Thursday, August 23, 2012

சிட்டான் சிட்டான் குருவி - காவலன் அவன் கோவலன்

பாடல்: சிட்டான் சிட்டான் குருவி
திரைப்படம்: காவலன் அவன் கோவலன்
இசை: விஜய் ஆனந்த்
பாடியவர்: எஸ்.ஜானகி

சிட்டான் சிட்டான் குருவி சின்னக்குருவி
சிந்துதான் படிக்குதைய்யா
சிறகை அடிக்குதைய்யா
பங்குனி சித்திரை வந்ததும்
பரிசம் ஒண்ணு போடு பொழுதோடு
அட மிச்சமும் மீதியும் அப்ப நீ பார்த்துக்கலாம்

பொண்ணுதான் ஆளாச்சு பூவுடம்பு நூலாச்சு
கன்னி நான் என்னத்தை சொல்ல கண்ணுறங்கி நாளாச்சு
என்னவோ ஆயாச்சு என் மனசு நோயாச்சு
உன்னத்தான் எண்ணிய வண்ணம் புத்திகெட்டு போயாச்சு
அசத்துற நேரத்துல...அசத்துற நேரத்துல
என்னை நீ உசுப்புறியே
துவைச்ச ரவிக்கைபோல என் மன்சை புழியுறியே
தேதியை வச்சு மேளத்தைக் கொட்டு
ஐயரை வைச்சு தாலையைக்கட்டு மாமா சின்ன மாமா
அட செக்குபோல் எப்பவும் உன்னையே சுத்தி வாரேன்
சிட்டான் சிட்டான் குருவி சின்னக்குருவி

ஏத்தம்தான் போடாம ஏரெடுத்துப் பூட்டாம
கத்திரி வெயிலில் காயும் பச்சைமண்ணு நான்தானே
ஏனின்னு கேக்காம ஏறெடுத்துப் பாக்காம
நிக்கிற கள்ளுளி மங்கன் நீதானே
மனசுக்கு ஏத்தபடி...மனசுக்கு ஏத்தபடி
மம்முதன் நீ இருக்க
உன்னையே நினைச்சபடி ஒத்தையில இருக்க
வாடையில் என்னை வாட்டிடலாமா
வாலிபத்தீயை மூட்டிடலாமா மாமா சின்ன மாமா
அட ராத்திரி நான் ஒரு மாதிரி ஆயிடுறேன்

சிட்டான் சிட்டான் குருவி சின்னக்குருவி
சிந்துதான் படிக்குதைய்யா
சிறகை அடிக்குதைய்யா
பங்குனி சித்திரை வந்ததும்
பரிசம் ஒண்ணு போடு பொழுதோடு
அட மிச்சமும் மீதியும் அப்ப நீ பார்த்துக்கலாம்

No comments: