ளுளி மங்கன் நீதானே
மனசுக்கு ஏத்தபடி...மனசுக்கு ஏத்தபடி
மம்முதன் நீ இருக்க
உன்னையே நினைச்சபடி ஒத்தையில இருக்க
வாடையில் என்னை வாட்டிடலாமா
வாலிபத்தீயை மூட்டிடலாமா மாமா சின்ன மாமா
அட ராத்திரி நான் ஒரு மாதிரி ஆயிடுறேன்

சிட்டான் சிட்டான் குருவி சின்னக்குருவி
சிந்துதான் படிக்குதைய்யா
சிறகை அடிக்குதைய்யா
பங்குனி சித்திரை வந்ததும்
பரிசம் ஒண்ணு போடு பொழுதோடு
அட மிச்சமும் மீதியும் அப்ப நீ பார்த்துக்கலாம்

மங்கலம் பொங்கும் - மாங்கல்யம்

பாடல்: மங்கலம் பொங்கும்
திரைப்படம்: மாங்கல்யம்
இசை:
பாடியவர்: வாணிஜெயராம்

மங்கலம் பொங்கும் மணித்தமிழ் நாடு
புகழ் மணத்தோடு கதிர்போலே வாழிய நீடு
மங்கலம் பொங்கும் மணித்தமிழ் நாடு
புகழ் மணத்தோடு கதிர்போலே வாழிய நீடு

சங்கமும் கண்ட சரித்திர நாடு
எங்கள் சந்தனத்தமிழுக்கு வேறேது ஈடு
சங்கமும் கண்ட சரித்திர நாடு
எங்கள் சந்தனத்தமிழுக்கு வேறேது ஈடு
சந்தனத்தமிழுக்கு வேறேது ஈடு

மங்கலம் பொங்கும் மணித்தமிழ் நாடு
புகழ் மணத்தோடு கதிர்போலே வாழிய நீடு

இன்னிசைத்தென்றல் காவியம் பாட
புது எழிலோடு மலர்க்கூட்டம் சோலையில் ஆட
பெண்கள் சிரிக்க முத்துக்கள் பிறக்க
பெண்கள் சிரிக்க முத்துக்கள் பிறக்க
உயர் பெண்மையில் கற்பெனும் தீக்கனல் பறக்க
உயர் பெண்மையில் கற்பெனும் தீக்கனல் பறக்க

மங்கலம் பொங்கும் மணித்தமிழ் நாடு
புகழ் மணத்தோடு கதிர்போலே வாழிய நீடு

அன்பு மலர்ந்திட பண்பு வளர்ந்திட அறமே வாழ்க
எண்ணம் செழித்திட கண்ணல் தழைத்திட திருவே வாழ்க
தண்டை குலுங்கிட தாளம் முழங்கிட கலையே வாழ்க
நெஞ்சம் மகிழ்ந்திட கொஞ்சும் பசுங்கிளித் தமிழே வாழ்க
செந்தமிழே வாழ்க...பரதக்கலையே வாழ்க

வண்ணக்காவியம் - பேசுவது கிளியா

பாடல்: வண்ணக்காவியம் விண்ணில் பூத்திட
திரைப்படம்: பேசுவது கிளியா
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்: P.ஜெயசந்திரன்

வண்ணக்காவியம் விண்ணில் பூத்திட என்னைத் தேடியதோ
திங்கள் முகமும் பொங்கும் உணர்வும் கண்களில் ஆடியதோ

வண்ணக்காவியம் விண்ணில் பூத்திட என்னைத் தேடியதோ
திங்கள் முகமும் பொங்கும் உணர்வும் கண்களில் ஆடியதோ
தங்கத்தாமரையோ மனம் எங்கும் பூமழையோ
தங்கத்தாமரையோ மனம் எங்கும் பூமழையோ
வண்ணக்காவியம் விண்ணில் பூத்திட என்னைத் தேடியதோ
திங்கள் முகமும் பொங்கும் உணர்வும் கண்களில் ஆடியதோ

வாழ்வினில் இவள் வசந்தமே வந்த பின் என் சொந்தமே
தேரின் சிலையாக ஒரு காதல் கலையாக
வாழ்வினில் இவள் வசந்தமே வந்த பின் என் சொந்தமே
தேரின் சிலையாக ஒரு காதல் கலையாக
வந்ததோ கனவிலே இளம் தென்றலோ தொலைவிலே
வந்ததோ கனவிலே இளம் தென்றலோ தொலைவிலே

வண்ணக்காவியம் விண்ணில் பூத்திட என்னைத் தேடியதோ
திங்கள் முகமும் பொங்கும் உணர்வும் கண்களில் ஆடியதோ

பூமகள் இவள் அபிநயம் பொங்குதே இனிய சுரலயம்
காமன் கணையாக இரு கண்கள் வலைபோட
பூமகள் இவள் அபிநயம் பொங்குதே இனிய சுரலயம்
காமன் கணையாக இரு கண்கள் வலைபோட
வெண்ணிலா வந்ததே நான் பெண் நிலா என்றதே
வெண்ணிலா வந்ததே நான் பெண் நிலா என்றதே

வண்ணக்காவியம் விண்ணில் பூத்திட என்னைத் தேடியதோ
திங்கள் முகமும் பொங்கும் உணர்வும் கண்களில் ஆடியதோ
தங்கத்தாமரையோ மனம் எங்கும் பூமழையோ
தங்கத்தாமரையோ மனம் எங்கும் பூமழையோ
வண்ணக்காவியம் விண்ணில் பூத்திட என்னைத் தேடியதோ
திங்கள் முகமும் பொங்கும் உணர்வும் கண்களில் ஆடியதோ

சுகமான நேரம் - அலைபாயும் நெஞ்சங்கள்

பாடல்: சுகமான நேரம்
திரைப்படம்: அலைபாயும் நெஞ்சங்கள்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: P.ஜெயசந்திரன் & வாணி ஜெயராம்

சுகமான நேரம் இதமாக உன்னை
மெதுவாக ரசிப்பேன்
இரவல்ல சரியல்ல
இது பகல் நேரம் ஏனோ சபலம்
சபலங்கள் நூறு சரசங்கள் பாரு
வா என் ரதியே வா
சுகமான நேரம் இதமாக உன்னை
மெதுவாக ரசிப்பேன்
இரவல்ல சரியல்ல
இது பகல் நேரம் ஏனோ சபலம்

எதிர்பார்க்கும் முதல் இரவு
நமக்கேது பகல் இரவு
ஆனந்தம் ஒன்றே நினைவு
தேனான நேரம் இது
திகட்டாத நெஞ்சம் இது
நேரங்கள் வீணாகுதே
பார்த்தவுடன் பழகணுமா
அவசரம் அவசியமா

சுகமான நேரம் இதமாக உன்னை
மெதுவாக ரசிப்பேன்
இரவல்ல சரியல்ல
இது பகல் நேரம் ஏனோ சபலம்

கண்ணா நீ ஏங்கியதும்
கனவோடு தூங்கியதும்
இதற்காகத்தான் அல்லவா
இன்பத்தின் வாசலிலே
இரவுக்கு காத்திருப்போம்
நீ சொல்ல நான் கேட்கின்றேன்
நாடகமும் அவசியமா
நமக்குள் ரகசியமா

சுகமான நேரம் இதமாக உன்னை
மெதுவாக ரசிப்பேன்
இரவல்ல சரியல்ல
இது பகல் நேரம் ஏனோ சபலம்

போதாது போதாது - பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக்கூடாது

பாடல்: போதாது போதாது
திரைப்படம்: பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக்கூடாது
இசை: பாலபாரதி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & நிவேதா

போதாது போதாது வா இன்னும் பக்கத்திலே
போராடு போராடு ஆனந்த சொர்க்கத்திலே
தேனூறும் முத்தத்திலே உண்டாகும் சத்தத்திலே
தாளங்கள் போடு ராகங்கள் பாடு தாலாட்டும் சந்தத்திலே
போதாது போதாது வா இன்னும் பக்கத்திலே
போராடு போராடு ஆனந்த சொர்க்கத்திலே

வான் பார்க்கும் செவ்வாழைப்பூவென்ன பூவோ
இப்போதுதான் இங்கு நான் பார்க்கிறேன்
நீ பார்க்கும் உன் பார்வை என்னென்ன என்று
இப்போதுதான் இங்கு நான் கேட்கிறேன்
எங்கே சுகம்...அங்கே மனம்
சொல்லாமல் கொள்ளாமல் போகின்றது
தோளோடு தோள் வந்து சாய்கின்றது
உன் கண்களும் என் கண்களும்
பேசாமல் மௌனத்தில் பேசட்டும் இந்நேரம்

போதாது போதாது வா இன்னும் பக்கத்திலே
போராடு போராடு ஆனந்த சொர்க்கத்திலே

அங்கங்கள் எங்கெங்கும் பாய்கின்ற அம்பை
கண்ணா உன் கண்ணென்று யார் சொன்னது
சாமத்தில் காமத்தில் பூக்கின்ற பூவை
அம்மாடி பெண்ணென்று யார் சொன்னது
போதை தரும்...திராட்சை ரசம்
நீ ஊற்று என் தாகம் தீரும் வரை
நீர் ஊற்று என் வெப்பம் ஆறும் வரை
பால் வெண்ணிலா தீயானதா
தீ ஆற்றும் தேனாகும் நீ சிந்தும் முத்தங்கள்

போதாது போதாது வா இன்னும் பக்கத்திலே
போராடு போராடு ஆனந்த சொர்க்கத்திலே
தேனூறும் முத்தத்திலே உண்டாகும் சத்தத்திலே
தாளங்கள் போடு ராகங்கள் பாடு தாலாட்டும் சந்தத்திலே
போதாது போதாது வா இன்னும் பக்கத்திலே
போராடு போராடு ஆனந்த சொர்க்கத்திலே