Saturday, August 25, 2012

வெளக்கு வச்சா - மருதாணி

பாடல்: வெளக்கு வச்சா
திரைப்படம்: மருதாணி
இசை: கங்கை அமரன்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & பி.சுசீலா

வெளக்கு வச்சா படிச்சிடத்தான்
வாத்தியார் வீட்டுக்கு வாரியா சொல்லடி
கத்துக்க உண்டு ஏராளம்
எம் மனம் ரொம்ப தாராளம்


வெளக்கு வச்சா படிச்சிடத்தான்
வாத்தியார் வீட்டுக்கு வாரேனே நானுந்தான்
கத்துக்க உண்டு ஏராளம்
உம் மனம் ரொம்ப தாராளம்


கேட்காத கேள்வி நான் கேட்டா நீ மாட்டுவே
நூத்துக்கு நூறுதான் நான் வாங்கிக் காட்டுவேன்
இளமையின் சரித்திரம் இருட்டுல படிக்கணும்
இருட்டுல படிச்சதை பகலில நினைக்கணும்
நாள்தோறும் மாலை நேரம் பாடம் ஆரம்பம்
என்னை நீ தொடக்கூடாது
என்னாலே அது ஆகாது
வெளக்கு வச்சா...படிச்சிட வா

நான் போட்ட சேலையை பூங்காத்து நீக்குது
ரோசாப்பூ மேனியை லேசாக பாக்குது
அதுக்குத்தான் ஆத்திரம் உனக்குமா அவசரம்
மொத மொத தரிசனம் எனக்குத்தான் கெடைக்கணும்
ராப்போது ஆனா போதும் நானும் ஏங்கிறேன்
பக்கத்தில் வந்து நான் கூட
வெக்கத்தில் மனம் போராட

வெளக்கு வச்சா படிச்சிடத்தான்
வாத்தியார் வீட்டுக்கு வாரேனே நானுந்தான்
கத்துக்க உண்டு ஏராளம்
உம் மனம் ரொம்ப தாராளம்
கத்துக்க உண்டு ஏராளம்
எம் மனம் ரொம்ப தாராளம்
 

No comments: