Saturday, August 25, 2012

பூவின் மணம் பூவில் இல்லை - நர்த்தகி

பாடல்: பூவின் மணம் பூவில் இல்லை
திரைப்படம்: நர்த்தகி
இசை: ஜி.வி.பிரகாஷ்
பாடியவர்கள்: டிப்பு & ஹரிணி

பூவின் மணம் பூவில் இல்லை
பூந்தென்றலோ தொடவே இல்லை
தீயின் குணம் தீயில் இல்லை
தீண்டும் விரல் சுடவே இல்லை

பூவின் மணம் பூவில் இல்லை
பூந்தென்றலோ தொடவே இல்லை
தீயின் குணம் தீயில் இல்லை
தீண்டும் விரல் சுடவே இல்லை
ஓ உடல் என்னும் படகு தண்ணீரில் ஆட
இரு கரைகளின் நடுவே மிதந்தேன் அலைந்தேன்
ஒரு குளமும் மலராய் என் தேகமும் மாற
மறு குளமும் தீயாய் தகித்தேன் எரிந்தேன் அன்பே
உதிரும் போதும் சரம் கோர்க்கிறேன்
அலைகள் மோத மணல் சேர்க்கிறேன்
இடியின் நடுவே இசை கேட்கிறேன்
எனை நான் தோற்று உனை மீட்கிறேன்

பருவத்தில் பேய் ஆட்டங்கள் பாலினத் தடுமாற்றங்கள்
உருவத்தை உரு மாற்றவா உள்ளத்தை அது மாற்றுமா
ஓ எனக்குள்ளே ஆண்மை நீ தேட வேண்டும்
உனக்குள்ளே பெண்மை நான் தேட வேண்டும்
வேப்பம் மரக்கிளையில் வேறேதோ செடிதான்
வளர்வதைப் போல வலியை உணர்ந்தேன்

பூவின் மணம் பூவில் இல்லை
பூந்தென்றலோ தொடவே இல்லை

கானலின் நீரோடையில் மீன்களை நீ கேட்கிறாய்
கேள்விகள் புரியாமலே பதில்களை நீ சேர்க்கிறாய்
ஆ சில நேரம் விளக்கின் வெளிச்சங்கள் ஈர்க்கும்
விளக்குக்கும் கீழே இருட்டொன்று இருக்கும்
இருளும் ஒளியும் ஒன்றாகத் தீண்ட
குழப்பத்திலே நானும் தவித்தேன் துடித்தேன்

பூவின் மணம் பூவில் இல்லை
பூந்தென்றலோ தொடவே இல்லை
தீயின் குணம் தீயில் இல்லை
தீண்டும் விரல் சுடவே இல்லை
 

No comments: