Saturday, August 25, 2012

விரக தாபமெனும் - உறவைக்காத்த கிளி

பாடல்: விரக தாபமெனும் தீயை மூட்டுவது
திரைப்படம்: உறவைக்காத்த கிளி
இசை: டி.ராஜேந்தர்
பாடியவர்: எஸ்.ஜானகி

விரக தாபமெனும் தீயை மூட்டுவது
பருவ காலமே னன னன னன னன...னா
அதில் விழுந்த பூவெனவே வெந்து காய்கிறது
பாவை தேகமே னன னன னன னன...னா
விரக தாபமெனும் தீயை மூட்டுவது
பருவ காலமே னன னன னன னன...னா
அதில் விழுந்த பூவெனவே வெந்து காய்கிறது
பாவை தேகமே னன னன னன னன...னா
தனிமையிலே வாடுகிறேன் இனிமைதனை தேடுகிறேன்
தனிமையிலே ஹா வாடுகிறேன் இனிமைதனை ஹோ தேடுகிறேன்

மோகத்தின் கலைத் திருவிழா நடத்தினாள் ஒரு பெண் நிலா
உணர்வுகள் தேராய் ஆகிட உணர்வெனும் வீதியில் ஓடிட
உணர்வுகள் தேராய் ஆகிட உணர்வெனும் வீதியில் ஓடிட
அம்மம்மா ஒரு திண்டாட்டம் அதிலும்தான் ஒரு கொண்டாட்டம்

விரக தாபமெனும் தீயை மூட்டுவது
பருவ காலமே னன னன னன னன...னா
அதில் விழுந்த பூவெனவே வெந்து காய்கிறது
பாவை தேகமே னன னன னன னன...னா
தனிமையிலே வாடுகிறேன் இனிமைதனை தேடுகிறேன்

மனமெனும் ஒரு நாட்டிலே அமைதியே எங்கும் நிலவிட
வாலிபம் என்றொரு ராணுவம் ஆட்சியை பிடித்ததும் கலவரம்
வாலிபம் என்றொரு ராணுவம் ஆட்சியை பிடித்ததும் கலவரம்
தூக்கத்தை அது கலைத்தது ஏக்கத்தை அது வளர்த்தது

விரக தாபமெனும் தீயை மூட்டுவது
பருவ காலமே னன னன னன னன...னா
அதில் விழுந்த பூவெனவே வெந்து காய்கிறது
பாவை தேகமே னன னன னன னன...னா
தனிமையிலே ஹா வாடுகிறேன் இனிமைதனை ஹோ தேடுகிறேன்
 

No comments: