Thursday, August 23, 2012

ஆயிரம் விழிகள் மயங்கும் - வாழப்பிறந்த பூக்கள்

பாடல்: ஆயிரம் விழிகள் மயங்கும்
திரைப்படம்: வாழப்பிறந்த பூக்கள்
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: P.ஜெயசந்திரன் & வாணி ஜெயராம்

ஆயிரம் விழிகள் மயங்கும் அழகில் என்னைக்கண்டு
காவிய மகளோ மயங்குகின்றாள் உன்னைக்கண்டு
இதில் பெருமை யாருக்கு என் தேவன் பேருக்கு

ஆண்டவன் அழகை அள்ளி எடுத்தான் பெண்ணை வடித்தான்
பூங்கொடி அவளை வாரி அணைத்திட என்னைப் படைத்தான்
இதில் பெருமை யாருக்கு என் தேவியின் பேருக்கு

ஆயிரம் விழிகள் மயங்கும் அழகில் என்னைக்கண்டு

வானில் ஊரும் நிலவாக தேனில் ஊறும் மலராக
வானில் ஊரும் நிலவாக தேனில் ஊறும் மலராக

காலங்கள் தோறும் உன் மடிமீதிலே
இளைப்பாற வேண்டும் உன் மார்மீதிலே
மஞ்சத்தில் நெஞ்சங்கள் என்றும் கலந்தாடுமே

ஆயிரம் விழிகள் மயங்கும் அழகில் என்னைக்கண்டு

காதல் தேவி ரதியாக இன்ப கங்கை நதியாக
காதல் தேவி ரதியாக இன்ப கங்கை நதியாக

என்னோடு நீ கொஞ்சும் வேளைகளே
எந்நாளும் காணாத லீலைகளே
உள்ளத்தில் வெள்ளங்கள் என்றும் அலைமோதுமே

ஆண்டவன் அழகை அள்ளி எடுத்தான் பெண்ணை வடித்தான்
பூங்கொடி அவளை வாரி அணைத்திட என்னைப் படைத்தான்

இதில் பெருமை யாருக்கு என் தேவன் பேருக்கு
இதில் பெருமை யாருக்கு என் தேவியின் பேருக்கு

No comments: