Saturday, August 25, 2012

பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள் - முப்பெரும் தேவியர்

பாடல்: பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள்
திரைப்படம்: முப்பெரும் தேவியர்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & எஸ்.ஜானகி

பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள் குளிக்க வந்ததோ
பாராட்டும் இரு காவிய கண்கள் ரசிக்க வந்ததோ
பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள் குளிக்க வந்ததோ
பாராட்டும் இரு காவிய கண்கள் ரசிக்க வந்ததோ
இரு தாமரை மொட்டுகள் சிந்திய முத்துக்கள்
எத்தனை எத்தனையோ

எனை தாங்கிய மன்னவன் வாங்கிய முத்தங்கள்
எத்தனை அத்தனையோ

இரு தாமரை மொட்டுகள் சிந்திய முத்துக்கள்
எத்தனை எத்தனையோ

எனை தாங்கிய மன்னவன் வாங்கிய முத்தங்கள்
எத்தனை அத்தனையோ

பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள் குளிக்க வந்ததோ
பாராட்டும் இரு காவிய கண்கள் ரசிக்க வந்ததோ

காவடிச்சிந்து விழி பாடிட வண்டு
எனை வா வா வா என்றது

காவடிச்சிந்து விழி பாடிட வண்டு
எனை வா வா வா என்றது

முத்திரைப்பொன்னே அடி மோஹனப்பெண்ணே
இதழ் தேன் தேன் தேன் என்றது
இதழ் தேன் தேன் தேன் என்றது

எந்தன் சிற்றிடை தொட்டதும் முற்றுகை இட்டதும்
போர்க்கள ஞாபகமோ

இந்த சித்திரப்பூவிழி ஒத்திகை பார்த்தது
அந்தியில் நாடகமோ

பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள் குளிக்க வந்ததோ
பாராட்டும் இரு காவிய கண்கள் ரசிக்க வந்ததோ

பூரணக்கும்பம் இடை தாங்கியவண்ணம்
கொடி ஏன் ஏன் ஏன் வந்ததோ

பூரணக்கும்பம் இடை தாங்கியவண்ணம்
கொடி ஏன் ஏன் ஏன் வந்ததோ

காரணம் என்ன வந்த காரியம் என்ன
அதை நான் நான் நான் சொல்லவோ
அதை நான் நான் நான் சொல்லவோ

இந்த அஞ்சுக பெண்ணுக்குள் அஞ்சனக் கண்ணுக்குள்
ஆயிரம் கற்பனைகள்

உந்தன் கைவிரல் தொட்டதும் கண்ணடி பட்டதும்
ஆனந்த சொப்பனங்கள்

பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள் குளிக்க வந்ததோ
பாராட்டும் இரு காவிய கண்கள் ரசிக்க வந்ததோ
பன்னீரில் ஒரு பௌர்ணமி திங்கள் குளிக்க வந்ததோ
பாராட்டும் இரு காவிய கண்கள் ரசிக்க வந்ததோ
 
No comments: